@ArasiAkila@SaalanPaari ஆரிய பிராமண கட்டுகதைகளே தமிழர் தெய்வங்களை கொச்சைப்படுத்தி எழுதினர். பாரி அல்ல. அப்படியே யாரும் செய்தாலும் கர்மா அவர்களை பார்த்து கொள்ளும். நாம் கடந்து செல்வது தான் ஆன்ம முன்னேற்றம் ஆகும்.
@ArasiAkila@SaalanPaari நான் பாரியின் காணொளிகளில் புலால் மறுப்பைப் பற்றி பலமுறை பதிவிட்டிருக்கிறேன். பாரி வள்ளலாரைப் பற்றிப் பேசிய பிறகே, நான் வள்ளலாரைப் பின்பற்றத் தொடங்கினேன்.
@ArasiAkila@SaalanPaari நான் அறிந்தவரை நீங்கள் கூறும் தவறுகளைப் பாரி செய்யவில்லை. அப்படியே செய்திருந்தாலும் நாம் மரியாதையோடு மட்டுமே விமர்சனம் வைக்கலாம்; வழக்குத் தொடரலாம். தவறிழைப்பவர்கள் மீது இரக்கம் கொண்டு அதைக் கடந்து சென்று அமைதியைப் போதிப்பதே உத்தமம். இல்லையேல் ஆன்ம பக்குவம் அடைய முடியாது.
@ArasiAkila@SaalanPaari அனைவருமே ஜீவகாருண்யத்தாலும், அருட்பெருஞ்ஜோதியின் அருளினாலும் மட்டுமே பிறவிச் சுழற்சியை அறுத்து, மரணமிலாப் பெருவாழ்வு பெற முடியும்.
@Supercell_10@Rollercaster123 குமரிக்கண்டம் பற்றி அரசு ஆய்வு மேற்கொண்டு சொல்வதே சரியாகும்.
நமக்குக் காலமில்லை; எனவே வீண் விவாதம் தவிர்த்து, ஜீவகாருண்ய ஒழுக்கத்துடன் அருட்பெருஞ்ஜோதியை மட்டுமே வணங்கி, மறுபிறப்பொழித்து மரணமிலாப் பெருவாழ்வு பெறுவோம். வேறு வழியில் இப்பயனை அடைய முடியாது.
@Rollercaster123 பிறர் மனம் நோகும் வண்ணம் பேசுபவர்கள், தமது சொந்த ஆன்ம லாபத்தையும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளையும் இழக்கின்றார்கள் என்பதை அறியாத அஞ்ஞானிகள். அவர்கள் அகத்தில் 'கருணை' எனும் அருள் ஒளி இன்னும் தோன்றவில்லை.
@Rollercaster123 அத்தகையோரைக் கண்டு வீண் விவாதத்திலோ அவதூறிலோ இறங்கக் கூடாது. "எல்லா உயிர்களிடத்தும் தயவு" செலுத்துவதே நமது கடமை. அவர்களின் அறியாமையைக் கண்டு இரக்கமும் தயவும் கொண்டு, "இவ்ஆன்மா அருள் ஒளி பெற்றுத் தீய பழக்கத்திலிருந்து விடுபட வேண்டும்" என அருட்பெருஞ்ஜோதியிடம் விண்ணப்பிப்பது
@Rollercaster123 பிறருடைய குடும்ப வாழ்க்கையைப் பற்றியும், அவர்களின் தனிப்பட்ட குறைபாடுகளைப் பற்றியும் பலர் முன்னிலையிலும் புறங்கூறி அவதூறு பேசுபவர்களை, நாம் கோபத்துடனோ வெறுப்புடனோ பார்க்கக் கூடாது; மாறாக, மிகுந்த இரக்கத்தோடும் தயவோடும் பார்க்க வேண்டும்.