Point number 1. - You buggers are not friggin Gen Z at the age of 36.
Point number 2 - why is Julie on this feverish journey of damaging dmk in whatever she does , from Perambur to this protest site.
She has become Jurandhar 🤣 🤣 🤣
கண்டென்ட் & வியூஸ்க்கு என்னா வேணாலும் பண்ணுவாங்க போல.🤧
Swiggi, Zomoto ல ஒரே நேரத்துல ஆர்டர் போட்டு, யார் முதல்ல டெலிவரி பண்றாங்களோ, அவங்களுக்கு 500 ரூபா தர்ற மாதிரி கேம்..
பணம் ஒருத்தருக்கு, விளையாட்டு பொருளா இருக்குறதும், இன்னொருத்தர் அதுக்காக நாயா, பேயா ஓடுறதும் இந்த வீடியோ பாத்தா புரியும்..
Swiggy ய விட ஒரு செகண்ட் ZOMOTO காரர் முதல்ல வந்ததால, அவருக்கு 500 ரூபா கொடுக்கனும்னு சொன்னப்ப, அவர் சொன்ன பதில்தான் இங்க முக்கியமானது..
நான் பேச்சலர், பின்னாடி வந்தவர், ஃபேமிலி மேனா கூட இருக்கலாம், அவருக்கு குடுங்க னு சொன்னார்..
இல்ல இல்ல, நீங்க தான் முதல்ல வந்தீங்க, உங்களுக்கு தான் குடுக்கனும்னு சொன்னப்ப, இல்ல நான் பக்கத்துல இருந்து தான் வநதேன், அதனால சீக்ரம் வந்துட்டேன்...அவர் தூரமா இருந்து வந்திருப்பார்.. அதனால லேட் ஆகிருக்கும்.. அவருக்கே குடுங்க னு சொல்லிட்டு போவார்..
சரி னு Swiggy காரர்க்கு குடுக்கபோனா, " சிக்னல்ல எதும் மாட்டிருந்தன்னா, நான் வர்றதுக்கும் இன்னும் லேட் ஆகிருக்கும், Zomoto காரரோட பெருந்தன்மைனால தான் , இது எனக்கு கிடைச்சிருக்கு னு க்ரெடிட்ட Zomoto காரருக்கு குடுத்துட்டு, 500 வாங்கிப்பார்...
இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னா, அந்த Zomoto காரர், நான் Zomoto ல வேலை செய்றது என் வீட்டுக்கு தெரியாது னு சொல்லி, அது தெரியக்கூடாது னு ஹெல்மெட் கழட்டாமலேயே பேசுவார்..
பெரிய ஐடி கம்பெனில வேலை அல்லது பெரிய தொழிற்சாலைல வேலை செய்றேன்னு கூட வீட்ல சொல்லிட்டு இப்டி அவர் இருக்கலாம்.. அவருக்குமே பணம் அத்தியாவசியமா தேவைபடுற ஒண்ணா இருக்குறதால தான், வீட்ல பொய் சொல்லிட்டு Zomoto ல வேலை செய்றார்..
இப்படிப்பட்ட சூழல்லயும், அவரால தனக்கு பின்னாடி வந்த Swiggy காரர பத்தி யோசிக்க முடியுது.. ரொம்ப அசால்ட்டா, 500 ரூபாய இன்னொருத்தருக்கு குடுத்துருங்க னு சொல்ல முடியுது. வாழக்கையில நெறய அடிபட்டுருந்தா தான் இப்டி அடுத்தவனோட வலிய ஈசியா புரிஞ்சிக்கிற தன்மையே வரும்.
பணம் ஈசியா கிடைச்சிட்றதாலதான் என்னவோ, கடைசி வரை பணக்காரங்களுக்கு இந்த புரிதல் வரமாட்டேங்குது...
எளிய மக்கள்கிட்ட பேசுங்க, அவங்கள விட பெரிய புத்தகம், நூலகம், இல்ல இல்ல, பல்கலைகழகம் எதும் இல்ல!
- Mahalakshmi ❣️