மாற்றம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் முகமூடியைக் கிழித்த 31 நாட்கள்!
தமிழ்நாட்டின் முதலமைச்சராக திரு. விஜய் அவர்கள் பதவியேற்று 31 நாட்கள் கடந்துவிட்டன.
"மாற்றம்" என்ற போர்வையில் மக்களை ஏமாற்றி வாங்கிய அதிகாரத்தில், இந்த ஒரு மாத காலத்தில் தமிழ்நாடு கண்டது என்ன? ரத்தக்களரியான சட்டம்-ஒழுங்கு, பாலியல் வன்கொடுமைகள், இருண்ட தமிழகம், விண்ணை முட்டும் விலைவாசி, தவெக தொண்டர்களின் அதிகார மமதை மற்றும் எதற்கெடுத்தாலும் மற்றவர்களைக் கைகாட்டும் கோழைத்தனமான தலைமை!
இதுதான் நீங்கள் வாக்களித்த மக்களுக்குத் தரும் மாற்று அரசியல் பரிசா?
இந்த ஒரு மாதகால செய்திகளைப் பார்த்தாலே நெஞ்சம் பதறுகிறது. 35-க்கும் மேற்பட்ட படுகொலைகள், அதில் 4 இரட்டை கொலைகள் நடந்துள்ளதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக 25-க்கும் மேற்பட்ட கொடூர குற்றங்கள் நடந்துள்ளதாகவும் அதிலிருந்து தெரிய வருகிறது.
சிங்கப்பெண் படை என்று மேடையில் வெற்று பில்டப் கொடுக்கும் அதே வேளையில், உங்கள் கட்சியின் நிர்வாகி சென்னையில் சிறுமியைச் சிதைத்த போக்சோ வழக்கிலும், உங்கள் தவெக இளைஞரணி நிர்வாகிகள் தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் பெண்ணுக்குப் போதை மருந்து கொடுத்துப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கிலும் கைதாகியுள்ளனர்.
உங்கள் கட்சியின் பிரமுகர்களே பாலியல் கொடூரர்களாக உலாவரும்போது, பெண்கள் பாதுகாப்பு பற்றிப் பேச உங்களுக்கு என்ன தார்மீக அருகதை இருக்கிறது? இதைவிடக் கேவலமான அவமானம் வேறு என்னவாக இருக்க முடியும்?
தவெக நிர்வாகிகளின் இந்த வக்கிர புத்தி ஏதோ தனிப்பட்ட சம்பவங்கள் அல்ல. உங்களின் Abusive Warriors செய்யும் அசிங்கமான இணையக் கலாச்சாரம், ஆட்சி அதிகாரம் வந்த திமிரில் தெருவுக்கும் வந்ததின் அப்பட்டமான வெளிப்பாடு இது!
தவெக அரசை நோக்கி ஒரு நியாயமான கேள்வி கேட்டாலோ, விமர்சித்தாலோ, உடனடியாக வீட்டுப் பெண்களை ஆபாசமாக வசைபாடுவது, தரம் தாழ்ந்து தாக்குவது, கொலை மிரட்டல் விடுவது என ஒரு மாஃபியா கூட்டத்தையே வளர்த்து வைத்துள்ளீர்கள்.
ஊடகவியலாளர்கள், கட்சியிலிருந்து விலகிய முன்னாள் உறுப்பினர்கள், எதிர்க்கட்சியினர் என எவரையும் விட்டுவைக்காமல் பாய்ந்து குதறும் இந்த அராஜக கும்பலை அடக்கத் துப்பற்ற அரசாக உங்கள் அரசு செயல்படுகிறது.
கோடை வெயிலில் மக்கள் தவியாய்த் தவிக்கும்போது, சென்னையிலும் பிற மாவட்டங்களிலும் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு! மறுபுறம் எம்-சாண்ட், ஜல்லி, சிமெண்ட், ஸ்டீல், உள்ளிட்ட அத்தியாவசிய கட்டுமானப் பொருட்களின் விலை விண்ணை முட்டி நிற்கிறது.
இது போதாதென்று, தவெக தொண்டர்கள் செய்யும் அத்துமீறல்களுக்கு அளவே இல்லை. ஆய்வு என்ற பெயரில் அதிகார துஷ்பிரயோகம் செய்வது, அரசு அலுவலகப் பணிகளைத் தடுத்து நிறுத்தி சமூக வலைதளங்களுக்காக Reels எடுத்துப் பெருமை பீற்றுவது என ஒட்டுமொத்த நிர்வாக அமைப்பும் கேலிக்கூத்தாகிவிட்டது.
மாநிலமே பற்றி எரியும்போது, மாநிலத்தின் முதலமைச்சர் என்ன செய்கிறார்? இன்றுவரை ஒரு பத்திரிகையாளர் சந்திப்பைக் கூட நடத்த தைரியமில்லாமல், மக்களைச் சந்திக்கத் திராணியில்லாமல் கேமராக்களுக்கு முகம் காட்டாமல் ஓடி ஒளிந்துகொள்கிறார்!
அமைச்சர்களிடம் கேட்டால் No Comments என்று தப்பியோடுகிறார்கள். தங்களின் கையாலாகாத்தனத்தை மறைக்க, ஒவ்வொரு தோல்விக்கும் முந்தைய ஆட்சியாளர்களைப் பழிபோட்டுத் தப்பிக்கப் பார்க்கிறீர்கள்.
தவெக அரசு தனது Abusive Warriors குண்டர்களுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டும், வெற்று PR Stuntகளை வைத்துக்கொண்டும் மக்களைத் தொடர்ந்து ஏமாற்றலாம் என்று தப்புக் கணக்கு போட வேண்டாம். தமிழ்நாட்டு மக்கள் முட்டாள்கள் அல்ல!
முதலமைச்சர் விஜய் அவர்களே, உடனடியாக மக்கள் மன்றத்திற்குப் பதில் சொல்லுங்கள்! சீரழிந்த சட்டம் ஒழுங்கை மீட்டெடுங்கள்! பழியைத் தூக்கிப் போடுவதை நிறுத்திவிட்டு, நேர்மையாகப் பொறுப்பேற்று ஆட்சி செய்யுங்கள்!
மக்களின் குரல் ஒருபோதும் அடங்கப் போவதில்லை. இது வெறும் தொடக்கம் மட்டுமே!
#TVKFails
மேடைப் பேச்சு ஒரு பக்கம், நிஜக் கொடுமைகள் மறுபக்கம் பெண்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்குபவர்களைக் கூடவே வைத்துக் கொண்டு பேசுவது நியாயமா முதல்வர் அவர்களே? மாற்றத்தை உங்கள் கட்சியிலிருந்து தொடங்குங்கள், அதன் பின் மக்களுக்குப் பேசுங்கள்!
#TVKFails
தப்புக் கணக்கு போட வேண்டாம்!
தவெக அரசு தனது Abusive Warriors குண்டர்களுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டும், வெற்று PR Stuntகளை வைத்துக்கொண்டும் மக்களைத் தொடர்ந்து ஏமாற்றலாம் என்று தப்புக் கணக்கு போட வேண்டாம். தமிழ்நாட்டு மக்கள் முட்டாள்கள் அல்ல!
- த.வெ.க.வின் ஒரு மாதகால அவல ஆட்சியை சுட்டிக்காட்டி, தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி விமர்சனம்!
#DMK #DMKITWing #TVKFails #CMVijayFails #Tamilnadu #KalaignarSeithigal
#Watch | மீஞ்சூரை அடுத்த மேலூரில் நள்ளிரவில் மின்வெட்டு மற்றும் குறைந்த மின் அழுத்தத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
அதிகாரிகள் அலட்சியமாக பதிலளிப்பதாக கூறி போலீசாருடன் வாக்குவாதம் செய்ததால் பொன்னேரி - திருவொற்றியூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது
#SunNews | #PowerCut | #Ponneri
#WATCH | சென்னை: சைதாப்பேட்டையில் குமரன் காலனி மற்றும் கோதமேடு பகுதிகளில் நேற்று இரவு 9 மணியில் இருந்து அதிகாலை 3 மணி வரை மின்வெட்டு; ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மின்சார அலுவலகத்தில் முற்றுகை
#SunNews | #Chennai | #CurrentCut | #PowerCut
போராட்டமே வாழ்க்கையாய்
பொது நலனே கொள்கையாய்
வீறு நடை போடும் கழகத்தின்
75 ஆண்டுகால பொது வாழ்வில்
காணாத வெற்றியும் இல்லை,
தொடாத தோல்வியும் இல்லை
சோதனைகள் சூழ்ந்தாலும்;
விதை போல் விழுந்து விருட்சமாய் எழும்,மீண்டும் வெற்றி முகட்டை தொடும்;
மக்களுக்கான மக்கள் பணி செய்யும் ஒரே பேரியக்கம்
திராவிட முன்னேற்றக் கழகம்!🔥🌄
@mkstalin@Udhaystalin
#LeaderOfOpposition
#DMK
கொஞ்சம் கூட கூச்சப்படாமல் மேடையில் பேசும் டம்மி முதல்வரே.. உங்க கட்சி நிர்வாகிகளால்தான் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிறைய நடக்கிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிற வழிய பாருங்க. சும்மா script மனப்பாடம் பண்ணி டயலாக் பேசிட்டு திரியாதீங்க ப்ரோ.
#TVKFails
அமைதியாக இருக்கலாம் என்று நினைத்தாலும், இந்த #SofaModel ஆட்சியில் நடக்கும் சட்ட ஒழுங்கு சீர்கேடுகளையும், குதிரை பேரத்தையும் மக்களிடம் எடுத்துரைக்காமல் இருக்க முடியாது.
எங்களுடைய கேள்விகள் வலுவாக இருக்கும் டம்மி CM சார்!
#TVKFails
தூத்துக்குடியில் வேலை வாங்கி தருவதாக கூறி மயக்க மருந்து கொடுத்து இரு பெண்களை தவெக நிர்வாகிகள் பாலியல் வன்முறை செய்துள்ளனர். இது குறித்து தூத்துக்குடி தவெக எம்.எல்.ஏ சரவணனிடம் சொன்ன போது adjust பண்ணிக்க சொல்லி முதல்வர் விஜய், அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் அவர்களிடம் கூறி வேலை வாங்கி தருவதாக தெரிவித்துள்ளார்.
இந்த கொடூரச் செயலைப் பற்றி நிழல் முதல்வர் ஆதவ் அர்ஜுனாவிடம் சொல்லியும் பயன் இல்லை என்று அழுது புலம்புகிறார். பெண்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பேன் என வீர வசனம் பேசிய Dummy CM விஜய் அவர்களே உங்க கட்சி பெண்களுக்கே உங்க கட்சி நிர்வாகிகளில் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது.
பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பீங்களா இல்ல மிக்சர் தின்னுட்டு வேடிக்கை பார்க்கப் போறீங்களா?
#TVKFails
ஆட்சி அதிகாரம் எந்தப் பக்கம் இருந்தாலும் கொள்கையில் உறுதிமிக்கோர் எப்போதும் தி.மு.க. பக்கம்தான்!
தமிழ்நாட்டின் உரிமைகளைத் தி.மு.க.தான் காப்பாற்றும் என்ற உறுதியோடு, செங்கல்பட்டு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிட்ட திரு. கஜேந்திரன் அவர்கள் தலைமையில் தாய்க்கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்ட அனைவரையும் வரவேற்கிறேன்.
இந்திய ஒன்றியத்திற்கு முன்னோடியாக நவீன தமிழ்நாட்டை கட்டமைத்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்தநாள்!
கழகத் தலைவர் @mkstalin அவர்களின் தலைமையில் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினோம். அழியாத புகழுக்குச் சொந்தக்காரரான அவர் வகுத்துக் கொடுத்துச் சென்ற பாதையில் நடைபோடுவோம்.
#KalaignarForever
#Kalaignar103
எம்ஜிஆர் ஆட்சி, காமராஜர் ஆட்சினு சொல்றாங்களே... கலைஞர் ஆட்சினு ஏன் சொல்ல மாட்டேங்குறாங்க?
ஏன்னா, கலைஞர் ஆட்சில நிறைய வேலை செய்யணும்!
#KalaignarForever#Kalaignar103