சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றினோம்.
தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு - அறிவிக்கப்படாத மின்வெட்டு - பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் - விவசாயிகள் பிரச்சினை போன்றவற்றிற்கு எந்த தீர்வும் ஆளுநர் உரையில் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி பேசினோம்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான road map ஆளுநர் உரையில் இல்லை என்பதை உணர்ந்து, அரசின் தொலைநோக்கு திட்டங்களையும், வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளையும் முதலமைச்சர் தனது பதிலுரையில் வழங்கிட வேண்டுமென கேட்டுக்கொண்டோம்.
#TNAssembly
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.
பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர,
மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
ஆகவே, @actorvijay என்பதை மறந்து, இனியாவது @CMOTamilnadu-வாக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்.
தந்தை பெரியாரின் வழியில் மானமிகு சுயமரியாதை போராளியாய், பேரறிஞர் அண்ணா வழியில் மொழியுரிமை, மாநில உரிமைகள் காத்த தமிழினத் தலைவராய் வாழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் புகழ் போற்றுவோம்!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளில் கழகத்தலைவர் @mkstalin அவர்கள் வழியில் மக்கள் பணி, கழகப் பணி தொடர உறுதியேற்போம்.
#Kalaignar103 #KalaignarForever
“என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே” என்ற ஒற்றைக்குரலில் கோடானு கோடி கழகத் தொண்டர்களை கட்டிப்போட்ட முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 103 ஆவது பிறந்தநாள் இன்று!
சென்னை மெரினா கடற்கரை அருகேயுள்ள கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் மலர்தூவி மரியாதைச் செலுத்தினோம்.
கலைஞர் அவர்கள் காட்டிய வழியில் அயராது உழைப்போம். மீண்டு எழுவோம் - மீண்டும் வெற்றிக் கொடி ஏற்றுவோம்!
ஓங்குக கலைஞர் புகழ்!
தலைவரின் பிறந்தநாள்!
தமிழினத் தலைவரின் பிறந்தநாள்!!
மூப்படைந்து சக்கர நாற்காலியில் உட்கார்ந்த பின்பும் ஓய்வின்றி, தனது இறுதி மூச்சுவரை, தமிழினத்திற்காக - தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காக உழைத்திட்ட உன்னதத் தலைவர்!
என்னை என்றும் இயக்கும் தலைவர் கலைஞர் அவர்களே…
வெற்றியைத் தலையிலும், தோல்வியை நெஞ்சிலும் ஏற்றாமல், சோதனைக் கடல்களைச் சோர்வின்றி நீந்திக் கடந்த உங்களது ஆற்றல் என்னிடமும் இருக்கிறது.
நீங்கள் நிறைந்தபோது, உங்களின் ஆற்றலை வேண்டினேன். அந்த ஆற்றலோடு தொடர் வெற்றிகளைப் பெற்று, தமிழ்நாட்டை வரலாறு போற்றும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றோம். இப்போது, வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். எனினும் உங்களது ஆற்றல், என்னோடு மட்டுமல்ல, நீங்கள் உணர்வூட்டி வளர்த்தெடுத்த ஒவ்வொரு உடன்பிறப்பிடமும் இருக்கிறது.
உறுதியாய்ச் சொல்கிறோம்…
மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம்! உதயசூரியனின் ஒளியால் தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம்!
#KalaignarForever
தமிழ்நாட்டின் வளர்ச்சியை திராவிட இயக்கக் கொள்கை அடித்தளத்தில் கட்டி எழுப்பிய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, கழகத்தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் சென்னை ஓமந்தூரார் அரசினர் வளாகத்தில், கலைஞர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு அருகே அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதைச் செய்தோம்.
#KalaignarForever
மாண்புமிகு கழகத் தலைவர் அவர்கள் ஆணைக்கிணங்கவும், மாண்புமிகு கழக இளந்தலைவர் அவர்கள் வழிகாட்டுதலின்படியும், இராமநாதபுரம் மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்திற்கு தலைமை ஏற்று உரையாற்றினேன்.
சமூகநீதி, மாநில உரிமை மற்றும் தமிழர் முன்னேற்றத்திற்காக தம் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து, நவீன தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான வலுவான அடித்தளத்தை அமைத்த முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், கழகத்தின் பல்வேறு ஆக்கப்பணிகள் மற்றும் எதிர்கால செயல் திட்டங்கள் குறித்தும் விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிகழ்வில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
#DMK #Ramanathapuram #KatharbatchaMLA #MLA
பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்!
உங்க Career-ஐ உருவாக்கிக்கொள்ளத் தேவையான அடித்தளத்தைச் சரியா அமைச்சுக்க வேண்டிய தருணம் இது.
இந்த முறை தேர்ச்சி பெறத் தவறியவர்கள், அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் கல்வியை விட்டு விலகிடாமல், நல்லா படிச்சு, நல்ல நிலைக்கு முன்னேறிடணும்னு வாழ்த்துகிறேன்.
#10thResult #ExamResult
சாதியெனும் இருள் அகற்றிடத் தோன்றிய #திராவிடப்_பேரொளி அயோத்திதாசரின் புகழ் ஓங்குக!
மயங்கிக் கிடந்த நம் இனம் விழித்தெழ, புரட்சிகரச் சிந்தனைகளை விதைத்த திராவிட இயக்கத்தின் முன்னோடி பண்டிதர் அயோத்திதாசர் அவர்கள்.
🔷 அவருக்குத் திருவுருவச் சிலையும் மணிமண்டபமும் அமைத்தது;
🔷 அவரது பெயரில் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம் உருவாக்கியது உள்ளிட்டவை #DravidianModel-க்குக் கிடைத்திட்ட பெரும் பெருமை!
சாதிபேதமற்ற சமுதாயத்தைக் கட்டமைத்திட, 'தமிழன்', 'திராவிடன்' ஆகிய சொற்களை அரசியல்களத்தில் ஆயுதமாகப் பயன்படுத்திய அயோத்திதாசரின் சிந்தனைகள் நீடு வாழ வேண்டும்! திராவிடச் சிந்தனை நோக்கி இளைஞர்களை ஈர்த்த அவரது வழியில் பயணிப்போம்! தமிழ்ச் சமூகம் மேன்மையுற தொடர்ந்து பாடுபடுவோம்!
தமிழ்நாட்டு மக்களில் 65 சதவீத வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழக அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தோம்.
தூய சக்தி என்று சொல்லி மக்களை ஏமாற்றிய ஆளுங்கட்சி குதிரை பேரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டு வருகிறது. மேலும், மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முயற்சிக்காமல், பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது.
இதனால், வாக்களித்த மக்களின் நம்பிக்கையையும் கூட இந்த புதிய அரசு இழந்து வருகிறது என்பது வெளிப்படை.
மக்கள் தீர்ப்பால் பதவி நாற்காலி கிடைக்காத காரணத்தால், 'sofa' அரசியலை அரங்கேற்றும் த.வெ.க. அரசின் மீது பெரும்பான்மை மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்ற உணர்வை சட்டப்பேரவையில் பிரதிபலித்து உரையாற்றினோம்.
“தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமையவோ, தொடரவோ திராவிட முன்னேற்றக் கழகம் தடையாக இருக்காது” என்ற எனது நிலைப்பாட்டுக்கேற்ப திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்திருக்கிறார்கள்.
அதேபோன்று சட்டமன்றத்தில் இருக்கும் எங்கள் தோழமை இயக்க உறுப்பினர்களான சகோதரி திருமதி. பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர் தமிமுன் அன்சாரி, சகோதரர் நித்தியானந்தம் ஆகிய உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய தோழமைக் கட்சிகள், தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அவர்களின் நிலைப்பாட்டையும் நாங்கள் மதிக்கிறோம்.
ஆனால், இந்த ஆட்சி அமைய வழிவகுத்த எல்லாரோட நம்பிக்கையையும் சிதைக்கும் வேலையில தமிழக வெற்றிக் கழகம் இறங்கியிருக்கு.
அதற்கு சாட்சி, ஆளுங்கட்சியின் கடந்த 3 நாட்களின் செயல்பாடுகளும், அதற்கு எங்க தோழமைக் கட்சியினர் கொடுத்த அறிக்கைகளும்!
ஆட்சி நிலைக்கத் தேவையான எண்ணிக்கை எங்கள் தோழமை இயக்க நிலைப்பாட்டால் இருந்தாலும், இன்றைய ஆளுங்கட்சி என்ன செய்திருக்கிறது?
Clean Politics-னு சொல்லி ஆட்சிக்கு வந்தவங்க, Dirty Politics பண்ணிட்டிருக்காங்க.
பிளவுபட்ட அ.தி.மு.க. எனும் குழம்பிய குட்டையில மீன் பிடிக்க முயற்சி பண்ணி, அவங்க உறுப்பினர்களை விலைக்கு வாங்கியிருக்காங்க.
“உங்களோட Starting-ஏ இப்படி இருந்தா Finishing எப்படி இருக்கும்? இது தூய சக்தியா இல்ல, அடுத்த கட்சி MLA-க்களைத் தூக்குற சக்தியா?” எனத் தமிழக வெற்றிக் கழகத்துக்கு வாக்களிச்ச மக்களே வருந்திப் பேசும் நிலை உருவாகிடுச்சு.
மாண்புமிகு முதல்வர் அவர்களே,
உங்க செயல்பாடுகளை மக்கள் தொடர்ந்து பார்க்குறாங்க. அடுத்து, பிளவுபட்ட அதிமுக உறுப்பினர்களுக்கு நீங்க என்ன Return Gift கொடுக்கப் போறீங்க என்பதையும் மக்கள் பார்க்கத்தான் போறாங்க.
எங்களைப் பொறுத்தவரை,
திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து தன் கொள்கையில உறுதியா இருந்து, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியா செயல்படும்!
மீனவர் விசயத்தில் மானே தேனே என்று ஸ்டாலின் கடிதம் மட்டும் எழுதுவதாக சொன்ன விஜய், இப்போ கடிதம் மட்டும் எழுதுவது ஏன்?. நான் வந்தால் மீனவர் மீது கை வைக்க முடியாது என்றாரே, ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுப்பேன் என்று சொன்னாரே. ஒன்னையும் காணாமே.
@Anti_CAA_23@DMKITwing
#NEET – Never Been Neat:
இந்த ஆண்டும் #NEET Paper Leak முறைகேடுகள் வெளிவந்து, Exam Cancel ஆகியிருக்கு. இலட்சக்கணக்கான மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்காங்க.
ஒரு தேர்வின் ஒவ்வொரு படிநிலையிலும் மோசடி நிறைந்ததாகவே நீட் இருக்கு. நான் தொடர்ந்து சொல்லி வருவதுபோல, நீட்ல Scam இல்ல, நீட்டே ஒரு Scam-தான்!
ஆண்டுதோறும் மாணவர்களின் வாழ்க்கையோடும், மாநில மருத்துவக் கட்டமைப்பின் எதிர்காலத்தோடும், மக்களின் உயிரோடும் விளையாடும் நீட் தேர்வுமுறை ஒழிக்கப்படணும்.
மீண்டும் நீட் தேர்வு நடத்துனா ஏற்படும் Delay, மாணவர்களின் உயர்கல்விக் கனவில் குழப்பங்களைத்தான் ஏற்படுத்தும். அதனால, பழையபடி Plus Two தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே MBBS இடங்கள் ஒதுக்கப்படணும்.
தமிழ்நாட்டில் புதிதாக அமைந்திருக்கும் அரசும் நீட் தேர்வுக்கு எதிரான தனது உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்கணும். நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரும் எங்க திராவிட மாடல் அரசின் சட்ட நடவடிக்கைகளை, புதிய அரசும் கையிலெடுத்து, நம் முயற்சியில் வெற்றி பெற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
@CMOTamilnadu
நீட் தேர்வு என்பதே ஒரு மோசடி என்று தொடக்கம் முதலே திராவிட முன்னேற்றக் கழகம் சொல்லி வருவது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது.
நீட் குளறுபடிகள் ஆண்டுதோறும் தொடர்கதையாகி விட்டன.
இப்போது, ராஜஸ்தானில் நீட் கேள்வி தாள் முன்கூட்டியே வெளியானது தெரிந்ததால் இந்த ஆண்டுக்கான தேர்வையே ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது.
ஏழை-எளிய பின்னணியில் இருந்து வரும் மாணவர்களின் கனவுகளை சிதைத்துக் கொண்டிருக்கும் நீட் தேர்வு, நமக்கு வேண்டவே வேண்டாம் என்று தி.மு.கழக அரசால் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தர மறுக்கிறார்.
அந்த மசோதாவுக்கு கிடைக்கும் ஒப்புதல் தான் தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தைக் காப்பாற்றும் - நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்!
தமிழ்நாடு அரசும், அனைத்துக் கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிரான குரலை ஓங்கி ஒலித்திட வேண்டும்.
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தொடர்ந்து இரண்டாவது முறையாக நம்மை தேர்ந்தெடுத்துள்ள வாக்காளப் பெருமக்களுக்கு இன்று கழக நிர்வாகிகளுடன் சென்று நன்றி தெரிவித்தோம்.
நம் மீது தொகுதி மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் நமது மக்கள்நலப் பணிகள் தொடரும்!
#ChepaukTriplicane
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு. விஜய் அவர்கள் அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்.
@TVKVijayHQ@Udhaystalin
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் மாண்புமிகு பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. ஜே.சி.டி. பிரபாகர் அவர்களுக்கும், மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. ரவிசங்கர் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்.
மிகப் பெரும் ஆளுமைகளால் பெருமை பெற்ற பொறுப்பில் அமர்ந்துள்ள இருவரும், அந்த மரபினையும், பேரவையின் மாண்புகளையும் காத்திட வேண்டும்.
ஆளும்கட்சியாக இருக்கும் கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையைவிட, சட்டமன்றத்தில் மற்ற கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கைதான் அதிகம். அதுதான் இந்த முறை மக்களின் தீர்ப்பு!
அதை மதித்து, எதிர்க்கட்சிகளின் குரல் சட்டமன்றத்தில் அதிகம் ஒலிப்பதை உறுதிசெய்யும் வகையில் மாண்புமிகு பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இருவரும் அவையை வழிநடத்துவார்கள் என நம்புகிறேன்.
தி.மு.க சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்வான
அண்ணன் @Udhaystalin அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். 🖤❤️
திராவிட இயக்கத்தின் கொள்கைகளையும்,
இளைஞர்களின் எதிர்பார்ப்புகளையும் இணைத்து
மக்கள் மைய அரசியலை தொடர்ந்து முன்னெடுக்க வாழ்த்துகள்.
#UdhayanidhiStalin#DMK#OGDMK #DravidianModel #TamilNadu