இன்றைய தினம் 05.04.2026,ஞாயிற்றுக்கிழமை - திண்டுக்கல் மாவட்டம், நத்தம் சட்டமன்ற தொகுதி, முளையூர் அருள்மிகு.நல்லவராவன் கோவிலில் சாமி தரிசனம் செய்ததோடு, நத்தம் தொகுதியில் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்கினேன்!
நத்தம் தொகுதியில், தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்றி, சனநாயகத்தை வேரூன்ற செய்வோம்!
நத்தத்தில் உதிக்கட்டும் உதயசூரியன்!..
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நத்தம் தொகுதியின் வெற்றி வேட்பாளர் திரு.கே.செல்வகுமார் அவர்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து வேட்பு மனு தாக்கல்🌅
#DMK4TN | #MKStalin | #DMKWins2026 | #KKselvakumar
இன்றைய தினம் 01.04.2026, புதன்கிழமை - @arivalayam தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் நத்தம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் ஊழியர் கூட்டம் சிறப்பாக நடந்து முடிந்தது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு, மாண்புமிகு தமிழக முதல்வர் @mkstalin அவர்களின் 200 தொகுதிகளுக்கு மேல் வெல்லும் கனவு மெய்ப்பட நாம் பணியாற்ற வேண்டுமென மதசார்பற்ற கூட்டணி கட்சி தோழர்களிடம் கேட்டுக்கொண்டேன்!
இந்தக்கூட்டத்தில், மாண்புமிகு அமைச்சர்கள் திரு. இ.பெரியசாமி , திரு. அர.சக்கரபாணி, கழக தலைமை செயற்குழு உறுப்பினர் திரு.ஆண்டி அம்பலம், திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக பொருளாளர் திரு.விஜயன், நத்தம், மற்றும் சாணார்பட்டி ஒன்றிய கழக செயலாளர்கள், கிளைசெயலாளர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்!..
இன்றைய தினம் 04.04.2026, சனிக்கிழமை - @arivalayam தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மாண்புமிகு தமிழக முதல்வர் @mkstalin அவர்களின் மேலான வழிகாட்டுதலின்படி, நத்தம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக, நத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தேன்!
இந்நிகழ்வில் கழக தலைமை செயற்குழு உறுப்பினர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆண்டி அம்பலம், திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக பொருளாளர் திரு.விஜயன், நத்தம் நகர செயலாளர் திரு.மோகன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் திரு.முத்துகுமாரசாமி, நத்தம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.ரத்தினகுமார், நத்தம் மத்திய ஒன்றிய கழக செயலாளர் திரு.சேக் சிக்கந்தர் பாட்சா, நத்தம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.பழனிச்சாமி, சாணார்பட்டி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.தர்மராஜ், சாணார்பட்டி மத்திய ஒன்றிய கழக செயலாளர் திரு. ஜான் பீட்டர், சாணார்பட்டி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.மோகன், கிளை கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்!