ஒரே நிமிடத்தில் தமிழ் எழுத்துகள் அனைத்தையும் கத்துக்க முடியும். குழந்தைகளுக்கு உபயோகமாயிருக்கும்.
என் மகன் பத்தாவது படிக்கிறான். இந்த விடுமுறையிலாவது தமிழ் சொல்லிக் கொடுக்கனும். 🙂
❤️🦋✨
“வாழ்க்கையில் ஒருவரை தவறாக புரிந்துகொண்டு, அவர்கள்தான் தவறு என்று கடுமையான சொற்களைச் சொல்லுவதற்குப் பதிலாக,
அவர்களை மன்னித்து நல்லதை நினைத்தால் — நல்லதே நடக்கும். 😊
That’s the art of forgiving. ✨”
ராமன் செலுத்திய அம்பு…இராவணனின் மார்பை கிழித்தது.
போர்க்களம் அமைதியானது…
ஆனால் ராவணனின் உயிர்
இன்னும் பிரியவில்லை.
குற்றுயிராய் கிடந்த
இலங்கேஸ்வரனை பார்த்த ராமர்
ஒரு நிமிடம் மௌனமானார்…
பிறகு
லட்சுமணனை நோக்கி சொன்னார்—
“லட்சுமணா…
ராவணன் ஒரு அசுரன் மட்டுமல்ல.
அனைத்துக் கலைகளையும் அறிந்தவன்.
ராஜதந்திரத்தில்
ஈடு இணையற்றவன்.”
“அவனுடைய அனுபவம்
நமக்கு பயனுள்ளதாகும்.”
“நீ அவனிடம் செல்.
நான் கேட்டதாகச் சொல்லி
அவனுடைய சிறந்த அறிவுரைகளை
பெற்றுக் கொண்டு வா.”
லட்சுமணன்…
வெற்றியின் அகந்தையோடு அல்ல…
ஞானத்தின் பணிவோடு
குற்றுயிராய் கிடந்த
ராவணனின் காலடியில் நின்றான்.
“இலங்கேஸ்வரா…
உன்னுடைய ஞானம்
உன்னோடு அழிந்து விடக்கூடாது.”
“நீ எனக்கு உபதேசித்தால்
இந்த உலகம் அதை அறிந்து
பயன் பெறும்.”
அந்த வார்த்தைகள்…
வீழ்ந்த மன்னனின்
இதயத்தைத் தொட்டது.
ராவணன் சிரித்தான்…
அந்த சிரிப்பில்
அகந்தை இல்லை…
அனுபவத்தின் கனத்த அமைதி இருந்தது.
“லட்சுமணா…
ராமர் என்னை
இப்படிப் மதிப்பார் என்று
நான் நினைக்கவில்லை.”
“ஒரு காலத்தில்
நான் சர்வ வல்லமை படைத்தவன்.”
“நவக்கிரகங்களும்…
எமனும்…
இந்திரனும் கூட
எனக்குக் கீழ்ப்படிந்தார்கள்.”
ஒரு நொடி மௌனம்…
“அப்போது
நான் ஒரு நல்ல எண்ணம் வைத்திருந்தேன்.”
“இந்த உலகத்தில்
யாரும் நரகம் செல்லக் கூடாது.”
“அனைவரும்
சொர்க்கம் செல்ல வேண்டும்.”
“அதற்காக
எமனையே வைத்து
ஒரு பறக்கும் ஏணி உருவாக்க
நினைத்தேன்.”
“ஆனால்…”
“அந்த நல்ல செயலை
‘பின்னால் செய்வோம்’ என்று
தள்ளிப் போட்டேன்.”
“அதன் விளைவு—
இன்று நான் இங்கே.”
“ஆனால்
சூர்ப்பனகை வந்து
‘சீதாதேவி
அழகின் சிகரம்’ என்று சொன்னதும்…”
“அந்த தீய எண்ணத்தை
ஒரு நொடியும் தள்ளிப் போடவில்லை.”
“உடனே செயல்பட்டேன்.”
“விளைவு?”
“என் அழிவு…
என் குல நாசம்…
என் மரணம்.”
ராவணன்
கண்களை மூடி
மெதுவாக சொன்னான்—
“லட்சுமணா…
இதை நினைவில் வைத்துக் கொள்.”
🔥 ராவணனின் 11 இறுதி உபதேசங்கள் 🔥
1️⃣ நல்ல செயலை
உடனடியாக செய்து முடி.
தாமதம்
அதன் பலனை அழித்துவிடும்.
2️⃣ தீய செயலை
தள்ளிப் போடு.
தள்ளிப்போடுவதால்
அது நடக்காமல் போகும்.
3️⃣ உன் சாரதி,
வாயிற்காப்போன்,
சகோதரன்—
இவர்களிடம் பகை கொள்ளாதே.
அருகிலிருந்தே ஆபத்து வரும்.
4️⃣ தொடர்ந்து வென்றாலும்
‘எப்போதும் வெல்வோம்’
என்று எண்ணாதே.
5️⃣ உன் குற்றங்களை
சுட்டிக்காட்டும்
நண்பனை நம்பு.
6️⃣ அனுமனை
சிறியவன் என்று
நான் எடை போட்டது போல
எதிரியை
எளியவன் என்று
நினைக்காதே.
7️⃣ வானின் நட்சத்திரங்களை
வளைக்க முடியும்
என்று நம்பாதே.
அவை நம் வழிகாட்டிகள்.
8️⃣ பொறுமையை விட
மேலான தவம் இல்லை.
9️⃣ திருப்தியை விட
மேலான இன்பம் இல்லை.
🔟 இரக்கத்தை விட
உயர்ந்த அறம் இல்லை.
1️⃣1️⃣ மன்னித்தலை விட
ஆற்றல் மிக்க
ஆயுதம் இல்லை.”
அவ்வளவுதான்…
வீழ்ந்த மன்னன்
வென்ற ஞானம்.
லட்சுமணன்
ராவணனை வணங்கினான்…
ஒரு பகைவராக அல்ல—
ஒரு பேரறிஞனாக.
அந்தக் கணத்தில்…
ராவணனின் உயிர் பிரிந்தது.