ஆளுங்கட்சி செய்யக்கூடிய தவறுகளை சுட்டிக் காட்டுவது எதிர்க்கட்சிகளின் கடமை. பொது வாழ்வில் இருப்பவர்கள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் கிடையாது.
பத்திரிக்கை மற்றும் ஊடகங்களும் ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக் காட்டுவதும்,விமர்சிப்பதும், இயல்பானது.
இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த திரு. மாரிதாஸ் என்ற யூடியூபர் அமைச்சர்கள் திரு.ஆதவ் அர்ஜுனா, திருமதி.கீர்த்தனா மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திருமதி.லீமா ரோஸ் மார்ட்டின் ஆகியோரை விமர்சனம் செய்ததற்காக
சென்னை சைபர் கிரைம் போலீசார் அவரை இரவோடு இரவாக வீடு புகுந்து கைது செய்துள்ளது.
இதனை தமிழர் தேசம் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இது சனநாயகத்திற்கு விரோதமானது.
சட்டம் ஒழுங்கு மற்றும் போதை கலாச்சாரத்திற்கு முந்தைய அரசுதான் காரணம் என கூறி தட்டிக் கழித்து வரும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய்,ஒருவர் விமர்சனம் செய்தார் என்பதற்காக இத்தனை வேகமாக செயல்பட்டு அவரை கைது செய்திருப்பது பழிவாங்கும் போக்கை காட்டுகிறது.
கைது செய்யப்பட்ட, யூடியூபர் திரு.மாரிதாஸ் அவர்களை உடனடியாக விடுதலை செய்து சனநாயகத்தை காத்திட தமிழக அரசை வலியுறுத்துகிறேன்!..
@CMOTamilnadu
இன்றைய தினம் 10.05.2026,ஞாயிற்றுக்கிழமை - தமிழக முன்னாள் முதல்வர்,திராவிட முன்னேற்றக் கழக தலைவர் @mkstalin அவர்களையும்,
தமிழக முன்னாள் துணை முதல்வர், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் @Udhaystalin அவர்களையும், மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து பேசினேன்!..
தமிழக அரசியல் வரலாற்றில் மாற்றங்கள் என்பது தவிர்க்க முடியாதவை. அந்த வகையில் தமிழக வெற்றிக் கழக தலைமையில் அமையவுள்ள புதிய அரசுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு சனநாயக நாட்டில் ஆட்சியதிகாரம் என்பது வெறும் அதிகாரம் மட்டுமல்ல; அது கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையைச் சுமந்து நிற்கும் ஒரு பெரும் பொறுப்பாகும்.
@arivalayam தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் அங்கமாக, மக்கள் நலனை எப்போதும் உயர்த்திப் பிடிப்பதே எங்களது லட்சியம்.
அந்த வகையில்,அமையவுள்ள புதிய அரசு கீழ்க்கண்ட முக்கிய அம்சங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என ஒரு தோழமை சக்தியாக நான் வலியுறுத்துகிறேன்!..
அரசு என்பது மேல்தட்டு மக்களுக்கானது மட்டுமல்ல; கடைக்கோடியில் வாழும் பாமர மக்களின் கண்ணீரைத் துடைப்பதே உண்மையான அரசு. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துதல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் சிறு, குறு தொழில்களைப் பாதுகாப்பதில் புதிய அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும்.
தமிழகத்தின் தனிப்பெரும் அடையாளம் நமது 'மாநில சுயாட்சி'. நிதிப் பங்கீடு மற்றும் மொழி உரிமை ஆகியவற்றில் தமிழகத்தின் நலன்களை விட்டுக் கொடுக்காமல் மத்திய அரசிடம் போராடிப் பெறுவது இந்த அரசின் முதன்மைக் கடமையாக இருக்க வேண்டும்.
தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும் கட்டிக்காத்த சமூக நீதிப் பாதையில் தமிழகம் தொடர்ந்து பயணிக்க வேண்டும். இட ஒதுக்கீடு முறையைச் சீர்குலைக்க நினைக்கும் சக்திகளுக்கு இடம் கொடுக்காமல், அனைத்து சமூகத்தினருக்குமான சமமான வாய்ப்புகளை உறுதி செய்ய வேண்டும்.
விவசாயிகளின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்து, பாசனத் திட்டங்களை விரைந்து முடிப்பதோடு, காவிரி உள்ளிட்ட நதிநீர் உரிமைகளில் தமிழகத்தின் பங்கினை உறுதி செய்ய வேண்டும். இயற்கை வளங்களைச் சுரண்டுவதைத் தடுத்து, பசுமைத் தமிழகத்தைப் பாதுகாக்க வேண்டும்.
அனைவருக்கும் தரமான கல்வி மற்றும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவம் இலவசமாகக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதும், கிராமப்புற சுகாதார மையங்களை மேம்படுத்துவதும் மிக அவசியம்.
தேர்தல்கள் வரும், போகும்; ஆனால் மக்கள் நலன் என்பது நிரந்தரமானது. அமையவுள்ள புதிய அரசு, மக்களின் நம்பிக்கையைச் சிதைக்காமல், வெளிப்படைத்தன்மையுடனும், ஊழலற்ற முறையிலும் மக்கள் பணியாற்ற வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு.
மக்களுக்காகப் பணியாற்றும் எந்தவொரு ஆக்கபூர்வமான முயற்சிக்கும் எங்களது தார்மீக ஆதரவு என்றும் உண்டு. அதேவேளையில், மக்கள் நலனுக்கு எதிராகச் செயல்படும் சூழலில், ஒரு பொறுப்புள்ள அரசியல் கட்சியாக களத்தில் நிற்போம்!..
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் வட்டம், கட்டனார்பட்டியில், வனஜா ஃபயர் வொர்க்ஸ் என்கின்ற பெயரில், இயங்கிவந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில், சேர்வைக்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்த 25 நபர்கள் உயிரிழந்தனர்!
இதனையடுத்து, அவர்கள் இல்லத்திற்கு நேரில் சென்று, சொல்லொண்ணா துயரத்தில் இருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினேன்.
மேலும், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் கிடைக்க தமிழர் தேசம் கட்சி வழிவகை செய்யும் எனவும் உறுதியளித்தேன்!..
19.04.2026 ஞாயிற்றுக்கிழமை - திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி நத்தம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் தமிழர் தேசம் கட்சியின் நிறுவனத்தலைவர் @KKSelvakumaroff சாணார்பட்டி ஒன்றியம் ஏழுகொட்டம் நாலுகொட்டம் கிராமங்களில் உதயசூரியன் சின்னத்திற்கு சேகரித்தார்
#tnelection2026
நேற்றைய தினம் 15.04.2026, புதன்கிழமை - @arivalayam தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பேராவூரணி சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திரு.என்.அசோக்குமார் அவர்களை ஆதரித்து, திருச்சிற்றம்பலம், இரண்டாம்புளிக்காடு, பேராவூரணி ஆகிய பகுதிகளில், உதயசூரியன் சின்னத்திற்கு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தேன்!
வாக்களிப்பீர் உதயசூரியன்!.
#வெல்வோம்_ஒன்றாக
#ஆதரிப்பீர்_உதயசூரியன்
19.04.2026 ஞாயிற்றுக்கிழமை - திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி நத்தம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் தமிழர் தேசம் கட்சியின் நிறுவனத்தலைவர் @KKSelvakumaroff சாணார்பட்டி ஒன்றியம் ஏழுகொட்டம் நாலுகொட்டம் கிராமங்களில் உதயசூரியன் சின்னத்திற்கு சேகரித்தார்
#tnelection2026
இன்றைய தினம் 16.04.2026, வியாழக்கிழமை - @arivalayam தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திரு.காதர்பட்சா (எ) முத்துராமலிங்கம் அவர்களை ஆதரித்து, உதயசூரியன் சின்னத்திற்கு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தேன்!
வாக்களிப்பீர் உதயசூரியன்!.
#வெல்வோம்_ஒன்றாக
#ஆதரிப்பீர்_உதயசூரியன்
இன்றைய தினம் 18.04.2026, சனிக்கிழமை - @arivalayam தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திருமதி.S.கிருத்திகா தங்கபாண்டி அவர்களை ஆதரித்து, உதயசூரியன் சின்னத்திற்கு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தேன்!
வாக்களிப்பீர் உதயசூரியன்!.
#வெல்வோம்_ஒன்றாக
#ஆதரிப்பீர்_உதயசூரியன்
இன்றைய தினம் 18.04.2026, சனிக்கிழமை - @arivalayam தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருமங்கலம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திரு.மணிமாறன் அவர்களை ஆதரித்து, உதயசூரியன் சின்னத்திற்கு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தேன்!
வாக்களிப்பீர் உதயசூரியன்!.
#வெல்வோம்_ஒன்றாக
#ஆதரிப்பீர்_உதயசூரியன்
இன்றைய தினம் 09.04.2026,வியாழக்கிழமை - நத்தம் சட்டமன்ற தொகுதி, சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் 60-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில் நான் மேற்கொண்ட தேர்தல் சுற்றுப்பயணம், வெறும் வாக்கு சேகரிப்பு அல்ல; அது மக்களின் நம்பிக்கையை உணர்ந்த ஒரு நெகிழ்ச்சியான பயணம்!
வெயிலையும் பொருட்படுத்தாமல், தெருவெங்கும் திரண்டு நின்று நீங்கள் காட்டிய அந்த அன்பு... அந்த நம்பிக்கை... என் வாழ்நாளில் மறக்க முடியாதது. ஒவ்வொரு கிராமத்திலும் மக்கள் அளித்த அந்த எழுச்சிமிகு வரவேற்பு, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி இப்போதே உறுதியாகிவிட்டதை பறைசாற்றுகிறது.
ஒவ்வொரு குக்கிராமத்தின் அடிப்படைத் தேவைகளையும், விவசாயிகளின் கோரிக்கைகளையும், இளைஞர்களின் எதிர்பார்ப்புகளையும் நேரடியாகக் கேட்டறிந்தேன். உங்கள் தேவைகளை நிறைவேற்றும் ஒரு பாலமாக நான் என்றும் இருப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.
நமது சின்னம் உதயசூரியன்!
மக்களுக்கான திட்டங்கள் தங்கு தடையின்றி சென்றடையவும், நத்தம் தொகுதி தமிழகத்தின் முதன்மைத் தொகுதியாக மாறவும், வரும் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் உங்கள் பொன்னான வாக்குகளைப் பதிவு செய்து, ஒரு பெரும் மாற்றத்திற்கு வழிவகுக்க அன்புடன் வேண்டுகிறேன்.
அன்பால் இணைந்தோம்... வெற்றியால் உயர்வோம்!
#வெல்வோம்_ஒன்றாக
இன்றைய தினம் 12.04.2026, ஞாயிற்றுக்கிழமை - @arivalayam மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில், உங்கள் வீட்டுப் பிள்ளையாக நத்தம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் நான், இன்று நத்தம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 70-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில் உங்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தேன்.
வெயிலையும் பொருட்படுத்தாமல், ஒவ்வொரு கிராமத்திலும் நீங்கள் எனக்கு அளித்த உற்சாகமான வரவேற்பும், காட்டிய பாசமும் நெஞ்சை நெகிழச் செய்கிறது.
தாய்மார்களின் ஆசிர்வாதம், பெரியவர்களின் வழிகாட்டுதல், இளைஞர்களின் எழுச்சி என நத்தம் ஒன்றியம் முழுவதும் ஒரு புதிய விடியலுக்கான அறிகுறி தென்படுகிறது.
உங்கள் கண்களில் தெரியும் அந்த நம்பிக்கை வீண்போகாது!..நத்தம் தொகுதியின் முன்னேற்றத்திற்காகவும்,அடிப்படை வசதிகளின் பூர்த்திக்காகவும்,நமது இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காகவும்,உங்கள் பேராதரவை நாடுகிறேன்.
நமது வெற்றிக் சின்னமாம் "உதயசூரியன்" சின்னத்தில் வாக்களித்து, ஒரு மாபெரும் வெற்றியைத் தேடித்தருமாறு இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன்.
அன்பால் என்னை நனைத்த சொந்தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!
வெற்றி நமதே! விடியல் பிறக்கட்டும்!
#வெல்வோம்_ஒன்றாக
"கற்பி, ஒன்றுசேர், புரட்சி செய்!"
என்ற தாரக மந்திரத்தை உலகிற்குத் தந்த மாமேதை, இந்திய அரசியலமைப்பின் சிற்பி, ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளியாய் உதித்த, இந்திய அரசியலமைப்பின் தந்தை, சமூகத்தில் வேரூன்றிக் கிடந்த தீண்டாமை எனும் இருளைத் தனது அறிவாலும் எழுத்தாலும் துடைத்தெறிந்த மாபெரும் புரட்சியாளர் "அண்ணல் அம்பேத்கர்" அவர்களின் பிறந்தநாளில் அவர் கண்ட சமத்துவக் கனவை நனவாக்கவும், சாதி வேற்றுமையற்ற சமூகத்தைப் படைக்கவும் உறுதியேற்போம்!
இன்றைய தினம் 14.04.2026,செவ்வாய்க்கிழமை - @arivalayam தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் விராலிமலை சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திரு.கே.கே.செல்லபாண்டியன் அவர்களை ஆதரித்து, விராலிமலை மற்றும் குடுமியான்மலை ஆகிய பகுதிகளில், பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தேன்!
விராலிமலை சட்டமன்ற தொகுதியில், தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்றி, சனநாயகத்தை வேரூன்ற செய்வோம்!...
வாக்களிப்பீர் உதயசூரியன்!.
#வெல்வோம்_ஒன்றாக
நேற்றைய தினம் 14.04.2026,செவ்வாய்க்கிழமை - @arivalayam தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் குளித்தலை சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திரு.சூரியனூர்.சந்திரன் அவர்களை ஆதரித்து, அய்யர்மலை பகுதியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தேன்!
சமூகநீதியை நிலைநாட்ட, வாக்களிப்பீர் உதயசூரியன்!.
#வெல்வோம்_ஒன்றாக