நேற்று வைகை ஆற்றை சுத்தம் செய்தபோது, "இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா?" என்று தோன்றியது.
பிறகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சைக் கேட்டேன்...
”எனக்கு கை இருக்கு கால் இருக்கு, என்னோட வேலைய நான் செஞ்சிக்குவேன்.. யாரும் என்ன சுத்தி நிக்காதீங்க.. யாரும் மொபைல்ல வீடியோ எடுக்காதீங்க.. இந்த இடத்த சுத்தம் பண்ணிட்டு தான் நான் வருவேன்”... சிம்மக்கல் அருகே வைகை ஆற்றுப் பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட அண்ணாமலை
#Annamalai | #VaigaiRiver | #SanitationWork | #PolimerNews
@PttvNewsX In my govt school ,nemili taluk don't have play ground from 1965 until now. My postal code 631051 ranipet district @AadhavArjuna please help for our youngsters future.
எனக்கு பெரிதாக எந்த அரசியல் பதவி மீதும் ஆசை இல்லை ஆனால் அண்ணாமலை அண்ணனோட core strategic team அல்லது core advisory team ல இருக்கணும் ஏன்னா யாருமே அவர் கூடவே இருந்து அவரை வீழ்த்திவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதே எனது தற்போதைய அரசியல் வேல்வி 🙏
@annamalai_k
வரும் அக்டோபர் 15, 2026 அன்று, ஐயா அப்துல் கலாம் பிறந்த நாளன்று, கோயம்புத்தூரில் "Abdul Kalam Centre for Ethics and Politics" பயிற்சி நிறுவனம் தொடங்கப்படும். அடுத்த ஒரு ஆண்டுக்குள், 1.5 லட்சம் இளைஞர்களுக்கு தலைமைப் பண்பு உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டிருக்கும்.
இன்று மாலை பொள்ளாச்சியில், @WTLFoundation சார்பில் நடைபெற்ற 'போதை இல்லா தமிழகம்' – We the Leaders மாநாட்டில் பங்கேற்று என்னுடைய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஜூலை 2026 முழுவதும் 'White Band மாதம்' என்ற மக்கள் இயக்கத்தை முன்னெடுக்க, தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் திரண்டு வந்த ஆயிரக்கணக்கான We the Leaders தலைவர்கள், குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், சகோதர, சகோதரிகள் மற்றும் பெரியவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். நமது இயக்கத்தில் இணைந்திருப்பவர்களில் 17% பெண்கள் என்பது, சமூக மாற்றத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் மிகப்பெரிய சான்றாகும்.
தமிழ்நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிராக சமரசமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது. போதைப்பொருளை ஒழிக்க வேண்டுமெனில் அதன் தேவையையே வேரோடு அழிக்க வேண்டும். இந்தப் போராட்டம் அரசின் பொறுப்பு மட்டுமல்ல; ஒவ்வொரு குடும்பமும், ஒவ்வொரு குடிமகனும் ஏற்க வேண்டிய சமூகப் பொறுப்பு. அதனால்தான் இனி ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் "போதை விழிப்புணர்வு மாதம்" ஆகக் கடைப்பிடித்து, இந்த விழிப்புணர்வு இயக்கத்தை ஒவ்வொரு வீடு, தெரு, கிராமம், குடியிருப்பு மற்றும் கல்வி நிலையம் வரை எடுத்துச் செல்ல உறுதி எடுத்துள்ளோம்.
சமூக மாற்றம் போதை ஒழிப்போடு முடிவடைவதில்லை. ஆகஸ்ட் மாதம், "சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாதம்" ஆகக் கடைபிடித்து, தமிழகம் முழுவதும் 50 லட்சம் மரக்கன்றுகள் நடும் மக்கள் இயக்கத்தை முன்னெடுக்கிறோம். மேலும், வரும் அக்டோபர் 15, 2026, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளில் "A.P.J. Abdul Kalam Centre for Ethics and Politics" தொடங்கப்பட்டு, நற்பண்புகளையும், சமூக மாற்றத்திற்கான பயிற்சியையும் கொடுத்து, 1.5 லட்சம் தலைவர்களை அடுத்த ஆண்டுக்குள் உருவாக்கும் பயணத்தைத் தொடங்குகிறோம்.
அடுத்த ஆறு மாதங்களில் We the Leaders இயக்கம், சமூகத்தின் பல முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் மக்களுடன் இணைந்து பணியாற்றும். ஆக்கபூர்வமான விமர்சனங்கள் மூலம், ஆளும் அரசைப் பொறுப்பேற்கச் செய்வதோடு, மக்களின் நலனையே ஒரே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவோம்.
மாற்றம் என்பது யாரோ ஒருவர் மட்டுமே உருவாக்குவது அல்ல; ஒவ்வொரு குடிமகனும் தலைமைப் பொறுப்பை ஏற்கும் தருணத்தில்தான் அது தொடங்குகிறது. பாதுகாப்பான, போதை இல்லாத, பசுமை நிறைந்த, நேர்மையான, வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டை நாம் அனைவரும் இணைந்து உருவாக்குவோம்.
மாறுவோம்... மாற்றுவோம்! (1/3)
My best wishes to you Mr #Annamalai! Congratulations!🙏I am happy to see the large crowd of people gathered at the conference! 'We the people,' shall play a memorable role in the Indian socio-political arena!💐God be with you!
#WeTheLeadersPollachi
தமிழக மக்களிடையே பிரிவினையை தூண்டிய தலைவர்கள் படங்களை வைத்து அரசியல் செய்த தலைவர்கள் விட, உண்மையான,
தமிழக மக்களை நம்பி
WE THE LEADER
(நாம் தலைவர்கள்) பேரியக்கம் தோன்றியதற்கு
வாழ்த்துக்கள்🙏
நாளை நமதே👍
@annamalai_k@hindumunnani_tn @amarprasadreddy
Looking forward to joining our @WTLFoundation leaders in Pollachi this evening as we gather together, united by our shared resolve to build a drug-free Tamil Nadu.
போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் உறுதியுடன், இன்று மாலை பொள்ளாச்சியில் நடைபெறும் மாநாட்டில், @WTLFoundation தலைவர்களுடன் பங்கேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
போதை இல்லா, பாதுகாப்பான தமிழ்நாட்டை உருவாக்குவோம்.
மாறுவோம், மாற்றுவோம்!
கரூர் மாவட்டத்தில் 3,084 ஏக்கர் நிலங்கள் தொடர்பாக எழுந்துள்ள விவகாரத்தில் உண்மை நிலையை, சட்டரீதியாகப் புரிந்துகொள்வது அவசியம்.
இங்கு பேசுபொருளாகியிருக்கும் அனைத்து நிலங்களும் "திருக்கோவில் சொத்துகள்" என்றல்ல; பெரும்பாலானவை இனாம் நிலங்கள் தொடர்பானவை. ஆலயங்களில் பணியாற்றிய அர்ச்சகர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு விஜயநகரப் பேரரசு மற்றும் பிற ஆட்சியாளர்களால் மானியமாக வழங்கப்பட்ட இனாம் நிலங்கள், பின்னர் தமிழ்நாடு இனாம் (ரத்து மற்றும் ரயத்வாரியாக மாற்றுதல்) சட்டம், 1963 (Act 30 of 1963)-ன் கீழ் விசாரணை நடத்தப்பட்டு, தகுதியுடையவர்களுக்கு ரயத்வாரி பட்டாக்கள் வழங்கப்பட்டன.
இந்த பட்டாக்களை அடிப்படையாகக் கொண்டு, ஆயிரக்கணக்கான விவசாயிகள் பல தசாப்தங்களாக நிலங்களை சாகுபடி செய்து, பராமரித்து, சட்டப்பூர்வமாக அனுபவித்து வருகின்றனர். ஆனால், கடந்த திமுக ஆட்சியில், இந்த பட்டா பெற்ற இனாம் நிலங்களும் கோயில் நிலங்களுடன் சேர்த்து பூஜ்ஜிய மதிப்பில் வகைப்படுத்தப்பட்டதால், அவற்றைப் பத்திரப்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் கடன் பெறுதல், சொத்து பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர்.
தற்போதைய தவெக அரசின் நடவடிக்கை, சட்டப்படி ஏற்கனவே ரயத்வாரி பட்டா பெற்ற இனாம் நிலங்களின் மீதான பதிவுத் தடையை நீக்கி, அந்த விவசாயிகளின் சட்டப்பூர்வ உரிமையை மீட்டெடுப்பதற்கானதாக இருந்தால், அதனை வரவேற்க வேண்டியதே தவிர, அதை கோவில் நிலங்களை, ஆக்கிரமிப்பாளர்களுக்கு வழங்கும் நடவடிக்கையாக சித்தரிப்பது தவறான புரிதலை ஏற்படுத்தும்.
அதே நேரத்தில், உண்மையான திருக்கோவில் சொத்துகள் எதுவும், சட்டவிரோதமாக தனியாருக்கு மாற்றப்படக் கூடாது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. கோவில் சொத்துகளை பாதுகாப்பதும், சட்டப்படி உரிமை பெற்ற விவசாயிகளின் உரிமையை பாதுகாப்பதும் இரண்டுமே அரசின் பொறுப்பாகும்.
எனவே, சட்டப்பூர்வமாக ரயத்வாரி பட்டா பெற்ற இனாம் நிலங்களின் உரிமையை உறுதி செய்யும் தமிழக அரசின் நடவடிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம். இது ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், பல ஆண்டுகளாக நிலவி வந்த பதிவுச் சிக்கல்களையும் தீர்க்கும் ஒரு முக்கியமான நடவடிக்கை.
தமிழகம் முழுவதும், கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள் அருகே உள்ள, டாஸ்மாக் மதுபானக் கடைகள் அனைத்தையும் மூட வலியுறுத்துவோம்.
சென்னை நகரின் சில பகுதிகளில் நாம் மேற்கொண்ட கள ஆய்வின்படி, பல டாஸ்மாக் மதுக்கடைகள், பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்குள்ளாகவே இயங்கி வருகின்றன.
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும், இது போல, பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்குள்ளாக இயங்கும் டாஸ்மாக் கடைகளை மூட, மக்கள் நேரடியாகவோ, அல்லது நமது We the Leaders அமைப்பின் மூலமாகவோ, மாவட்ட ஆட்சியாளரிடம் மனு கொடுப்போம். மது அரக்கனை ஒழிக்க ஒன்றிணைவோம். தமிழ்நாட்டைக் காப்போம்.
மாறுவோம், மாற்றுவோம்!
#WTL_WhiteBandMonth