To that young mind hiding inside a healthy 95 year old body. I take this opportunity to rejoice this young mind’s journey. Live on Singeetham gaaru.
Looking forward to a healthy 100
Yours
Kamal Haasan
POCSO வழக்கில் கைது செய்யப்பட்ட வீரமணியிடம் இருந்து 40 கோடி பெற்றதாக காவல்துறை அதிகாரிகள் மீது வைக்கப்படும் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சாட்டுகளை வெறும் அரசியல் குற்றச்சாட்டு என்று புறக்கணித்துவிட முடியாது
அரசு உண்மையை கண்டு பிடித்து மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்
#KamalHaasan
மக்கள் நீதி மய்யம் சார்பில் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் திரு.மாரியப்பன் தலைமையில்
கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காந்தி மாநகர் 25 வது வார்டில் பொது மக்களுக்கு பயன்படாமல் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக சமுதாய கூடம் ஒன்று உள்ளது. இதை பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இன்று கோவை மாநகராட்சி மேயர் அவர்களிடம் பயன்படாமல் இருக்கின்ற சமுதாய கூடத்தை சீரமைத்து பொது மக்களின் பயன்பாட்டிற்க்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில்
திரு கண்ணன் மாவட்ட பொருளாளர்
திரு AKB பாபு
மாநகர செயலாளர்
திருமதி முத்துமாரி மகளிர் மாவட்ட அமைப்பாளர்
திரு சிபிக்குமார் வார்டு செயலாளர்
ஆகியோர் கலந்து கொண்டனர்.
#MakkalNeedhiMaiam #KamalHaasan
My warmest wishes to Hon’ble Prime Minister Thiru @narendramodi ji on his birthday.
May the year ahead bring you good health, strength and continued opportunities to serve our great nation.
@PMOindia
கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்
மக்கள் நீதி மய்யம் சிங்காநல்லூர் தொகுதி 60 வது வார்டு உப்பிலிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் அமைந்துள்ள பொதுக்கழிப்பறை சுகாதாரமின்மை மற்றும் நோய் பரப்பும் அபாயம் தொடர்பாக,
மாவட்ட துணை செயலாளர் சிங்கை டாக்டர் அ.சௌந்தரராஜன் தலைமையில்
வட்ட செயலாளர் ந. மதிவாணன் அவர்கள் கோரிக்கை மனு அளித்தனர் .
உடன் மய்ய நிர்வாகிகள் தொழிலாளர் அணி மாவட்டத் துணை அமைப்பாளர் சிவசண்முகம், வட்ட செயலாளர்கள் மோகன், தேவராஜ்,சதாம் உசேன், கிளை செயலாளர்கள் ஜெயிலபுதீன், நவாஸ், முகமது சாஹித் கலந்து கொண்டனர்.
#MakkalNeedhiMaiam #KamalHaasan
இன்றைய தினத்தை, ‘சமூகநீதி நாள்’ எனக் கொண்டாடுகிறோம். அதன் காரணகர்த்தராக விளங்கும் தந்தை பெரியார் பிறந்த நாள் இன்று.
எந்நாளும் மறக்கவொண்ணாச் சிந்தனைகளை சமூக நீதிக்காகப் பரப்பிவந்த புரட்சியாளரை நன்றியோடு கொண்டாடுவோம்.
மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்கள்,
‘சமூகநீதி நாள்’ கொண்டாட காரணகர்த்தராக விளங்கும் தந்தை பெரியார் பிறந்த நாளில், எந்நாளும் மறக்கவொண்ணாச் சிந்தனைகளை சமூக நீதிக்காகப் பரப்பிவந்த புரட்சியாளரை நன்றியோடு கொண்டாடினார்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#Periyar
தன் வாழ்நாள் முழுக்க தமிழ், தமிழர், தமிழ்நாடு என்றே சிந்தித்திருந்த பெருமனிதர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில் அவரை நினைவுகொள்ளும் என் வாழ்த்துகள் சேர்க.
மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்கள்,
வாழ்நாள் முழுக்க தமிழ், தமிழர், தமிழ்நாடு என்றே சிந்தித்திருந்த பெருமனிதர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில் அவரது பெருமைகளை போற்றி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#RememberingAnna
#அண்ணாதுரை
மதுரையில் 16 வயது சிறுவன் மர்மமான முறையில் இறந்து குளத்தில் மிதந்திருக்கிறான்.
இது ஆணவ கொலை என்று போராடும் கூட்டத்தில் இருந்து ஒரு பெண் காவல் அலுவலரின் காலை பிடித்து கெஞ்சுவது மனதை உலுக்குகிறது.
காவல்துறை பதில் அளிக்க வேண்டும்.
@tnpoliceoffl#MNM#KamalHaasan@maiamofficial
கிராம சபைகளுக்கு உயிர் கொடுத்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் நகர்புறங்களில் ஏரியா சபை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முந்தைய அரசுக்கு மனுவாக திரு.இறையன்பு IAS அவர்களிடம் நேரடியாக வழங்கியிருந்தார்.
கடந்த ஆட்சிகாலத்தில் ஏரியா சபைகள் நடைபெற்றது.
உள்ளாட்சியும், நகராட்சி நிர்வாகத்துறையும் முதல்வர் தலைமையில் இயங்குகிறது.
தேவையான நிதி பகிர்வை அளிக்கவும்
மக்கள் அடிப்படை தேவைகள் குறித்து விவாதிக்கவும் செப்டம்பர் 15 அன்று ஏரியா சபைகள் நடத்த வேண்டும் என்று தவெக அரசை மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.
@CMOTamilnadu
#KamalHaasan #MakkalNeedhiMaiam #corporations #municipality
ஏரியா சபைக் கூட்டங்கள் எப்போது நடத்தப்படும்?
முதலமைச்சர் வசமுள்ள நகராட்சித்துறையானது செப்டம்பர் 15 அன்று ஏரியாசபைக் கூட்டங்கள் நடத்த ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை?
மக்கள் நீதி மய்யம் கேள்வி
கிராம சபைகளைப் போல் மக்கள் பங்கேற்புள்ள ஜனநாயகத்தினை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் உறுதிப்படுத்திடுவது ஏரியா சபைக் கூட்டங்களாகும். இக்கூட்டங்கள் அந்தந்த வார்டுக்கு உட்பட்ட பொதுமக்கள் - தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து பங்கேற்று குடிநீர், சாலைவசதி, பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அந்தந்தப் பகுதிப் பிரச்னைகள் குறித்து விவாதித்து திட்டமிட-தீர்வு காண வழிவகுக்கிறது.
பேரூராட்சிப் பகுதிகளில் ஒரு வார்டு என்பதை 3 ஏரியா சபையாகவும், நகராட்சிப் பகுதிகளில் ஒரு வார்டு என்பதை 4 ஏரியா சபையாகவும், மாநகராட்சிப் பகுதிகள் மக்கள் தொகைக்கு ஏற்பவும் பிரிக்கப்பட்டு கூட்டங்கள் நடத்தப்படவேண்டும்.
இக்கூட்டங்கள் ஜனவரி 25,ஏப்ரல் 14, செப்டம்பர் 15, டிசம்பர் 10 என ஆண்டிற்கு நான்குமுறை நடத்தப்படவேண்டுமென்று 22.05.2023 அன்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது(அரசாணை எண்:64). பின்னர், சென்னை போன்ற மாநகராட்சிகளில் ஒவ்வொரு வார்டும் 10 ஏரியாசபையாகப் பிரிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு இக்கூட்டங்கள் மேற்குறிப்பிட்ட நாட்களில் தொடங்கி 15 நாட்களுக்குள் நடத்தப்படவேண்டும் என்று விளக்கமளிக்கப்பட்டது(அரசாணை எண்: 9016). இந்த அடிப்படையில் வருகிற செப்டம்பர் 15 அன்று தொடங்கி ஒவ்வொரு வார்டிலும் நடத்தப்படவேண்டிய ஏரியா சபைக் கூட்டங்கள் குறித்த அறிவிப்பானது இதுவரை வெளியிடப்படாதது வருத்தமளிக்கிறது.
மாண்புமிகு முதலமைச்சர் வசமுள்ள நகராட்சி மற்றும் குடிநீர்வழங்கல் துறையானது விரைந்து நடவடிக்கை எடுத்து செப்டம்பர் 15 அன்று தொடங்கி ஒவ்வொரு வார்டிலும் ஏரியா சபைக் கூட்டங்கள் நடத்தப்படுவதை உறுதிசெய்யவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது. மேலும், இக்கூட்டங்கள் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்கள் பங்கேற்பை அதிகரிக்கச் செய்யவேண்டும்.
கிராம சபை, ஏரியா சபைகளுக்காக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் தொடர்ந்து குரல்கொடுத்துவருவதை தமிழகம் நன்கறியும். குறிப்பாக 2022ல் தலைமைச் செயலகத்தில் அப்போதைய தலைமைச் செயலாளர் திரு.இறையன்பு.ஐ.ஏ.எஸ் அவர்களை நேரில் சந்தித்து உரிய தரவுகளோடு ஏரியா சபைகளை வலுப்படுத்த வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
மக்களை அதிகாரப்படுத்துவோம்; மக்களாட்சியை வலுப்படுத்துவோம்.
செந்தில் ஆறுமுகம்,
தலைமை நிலைய செயலாளர்,
மக்கள் நீதி மய்யம்.
2022 TWEET LINK : https://t.co/Er237DIQ77
@TVKVijayHQ@CMOTamilnadu
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
பழந்தமிழ் இலக்கியங்களைப் பாமர மொழியில் விளக்குவது தனித்த ஒரு கலை. அந்தத் திறமையை, பட்டிமன்றம் என்ற வடிவத்தின் மூலம் நிலைநாட்டி நூற்றுக்கணக்கான மாணவர்களை உருவாக்கிய பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைந்தார்.
நிறைவாழ்வில் பெருஞ்செயல் செய்து காலம் சென்றிருக்கும் அவரது புகழ் நிலைத்திருக்கும்.
அவர்தம் குடும்பத்தினருக்கும், தங்கள் ஆசிரியரை இழந்து வாடும் மாணாக்கர்களுக்கும் என் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
புதிய தலைமைச் செயலகத்திற்கு பட்டினப்பாக்கம் சரியான இடமல்ல
மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்; குடியிருப்பாளர்களுக்கு இடையூறும், போக்குவரத்து நெரிசலும் அதிகரிக்கும். பாதுகாப்பும் பெரும் சவாலாகும்
மக்களுக்கு இடையூறு செய்யும் வளர்ச்சி
தேவையில்லை
#KamalHaasan@maiamofficial