எங்கள் அய்யாவின் பிறந்தநாளில்
தமிழக மக்களின்
உரிமையை மீட்க
தலைமுறையை காக்க
எங்கள் அண்ணன் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணியின் நடை பயணம்
#தலைமுறைகாக்க#உரிமைமீட்க#AnbumaniRamadoss
திருப்போரூரில் சங்கமிப்போம்!
முருப்பெருமானை வணங்கி நடைபயணத்தை ஆரம்பிப்போம்.!!
தமிழக மக்களுக்காக இன்று பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தொடங்கும் "உரிமை மீட்க... தலைமுறை காக்க" 100 நாள் நடை பயணத்தில் பங்கேற்க அலைகடன திரண்டு வாரீர்.!
நேரம்: மாலை 4 மணி
இடம்: திருப்போரூர் முருகன் கோவில்
திருப்போரூரில் சங்கமிப்போம்..
முருகப் பெருமானை வணங்கி
தமிழக மக்களுக்காக
இன்று பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தொடங்கும் "உரிமை மீட்க... தலைமுறை காக்க" 100 நாள் நடை பயணத்தில் பங்கேற்க அலைகடன திரண்டு வாரீர்.!
நேரம்: மாலை 4 மணி
இடம்: திருப்போரூர் முருகன் கோவில்
#உரிமைமீட்க
#தலைமுறைகாக்க
#AnbumaniRamadoss
எங்கள் அய்யாவின் பிறந்தநாளில்
தமிழக மக்களின்
உரிமையை மீட்க
தலைமுறையை காக்க
எங்கள் அண்ணன் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணியின் நடை பயணம்
#தலைமுறைகாக்க#உரிமைமீட்க#AnbumaniRamadoss
சமூக நீதி காவலரே இட ஒதுக்கீட்டு போராளியே உம்மை வாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன்...
நீங்கள் பிறந்த பொன் நாளில் வன்னியர்களுக்கான சமூகநீதியை பாமக தலைவர் அண்ணன் @draramadoss அவர்கள் தலைமையில் உங்கள் லட்சியத்தை வென்றெடுக்க உறுதி ஏற்ப்போம்...
#ayya87#சமூகநீதிபோராளி #87வதுபிறந்தநாள்
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் அய்யா @drramadoss அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
நீண்ட ஆயுளோடு, தங்களது பொதுவாழ்க்கைப் பயணம் தொடர வேண்டுமென விழைகிறேன்.
நீங்கள் இன்றி
நாங்கள் இல்லை @drramadoss@draramadoss
வாழ்விக்க வந்தவர்களே...
எங்களை வளர்வை நோக்கி
இழுத்துச் செல்லுங்கள்...
இதயத்தில் இடம்பெற்ற இருவரை, அருகருகே உடனிருந்து பார்க்கத்தான் எங்களுக்கெல்லாம் பேராசை! 🥹❤️
பாமக - வில் பேசி தீர்க்க முடியாத பிரச்சனை என்று எதுவும் இல்லை. பாமக மருத்துவர் அய்யா என்னும் ஆலமரத்தால் கட்டமைக்கப்பட்டது. இதில் தங்கும் பறவைகள் அனைவரும் ஓரினமே பாட்டாளிகள்.
வேறுபாடு இல்லை ஏற்றத்தாழ்வுகள் இல்லை கருத்து வேறுபாடுகள் வரலாம் அது பேசி சரி செய்யப்படும்.
பகுதி நேர சிறப்பாசிரியர்களின் கோரிக்கையை ஏற்க மறுப்பது அநீதி: வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில��� அவர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும்!
தமிழ்நாடு அரசி��் பள்ளிக் கல்வித் துறையில் 13 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்கள், தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தனித்தனியாக கோரிக்கை மனுக்களை அனுப்பியிருந்த நிலையில், அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுவதாகவும், அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்க முடியாது என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. பகுதிநேர ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையைக் கூட ஏற்க தமிழக அரசு மறுப்பது நியாயமற்றதாகும்.
பகுதி நேர ஆசிரியர்களின் முதன்மைக் கோரிக்கை அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்பட வேண்டும் என்பது தான்.அரசுப் பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி உள்ளிட்ட பாடங்களை கற்றுத் தருவதற்காக 2012-ம் ஆண்டில் ரூ.5 ஆயிரம் ஊதியத்தில் அமர்த்தப்பட்ட அவர்களுக்கு, இன்று வரை பணிநிலைப்பு வழங்கப்படவில்லை. கடந்த 13 ஆண்டுகளில் அவர்களுக்கு ரூ.7,500 மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. பாமக-வின் தொடர் வலியுறுத்தல் காரணமாகத்தான் இதுவும் சாத்தியமானது.
பணி நிலைப்பு வேண்டி பத்தா��்டுகளுக்கும் மேலாக பகுதி நேர ஆசிரியர்கள் அறவழியில் போராடி வருகின்றனர். ஆனால், அவர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தால் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணி செய்து வரும் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் என்பது திமுகவின் தேர்தல் அறிக்கையில் 181-ஆம் வாக்குறுதியாக அளிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சிக்கு வந்து நான்காண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று தான் பகுதி நேர ஆசிரியர்கள் கோருகின்றனர். அதை நிறைவேற்ற தமிழக அரசு தயங்குவது ஏன்?
தமிழக அரசு வழங்கும் மிகக் குறைந்த ஊதியத்தைப் பெற்றுக் கொண்டு 13 ஆண்டுகளாக பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்களின் பலர், வேறு பணிகளுக்கு செல்வதற்கான வயது வரம்பை கடந்து விட்டனர். அதைக் கருத்தில் கொண்டு மனித நேய அடிப்படையிலும், வாக்குறுதியை நிறைவேற்று���் நேர்மையுடனும் அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்குவது தான் அறமாக இருக்கும்.
பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிலைப்பு வழங்குவதால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.450 கோடி மட்டுமே கூடுதலாக செலவாகும். இதனால் 12 ஆயிரம் குடும்பங்கள் அடையும் பயனுடன் ஒப்பிடும் போது இது ஒரு பொருட்டல்ல. எனவே, தமிழக அரசு இந்த கோரிக்கையை கனிவுடன் ஆய்வு செய்து பகுதி நேர ஆசிரியர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu
தமிழத்தின் 26,883 சதுப்புநிலங்களை அறிவிக்கை செய்யக் கோரி, வரும் 29-03-2025 அன்று தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்று நமது கோரிக்கைகளை வலியுறுத்தி, தீர்மானம் நிறைவேற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.!
#PasumaiThayagam | #PMK | #GramSabha | #wetlands | #WorldWaterDay | #watermanagement| @CMOTamilnadu
குடிபோதை தகராறில் காவலர் அடித்துக் கொலை: சட்டம் - ஒழுங்கை சீரழிக்கும் மதுக்கடைகளை மூட மனமில்லையா?
மதுரை மாவட்டம் முத்தையன்பட்டி என்ற இடத்தில் அரசு மதுக்கடையில் மது அருந்தும் போது, குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் உசிலம்பட்டி காவல் நிலைய காவலர் முத்துக்குமார் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். மேலும் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். குடிபோதையில் நிகழ்ந்த இந்த குற்றம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.
முத���தையன்பட்டி அரசு மதுக்கடையில் காவலர் முத்துக்குமார் மது அருந்திக் கொண்டிருக்கும் போது, அருகில் மது குடித்துக் கொண்டிருந்த அடையாளம் தெரியாத சிலருடன் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அங்கேயே மோதல் முடிந்தாலும் கூட, போதையில் இருந்த எதிர்கும்பல் முத்துக்குமாரை பின்தொடர்ந்து சென்று அரிவாளால் வெட்டியும், கல்லால் அடித்தும் படுகொலை செய்துள்ளனர்.
முத்துக்குமாரை கொலை செய்த கும்பல் கஞ்சா வணிகத்தில் ஈடுபட்டு வந்ததாகவும், கஞ்சா வணிகத்தைக் கைவிட்டு திருந்தும்படி முத்துக்குமார் அறிவுரை வழங்கியதால் தான் அந்த கும்பல் ஆத்திரமடைந்து மது போதையில் படுகொலை செய்திருப்பதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. மது, கஞ்சா ஆகிய இரண்டும் சமூகத்தை எந்த அளவுக்கு சீரழிக்கின்றன என்பதற்கு முத்துக்குமார் படுகொலை தான் சான்று.
மது மனிதனை மிருகமாக்கும் என்றும், மக்களைக் காக்க மதுவை ஒழிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். அதை அரசு பொருட்படுத்தாதன் விளைவு தான் ஒரு காவலரின் உயிர் பறிபோயிருக்கிறது. எந்தக் குற்றமும் செய்யாத அந்த காவலரின் குடும்பம் ஆதரவின்றி நடுத்தெருவுக்கு வந்திருக்கிறது. இதற்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
தமிழ்நாட்டில் நடைபெறும் பெரும்பான்மையான குற்றங்களுக்கும், கொலைகளுக்கும் , சட்டம் - ஒழுங்கு சீர்குலைவுக்கும் மது தான் காரணம் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மது அருந்துவதால் தமிழ்நாட்டில் ��ட்டும் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் உயிரிழப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. மக்கள் நலனா, மது வணிகமா? என்ற வினா எழுந்தால் மக்கள் நலனுக்குத் தான் அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்; மதுக்கடைகளை மூட வேண்டும். ஆனால், அதை செய்ய தமிழக அரசுக்கு மனம் இல்லை.
மக்கள் நிம்மதியாக வாழ்வதை உறுதி செய்வதும், சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதும் தான் மாநில அரசின் அடிப்படைக் கடமையாகும். அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கு பெரும் தடையாக இருப்பது மதுக்கடைகள் தான். எனவே, தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடவும், சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கவும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@CMOTamilnadu
@tnpoliceoffl