கடந்த 5 ஆண்டுகளாக, ஊழல் இல்லாத அரசு துறைகளே இல்லை எனும் அளவிற்கு தமிழகத்தை தலைகுனிய செய்த தீயசக்தி திமுகவை ஆட்சியில் இருந்து விரட்டியடிக்க வேண்டும் என்ற உறுதியோடு வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் வாக்களிக்க தமிழக மக்கள் காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில், அடுத்த 5 ஆண்டுகளில் தர்மபுரி மாவட்டத்தை வளர்ச்சியடைய செய்ய வேண்டும் என்ற உறுதியோடு ஒன்றிணைந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாலக்கோடு தொகுதியில் போட்டியிடும் நமது அதிமுக வெற்றி வேட்பாளர் திரு. கே.பி.அன்பழகன் அவர்கள், தர்மபுரி தொகுதியில் போட்டியிடும் நமது பாமக வெற்றி வேட்பாளர் அக்கா திருமதி.சௌமியா அன்புமணி அவர்கள், பென்னாகரம் தொகுதியில் போட்டியிடும் நமது பாமக வெற்றி வேட்பாளர் திரு. பாடி வெ.செல்வம் அவர்கள், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடும் நமது அதிமுக வெற்றி வேட்பாளர் திருமதி. மரகதம் வெற்றிவேல் அவர்கள், அரூர் தொகுதியில் போட்டியிடும் நமது அதிமுக வெற்றி வேட்பாளர் திரு.சம்பத்குமார் அவர்கள் ஆகியோரை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன்.
திமுக ஆட்சி காலத்தில் பழிவாங்கப்பட்ட பகுதியாக தர்மபுரி உள்ளது. எந்த வகையிலும் தர்மபுரியை வளர விடாமல் மக்களின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டது திமுக அரசு. நமது நாட்டின் சகோதரிகளும், தாய்மார்களும் அதிகாரம் பெறவேண்டும் என்பதற்காக கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தத்தை திமுகவும், காங்கிரஸ் கட்சியும் எதிர்த்து தமிழக பெண்களுக்கு துரோகம் செய்துள்ளனர். 1973 ஆம் ஆண்டு மக்களவை தொகுதிகளை 525-லிருந்து 545 ஆக உயர்த்தினார்கள். ஆனால், அப்போதைய முதல்வர் திரு.கருணாநிதி அவர்கள் தமிழகத்திற்கு கூடுதல் தொகுதிகள் வேண்டாம் என்றார். அதையே அவரது மகன் திரு. @mkstalin அவர்களும் தற்போது செய்துள்ளார். 59 ஆக உயர்த்தபடுவதில் என்ன தவறு இருக்கிறது என முதல்வரால் விளக்க முடியுமா ? அற்ப அரசியல் செய்வதற்காக பெண்களின் அதிகாரத்தை பறிப்பது தான் திமுகவின் சமூக நீதியா ?
இப்படி போலி சமூகநீதி பேசி மக்களை ஏமாற்றிய திமுகவின் நாடகத்திற்கு வரும் தேர்தலில் மக்கள் முடிவு கட்டுவார்கள். அதற்கு, தர்மபுரி மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை தர்மபுரி மக்கள் மகத்தான வெற்றி பெற வைக்க வேண்டும். தர்மபுரி தலைநிமிர, வாக்களிப்பீர் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளுக்கு!
தமிழகமே அரசியல் மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் தளி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நமது பாஜக வெற்றி வேட்பாளர் திரு.நாகேஷ்குமார் அவர்கள் மற்றும் ஓசூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நமது அதிமுக வெற்றி வேட்பாளர் திரு.பாலகிருஷ்ணா ரெட்டி அவர்கள் ஆகியோரை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன்.
தளி சட்டமன்ற தொகுதியில் ரவுடி தொல்லைகளை விட, தற்போதைய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ திரு. ராமச்சந்திரனின் தொல்லை தான் அதிகமாக இருக்கிறது. அவர் மீது இரண்டு கொலை வழக்குகள், நான்கு கொலைமுயற்சி வழக்குகள் உள்ள நிலையில் அவரை தனது கூட்டணி வேட்பாளராக நிறுத்தியிருக்கும் திரு. @mkstalin அவர்கள் வெட்கப்பட வேண்டும். இதுமட்டுமின்றி, ரூ.100 கோடி கிரானைட் கொள்ளை வழக்கு இவர் மீது உள்ளது. 1996 ஆம் ஆண்டு N.C.ராமன் மற்றும் அவரது சகோதரர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்தவர் திரு.ராமச்சந்திரன். இப்படிப்பட்ட கொலைகார குற்றவாளியை வேட்பாளராக நிறுத்தியிருக்கும் திமுக கூட்டணி படுதோல்வி அடையப்போவது உறுதி.
தமிழக நலனிற்கு எதிராக ஐந்தாண்டு கால ஆட்சியை நடத்தி முடித்திருக்கும் திமுகவை எதிர்த்து தமிழக மக்கள் வரவுள்ள தேர்தலில் வாக்களிப்பார்கள். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்காத, சட்டம் ஒழுங்கை பாதுகாக்காத, பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்யாத கையாலாகாத ஆட்சியை நாம் விரட்டியடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
எனவே, வரும் 23 ஆம் தேதி நடைபெறும் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தளி தொகுதியில் போட்டியிடும் நமது பாஜக வேட்பாளர் திரு.நாகேஷ்குமார் அவர்களுக்கு தாமரை சின்னத்திலும், ஓசூர் தொகுதியில் போட்டியிடும் நமது அதிமுக வேட்பாளர் திரு.பாலகிருஷ்ணா ரெட்டி அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்திலும் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். தளியின் வளர்ச்சிக்கு, மலரட்டும் தாமரை! தமிழகத்தின் வளர்ச்சிக்கு, வெல்லட்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி! (1/2)
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக வாக்களித்த திமுக கூட்டணிக்கு...
20 தமிழ் பெண்கள் நாடாளுமன்றத்திற்கு செல்லும் வாய்ப்பை தடுத்த திமுக கூட்டணிக்கு...
தமிழக சட்டமன்ற தேர்தலில் தகுந்த பாடம் கற்பிக்க...
மகளிர் அனைவரும் திமுக கூட்டணிக்கு வாக்களிக்கூடாது..!!
ஒட்டுமொத்த பெண்களும் தற்போது வெறுக்கும் ஒரே நபர் நீங்கள் தான் திரு. @mkstalin!
பெண்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைப்பதை சட்டப்பூர்வமாக்கும் மத்திய அரசின் “மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா” வை திட்டமிட்டே தடுத்து நிறுத்தி மாபெரும் வரலாற்று பிழையை செய்து விட்டீர்கள். அரசியல் காழ்ப்புணர்ச்சி கண்களை மறைக்க, பெண்களை வீட்டிற்குள்ளேயே முடக்கத் துணிந்த உங்களைப் போன்ற பிற்போக்குவாதியை முதல்வராக பெற்றதற்கு தமிழகமே இன்று வெட்கித் தலைகுனிகிறது.
பெண்கள் பொருளாதார ரீதியாகவோ அல்லது அதிகாரமிக்க பொறுப்புகளிலோ முன்னேறினால் “ஆணாதிக்க” அறிவாலயத்திற்கு கை கால்கள் நடுங்கி வியர்த்து விடும் என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? இத்தனை ஆண்டுகளாக திமுக வாய் கிழிய பேசி வந்த பெண்ணியமும், பெண்கள் முன்னேற்றமும் வெறும் காற்றுப் போன பலூன்களாக இன்று தூள் தூளாக சிதறி கிடக்கின்றன.
அதுசரி சொந்த குடும்பத்திற்குள் இருக்கும் பெண் வாரிசுகளையே அரசியலில் முன்னேற விடாமல் தொலை தூரத்திற்கு துரத்தும் உங்கள் கோபலபுர குடும்பம், எங்கள் குடும்பப் பெண்களை மட்டும் முன்னேற விடுமா என்ன?
ஆண்கள் மட்டுமே ஆள வேண்டும், ஆண்கள் மட்டுமே அதிகாரத்தில் அமர வேண்டும், ஆண்களுக்கு மட்டுமே சுயமரியாதை உண்டு, ஆண்களுக்கு மட்டுமே மதிப்பும் மரியாதையும் உண்டு என்று நினைக்கும் நீங்களும் உங்கள் கட்சியினரும் தமிழகத்தின் சாபக்கேடு! தமிழகப் பெண்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த பாரதப் பெண்களுக்கும் மாபெரும் துரோகத்தை இழைத்த உங்களுக்கு ஒருபோதும் மன்னிப்பே கிடையாது ஸ்டாலின்!
#DMKBetraysWomen
நாட்டு மக்களுக்கு நவராத்திரி வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டு, GST வரிக்குறைப்பு குறித்து மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்கள் எழுதிய கடிதம்!