மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எனது ஆருயிர் தலைவர் அவர்களிடம் இன்று ஆசி பெற்று, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை மானிய கோரிக்கை மீதான அறிவிப்புகளை வெளியிட்டேன்.
#சூரசம்ஹாரம்@CMOTamilnadu | @TVKVijayHQ
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (21.8.2026) தலைமைச் செயலகத்தில், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் திரு. சஞ்சய் மல்கோத்ரா அவர்கள் சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
மாண்புமிகு ஒன்றிய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. அமித் ஷா அவர்கள் தலைமையில் இன்று (20.8.2026) மகாபலிபுரத்தில் நடைபெற்ற 31-வது தென் மண்டலக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய், மாண்புமிகு ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் திரு.என்.சந்திரபாபு நாயுடு, மாண்புமிகு கர்நாடக மாநில முதலமைச்சர் திரு.டி.கே.சிவகுமார், மாண்புமிகு கேரளம் மாநில முதலமைச்சர் திரு. வி.டி. சதீசன், மாண்புமிகு அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநர் அட்மிரல் திரு.டி.கே. ஜோஷி, மாண்புமிகு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திரு. கே. கைலாஷ்நாதன், மாண்புமிகு தெலங்கானா மாநில துணை முதலமைச்சர் திரு. மல்லு பட்டி விக்ரமார்க்கா, மாண்புமிகு லட்சத்தீவுகளின் நிர்வாக அலுவலர் திரு. பிரஃபுல் படேல், தென் மண்டலக் குழுவினைச் சேர்ந்த மாநிலங்களின் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் ஆகியோர் குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
#CMJosephVijay
Met Chief Minister of Tamil Nadu Thiru C. Joseph Vijay in Chennai, ahead of the 31st Meeting of the Southern Zonal Council, to be held tomorrow in Kovalam, Chengalpattu.
செங்கல்பட்டு, கோவளத்தில் நாளை நடைபெறவிருக்கும் தெற்கு மண்டல கவுன்சிலின் 31வது கூட்டத்திற்கு முன்னதாக, தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களை சென்னையில் சந்தித்தேன்.
@TVKVijayHQ
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (18.8.2026) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறைக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட 36 உதவிப் பொறியாளர்கள் (கட்டுமானம்), 38 உதவி ஸ்தபதிகள், 6 செயல் அலுவலர்கள் (நிலை-1 மற்றும் நிலை-3) என மொத்தம் 80 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை வழங்கி, அவர்களுடன் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
#CMJosephVijay
Oru pudhu team. Oru pudhu journey! 💛🔥
Thrilled to come on board as the Brand Ambassador of Chennai Striker Kings. Wishing the team a fantastic Jito Premier League campaign - give it everything, enjoy the journey and make Chennai proud! 💪
The journey starts here 👉 https://t.co/hB4v0nlHK1
தாய்நாட்டின் விடுதலைக்காகத் தம் இன்னுயிரையே ஈந்த எண்ணற்ற தியாகிகளையும், ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராக அஞ்சாது களமிறங்கிப் போராடிய தேசத் தலைவர்களையும் இந்நன்னாளில் நன்றியுடன் நினைவுகூர்ந்து, மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில், தமிழ்நாட்டிற்கு என்றும் ஒரு தனித்துவமான, மகத்தான இடமுண்டு. அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராக அச்சமின்றி எழுந்த முதல் குரலும், விடுதலை வேட்கையை மக்கள் மனங்களில் விதைத்த வீர உணர்வும் இந்த தமிழ் மண்ணிலிருந்தே வலிமை பெற்றன. இத்தகைய வீரத்தையும், தேசப்பற்றையும் விதைத்திட்ட தியாக சீலர்கள் கண்ட கனவுகளை நிறைவேற்றுவோம்.
நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பேணிக்காத்து, அனைத்து குடிமக்களின் நலனையும் முன்னிறுத்தி, சமத்துவமும் சமூகநீதியும் ஜனநாயகமும் தழைத்தோங்கும் இந்தியாவை உருவாக்கிட இந்நன்னாளில் உறுதியேற்போம்.
#CMJosephVijay
#IndependenceDay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (14.08.2026) தலைமைச் செயலகத்தில், இந்திய ரிசர்வ் வங்கியின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல இயக்குநர் திருமதி உமா சங்கர், வங்கியின் பொது மேலாளர் திரு.இரா.முத்துச்செல்வன், துணைப் பொது மேலாளர்கள் திரு.அ.சுதாகர், திரு.வே.சுரேஷ் குமார், உதவிப் பொது மேலாளர் திரு.கு.ராஜ்குமார் ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில் இன்று (13.8.2026) சென்னையில் நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், 67,452 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,06,998 வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, 4,476 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5,074 வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 8 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, 2,676 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,550 வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 5 திட்டங்கள் தொடங்கி வைத்து, சிப்காட், டிட்கோ மற்றும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், தமிழ்நாடு தொழில்துறை வீட்டுவசதி பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் 777.74 கோடி ரூபாய் செலவில் முடிவுற்ற 15 பணிகளைத் திறந்து வைத்து, 9 நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்குத் தெரிவுசெய்யப்பட்ட 20 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
#CMJosephVijay
#VettriTamilNadu
#WhereVisionBecomesVictory
அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாட்களில் 1 இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேலான முதலீடுகள் ஈர்ப்பு சென்னையில், நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில் 67,452 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,06,998 வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, 4,476 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5,074 வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 8 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து,2,676 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,550 வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 5 திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து,777.74 கோடி ரூபாய் செலவிலான சிப்காட், டிட்கோ மற்றும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், தமிழ்நாடு தொழில்துறை வீட்டுவசதி ஆகிய நிறுவனங்களின் 2 திட்டங்கள் மற்றும் 13 புதிய கட்டடங்களைத் திறந்து வைத்து,9 நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்குத் தெரிவுசெய்யப்பட்ட 20 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
#CMJosephVijay
#VettriTamilNadu
#WhereVisionBecomesVictory
நம்பிக்கையின் வெளிச்சமாக, மாற்றத்தின் முகவரியாகத் திகழும் இளைய சமுதாயத்திற்கு எனது உளங்கனிந்த சர்வதேச இளைஞர் நாள் வாழ்த்துகள்!
புதிய எண்ணங்கள், அஞ்சா நெஞ்சம், முடிவில்லா ஆற்றலால் உலகை நேர்மறையாக மாற்றும் வல்லமை இளைஞர்களாகிய உங்களிடம் மட்டுமே உள்ளது. சோதனைகளை வென்று, சாதனைகள் படைத்து தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள்!
உலகரங்கில் அனைத்துத் துறைகளிலும் நமது இளைஞர்கள் வெற்றியடைய எனது உளமார்ந்த வாழ்த்துகள்!
கனவுகள் நனவாகட்டும்!
சாதனைகள் தொடரட்டும்!
#CMJosephVijay
#InternationalYouthDay
Met the Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay @CMOTamilnadu , and joined Tamilaga Vetri Kalagam @TVKVijayHQ in his presence. I seek your support and blessings. 🙏
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு C. ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து, அவரது முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தேன். உங்கள் ஆதரவையும் ஆசிகளையும் வேண்டுகிறேன். 🙏
🚨 CSK UPDATE ✅
- CSK CEO & Director will finalise the new Head Coach after meeting MS Dhoni & Ruturaj Gaikwad. [Cricbuzz]
It is likely to be an Overseas Expert.