#கேள்விக்களம் | தாராபுரம் இடைத் தேர்தல் பரப்புரையில் முதல்வர் விஜயின் ரோடு ஷோவுக்கு இடையூறு ஏற்படுத்திய வழக்கில் நாதக வேட்பாளர் கார்த்திகா திடீரென கைது செய்யப்பட்டிருப்பது...
#SunNews | #TVKVijay | #NTKKarthika
தேர்தல் நேரத்தில் போட்ட வழக்கிற்கு இத்தனை நாட்கள் நடவடிக்கை எடுக்காமல் பொய்யான வழக்கில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கார்த்திகா மற்றும் அவரது கணவர் தகவல் தொழில் நுட்பப் பாசறை மாநில பொறுப்பாளர் முருகசந்தரகுமார் அவர்களையும் அதிகாலை வீடு புகுந்து கைது செய்து எப்படியாவது நாம் தமிழர் கட்சியை ஒடுக்க வேண்டுமென காவல்துறையை ஏவி விடும் @CMOTamilnadu க்கு கடும் கண்டனங்கள்.
#release_ntkkarthika
அரசின் கொள்கைகளும் நிர்வாகமும் மாற்றங்களுக்கு உட்பட்டது, தனிநபர் சார்ந்தது. ஆனால், தமிழ்நாடு போன்ற ஒரு மாநிலத்தின் நலனுக்காக ஆழமாக வேரூன்றி நிலைத்து நிற்பது கொள்கைப் பிடிப்புடைய ஆணித்தரமான சித்தாந்தம் மட்டுமே!
கொள்கை மற்றும் சித்தாந்த அளவீட்டல் தவெக மிகவும் தவறான கட்சி! எந்தவித புரிதலுமற்ற கைப்பாவை ஆட்சியாளர்களும்,
அரசியல் விழிப்புணர்வு மற்றும் அடிப்படைப் பொறுப்புணர்வு கடுகளவுகூட இல்லாத,
மூளைச்சலவை செய்யப்பட்ட, அடிப்படைத் தரமில்லா,
ஒழுக்கமில்லா ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பெருமளவில் உருவாக்கும்,
நிகழ்காலம் மற்றும் எதிர்காலக் கட்டமைப்பினைக் கொண்ட,
ஒரு பேராபத்தான அமைப்பு!
அத்தகைய அமைப்பைத் தமிழ்நாட்டில் சுவடில்லாமல் துடைத்தெறிய வேண்டியது நம் தலையாயக் கடமை, என் தலையாயக் கடமையென நான் கொள்கிறேன்.
Hence, NTK for life!
அண்ணன் சீமான் அவர்களின் NTK:
* திராவிட ஒட்டுண்ணி அரசியலைத் தோலுரித்துக் காட்டினோம்;
* திராவிட அரசியல் கட்டமைப்புகளைப் பலவீனப்படுத்தினோம்;
* திராவிட அரசியல் வீழ்ச்சிக்கு வழிவகுத்த ஒரே சக்தி நாமாகத் திகழ்ந்தோம், மேலும் வித்திடும் ஒரே சக்தி நாம் மட்டுமாகவே முன் நகர்வோம்!
வீரியம் குறையாது அதனை செய்துகொண்டே இருப்போம்.
திமுக அதிமுகவின் ஊழல்வாதிகளையும், சித்தாந்தத் தெளிவின்மையையும் தன்னுள் செமித்து வைத்திருக்கும் தவெக அரசு ஒருபொழுதும் தமிழ்நாடு கோரும் மாற்றமாக அமையாது!
ஆகையால், தவெக-வின் பலவீனமான செயல்பாடுகளையும், பரிதாபகரமான விளம்பர அரசியலினையும், சுற்றி அரங்கேற்றப்படும் அரசியல் நாடகங்களையும் அம்பலப்படுத்த நமக்கு ஒரு நொடிப் பொழுது மட்டுமே போதும்.
இழப்பதற்கு எதுவுமே இல்லை;
வென்றெடுக்க வேண்டி ஒரு நாடு காத்திருக்கிறது;
Hence, let’s play this game…😎
Translated:
Policies and administration are subject to changes and are people-dependent. What stays rooted for the wellness of a state like Tamilnadu is ideology. If ideologically, TVK will mass produce idiots, brainwashed bumblers, abusers and crass groups of men, women and children alike with misplaced priorities, a political awareness and common civic sense the size of a pea, that will be one system that needs to wiped off the face of TN and that I would personally like to play a role in! Hence NTK for life.
Guys,
Annan Seeman, we NTK,
Bared and exposed Dravidian parasitic politics;
We weakened their systems;
We are the OG torchbearers to the demise of Dravidian politics;
and
We will be the only one here - noncompromised and unabashed…
Hence NTK for life.
The TVK government, which harbors the corrupt and ideologically ambiguous of the DMK and AIADMK, will never be the change that Tamilnadu demands!
Please bear in mind, it will take us just the blink of an eye to expose TVKs weaker dynamics and publicity stunt of a pathetic political climate. We got all the time, we got a nation to acquire and we got nothing to lose.
Hence, let’s play this game…😎
தியாக தீபம் திலீபன் - ஏழாம் நாள்
இந்திய பாதுகாப்புப்படை அதிகாரி பேச்சுவார்த்தை நடத்திய பின்பும் எந்தவொரு தீர்க்கமாக முடிவும் எடுக்கப்படவில்லை என்ற முடிவு அன்று தெரிந்தது.
ஆனால் விடுதலைப்புலிகள், அறத்தின் வழி நிற்கவும் திலீபனின் உண்ணா நோன்பை முடித்துவைக்க கடும் முயற்சிகள் எடுத்தனர்.
இத்தகவல்களை உடனிருந்தோர் திலீபனிடம் தெரிவித்தப்பொழுது
"எந்த முடிவும்…. நல்ல முடிவாக இருக்க வேணும். ஜந்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக அவர்கள் எழுத்தில் தர வேணும்…. இல்லையெண்டால்…. நான் உண்ணாவிரதத்தைக் கடைசி வரைக்கும் … கைவிடமாட்டன்.”
ஓவ்வொரு வார்தையாக கரகரத்த குரலில் வெளிவந்தது அண்ணன் திலீபனின் பதில்.
இந்தியாவில் இருக்கின்ற கட்சிகளில், தேர்தல் பத்திரம் மூலம் நிதி வாங்காத ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே.
இன்றும் திமுக கட்சி நிறுவனங்களிடம் இருந்து நிதி வாங்குகிறது.
178 கோடி ரூபாய் தேர்தல் நிதியாக நிறுவனங்களிடம் இருந்து தவெக வாங்கியுள்ளது.
நாம் தமிழர் கட்சி மட்டுமே மக்களிடம் வெளிப்படையாகத் திரள் நிதி பெற்று கட்சி நடத்துகிறது.
#ntk
#seeman
#tvk
#DMK
டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுவை கிடங்குகளில் வைத்து பாதுகாக்கும் அரசு.
நெல் மூட்டைகளைப் பாதுகாக்க கிடங்குகள் கட்டாமல் தார்ப்பாய்களை வழங்குகிறது.
இதுதான் மாற்றமா?
@CmoTamilnadu@TVKVijayHQ#ntk#seeman#tvkfails#TNbudget
காவிரி நதிநீர்ச்சிக்கலில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்?
@CMOTamilnadu@TVKVijayHQ
காவிரி நதிநீர்ச்சிக்கல் உச்சம்பெற்று, மேகதாதுவில் அணை கட்டுவதில் மிகுந்த முனைப்போடு, அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, கர்நாடக அரசும், அங்குள்ள எதிர்க்கட்சிகளும் ஒருமித்துச் செயல்பட்டு, முன்னெடுப்புகளைச் செய்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் அரங்கேறி வரும் அரசியல் காட்சிகள் மிகுந்த ஏமாற்றத்தைத் தருகின்றன. ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் சேர்ந்ததுதான் அரசாங்கம் எனும் அடிப்படையை மறந்து, இருவரும் பகைமை பாராட்டுவதும், காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுவதும், அரசியல் பழிவாங்கல் செய்வதும்தான் ஆட்சி நிர்வாகமா? மக்களுக்கான அரசியலா? என்ற கேள்வி எழுகிறது. தற்போது நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்குமான தலைகுனிவாகும்.
காவிரி நதிநீர் சிக்கல் தொடர்பாக திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்வைத்த சில கருத்துகள் தேவையற்றவை; எதிர்க்கட்சித்தலைவர் எனும் பதவிக்குரிய மாண்பை மறந்து, கண்ணியக்குறைவான கருத்துக்களை பொதுஅவையில் வைத்திருக்க வேண்டியதில்லை. அதேசமயம், இதனையே வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, கைதுநடவடிக்கை எனும் பெயரில் தவெக அரசு இறங்குவதும் ஏற்புடையதல்ல.
அரசியல் மேடைப் பேச்சுக்கெல்லாம், தவெக அரசு கைது நடவடிக்கை எடுக்குமென்றால், என் மீதும், என் தம்பி, தங்கைகள் மீதும் தனிநபர் விமர்சனமும், அவதூறும், ஆபாசத்தாக்குதலும் நாள்தோறும் தொடுக்கும் தவெகவினர் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்காதது ஏன்? அவ்வாறு அவதூறு பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் மாண்புமிகு நீதியரசரே, சட்ட நடவடிக்கை எடுக்கச் சொல்லி, உத்தரவு கொடுத்துவிட்டப் பிறகும், கைது செய்யாது விட்டிருப்பதேன்? அவர்கள் தவெகவின் ஆதரவாளர்கள் என்பதாலா? இன்று காலை 9 மணிக்குப் புகார் கொடுத்து, இரண்டு மணி நேரத்தில் முற்பகல் 11 மணிக்கெல்லாம் உதயநிதியைக் கைதுசெய்கிற காவல்துறையினர், என்னைப் பற்றி அவதூறுப் பரப்பியவர்களை இத்தனை நாட்களாகியும் கைதுசெய்யாது, காப்பாற்றுவது ஏன்? என்னைப் பற்றி மேடையில் ‘சீமான் பழைய சாமான்’ என்று தரம்தாழ்ந்து பேசிய மதிப்புமிகு லயோலா மணி மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? அப்படி பேசியதை ஊக்கப்படுத்தும் விதமாக பாடநூல் கழகத் தலைவராக அரசுப்பதவி கொடுத்து அழகுபார்ப்பதற்கு பெயரென்ன முதல்வர் அவர்களே? இதுதான் உங்களின் நாகரீக அரசியலா?
என் மீதும், என் தம்பிகள் மீதும் கடந்தகாலத்தில் முந்தைய திமுக அரசு பாய்ச்சாத வழக்குகள் இல்லை; ஏவிவிடாத கைது நடவடிக்கைகள் இல்லை. ஏறக்குறைய 200க்கும் மேற்பட்ட வழக்குகளை திமுகவின் ஆட்சியிலேயேதான் பெற்றிருக்கிறேன். எல்லாவற்றிற்கும் கைது என்று முந்தைய திமுக அரசு, கடைப்பிடித்த அதிகார அடக்குமுறையையே தவெக அரசும் கடைப்பிடிக்குமென்றால், இதுதான் சனநாயக ஆட்சியா? இதுதான் மக்களுக்கான மாற்று அரசியலா? மக்களுக்குத் துளியும் நலன்பயக்காத, தரம்தாழ்ந்த அரசியல் நடைபெற்று வருவதைப் பார்க்கிறபோது மனவலியைத் தருகிறது. முந்தைய திமுகவின் ஆட்சிபோலவே, எல்லாவற்றிற்கும் கைது என தவெகவின் அரசு கிளம்புவது துளியும் சகிப்புத்தன்மையற்ற போக்காகும்.
மேடைதோறும் திமுகவை தீயசக்தியென விமர்சித்துவிட்டு, திமுக கடந்த காலத்தில் செய்த கொடுங்கோன்மையை நிகழ்காலத்தில் தவெக அரசு கட்டவிழ்த்துவிடுவது எந்தவிதத்தில் மாற்று அரசியலாகும்? திருவைகுண்டம் தொகுதியின் தவெகவின் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மீதும், இன்னபிற தவெகவின் நிர்வாகிகள் மீதும் பாலியல் புகார்கள் பொதுவெளியில் முன்வைக்கப்பட்டு, இதுவரை விசாரணை செய்யக்கூடாத நிலையில், இந்த விவகாரத்தில் மட்டும் இவ்வளவு வேகம் காட்டுவதேன்? காவிரி நதிநீர் விவகாரத்தில் காட்டாத வேகத்தை, கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்?
காவிரிப்படுகையில் குறுவை சாகுபடிப் பொய்த்து, சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகியிருக்கும் நேரத்தில், அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, காவிரி நதிநீர் விவகாரத்தில் செய்ய வேண்டிய ஆக்கப்பூர்வ முன்னெடுப்புகளைச் செய்யாது, தவெக அரசு தான்மையுடன் வறட்டுத்தனமான செயல்பாடுகளில் ஈடுபட்டு, தமிழ்நாட்டின் கவனத்தை ஒட்டுமொத்தமாகத் திசைதிருப்பி இருப்பது வெட்கக்கேடானது. காவிரி நதிநீர் விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு ஆளுங்கட்சி காட்டுவதும், காவிரிக்காக தீவிரமாக போராட வேண்டிய சமயத்தில் எதிர்க்கட்சியான திமுக கைதுக்கு எதிராக போராடிக் கொண்டிருப்பதுமான தமிழ்நாட்டின் அரசியல் நிலை சாபக்கேடானதாகும்.
சகிப்புத்தன்மையே சனநாயகத்திற்குத் தேவையான அடிப்படை என்பதை மறந்து, அரசியல் மேடைகளில் பேசுவதற்கெல்லாம் கைது நடவடிக்கை என்பதை எந்த அரசு செய்தாலும் அது மிகத்தவறானது; மேடைகளில் தவறாகப் பேசினால், அவதூறு வழக்கு தொடுக்க வேண்டுமே ஒழிய, எடுத்த எடுப்பிலேயே கைதென இறங்குவது மக்களாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என தவெக அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
மாற்றம் என்பது சொல் அல்ல; செயல்!
மாறுவோம்! மாற்றுவோம்!
இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
புரட்சிகர அரசியலை நோக்கி புதிய உறவுகள் நாம் தமிழர் கட்சியில் இணையும் விழா.
தலைமை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாள்: ஆடி 17(ஞாயிற்றுக்கிழமை) 02.08.2026
நேரம்: காலை 10 மணிக்கு
இடம்: சென்னை - பல்லாவரம்
பல்லாவரம் வட்டார நாடார் ஐக்கிய சங்க சிவந்தி ஆதித்தனார் திருமண மாளிகை
(பொன்னியம்மன் கோயில் தெரு, T3 காவல் உதவி மையம் அருகில்)
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
மேகதாது அணை சிக்கலுக்குப் புதிய நடுவர் மன்றம் கோரும் தமிழ்நாட்டு அரசைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி -ஒருங்கிணைந்த திருவாரூர் மாவட்டம் நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
மீட்டெடுப்போம் காவிரி உரிமையை!
#ntk#ntkitwing#சீமான்#seeman #tamilnationalism
தமிழக முதல்வர் ஊழல் இல்லாத ஆட்சியை தருவேன் என்று கூறி வரும் நிலையில், மாம்பாக்கம் தவெக ஊராட்சி மன்ற தலைவரும், தவெக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளருமான வீரா என்பவர் ஒப்பந்ததாரரிடம் 1.30 லட்சம் லஞ்சம் வாங்கிய வீடியோ வைரல்
விசாரணை சிறைவாசி சபரிவர்மனை அடித்தே கொன்ற காவல்துறையினரைப் பாதுகாப்பதா? முதல்வர் விஜய் வாய்திறக்க மறுப்பதா?
@CMOTamilnadu@TVKVijayHQ
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் குட்கா வழக்கில் கைதுசெய்து சிறையிலடைக்கப்பட்ட சபரிவர்மன் எனும் மாற்றுத்திறனாளி நீதிமன்றக் காவலில் சிறையிலிருக்கும்போதே மரணித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கைதுசெய்யப்பட்டபோது எவ்வித உடல்நலக்குறைபாடுமில்லாது, முழு நலத்தோடு இருந்த சபரிவர்மன் விசாரணைக்குப் பிறகு, இறந்துபோகிறாரென்றால், இது காவல்துறை செய்திருக்கும் பச்சைப்படுகொலையாகும். எந்தக் குற்றமிழைத்தவராக இருந்தாலும், அவரைச் சட்டத்தின்படிதான் தண்டிக்க வேண்டுமே ஒழிய, அவரை அடித்துத் துன்புறுத்திக் கொலை செய்வது என்பதை எதன்பொருட்டும் ஏற்க முடியாது.
முந்தைய திமுகவின் ஆட்சிக்காலத்தில் நடந்த காவல் மரணங்களுக்கு எதிராகப் பேசிய இன்றைய முதல்வர் விஜய் அவர்கள், தற்போதைய தவெகவின் ஆட்சியில் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை செய்திருக்கும் இந்தப் படுகொலைக்கு என்ன செய்யப் போகிறார்? தார்மீகப் பொறுப்பேற்று, காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவுசெய்து, சிறைப்படுத்தப் போகிறாரா? இல்லை! முந்தைய திமுக, அதிமுகவின் ஆட்சிக்காலங்களைப் போலவே, சிறைவாசிக் உடல்நலக் குறைபாட்டால் இறந்ததாகக் கட்டுக்கதைகளைக் கட்டவிழ்த்துவிட்டு காவல்துறையினரைக் காப்பாற்றிச் சிக்கலைக் கடத்திவிடப் போகிறாரா? திமுக, அதிமுக செய்த நிர்வாக அணுகுமுறைகளைத்தான் முதல்வர் விஜய்யும் கடைப்பிடிப்பாரென்றால் இதிலென்ன மாற்று இருக்கிறது? இதிலென்ன எளிய மக்களுக்கான அரசியல் இருக்கிறது? சிறைவாசி சபரிவர்மனை அடித்துக் கொன்ற காவலர்களைப் பாதுகாத்து, முதல்வர் விஜய் இதுவரை வாய்திறக்க மறுத்து வருவது அதிகாரத்திமிர் இல்லையா? திமுகவின் ஆட்சியில் நடந்த காவல் மரணங்களுக்கும் நீதியைப் பெற்றுத் தருவோம் எனத் தேர்தல் களத்தில் வாக்குறுதி அளித்துவிட்டு, தம்பி ஆகாஷ் டெலிசன் மரணத்துக்கான நீதியைப் பெற்றுத் தராது தவெக அரசு வஞ்சித்த நிலையில், தற்போதைய சபரிவர்மன் மரணத்துக்கும் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது.
ஆகவே, விசாரணை சிறைவாசி சபரிவர்மனை அடித்துக் கொன்ற காவலர்கள் மீது கொலைவழக்குப் பதிவு செய்து, சிறைப்படுத்த வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 25 இலட்ச ரூபாய் துயர்துடைப்புத்தொகை வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
யாரும் லஞ்சம் கேட்டால் தராதீர்கள் என்று சொல்ல எதற்கு ஒரு முதலமைச்சர் அதற்கு ஒரு NGO போதுமே…
யாரும் என் ஆட்சியில் லஞ்சம் வாங்க மாட்டார்கள் என்று அண்ணன் சீமான் சொல்வதைப்போல் சொன்னால் தான் அதன் பெயர் ஆளுமை அந்த பதவிக்கு பெயர் முதலமைச்சர்…
#டம்மிபாவா_விஜய்
அரசு வேலைக்காக இரவு பகலாகப் படித்துவிட்டு, இலட்சக்கணக்கான இளைஞர்கள் காத்திருக்கின்றனர். தகுதித் தேர்வு எழுதிவிட்டு இன்றளவும் பணி ஆணை கிடைக்காமல் ஆசிரியர் பெருமக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். பல ஆண்டுகள் பணி செய்துவிட்டு முறையான ஓய்வூதியம் கிடைக்காமல் அரசு ஊழியர்கள் தவித்து வருகின்றனர்.
தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பல்லாயிரம் செவிலியர்களும், ஆசிரியர்களும், கௌரவ விரிவுரையாளர்களும், டாஸ்மாக் ஊழியர்களும், மின்துறை மற்றும் போக்குவரத்துப் பணியாளர்களும், தூய்மைப்பணியாளர்களும் பணி நிரந்தரம் கேட்டுப் போராடி வருகின்றனர். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வராத தவெக அரசு, இடைத்தேர்தலை நோக்கமாகக் கொண்டு கரூரில் மரணித்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்குவது மிகத் தவறானப் போக்காகும்.
ஆகவே, கரூர் இடைத்தேர்தலில் தன் அரசியல் இலாபத்தை நோக்கமாகக் கொண்டு, கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் தவறான முடிவைக் கைவிட வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி
அமோனியா கசிவு நிகழ்ந்த தொழிற்சாலைக்கு ஆய்வுக்குச் செல்லாத தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா, பள்ளிகளில் குழந்தையிடம் கேள்வி எனும் பெயரில் அத்துமீறலாமா?
@CMOTamilnadu@TVKVijayHQ@Keerthana4VNR
அரசுப்பள்ளியை ஆய்வு செய்வதாகக் கூறிக்கொண்டு, தவெக அரசின் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா அவர்கள் அரசுப்பள்ளியில் படிக்கும் ஒரு குழந்தையிடம் கேள்விகேட்டு நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியளிக்கிறது. குழந்தைக்குத் தன்னம்பிக்கையும், உத்வேகமும் அளிக்கும் வகையில் பேசாது, அக்குழந்தையைக் கூனிக் குறுக வைத்து, தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளும் விதத்தில் நடந்துகொண்டிருப்பது மிகவும் மலினமான விளம்பர அரசியலாகும். தங்களது அரசியல் ஆதாயம் தேடலுக்காகவும், விளம்பர மோகத்திற்காகவும் குழந்தைகளைக்கூட பலிகடாவாக்கத் துடிக்கும் தவெக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
ஆங்கிலம் என்பது ஒரு மொழிதானே ஒழிய, அறிவல்ல எனும் அடிப்படை உண்மையைக்கூட உணராத அமைச்சர் கீர்த்தனா, தன்னை அதிமேதாவியாகக் காட்டிக்கொள்வதற்காக ஆங்கிலமறியாத அக்குழந்தையைக் குற்றப்படுத்தலாமா? கடைசி இருக்கைக் குழந்தைகள் நன்றாகப் படிக்க மாட்டார்கள் எனும் பொருளில் பள்ளியில் பேசலாமா? அப்படிப் பார்த்தால் சட்டமன்றத்தில் கடைசி வரிசையில் இருப்பவர்கள் எல்லாம் அறிவில்லாதவர்களா என்ன? சட்டமன்றத்தில் முதல் வரிசையில் அமர்ந்து இருப்பவர்களுக்குக்கூட அறிவுப்பேரொளி சுடர்விட்டு எரிவது போல தெரியவில்லையே? ஒரு குழந்தையிடம் என்ன பேச வேண்டும்? எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்? எனும் அடிப்படைப் பண்புகளைக்கூட கற்காத இவர் அக்குழந்தைக்குப் பாடமெடுப்பது கேலிக்கூத்து இல்லையா? வெள்ளை அறிக்கை வெளியிடும்போது அமைச்சர் மரிய வில்சன் தமிழைப் படிக்கவே தடுமாறி நின்றதை நாடே பார்த்ததே, தாய்மொழி தமிழை உச்சரிக்க முடியாது ஒரு அமைச்சரே திணறி நின்றது அவமானமில்லையா? இந்த இலட்சணத்தில் அமைச்சர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் வைத்துக் கொண்டு, ஒரு அரசுப்பள்ளிக் குழந்தையைக் கைகட்டி நிற்கச் செய்து, கேள்வி எனும் பெயரில் அத்துமீறுவது அக்குழந்தையின் மீதான உளவியல் வன்முறை!
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே அமோனியா கசிவால் இதுவரை 18 பேர் இறந்துபோயிருக்கிறார்கள். தனக்குத் தொடர்பே இல்லாத துறையில் ஆய்வு எனும் பெயரில் அத்துமீறும் தொழிற்துறை அமைச்சரான கீர்த்தனா, அமோனியா கசிவால் உழைக்கும் மக்கள் இறந்துபோன அந்தத் தொழிற்சாலையைப் பார்வையிட ஏன் செல்லவில்லை? வடசென்னைப் பகுதிகளில் இருக்கும் தொழிற்சாலைகள் பல சூழியல் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில், அத்தொழிற்சாலைகளில் விதிகள் சரியாகக் கடைபிடிக்கப்படுகிறதா என என்றைக்காவது ஆய்வுக்குச் செய்யச் சென்றிருக்கிறாரா? அமோனியா கசிவு நிகழ்ந்த தொழிற்சாலைக்கு ஆய்வுக்குச் செல்லாத தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா, பள்ளிகளில் குழந்தையிடம் கேள்வி எனும் பெயரில் அத்துமீறலாமா? எல்லாம் விளம்பரமோகம் படுத்தும் பாடு! வெட்கக்கேடு!
ஆகவே, தவெக அரசின் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் அரசுப்பள்ளிகளில் அத்துமீறுவதையும், அரசியலைப் புகுத்துவதுமான மோசமானப் போக்கைக் கைவிட்டு, ஆக்கப்பூர்வமான மக்கள் பணிகளில் இனியாவது கவனம் செலுத்த வேண்டுமென அறிவுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி