நாட்டு விடுதலைக்காகவும், மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும் போராடிய எங்கள் கொள்கைத் தலைவர், விடுதலைப் போராளி, மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் அவர்களின் நினைவு தினத்தையொட்டி, பனையூரில் உள்ள கழகத் தலைமை நிலையச் செயலகத்தில், அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் அவர்களின் நினைவு தினத்தில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் நலன் மற்றும் உரிமைகளோடு, அவர்களின் பாதுகாப்பையும் மீட்டெடுக்க உறுதி ஏற்போம்.
மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன?
ஜனநாயகத்தின் நான்காவது தூணான இதழியல் துறைக்கு உரியதான பத்திரிகை சுதந்திர தர்மம் காக்கப்பட வேண்டும். நூற்றாண்டு காணும் விகடனின் இணையத்தளப் பக்கம் முடக்கப்பட்டதற்கு ஒன்றிய அரசுதான் காரணம் என்கிற கருத்து நிலவுகிறது. பத்திரிகை, ஊடகங்களால் வெளியிடப்படும் கருத்துகள் தவறானவையாகவோ, குற்றம் சுமத்துபவையாகவோ இருந்தால் நீதிமன்றம் மூலம் தீர்வு காண வேண்டுமே தவிர, கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் வகையில் செயல்படுவது, அரசியல் சாசன உரிமையைக் கேள்விக்குறி ஆக்குவதன்றி வேறென்ன?
மாநில மொழிக் கொள்கைக்குச் சவால் விடுத்து, தமிழகத்திற்கு நிதி ஒதுக்கமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிப்பதும், விகடன் இணையத்தளப் பக்கத்தை முடக்கியதும் ஜனநாயகத்திற்கு எதிரான, கண்டனத்திற்கு உரிய ஃபாசிச அணுகுமுறையே.
ஃபாசிச அணுகுமுறைகளை எந்த வடிவத்தில் யார் கையிலெடுத்தாலும் அது ஒன்றிய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் மக்கள் பக்கம் நின்று தமிழக வெற்றிக் கழகம் எந்நாளும் தீர்க்கமாக எதிர்க்கும்.
ஒரு தாயாக என் வளர்ச்சிக்கு நீங்கள் எப்போதும் உறுதுணையாக இருந்துள்ளீர்கள்.
கடந்த ஆறு மாத காலமாக உங்களின் இரு கண்களில் நான் ஒரு கண் என்றால் உங்களது கழகம் மற்றொரு கண் என்பதை வீட்டில் நமக்குள் நடக்கும் கழகம் தொடர்பான விவாதங்களின் மூலம் நான் உணர்ந்துள்ளேன்….
இருப்பினும் இன்றைய தினம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து நீங்கள் உங்களை முழுமையாக விடுவித்துக் கொள்வதை நான் அறிந்தேன்.
தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகியாக நீங்கள் எடுத்த இந்த முடிவை நான் வரவேற்கிறேன்!!
உங்கள் மக்கள் பணி என்றும் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்……
தனித்துயர்ந்த
குன்றுகள் தோறும்
வீற்றிருக்கும்
தமிழ்நிலக் கடவுள்;
உலகெங்கும் வாழும்
தமிழர்களின்
தனிப்பெரும் கடவுள்
முருகப் பெருமானைப்
போற்றுவோம்!
அனைவருக்கும் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்!
தமிழ்நாடு அரசியலில் மாபெரும் ஜனநாயக சரித்திரத்தைப் படைத்திடும் போராட்டத்தில் இரண்டாம் ஆண்டு அடியெடுத்து வைக்கிறது தமிழக வெற்றிக் கழகம். சமத்துவம், சமூக நீதி, சம நீதி என்ற மானுட கோட்பாட்டையும், அதற்கு வழிகாட்டியாக, கொள்கை ஆசான்களாக ஐந்து வரலாற்றுத் தலைவர்களையும் கொண்டுள்ள நமது தமிழக வெற்றிக் கழகம், புதிய சகாப்தத்தை உருவாக்கவுள்ளது. மக்கள் துணையுடன், தலைவரின் வழிகாட்டுதலுடன், முன்னணி நிர்வாகிகளின் ஒத்துழைப்புடன், தொண்டர்களின் உழைப்புடன் நாம் நம் மக்களுக்கான அந்த மகத்தான ஆட்சியை விரைவில் கட்டமைப்போம். கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தி, நூறாண்டுக் காலம் களமாடும் இயக்கமாக நமது வெற்றிக் கழகத்தை வீறுநடை போடச் செய்யும் வரலாற்றுப் பணி நம் முன் உள்ளது. அந்த இலக்கை அடைய அனைவரும் களத்தில் இறங்கி அயராது உழைப்போம் என்று இந்த இனிய நாளில் உறுதியேற்போம்.
புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் உட்பட ஐந்து வரலாற்று நாயகர்களை கொள்கைத் தலைவர்களாக ஏற்றுக்கொண்டுள்ள 'தமிழக வெற்றிக் கழகத்தில்' மக்களுக்கான அரசியலை முன்வைத்து நான் கரம் கோர்த்துள்ளேன்.
தலைவர், முக்கிய நிர்வாகிகள், கட்சித் தோழர்கள் மற்றும் மக்கள் சக்தியுடன் இணைந்து மக்களுக்கான சனநாயகத்தை உருவாக்குவோம்.
'எல்லோருக்கும் எல்லாம்' என்ற மானுட மாண்பு, 'நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்' என்ற அரசியலமைப்பு நெறி, 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற உலக அறம் உள்ளிட்ட சமத்துவ, சமூகநீதி கொள்கைகளின் அடிப்படையில் என்றும் மக்களோடு பயணிப்பேன்.
மாபெரும் வரலாற்றுக் கடமைக்கான பயணத்தில் எனக்கு இந்த பொறுப்பு வழங்கிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களுக்கும், மூத்த நிர்வாகிகள் மற்றும் கட்சித் தோழர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
❤️💛 நமது தஞ்சை கிழக்கு ஒன்றியம் சார்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்கத்தினை ஓட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் வழங்குதல்! ❤️💛
#TVKFirstAnniversary#தமிழகவெற்றிக்கழகம்
வேங்கை வயல் விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி, உண்மையான குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும்!
ஒரு விசாரணையின் முடிவுகள் கேள்விக்கு உள்ளாக்கப்படுகின்றன எனில், அவற்றை மறு விசாரணைக்கு உட்படுத்துவதில் எவ்விதத் தவறும் இல்லை.
வேங்கை வயல் விவகாரத்தில், குற்றம் செய்தவர்கள் என்று குறிப்பிடப்படுபவர்கள் குறித்துப் பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன.
எனவே, குறைகாணவே இயலாத நடுநிலையான பார்வையுடன் இந்த விவகாரத்தில், உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டோருக்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும். அதன் மூலம் மக்களுக்கும் சரியான நீதி வழங்கப்பட்டது என்ற நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்பதே இந்த விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடாகும்.
மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிபிசிஐடி ஏற்கெனவே விசாரணை நடத்தி, கால தாமதமாக விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. ஒன்றிய அரசின் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டால் அது மேலும் கால தாமதத்தையே ஏற்படுத்தும். இது வேங்கை வயல் மக்களுக்கு விரைவாக நீதியைப் பெற்றுத் தராது.
வேங்கை வயல் விவகாரத்தில் உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். வருங்காலங்களில் இது போன்ற ஒரு கொடுஞ்செயல் நிகழாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஆகவே, கடும் கண்டனத்திற்கு உரிய, மனிதத் தன்மையற்ற செயலான வேங்கை வயல் விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில், சிறப்புப் புலனாய்வுக் குழு நியமித்து விசாரணை நடத்தி, உண்மையானக் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழக வெற்றிக் கழகத்தில் மூன்றாம் கட்டமாக 19 கழக மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட நிர்வாகிகளின் விவரங்களை அறிய... Click Here https://t.co/tFUhwFOQSf
புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.