ஒருவர் கூட இல்லையா?
தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக டெல்லியில் ஒலிக்க வேண்டிய அரசு பொறுப்பில், ஒரு அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகவைச் சேர்ந்த ஒருவரை அமர்த்தியுள்ளது தவெக அரசு. தவெகவில் அப்பொறுப்புக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் கூட தகுதியானவர் இல்லையா?
கழக துணைப் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற குழுத் தலைவர் திருமிகு.@KanimozhiDMK எம்.பி அவர்கள்
ஆசிய கண்டத்தின் தவிர்க்க முடியாத மிகப்பெரிய அரசியல் ஆளுமை. இந்தியாவில் முதல்வர்களுக்கெல்லாம் முதல்வர் தமிழ்நாட்டை உலக அரங்கிற்கு வளர்த்தெடுத்த மாபெரும் தலைவர். ஐநா சபை மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியே வியந்து பாராட்டிய எங்கள் தாயுமானவர் ஸ்டாலின் அவர்கள் தொடர்வார் தமிழ்நாடு வெல்லும்
தமிழ்த்திரையுலகின் தனிப்பெரும் ஆளுமை ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா சாரின் திருவுடலுக்கு நீலாங்கரையில் உள்ள அவரது இல்லம் சென்று மாலை வைத்து அஞ்சலி செலுத்தினோம்.
சிகிச்சை முடித்து வீடு திரும்பியவர், எப்படியும் மீண்டு வருவார் என்று எதிர்பார்த்த நிலையில், அவரது மரணச் செய்தி இன்று காலை பேரிடியாக வந்தது.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பாசத்திற்குரிய இயக்குநர். நம் கழகத் தலைவர் அவர்களின் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவர்.
எளிய மக்களின் வாழ்க்கையை – உணர்வைப் பிரதிபலித்து, தமிழ்ச் சினிமாவில் புதுப்பாய்ச்சலை ஏற்படுத்திய பாரதிராஜா சாரின் மறைவு, கலையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.
அரங்கிற்குள் இருந்த சினிமாவை வயல்வெளிக்கும் – கடற்கரைக்கும் – கிராமங்களுக்கும் எடுத்துச் சென்ற திரையுலக வித்தகர்.
எக்காலத்திற்கும் நிலைத்திருக்கும் படைப்புகளைத் தந்து, திறமையான கலைஞர்கள் பலரை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர்.
பாரதிராஜா சாரின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் - அவரது குடும்பத்தினர், ரசிகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் என் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
'என் இனிய தமிழ் மக்களே' என்ற மண் வாசனை மிகுந்த அவரது குரல் நம் செவிகளில் என்றுமே ஒலித்துக் கொண்டு இருக்கும்.
பாராதிராஜா சார், அவர் படைப்புகளின் வழியே என்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருப்பார்.
#Bharathiraja
தமிழ்த் திரையுலகின் பாதையை மாற்றியமைத்து, புதுப்போக்கினை உருவாக்கிய ‘இயக்குநர் இமயம்’ திரு. பாரதிராஜா அவர்களின் மறைவு பெரும் வேதனையைத் தருகிறது. தமிழ்த்திரையுலகிற்குப் பேரிழப்பாகிவிட்ட அந்தப் பெருங்கலைஞனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரைமொழியில் தனிமொழி பேசித் தனிச் சகாப்தத்தையே உருவாக்கியவர் பாரதிராஜா. ஸ்டூடியோக்களுக்குள் அடைபட்டிருந்த கேமராக்கள் பாரதிராஜா அவர்களால் கிராமங்களுக்குள் நுழைந்தன. கிராமத்து மனிதர்களையும் அவர்களது வாழ்க்கையையும் திரைக்குக் கொண்டு வந்து, தமிழ்ச்சினிமாவை யதார்த்தத்திற்கு மிக அருகில் கொண்டு சென்றார்.
16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, டிக் டிக் டிக், முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள், வேதம் புதிது, கருத்தம்மா உள்ளிட்ட அவரது படைப்புகளைத் தமிழ்ச்சினிமாவின் வரலாற்றை எழுதும் எவர் ஒருவரும் தவிர்க்க முடியாது. தனது படைப்பாற்றலின் வழியாகப் பிற மொழிகளிலும் படங்களை இயக்கி, அங்கும் தன் முத்திரையைப் பதித்த அவரை இந்தியத் திரை வரலாறு என்றைக்கும் உச்சத்தில் வைத்து நினைவுகூரும்!
தலைவர் கலைஞர் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தவர். தமிழ் மீதும் தமிழினத்தின் மீதும் பற்றுகொண்டு, தமிழ்நாட்டின் உரிமைகள் தொடர்பான போராட்டங்களில் திரையுலகை ஈடுபடுத்தியதில் பாரதிராஜா அவர்களுக்கு மிகப்பெரிய பங்களிப்பு உண்டு.
‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா - ‘இசைஞானி’ இளையராஜா - ‘கவிப்பேரரசு’ வைரமுத்து ஆகியோரது கூட்டணியில் உருவான பாடல்கள் ஒவ்வொரு நிமிடமும் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் ஒலித்துக்கொண்டும், ஆயிரக்கணக்கான மக்களை மகிழ்வித்துக்கொண்டும்தான் இருக்கின்றன.
அவரது உடல்நலன் குறித்து விசாரிக்கவும், அவரது மகன் மனோஜ் பாரதிராஜாவின் மறைவுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறவும் பாரதிராஜா அவர்களைச் சந்தித்து உரையாடிய தருணங்களைத் தற்போது நினைக்கையில் நெஞ்சம் மேலும் பாரமடைகிறது.
பாரதிராஜா அவர்களின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகைச் சேர்ந்த கலைஞர்களுக்கும், பாரதிராஜாவின் மாணவர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அல்லிநகரத்தில் பிறந்து, அழியாத படைப்புகளைக் கொடுத்த ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா அவர்கள், சினிமா ரசிகர்களின் மனங்களில் - தமிழ் மக்களின் மனங்களில் என்றும் வாழ்வார்!
திரு. பாரதிராஜா அவர்களுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியபோது, அவரை அரசு மரியாதையுடன் வழியனுப்பி வைக்க வேண்டும் என்று அவர் உடனிருந்தோர் கோரினர். இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் சாதனைகளைப் போற்றும் வகையிலும், அவரைச் சார்ந்தோரின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையிலும் ஆவன செய்ய வேண்டுமெனத் தமிழ்நாடு அரசினைக் கேட்டுக்கொள்கிறேன்.
@Udhaystalin@Subramanian_ma@mkstalin இளம் பெரியார் சின்னர் அவர்களே
TVK கூட்டத்தில் கவந்து கொள்ளும் என் மகன் மகள்கள் எல்லாம் திராவிட நாட்டின் தலைவர் தளபதி அவர்கள் பிப்ரவரி மாதம் ரூ5000/ குடும்ப தலைஙிகளுக்கு கணக்கில் வரவு வைக்க பட்ட பணத்தை எடுத்து கொண்டு செலவு செய்து கொண்டு வருகிறார்கள் என்பது என் கணிப்பு நம
சென்னையின் பாரம்பரிய அடையாளங்களுள் ஒன்றான சைதாப்பேட்டை தொகுதியில் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் -மாண்புமிகு அமைச்சர் அண்ணன் @Subramanian_ma அவர்களுக்கு வாக்கு சேகரித்தோம்.
கழகத்தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டலில் மக்கள் நல்வாழ்வுத்துறையில் மகத்தான சாதனைகள் செய்து தமிழ்நாட்டின் மருத்துவக்கட்டமைப்பை உறுதியுடன் நிலைக்கச் செய்ததோடு, தன் சைதை தொகுதியின் வளர்ச்சிக்கும் அயராது உழைத்து வரும் அண்ணன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுமென மக்களிடம் அன்புடன் கேட்டுக் கொண்டோம்.
தமிழ்நாட்டை கூறுபோட துடிக்கும் பாசிசவாதிகளையும், அவர்களுக்கு பல்லக்கு தூக்கும் அடிமை கூட்டத்தையும் தோற்கடித்து வெல்வோம் ஒன்றாக!
#DMK4TN #VoteForDMK
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23 அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சென்னை கிழக்கு மாவட்ட கழக நிர்வாகிகளை இன்று சந்தித்து உரையாற்றினோம்.
மே 4 அன்று வாக்கு எண்ணப்படும் போது, கழக அணி மாபெரும் வெற்றி என்ற செய்தி எட்டுத்திக்கும் ஒலிக்கும் வகையில் அயராது உழைப்போம்!
சென்னை கிழக்கு மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் - துறைமுகம் - திரு.வி.க.நகர் - எழும்பூர் - அம்பத்தூர் - வில்லிவாக்கம் தொகுதிகளில் இருந்து வெற்றிக்கணக்கைத் தொடங்குவோம் என வாழ்த்தினோம்!
@PKSekarbabu@thayagamkavi@iparanthamen@josephsamuelmla@VETRIAZHAGAN1@PriyarajanDMK
#ரமலான்: பேரன்பின் ஈகைப் பெருவிழா!
☪️ இஸ்லாமிய மக்களின் விழாக்களில் மட்டுமல்ல, அவர்களது உரிமைகளுக்காக போராட்டக் களத்திலும் நிற்பவர்கள் நாம்!
☪️ அந்த உரிமையோடும், சகோதரப் பாச உணர்வோடும் கழகச் சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு ஒருங்கிணைத்த ரமலான் நோன்புத் திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டேன்.
☪️ தமிழ்நாட்டின் ஒற்றுமையும் நல்லிணக்கமும் என்றும் இதேபோல தொடரட்டும்! அனைவரையும் அரவணைக்கும் அன்பினால் #வெல்வோம்_ஒன்றாக!
இது வெறும் தேர்தல் அல்ல; நம் மண்ணின் உரிமையை நிலைநாட்டும் அறப்போர்!
டெல்லிக்கு அடிபணியாத தன்னாட்சித் தமிழ்நாட்டை படைக்க, பேரறிஞர் அண்ணாவின் லட்சியத்தையும், முத்தமிழறிஞர் கலைஞரின் துணிவையும், கழக தலைவர் அவர்களின் உழைப்பையும் சுமந்து நிற்கும் தமிழ்நாட்டின் வெற்றிச் சின்னமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதயசூரியனுக்கு வாக்களிப்போம்.
#VoteForDMK