#திருக்கோவிலூர்_திருவிக்கிரம_பெருமாள்_திருக்கோயில்
திருக்கோவிலூரில் அமைந்துள்ள திருவிக்கிரமர் / உலகளந்த பெருமாள் திருக்கோயில், 108 வைணவ திவ்யதேசங்களில் சிறப்பிடம் பெற்ற பழமையான திருத்தலமாகும்.
தல வரலாறு மற்றும் பெருமை:
மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி நிலம் கேட்ட வாமனப் பெருமாள், பின்னர் திருவிக்கிரம அவதாரம் எடுத்து, தனது ஒரு திருவடியால் பூமியையும் மற்றொரு திருவடியால் விண்ணுலகையும் அளந்ததாக புராண மரபு கூறுகிறது. அந்த உலகளந்த திருக்கோலத்தின் பெருமையை எடுத்துரைக்கும் தலமாக திருக்கோவிலூர் விளங்குகிறது.
இத்தலத்தின் மற்றொரு முக்கிய சிறப்பு, முதலாழ்வார்கள் — பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் — தொடர்புடைய திருத்தலம் என்பதாகும். வைணவ பக்தி மரபில் திருக்கோவிலூர் முக்கிய இடம் பெறுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.
முக்கிய திருவிழாக்கள்: இக்கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு உற்சவங்கள் நடைபெறுகின்றன. அவற்றில் முக்கியமானவை:
பங்குனி பிரம்மோற்சவம் – 15 நாட்கள்
மாசி மகம்
புரட்டாசி பவித்திர உற்சவம்
நவராத்திரி
சித்திரை ஸ்ரீராமர் ஜெயந்தி
ஸ்ரீராமானுஜர் ஜெயந்தி
வைகாசி விசாக கருட சேவை
நம்மாழ்வார் சாற்றுமுறை
பெரியாழ்வார் சாற்றுமுறை
திருவாடிப்பூரம் மற்றும் ஆண்டாள் உற்சவம்
ஸ்ரீஜெயந்தி, உரியடி உற்சவம்
கைசிக ஏகாதசி
மார்கழி பகல்பத்து – இராப்பத்து
வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட பல உற்சவங்கள் நடைபெறுகின்றன.
குறிப்பாக பங்குனி பிரம்மோற்சவம் 15 நாட்கள் நடைபெறுவது இத்தலத்தின் முக்கிய ஆண்டு விழாக்களில் ஒன்றாகும்.
முக்கிய அம்சங்கள்: 108 திவ்யதேசங்களில் ஒன்றாக விளங்குகிறது.
மூலவர் திருவிக்கிரமர் / உலகளந்த பெருமாள்.
தாயார் பூங்கோவல் நாச்சியார்.
திருவிக்கிரம அவதாரத்தின் மகிமையை எடுத்துரைக்கும் தலம்.
முதலாழ்வார்களின் வைணவ பக்தி மரபுடன் நெருங்கிய தொடர்புடையது.
புன்னை தலமரமாகும்.
பெண்ணையாறு, கிருஷ்ண தீர்த்தம், ஸ்ரீசக்ர தீர்த்தம் ஆகியவை தீர்த்தங்களாக குறிப்பிடப்படுகின்றன.
உற்சவராக வேணுகோபாலன் அருள்பாலிப்பதாக தமிழ் இணையக் கல்விக்கழகம் குறிப்பிடுகிறது.
சிறப்பு: திருக்கோவிலூர் திருவிக்கிரம பெருமாள் திருக்கோயில், உலகை அளந்த திருவிக்கிரமனை தரிசிக்கவும், முதலாழ்வார்களின் வைணவ பக்தி மரபை நினைவுகூரவும் சிறப்புமிக்க 108 திவ்யதேசத் திருத்தலமாக விளங்குகிறது.
முகவரி: திருவிக்கிரம சுவாமி (உலகளந்த பெருமாள்) திருக்கோயில்
திருக்கோவிலூர் – 605757,
கள்ளக்குறிச்சி மாவட்டம், தமிழ்நாடு.
விழுப்புரத்திலிருந்து சுமார் 36 கி.மீ. தொலைவில் திருக்கோவிலூர் அமைந்துள்ளது.
தொலைபேசி: 94862 79990
தரிசன நேரம்: காலை: 6:30 மணி – மதியம் 12:00 மணி
மாலை: 4:00 மணி – இரவு 8:30 மணி
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
An unsung temple of Kanchi. 🛕
Came across Thiru Onakanthanthali in Panjupettai, Kanchipuram, through a post by Sivalayasivapriya on Instagram.
The way she narrated the story of this temple… I actually got goosebumps listening to it. 🙏🏽
How many such ancient temples, carrying centuries of devotion, stories and sacred memories, remain quietly tucked away from our attention?
Another hidden gem of Kanchi that I now want to visit. 🔱
Thiruchitrambalam 🙇🙏
#TemplesOfTamilnadu
vc: IG/sivalayasivapriya
ஒருவர் வந்தாலும் குடும்பத்துக்கு முக்தி திருக்களர் —
பாரிஜாதவனேஸ்வரர்
ஒரு சிறிய கவனம்! 👁️
ஆன்மீகம்னா எல்லாரும் ஒன்றாகக் கோயிலுக்குப் போகணும்னு நினைக்கிறோம்.
இந்தத் தலம் வேற மாதிரி சொல்கிறது.
ஒரு குடும்பத்துல "ஒரே ஒருவர்"உண்மையான பக்தியோடு வந்து வணங்கினாலும், அந்தப் புண்ணியம் வீட்டுல இருக்கிற எல்லாருக்கும் சேரும் —
இதுதான் திருக்களர் சொல்லும் நம்பிக்கை.
திருவாரூர் மாவட்டம்.
காவிரி தென்கரை.
தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலம்.
காலம் — ஆயிரம், இரண்டாயிரம் வருஷப் பழமை. மூலவர் — பாரிஜாதவனேஸ்வரர். இன்னொரு பெயர் களர்முளைநாதர். சுயம்பு.
அம்பாள் — அமுதவல்லி. இளங்கொம்பன்னாள்
னுங்களும் அழைப்பாங்க.
இங்கே என்ன விசேஷம்?
முதல் விசேஷம் குடும்பம். தலத்துக்கு வர முடியாதவங்களுக்குக்கூட வழி திறக்கிறது.
ஒருத்தர் வந்தா போதும் — ஆனா அந்த வருகை வேஷம் இல்லாம இருக்கணும்.
இரண்டாவது — நடனம். சிதம்பரத்துல ஆனந்த தாண்டவம் கண்ட துர்வாசர், மறுபடியும் சிவன் நடனம் காணணும்னு இங்கே தவம் செய்தார்.
தேவலோக பாரிஜாதப் பூக்களால வனம் அமைத்து வழிபட்டார். அதனால்தான் இறைவன் பெயர் பாரிஜாதவனேஸ்வரர்.
இங்கே அவர் பிரம்ம தாண்டவம் காட்டி அருளினார். மூன்றாவது — முருகன் குருவா நிற்கிறார்.
துர்வாசருக்கும் அறுபதாயிரம் ரிஷிகளுக்கும் நமசிவாய மந்திரம் சொன்ன இடம் இது.
அதனால இங்கே முருகன் வள்ளி-தெய்வானை இல்லாம "தனியா"குரு வடிவில் இருக்கார்.
முருகனைக் குருவாப் பார்க்கணும்னு தேடுறவங்களுக்கு இந்தச் சந்நிதி வேற.
நான்காவது — கேது.
கேது பெயர்ச்சி, கேது தசை, கேது தொல்லைனு சொல்லித் திரியும் நிறைய பேர் இங்கே களர்முளைநாதரை வணங்கி நிம்மதி தேடுறாங்க.
கிரகப் பயம் இருந்தாலும், முதல்ல வழிபாடு. பயம் இல்ல. ஐந்தாவது — காவல்.
எட்டுக் கை, சிங்க வாகனம் — அஷ்டபுஜ துர்க்கை. மேற்கு நோக்கித் தனிச் சந்நிதி — அகோர வீரபத்திரர்.
பயம், பிணி, தடை —
இந்த இரண்டு சந்நிதிகளையும் தாண்டிப் போகிறவங்களுக்கு மனசு கொஞ்சம் இறங்கும்.
இடம் எங்கே?
மன்னார்குடியிலிருந்து திருத்துறைப்பூண்டி போற வழி. சுமார் 21 கி.மீ. திருக்களர்.
நான் சொல்ல வருவது ஒண்ணுதான். பெரிய கோயில் லிஸ்ட் போட்டு முடிக்கிற தலம் இல்ல இது.
வீட்டுல ஒருத்தர் மட்டும் சென்று வணங்கக்கூடிய தலம்.
அந்த ஒரு வருகை, வீட்டு முழுக்கப் பகிரப்படும்னு இந்த ஊர் நம்புகிறது.
வாய்ப்பு கிடைச்சால் ஒரு முறை போங்க. போக முடியாட்டி, இந்தத் தலத்தை நினைத்து ஒரு நாமம் சொல்லுங்க.
குடும்பத்துக்காக ஒருவர் நிற்பதுதான் இங்கே முதல் பூஜை.
அன்புடன்
தேஜஸ் 🙏
ஜோதிடம் & வாழ்வியல் வழிகாட்டி பிரேசில்
#திருக்களர் #பாரிஜாதவனேஸ்வரர் #களர்முளைநாதர் #தேவாரம் #கேது #முருகன் #சிவத்தலம் #தேஜஸ்வாழ்வியல்வழிகாட்டி
கருட புராணம் கூறுகிறது*
மறுபிறவிகள் எடுத்தாலும் அல்லது முக்தியை அடைந்தாலும் அல்லது பித்ருலோகத்திலேயே இருக்கும் காலத்திலும் நம் பித்ரு பூஜைகள் எவ்விதம் அவர்களைச் சென்றடைகின்றன.
சரீரத்தை விட்டுவிட்ட ஜீவன் மரணமடைந்த தினத்திலிருந்து ஒன்பது நாட்கள் சரீரம் இல்லாமல் இப்பூவுலகிலேயே வாசம் செய்கிறது.
இந்த ஒன்பது நாட்களும் அந்த ஜீவனின் பசி, தாகம் ஆகியவற்றைப் போக்குவதற்காகவேதான் விசேஷ பூஜைகளைச் செய்கிறோம்.
பத்தாவது தினத்தன்று அந்த ஆத்மாவிற்குக் கட்டை விரல் போன்ற அளவும், அமைப்பும் கொண்ட சூட்சும சரீரம் ஏற்படுகிறது.
அந்த சூட்சும சரீரத்தின் மூலம் அந்த ஆத்மாவின் மேல் உலகப் பயணம் ஆரம்பிக்கிறது. அன்றுதான் ஒரு சிறிய சடங்கு மூலம் அந்த ஜீவனுக்கு நாம் விடை கொடுத்து அனுப்புகிறோம்.
பின்பு சந்திரன், செவ்வாய் போன்ற பல கிரகங்களையும் கடந்து, ஆறாவது மாதம் அந்த ஜீவன் அழகான நீருற்றுகளும், சோலைகளும், அட்சயவடம் என்ற விருட்சங்களும், குன்றுகளும் நிறைந்த பித்ருக்களின் உலகை அடைகிறது.
ஆறு மாத இடைவிடாத பயணத்தால் ஏற்பட்ட களைப்பு நீங்க அந்த ஜீவன் மனமகிழ்ச்சியுடன் பூமியில் தனது பிள்ளைகள். திதி பூஜையின் மூலம் அளிக்கும் உணவை(அமுதம்) உண்டு அதனால் மனநிறைவு பெற்றுத் தங்களுக்கு பக்தியுடன் உணவளித்ததற்காகத் தனது குழந்தைகளை ஆசீர்வதிக்கின்றது.
சிறிது காலம் பித்ருக்களின் உலகில் தங்கி, இளைப்பாறி மனநிறைவு பெற்ற அந்த ஜீவன், மீண்டும், தன் பயணத்தைத் தொடர்கிறது.
தான் உலகில் உடலைத் துறந்த ஓராண்டு முடிவில், அதே திதியன்று தர்மதேவதையின் வைவஸ்வதம் என்ற தலைநகரத்தை அடைகிறது.
மிகப்பெரிய, புண்ணிய நகரமாகிய இதன் அழகையும், ஒளியையும், புனிதத்தையும் புராதன நூல்கள் விவரிக்கின்றன.
பூவுலகில் வாழ்ந்தபோது தெய்வத்திடம் பக்தி, சத்தியத்தைக் கடைப்பிடித்தல், மற்ற உயிர்களிடம் கருணை, திருக்கோயில்களைத் தரிசிப்பது, புனர்நிர்மாணம் செய்வது, புண்ணிய நதிகளில் நீராடுதல், பித்ரு பூஜைகளைத் தவறாது செய்தல்.... போன்ற புண்ணிய காரியங்களைச் செய்துள்ள உத்தம ஜீவர்களை தர்மராஜன் தங்கமயமான தனது சிம்மாசனத்திலிருந்து இறங்கிவந்து கையைப் பிடித்து அன்புடன் வரவேற்று, சம ஆசனமளித்து மரியாதை செய்து அவரவரது புண்ணிய காரியங்களுக்கேற்ப பிற புண்ணிய உலகங்களுக்கு அனுப்பி வைக்கிறார்.
அந்தப் புண்ணிய உலகங்களில், தாங்கள் செய்துள்ள நற்செயல்களுக்கு ஏற்ற காலம் வரை சுகங்களை அனுபவித்து, அந்த உத்தம ஜீவன்கள், மீண்டும் பூமிக்குத் திரும்பி முற்பிறவியைவிட உயர்ந்த பிறவியை எடுக்கிறார்கள்.
இதற்கு மாறாக, உலகில் வாழ்ந்தபோது மமதையினால் பாவம் செய்தவர்கள் புண்ணிய உலகங்களுக்குச் செல்லாமல் வேறு சில உலகங்களுக்குச் சென்றுவிட்டு
மீண்டும் பூவுலகில் மனிதர்களாகவோ அல்லது பிராணிகளாகவோ அல்லது புழு, பூச்சிகளாகவோ பிறவி எடுக்கின்றனர்.
இவ்விதம் பிறவி, மரணம், மறுபிறவி என்ற பயணத்தின்போது அவரவர்களுடைய பிள்ளைகள், பெண்கள், பேரன்கள், பேத்திகள் செய்யும் பித்ரு பூஜையின் பலன்கள் சூரியபகவானால் நம்மிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டு,
இதற்காக என்றே படைக்கப்பட்டுள்ள பித்ரு தேவதைகளின் திருக்கரங்களில் ஒப்படைக்கப்படுகின்றன.
அவ்விதம் ஒப்படைக்கப்பட்ட பித்ரு பூஜா பலன்களைப் பித்ரு தேவதைகள் எடுத்துச்சென்று, நமது மறைந்த மூதாதையர் எங்கு இருக்கிறார்களோ, எப்பிறவி எடுத்திருக்கிறார்களோ, அதற்கு ஏற்ப உணவாகவும், நீராகவும் மாற்றிக் கொடுத்துவிடுகின்றனர்.
இதனால் பசி, தாகம் நீங்கி நமது முன்னோர்கள் மனநிறைவு அடையும்போது அந்தப் புண்ணியத்தின் பலனைப் பித்ரு தேவதைகள் ஏற்று சூரியபகவானிடம் அளித்துவிடுகின்றனர்.
சூரியன் அந்தப் பலனை நமக்குத் திரும்ப தந்துவிடுகிறார்.
நமது முன்னோர்களில் சிலர் மகத்தான புண்ணியத்தைச் செய்து, அதன் பலனாக பிறப்பு_இறப்பு அல்லாத முக்தி நிலையை அடைந்திருந்தால், அத்தகைய பித்ருக்களுக்கு நாம் செய்யும் பூஜா பலன்களை இறைவனே ஏற்றுக்கொண்டு, அதற்குப் பிரதிபலனாக, பல நன்மைகளை நமக்கு அளித்தருள்கிறான்.
நமது முன்னோர்களில் எவரெவர் முக்தி நிலையை அடைந்துள்ளனர் என்பதை நாம் தெரிந்துகொள்ள முடியாததால், பித்ரு பூஜைகளைத் தொடர்ந்து நாம் செய்யவேண்டும் என சப்தரிஷிகளும் உறுதியாகக் கூறியுள்ளனர்.
நாம் செய்யும் எந்தப் பித்ரு பூஜையும் வீணாவதில்லை. அதனால் திருப்தியும், மனநிறைவும், மகிழ்ச்சியும் அடைந்து, நம் பித்ருக்கள் நம்மை ஆசீர்வதிக்கும்போது, அந்த ஆசி நம்மை ஏராளமான துன்பங்களிலிருந்து காப்பாற்றி விடுகிறது.
ஆதலால்தான் பித்ருபூஜைகளின் மகத்தான புண்ணிய பலன் அளவற்றது என்பதையும், எக்காரணத்தைக் கொண்டும் பித்ரு பூஜைகளை விட்டுவிடக்கூடாது என்றும் மீண்டும், மீண்டும் வலியுறுத்தி வருகிறோம்.
(ஆதாரம்: பூர்வபுண்ணிய நிர்ணயசாரம், கருடபுராணம், பவிஷ்ய புராணம், ஸ்ரீமத் மகாபாரதம் முதலிய நூல்கள்.)
#ஏழேழு_பிறவிக்கும்_நீயே_என்_கணவன்_அல்லது_மனைவி
இவரைப் போல் எனக்கு ஒரு கணவர் அமைய நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று சொல்லும் மனைவியா நீங்கள்?
"அடடா... இப்படி ஒரு பொறுமையான மனைவி கிடைக்க எவ்வளவு புண்ணியம் செய்திருந்தேனோ?" என்று சிலாகித்து மகிழும் கணவரா நீங்கள்?
ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும் சொந்தம் இந்த சொந்தமம்மா என்று பாட வேண்டும் என்று ஆசையாக இருக்கிறதா?
இதற்கு ஒரு வழி இருக்கிறது.
புண்ணிய தீர்த்தமான யமுனை நதியில், இதற்காக ஒரு சடங்கு செய்யப்படுகிறது.
சூரியனின் மகள் என போற்றப்படும் யமுனை, ஒரு நதியாக விளங்குகிறாள்.
கிருஷ்ணர் தனது இளமைக் கால லீலைகளை இந்த நதிக்கரையில் தான் நடத்தினார். அவர் பிறந்ததும், அவரது தந்தை வசுதேவர், ஒரு கூடையில் அவரை வைத்து கோகுலம் என்ற கிராமத்திற்கு எடுத்துச் சென்றார். அப்போது அவருக்கு வழிவிட்ட நதி தான் யமுனை.
யமுனை நதியுடன், நம் கண்களுக்கு தெரியாத சரஸ்வதி என்னும் நதி இணையும் இடம் தான் பிரயாகை. இமயமலையில் பன்வர் பூஞ்ச் என்னும் இடத்தில் உற்பத்தியாகும் யமுனை, உத்தர்கண்ட் மாநிலத்தில் நுழைகிறது. இந்த மாநிலத்தில்தான் பிரயாகை உள்ளது.
இந்த இடத்தில் படகுகளில் அமர்ந்தபடியே, மனைவிக்கு கணவன் தலைவனாகும் சடங்கு ஒன்று நடத்தப்படுகிறது.
படகில் பயணம் செய்யும் தம்பதிகள் யமுனை நதிக்கு குங்குமம் மற்றும் மலர்களால் அர்ச்சனை செய்வார்கள்.
இந்தச் சடங்கை நடத்தினால் அந்த தம்பதிகள் ஏழேழு ஜென்மமும் இணைந்து இருப்பர் என்பது ஐதீகம்.
மதுரா, பிருந்தாவனம் ஆகிய புகழ்பெற்ற கிருஷ்ண தலங்கள் இந்த நதிக்கரையில் உள்ளன.
படகில் பயணித்து சடங்கை முடித்து ஏழு பிறப்பும் நிம்மதியாக இருக்க வகை செய்துவிட்டு வருவோமா!
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
காசி கயா போன்ற புண்ணிய ஷேத்திரங்களில் ப்ரோகிதர் தாய்க்காக பிண்டம் வைக்கும் போது விளக்கத்துடன் கூறியது..
அப்போது அங்கிருந்த ஒவ்வொருவரும் அழுதே விட்டனர்...
இந்த ஸ்லோகங்களை கூறும் பொழுது நமது கண்களில் கண்டிப்பாக ஒரு சொட்டு கண்ணீராவது வரும் நமது தாயை நினைத்து.
கயா கயா கயா. என்று சொல்வது ஆதி சங்கரர் தனது தாயின் கடைசி காலத்தில் தான் வாக்கு கொடுத்தபடி அவளருகே வந்து அவள் மரணத்திற்கு பிறகு அவளது அந்திம கிரியைகளை செய்து இயற்றிய மனம் நெகிழும் மாத்ரு பஞ்சகம் 5 ஸ்லோகங்கள்
விஷ்ணு பாதம் ..
பித்ரு ஸ்ரார்தம் கயாவில் செய்வது உசிதம் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. அக்ஷயவடத்தருகே பிண்ட பிரதானம் செய்வது ஒரு வழக்கம்.
''கயா கயா கயா. என்று சொல்வது நமது பித்ருக்களுக்கு ஸ்ரத்தையோடு அவர்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் நாம் செய்யும் கடமை சம்பந்தப்பட்டது. . ஒவ்வொரு ஹிந்துவும் வாழ்வில் ஒரு தடவையாவது செல்ல வேண்டிய இடம் கயா. குடும்பம் சகல சம்பத்துகளும் ச்ரேயஸும் பெறும்.
ஒரு 16 ஸ்லோகங்கள் கொண்டது மாத்ரு .ஷோடசி. தாய்க்கு மகன் அளிக்கும் 16 பிண்டங்கள் பற்றியது. அதன் அர்த்தம் புரிந்துகொண்டால் அவசியம் புரியும். தாயின் அருமை தெரியும்.
ஜீவதோர் வாக்ய கரணாத்
ப்ராத்யாப்தம் பூரி போஜணாத்
கயாயாம் பிண்ட தாணாத்
த்ரிபி: புத்ரஸ்ய புத்ராய
'' அடே பயலே, அம்மா அப்பா உயிரோடு இருக்கும்போதே அவர்கள் சொல்படி நட. அவர்களை சந்தோஷமாக வைத்துக்கொள். அவர்கள் ஆசீர்வாதம் தான் உன் படிப்பு மூலம் கிடைக்கும் சர்டிபிகேட்டை விட உன்னை நன்றாக வைக்கும். அவர்கள் காலம் முடிந்த பிறகு அந்தந்த திதியில் அவர்கள் பசியை போக்கு. அவர்களுக்கு தேவை அல்வா, ஜாங்கிரி,கீ ரோஸ்ட் அல்ல. வெறும் எள்ளும் தண்ணீரும் தான். முடிந்தால் ஒரு தடவை கயாவுக்கு குடும்பத்தோடு போ. அங்கு நீ அளிக்கும் பிண்ட ப்ரதானம் அவர்களுக்கு தேவை. ''புத்'' என்ற நரகத்திலிருந்து பெற்றோரை காப்பற்றுகிறவன் தான் 'புத்ரன்' என்று சாஸ்திரம் சொல்கிறது. நான் சொல்லவில்லை. .
“அக்ஷய வடம், அக்ஷய வடம்” என்று ஒரு வார்த்தை காதில் விழுகிறதே. அது என்ன? கயாவில் நாம் 64 ஸ்ரார்த்த பிண்டங்களை அங்கு தான் இடுகிறோம்.
ஸ்ராத்தம் பண்ணுபவர்கள் கயாவில் பித்ருக்களுக்கு, நமது முன்னோர்களுக்கு மட்டுமல்ல, தெரிந்தவர்கள் அறிந்தவர்களுக்கும் 'திருப்தியத', திருப்தியத' என்று மனமுவந்து அளித்து அவர்களை வேண்டுகிறோமே. அக்ஷய வடம் என்பது ஒரு மஹா பெரிய வ்ருக்ஷம். 'வடம்' (தமிழில் சின்ன 'ட") ஆல மரம். சென்னைக்கருகே ல் திரு ஆலம் காடு (திருவாலங்காடு - வடாரண்யம் என்று பெயர் கொண்டது.)
இந்த அக்ஷய வடத்தின் கீழே நிழலில் தான் பிண்ட பிரதானம் இடுவார்கள். இதில் முக்யமாக 64 பிண்டங்களில் பெற்ற தாய்க்கு மட்டுமே 16 பிண்டங்கள். ஆந்த 16 பிண்டங்களை அம்மாவுக்காக ஒவ்வொரு வாக்யமாக சொல்லி இடுகிறோம். அந்த பதினாறு தான் “மாத்ரு ஷோடஸி”.
1. கர்பஸ்ய உத்கமநே துகம் விஷமே பூமி வர்த்மநி |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
''கொஞ்சமா நஞ்சமா நான் உன்னை படுத்தியது. ஒரு பத்து மாத காலம் எப்படியெல்லாம் உன்னை உதைத்திருக்கிறேன். என்னையும் சுமந்தபடி மேடும் பள்ளமுமாக நீ அலைந்தாயே. நான் கொடுத்த கஷ்டத்தை துளி கூட நீ பொருட்படுத்த வில்லை. என்னை திட்டவில்லையே. சந்தோஷமாக என்னை உள்ளே அடக்கிய உன் வயிறை எண்ணற்ற முறை ஆசையாக தடவி கொடுத்தாயே. இதோ நான் செய்த பாவங்களுக்காக உனக்கு இந்த முதல் பிண்டம். பரிகாரமாக ஏற்றுக்கொள்வாயா?
2. மாஸி மாஸி க்ருதம் கஷ்டம் வேதநா ப்ரஸவே ததா |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
''ஏன் சோர்ந்து போயிருக்கிறாய். உன் பிள்ளை உள்ளே படுத்துகிறானா? பிரசவ காலம் கஷ்டமானது தான்.மாசா மாசம் நான் வளர வளர உனக்கு துன்பத்தை தானே அதிகமாக கொடுத்துக் கொண்டே வந்தேன். இந்தா அதற்கு பரிகாரமாக நான் இடும் இந்த இரண்டாவது பிண்டம். ஏற்றுக்கொள் அம்மா.
3. பத்ப்யாம் ப்ரஜாயதே புத்ரோ ஜநந்யா: பரிவேதநம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
அம்மா, நான் அளித்த வேதனையில் நீ பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துக் கொண்ட தாங்க முடியாத துன்பம் நான் உன்னை வயிற்ருக்குள் இருந்த போது உதைத்தது தானே. அதற்காக ப்ராயச்தித்தமாக இந்த 3வது ஸ்பெஷல் பிண்டம் உனக்கு. என் தாயே.
4. ஸம்பூர்ணே தசமே மாஸி சாத்யந்தம் மாத்ருபீடநம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
''அம்மா, இந்த 4 வது பிண்டம் உனது பூரண கர்ப காலத்தில் நீ என்னால் பட்ட வேதனைக்காக -- ஒரு பரிசு -- என்றே ஏற்றுக்கொள். என்னைப் பொருத்தவரை எனது பிராயச்சித்தம் என்று நான் இடுகிறேன்.
#சார்ங்கம்
'சார்ங்கம் உதைத்த சரமழை போல்'
என்று பாடுகிறாள் ஆண்டாள் நாச்சியார். 'சார்ங்கம் என்னும் வில்லிலிருந்து புறப்பட்டுப் பாயும் அம்புகள்போல், மழை பொழிய வேண்டும்' என்று கேட்கிறாள். வில்லிலிருந்து புறப்படும் அம்புக்கூட்டங்கள், வேகமாகவும் கூர்மையாகவும் பாய்வதைப் போன்று, மழையின் நீர்க்கீற்றுகள் வேகமாகவும் கூர்மையாகவும் வந்து பூமியைத் தொடவேண்டுமாம்.
இதில் ஆண்டாள் குறிப்பிடும் சார்ங்கம் என்பது என்ன?
திருமாலின் வில்லுக்கு சார்ங்கம் என்று பெயர். காக்கும் கடவுளான திருமாலிடம் பல்வேறு வகையான ஆயுதங்கள் இருந்தாலும், ஐந்து ஆயுதங்கள் மிக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. சுதர்சனம் என்னும் சக்கரம், பாஞ்சசன்யம் என்னும் சங்கு, கௌமோதகீ என்னும் கதை, நந்தகம் என்னும் வாள் ஆகிய நான்கோடு, சார்ங்கம் என்னும் வில்லும் சேர இவற்றுக்குப் 'பஞ்சாயுதங்கள்' என்றே பெயர்.
இந்த ஐந்து ஆயுதங்களும் திருமாலின் திருக்கரங்களில் இருந்துகொண்டு, நம்மையெல்லாம் காக்கின்றன. பழைய காலங்களில் ஒரு வழக்கம் உண்டு. இந்த ஐந்து ஆயுதங்களைப்போல், சிறு சிறு வடிவங்களில் செய்வார்கள். அப்படிச் செய்யப்பட்ட சிறு வடிவங்களைக் கயிற்றிலோ பொன்னிலோ கோர்த்துக் குழந்தையின் கழுத்தில் கட்டிவிடுவார்கள். இதற்கு ஐம்படைத் தாலி என்று பெயர். இந்த ஐந்து ஆயுதங்களும் ஐந்து படைகளாக (ராணுவப் படை போல்) இருந்து அந்தக் குழந்தையைக் காப்பாற்றும் என்பது நம்பிக்கை.
பஞ்சாயுதங்களைப் பற்றியும் ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமம் குறிப்பிடுகிறது.
"சங்கப்ருன்நந்தகீ சக்ரீ சார்ங்க தன்வா கதாதர:"
சங்கு (பாஞ்சசன்யம்), வாள் (நந்தகீ), சக்கரம் (சுதர்சனம்), வில் (சார்ங்கம்), கதை (கௌமோதகீ) என்னும் இவை, அன்பர்களைக் காப்பதற்காக எப்போதும் ஆயத்தமாக இருக்கின்றன. இதைக் கொண்டு, திருமாலுக்கு 'சார்ங்கதன்வா' என்றொரு திருநாமமும் உண்டு.
திருமாலின் சார்ங்கம் என்று சொன்னாலும், கிருஷ்ணாவதாரத்தில் ஸ்ரீகிருஷ்ணர் இதைப் பயன்படுத்துகிறார்.
முதன் முதலில் இந்தச் சார்ங்க வில் எங்கேயிருந்து வந்தது?
சிவனுக்கு ஒரு வில்லும் திருமாலுக்கு ஒரு வில்லும் செய்ய வேண்டுமென்று ஆசைப்பட்ட விஸ்வகர்மா (தேவலோகத்துச் சிற்பி) இரண்டு வில்களைச் செய்தார். சிவனுக்கு ஒன்றைக் கொடுத்தார். அதன் பெயர் பினாகம். பினாக வில்லைக் கையில் கொண்டதாலேயே சிவனுக்குப் 'பினாகபாணி' என்று பெயர். இன்னொரு வில்லைத் திருமாலிடம் கொடுத்தார். சார்ங்க வில்லைக் கையில் வைத்திருப்பதால்தான், திருமாலுக்கு 'சார்ங்கபாணி' என்னும் பெயர்.
பினாகமும் சார்ங்கமும் எவ்வாறு உருவாயின, எங்கெங்கே போயின என்பதைப் பற்றி வால்மீகி ராமாயணத்தின் பாலகாண்டத்தில் தகவல்கள் உள்ளன.
இரண்டு வில்களைச் செய்த விச்வகர்மா, அவரவர்க்கானதை அவரவரிடம் கொடுத்தார். இதற்கிடையில், திரிபுர அரக்கன் சிவனால் அழிக்கப்பட்டான். இதைக் கண்ட தேவர்கள், பிரம்மாவிடம் சென்று, திருமால் – சிவன் ஆகிய இருவரிடமும் உள்ள குறைநிறைகளைப் பற்றிக் கேட்டனர்.
"சிதிகண்டஸ்ய விஷ்ணோச்ச பல அபல நிரீக்ஷயா
அபிப்ராயம் து விஞாய தேவதானாம் பிதாமஹ:"
இதை உணர்ந்துகொண்ட பிரம்மா, வேண்டுமென்றே இருவரின் உள்ளத்திலும் பகைமையைத் தோற்றுவித்தார். இதனால், இருவரும் லீலை புரிய வில்லெடுத்துப் போரிட்டனர். காக்கும் கடவுள் என்பதால், ரீங்கார நாதம் எழுப்பினார் திருமால். காக்கும் நாதமென்பதால் அதன் வேகத்தில் சிக்குண்ட சிவனின் வில் செயலிழந்து நின்றது. திருமாலும் சிவனும் தத்தம் நிலையில் நின்றனர். பிறகு சிவன் தம்முடைய பினாக வில்லை விதேஹ மன்னர் தேவரதனிடத்தில் கொடுத்துவிட்டுக் கைலாயம் சென்றார். திருமால், தம்முடைய சார்ங்க வில்லை, பிருகு வம்ச முனிவர் ருசிகர் என்பவரிடத்தில் கொடுத்தார்.
"இதம் ச வைஷ்ணவம் ருசிகே பார்கவே ப்ராதாத் ச ந்யாஸம் உத்தமம்"
ருசிகர், தம்முடைய மகனான ஜமதக்னியிடம் கொடுக்க, அவரிடமிருந்து அது பரசுராமருக்குச் சென்றது.
கிருஷ்ணாவதாரத்தின்போது, சார்ங்கம் எவ்வாறு ஸ்ரீகிருஷ்ணருக்குக் கிடைத்தது?
மேற்கூறிய வினாவிற்குச் சரியான விடை இல்லையென்றாலும், காண்டவ தஹனத்தின்போது கிடைத்தது என்று ஊகிப்பதற்கு இடமிருக்கிறது.
காண்டவ வனத்தை எரிப்பதற்கு அக்னிதேவன் பலமுறை முயன்று தோற்றான். வருணனுடைய காப்பு இருந்ததால், ஒவ்வொரு முறையும் மழை பெய்து அக்னியை அவித்துவிடும். 'கிருஷ்ணரிடமும் அர்ஜுனனிடமும் அக்னி முறையிட, அவனுக்கு உதவுவதாக இருவரும் வாக்களித்தனர். அதன்படியே, காண்டவ வனத்தை அக்னி எரிக்கத் தொடங்கினான். வழக்கம்போல், வருணன் மழையைப் பெய்வித்தான். தம்முடைய சுதர்சன சக்கரத்தால், மழையை மேலேயே ஸ்ரீகிருஷ்ணர் நிறுத்திவிட, அக்னி திருப்தியோடு எரிந்து முடித்தான்; காண்டவ வனத்தையும் அழித்தான். தனக்கு உபாயம் செய்துகொடுத்த அர்ஜுனனுக்கும் ஸ்ரீகிருஷ்ணருக்கும் பலவகையான திவ்விய ஆயுதங்களை அக்னி கொடுத்தாகவும், அவற்றில் சார்ங்க வில்லும் ஒன்று என்று கூறப்படுகிறது.
ஸ்ரீகிருஷ்ணர் எப்போதெல்லாம் சார்ங்க வில்லைப் பயன்படுத்தினார்?
கிருஷ்ணாவதார காலத்தில், பலரோடும் சண்டை போட நேர்ந்தபோது, சார்ங்க வில்லைக் கண்ணன் பயன்படுத்தினார். ருக்மிணியைத் திருமணம் முடிப்பதற்கு முன்னர், ருக்மியோடு ஏற்பட்ட சண்டையில், ஸ்ரீகிருஷ்ணர் பயன்படுத்தியது சார்ங்க வில்லாகவே இருந்திருக்க வேண்டும்.
"அஷ்டபிஸ் சதுரோ வாஹான் த்வாப்யாம்
ஸூதம் த்வஜம் த்ரிபி:"
"...பரிதம் பட்டிதம் சூலம் சர்மாஸீ சக்தி தோமரௌ
யத் யதாயுதமாதத்த தத் ஸர்வம் ஸோச்சிநத்தரி:"
பல வகையான ஆயுதங்களையும் ஸ்ரீகிருஷ்ணர் தம்முடைய அம்புகளால் வீழ்த்தினார். அம்புகளை எய்வதற்குக் கண்ணன் பயன்படுத்திய வில் சார்ங்கமாகத்தான் இருந்திருக்கக்கூடும்.
பின்னர் ஒருமுறை, வேறொரு விவாதத்தின்போது, தன்னைத் திருமணம் புரிந்து அழைத்து வருவதற்காக, பிற மன்னர்களையும் பிரபுக்களையும் சார்ங்க வில்லின் நாதம் கொண்டே ஸ்ரீகிருஷ்ணர் விரட்டியதாக ருக்மிணி குறிப்பிடுகிறாள்.
"தவ கத அக்ரஜ யஸ்து பூபான் வித்ராவ்ய
சார்ங்க நிநதேன ஜஹர்த"
ஸெளபம் என்னும் நாட்டின் அரசன் சால்வன் என்பவனோடு ஸ்ரீகிருஷ்ணர் யுத்தம் செய்ய நேர்கிறது. சிசுபாலனுடைய நண்பனான சால்வன், ருக்மிணி திருமண காலத்தில், ஸ்ரீகிருஷ்ணர் மீது பகை கொண்டு யாதவர்களைத் தான் அழிக்கப்போவதாகச் சூளுரைக்கிறான். மிகப் பெரும் தவம் செய்து, இரும்பாலான ஸெளபம் என்னும் தேரை வரமாகப் பெற்று துவாரகை மீது படையெடுக்கிறான்.
ஸ்ரீகிருஷ்ணரின் மகன் ப்ரத்யும்னன் சால்வனைச் சமாளிக்க, இந்திரபிரஸ்தம் சென்றிருந்த ஸ்ரீகிருஷ்ணர் துர்நிமித்தங்கள் கண்டு அவசர அவசரமாக துவாரகை திரும்புகிறார்.
ஸ்ரீகிருஷ்ணருக்கும் சால்வனுக்கும் போர் தொடங்குகிறது. இதனில், தன்னுடைய அம்புகளை சால்வன், ஸ்ரீகிருஷ்ணரின் இடது கரம் நோக்கி எய்ய, ஸ்ரீகிருஷ்ணர் தம்முடைய இடது கரத்தில் பற்றியிருந்த சார்ங்கம் கீழே விழுகிறது.
இருப்பினும், பின்னர் அதே சார்ங்கத்தைக் கொண்டு, மாயக் கலைகளில் வல்லவனான சால்வன் மீது அம்புமாரி பொழிகிறார் ஸ்ரீகிருஷ்ணர். பின்னர், சுதர்சன சக்கரம் கொண்டு, சால்வனை அழிக்கிறார்.
சார்ங்க வில் குறித்து ஸ்ரீகிருஷ்ணோபநிஷதம் கூறுவது இங்கே எண்ணத்தக்கது:
'ஸ்ரீகிருஷ்ணரின் மாயைதான் சார்ங்க வில்லாகத் தோன்றுகிறது. பூலோக வாழ்க்கைக்குள் ஆன்மாவை வழிநடத்துகிற மாயை, கடவுளைச் சிந்திக்கச் செய்து, ஆன்மாவை மேம்படுத்துகிறது.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
தூப்புல் குலமணி ஸ்ரீ வேதாந்த தேசிகனுடன் ஒரு நாள்
அப்பாவுக்குத் திருமணம் ஆவதற்கு முன்பே தேசிகன் என்று எனக்குப் பெயர் வைத்துவிட்டார். அதாவது பிறக்கப் போகும் முதல் பையனின் பெயர் தேசிகன் என்று தீர்மானித்துவிட்டார். இதை என் அப்பாவே என்னிடம் சொல்லியிருக்கிறார்.
"பெண்ணாகப் பிறந்திருந்தால் என்ன செய்திருப்பே?" என்று ஒரு முறை கேட்டதற்கு, "பெருமாள் ஏமாற்ற மாட்டார்" என்றார் நம்பிக்கையுடன். அவருக்கு ஸ்ரீ வேதாந்த தேசிகன் மீது இருந்த பற்று அப்படி.
பெயரில் என்ன இருக்கிறது என்று நினைக்கலாம். கொஞ்சம் பின்னோக்கி ஸ்ரீ ராமானுஜர் சரித்திரத்தைப் புரட்டலாம்.
ஸ்ரீஆளவந்தார் திருநாடு அலங்கரித்த சமயம். அவருடைய மூன்று விரல்கள் மடங்கியிருந்தது பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஸ்ரீராமானுஜர் ஆளவந்தாரின் ஆசையை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவேன் என்று சொல்ல, மடங்கிய விரல்கள் விரிந்தன.
அந்த மூன்று ஆசைகள்:
1. நம்மாழ்வாரின் திருநாமத்தைச் சூட்ட வேண்டும்.
2. பராசர பட்டர், வேத வியாசர் திருநாமங்களைச் சூட்ட வேண்டும்.
3. ஸ்ரீபாஷ்யத்துக்கு உரை.
இதில் முதல் இரண்டு ஆசைகள் - பெயர் சூட்ட வேண்டும் என்பது! பாஷ்யம் எழுதுவது போலக் கஷ்டமானது கிடையாது.
சில வருடங்கள் முன் பெரியவாச்சான் பிள்ளையின் திருநட்சத்திரம் அன்று சேங்கனூரில் ஸ்ரீகிருஷ்ண பிரேமி ஸ்வாமிகளைச் சந்தித்த போது, "சௌக்கியமா?" என்றார் என்னைப் பார்த்து. (அது தான் முதல் சந்திப்பு!)
"சின்ன வயதில் உங்கள் உபன்யாசம் கேட்டிருக்கிறேன்.. இன்று தான் உங்களை நேரில் சந்திக்கிறேன்" என்றேன்.
"திருநாமம்?"
"தேசிகன்"
கை கூப்பி வணங்கினார்.
இந்த மாதிரி என் பெயரைக் கேட்கும் அர்ச்சகர், ‘பண்ணி வைக்கும்’ வாத்தியார் என் பெயரைக் கேட்டவுடன் ‘கை கூப்பும்’ ஒரு வித ரிஃப்ளெக்ஸ் ஆக்ஷனை (reflex action) ’குருகூர் சடகோபன் சொன்ன’ என்று கோஷ்டி சேவிக்கும் போது மட்டுமே பார்த்திருக்கிறேன்.
ஸ்ரீ தேசிகனின் திருக்குமாரர் ‘ஸ்ரீ குமார வரதாச்சாரியார்’. தேசிகனுக்குக் காஞ்சி வரதன் மீது கொண்ட பிரேமையினால் வைத்த பெயர். தேசிகனுக்குப் பிடித்த காஞ்சி வரதன் சன்னதியில் இந்த மாதம் 21ஆம் தேதி (21.9.2018) ஸ்ரீ வேதாந்த தேசிகனின் 750ஆம் திருநட்சத்திரம் அன்று ஒரு நாள் முழுவதும் ஸ்ரீ தேசிகனுடன் இருந்தேன்.
இந்தப் பயணத்தை முன்பே தீர்மானிக்கவில்லை. ஸ்ரீ தேசிகன் 1000-வது ஆண்டுக்கு நானும் இதைப் படிக்கும் நீங்களும் இருக்கப் போவதில்லை, அதனால் ‘இப்போதே எம்மை’ என்று ஆண்டாள் சொல்லுவது போலக் கிளம்பிவிட்டேன்.
ஸ்ரீராமானுஜரின் 1000 + ஸ்ரீ தேசிகனின் 750 என்று ஒரு ’டபிள் தமாக்கா’வாக அமைந்தது.
விடியற்காலை, பட்டுப்புடவை விளம்பரங்களைக் கடந்து பேருந்து நிலையத்தில் கடைகளில் ஆப்பிள்களை அடுக்கிக்கொண்டு இருக்கும் போது காஞ்சிபுரம் வந்து சேர்ந்தேன்.
6.30 மணிக்கு வரதன், தாயார் விஸ்வரூப தரிசனத்துடன் துவாதசிக்குத் தீர்த்தம் கொடுத்து அருளினார்கள். அதை முடித்துக்கொண்டு ஸ்ரீ அஹோபில மடம் சென்ற போது அடியேனுடைய ஆசாரியன் அங்கே மாலோலன் விஸ்வரூப தரிசனத்துடன் பாலும் கொடுத்த தெம்பில் நேராகத் தூப்புலுக்குச் சென்ற போது ஸ்ரீ வேதாந்த தேசிகன் விளக்கொளி பெருமாளுக்கு மங்களாசாசனம் செய்ய ஆயத்தமாகிக்கொண்டு இருந்தார்.
’தூப்புல்’ வேதாந்த தேசிகன் அவதாரஸ்தலம். அதனால் பூவின் வாசனை போலத் தூப்புல் தேசிகனுடன் ஒட்டிக்கொண்டு விட்டது. ’தூப்புல்’ தூய்மை வாய்ந்த புல் - தூப்புல், இது வைதிகர்கள் உபயோகிக்கும் தர்ப்பத்தைக் குறிக்கும். தூப்புல் குலம் என்றும் சொல்லுவர்.
இன்றைக்குச் சரியாக 750 ஆண்டுகளுக்கு முன் கி.பி 1268-ல் புரட்டாசித் திருவோணத்தில் திருப்பதியில் பிரம்மோற்சவம் முடிவுறும் "திருவோணத் திருவிழவில்" விபவ ஆண்டில் விபவத்துடன் ஸ்ரீராமானுஜருடைய சீரிய கருத்துக்களை அழுத்தமாகச் சொல்ல அவதரித்தார்.
திருவேங்கடவன் திருநட்சத்திரமும் கன்னியாச்ரவணம் என்று எல்லாம் ஒன்று சேர்ந்து தேசிகாவதாரம் ஓர் அர்ச்சாவதாரத்தின் விபவாதாரம் என்று எண்ணும்படி இருக்கிறது. பெரியாழ்வார் பல்லாண்டில் "திருவோணத்தான் உலகாளும் என்பார்களே" என்ற திருவாக்கை மெய்ப்பித்தருளிய அவதாரம் தேசிகனுடையது எனலாம்.
கீதையில் கண்ணன் "எப்போதெல்லாம் தர்மத்திற்கு வாட்டமும், அதர்மம் வளர்ச்சி பெறுகிறதோ அப்போதெல்லாம் நான் உலகில் தோன்றுகிறேன்" என்றருளினான். அதை நிலைநாட்ட மணி ஓசையுடன் நம் குலமணி தேசிகன் அவதரித்தார்.
நான் போன சமயம் ஸ்ரீ தேசிகன் அஞ்சலி முத்திரையுடன் இருந்தார். தேசிகன் அருளிய ’அஞ்சலி வைபவம்’ நினைவுக்கு வந்தது. தேசிகன் வரதனைச் சேவிக்கக் கிளம்பிக்கொண்டு இருப்பதால் இன்று அவர் அஞ்சலிக்கு மாறியிருந்தார்.
ஸ்வாமி தேசிகனும், நம்மாழ்வாரும் பொதுவாக எல்லாத் திவ்ய தேசங்களிலும் ஞான முத்திரையுடன் தான் காட்சி அளிப்பார்கள். உடையவர் முதன்முதலில் ’வேதார்த்த சங்கிரகம்’ நூலைத் திருமலையில் அருளியதால் திருமலையில் மட்டும் ஞான முத்திரையுடன் நமக்குக் காட்சி அளிக்கிறார்.
உடையவர் இயற்றியவற்றுள் ஸ்ரீபாஷ்யம் என்பது மிக முக்கியமாகக் கருதப்படுகிறது. முன்பு பார்த்த ஆளவந்தாரின் மூன்று ஆசைகளில் ஒன்று பிரம்மசூத்திரத்துக்குப் பாஷ்யம் எழுத வேண்டும் என்பது.
இந்த நிகழ்ச்சி நடந்து கிட்டத்தட்ட 250 ஆண்டுகள் கழித்துக் காஞ்சி வரதராஜப் பெருமாளின் சன்னதியில் நடாதூர் அம்மாள் தம் சீடர்களுக்குக் காலட்சேபம் செய்துகொண்டு இருக்கிறார். அன்று ஸ்ரீபாஷ்ய காலட்சேபம்.
அங்கே நல்ல தேஜஸுடன் ஐந்து வயதுக் குழந்தை தன்னுடைய மாமாவான கிடாம்பி அப்புள்ளாருடன் உள்ளே நுழைகிறது. [நடாதூர் அம்மாளுடைய சிஷ்யர் கிடாம்பி அப்புள்ளார். ஸ்ரீராமானுஜரின் முக்கிய சிஷ்யர்களுள் கிடாம்பியாச்சான் என்பவர் வம்சத்திலே தோன்றியவர் தோதாத்ரியம்மையார். இவருடன் பிறந்தவர் ‘அப்புள்ளார்’ எனப்படும் ஆத்ரேய ராமானுஜாசாரியார். தாய்மாமனாகிய இவரே நம் தேசிகனுக்குச் சகல சாஸ்திரங்களையும் திறம்படக் கற்பித்த ஆசாரியராவார்]
காலட்சேபத்தை நடாதூர் அம்மாள் நிறுத்திவிட்டு, குழந்தையின் அழகைப் பார்த்து "யார் இந்தக் குழந்தை?" என்று கேட்க, "என்னுடைய மருமகன்" என்கிறார் அப்புள்ளார். கூடவே இந்தக் குழந்தைக்குப் பாடம் எடுக்க வேண்டும் என்று கோரிக்கையும் வைக்கிறார்.
அதற்கு அம்மாள், தனக்கு வயதாகிவிட்டது அதனால் உன் மருமகனுக்கு நீயே ஆசிரியராக இருந்து பாடம் எடு என்று நியமித்துவிட்டு, தொடர்ந்து காலட்சேபத்தைத் தொடர முற்படும் போது நிறுத்திய இடம் நினைவுக்கு வரவில்லை. அப்போது சிறுவன் உள்ளே நுழைந்த போது தான் என்ன கேட்டானோ அதை அப்படியே ஒப்பிக்கிறான். நடாதூர் அம்மாள் சிறுவனை அணைத்துக்கொண்டு "ஸ்ரீவைஷ்ணவக் கொள்கையைப் பரவச் செய்து, பெரும் புகழுடன் விளங்குவாய்" என்று ஆசீர்வதிக்கிறார். அவர் ஆசீர்வாதம் பலித்தது. அந்தச் சிறுவன் தான் ஸ்ரீ வேதாந்த தேசிகன்.
தூப்புல் ஸ்ரீ வேதாந்த தேசிகன் வரதனை மங்களாசாசனம் செய்யப் புறப்படுவதற்குத் தயாராகிக்கொண்டு இருக்கும் போது விளக்கொளி பெருமாள் சன்னதியைச் சுற்றி வலம் வந்தேன். சுவரில் ஸ்ரீ தேசிகனின் வாழ்க்கையில் நடந்த முக்கியமான விஷயங்களை ஓவியமாகத் தீட்டியிருந்தார்கள். இதையெல்லாம் சேர்த்தால் ஒரு காமிக்ஸ் புத்தகம் மாதிரி இருக்குமே என்று கேமராவில் கவர்ந்துகொண்டு வெளியே வந்த போது, ஓர் இடத்தில் தூப்புல் (தர்ப்பம்) செழிப்பாக வளர்ந்துள்ளதை ரசிக்கும் போது வானவேடிக்கைச் சத்தம் கேட்க…. தேசிகனை அழைத்து வர வரதன் அனுப்பிய பல்லக்கு வந்திருந்தது.
ஸ்ரீ தேசிகனுடன் சேர்ந்து விளக்கொளிப் பெருமாளுக்கு ‘அந்தரத்தமரர்கள் கூட்டங்கள் இவையோ" என்பது போலக் கூட்டமாகப் பல்லாண்டும், ஆண்டாளின் திருப்பாவையையும் சொல்லும் போது அந்த இடம் மினி வைகுண்டம் மாதிரியே காட்சி அளித்தது.
கோஷ்டி முடிந்து கொஞ்ச நேரம் ஓய்வு எடுக்கும் போது வெளியே மீண்டும் வாணவேடிக்கை ஒலிக்க, வெளியே சென்று பார்த்தால் நம் தேசிகனைக் காணவில்லை.
விசாரித்த போது பல்லக்கில் அவர் கிளம்பிவிட்டார் என்றார்கள்.
ஓர் ஆட்டோவைப் பிடித்து
"தேசிகனைத் துரத்துப்பா" என்றேன், அவருக்குப் புரியவில்லை.
"பல்லக்கில் போகிறாரே.."
"ஓ… சாமியைத் துரத்தணுமா ஏறிக்கோங்க சாமி" என்றார்.
அவருக்கு எல்லாமே சாமி தான். அன்று காஞ்சி முழுக்க சாமி தான். ஆட்டோவில் போகும் போது காஞ்சிபுரம் முழுக்க சாமி-2 போஸ்டர்கள்.
சாமியை, மன்னிக்கவும் தேசிகனைத் துரத்திக்கொண்டு ஆட்டோவில் போகும் சமயம் அவரைப் பற்றி மேலும் தகவல்களைப் பார்த்துவிடலாம்.
எல்லாக் கோயில்களுக்கும் வெளியே கருடாழ்வார் பெருமாளுக்கு முன் இருப்பதைப் பார்க்கலாம். ‘புள்ளரையன் கோயில்’ என்கிறாள் ஆண்டாள். கருடாழ்வாருக்குப் பெரிய திருவடி என்ற பெயரைக் கேள்விப்பட்டிருப்பீர்கள், அவருக்கு இன்னொரு பெயர் - வேத ஸ்வரூபன். பெருமாளுக்குக் கண்ணாடி போல அவர் முன்பே இருப்பவர்.
பெருமாளே "உன்னைப் பார்த்தால் என்னை நானே கண்ணாடியில் பார்ப்பது போல இருக்கிறது" என்று நினைப்பாராம். அப்பேர்ப்பட்ட கருடாழ்வார் தேசிகனுக்குத் திருவஹீந்திரபுரத்தில் ‘வேதத்தின் உட்பொருளை’ அவர் ‘நெஞ்சுள் நிறுத்தினான்’ என்பது போல அவருக்கு ஸ்ரீஹயக்ரீவ மந்திரத்தை உபதேசிக்க, ஸ்ரீஹயக்ரீவரோ அவருடைய நாக்கில் தன் திருவாய் அமுதத்தை இவருக்கு ஊட்ட, பெருங்காயம் சாப்பிட்ட வாயில் பெருங்காய வாசனை வருவது போல ஹயக்ரீவர் திருவாய் அமுதத்தைப் பிரசாதித்த ஸ்ரீ தேசிகன் திருவாய்மொழியின் சாரப்பொருளை நமக்குத் தந்ததில் வியக்க ஒன்றும் இல்லை.
வேதத்தைப் படிக்கவில்லை என்றால் பரவாயில்லை. நம் ஸ்வாமி தேசிகன் எப்படி வாழ்ந்தார் என்று தெரிந்துகொண்டாலே நாம் வேதத்தைக் கற்றுக்கொண்டதற்குச் சமம் என்பார்கள் பெரியோர்கள்.
ஒரு முறை திருவரங்கத்தில் அத்வைத வித்வான்கள் ஸ்ரீராமானுஜ சித்தாந்தத்தைக் கண்டித்து வாதம் செய்து குழப்பம் ஏற்படுத்த, ஸ்ரீவைஷ்ணவப் பெரியோர்களின் வேண்டுகோளுக்கு இசைந்து, ஸ்வாமி தேசிகன் காஞ்சியிலிருந்து திருவரங்கம் வந்தார். முதலில் ’யதிராஜ சப்ததி’ இயற்றி உடையவரை வணங்கிவிட்டு எட்டு நாட்கள் இடைவிடாமல் வாதம் செய்து அவர்களை வென்றார்.
வேதாந்தத்துக்கு, அதாவது தமிழ், சமஸ்கிருதம் என்ற உபய வேதாந்தத்துக்கும் அதாரிட்டியான ஆசாரியன் இவரே என்று பெரிய பெருமாள் அவருக்கு ’வேதாந்தாச்சார்யர்’ என்ற பட்டத்தைக் கொடுத்தார். தேசிகன் என்றால் ஆசாரியன் என்று பொருள். அதுவே வேதாந்த தேசிகன் என்று இன்று நிலைத்துவிட்டது.
அஹோபில 44ஆம் பட்டம் அழகியசிங்கர் "அடைமொழியின்றி வழங்கப்படும் ’தேசிக’ என்ற சப்தம் நம் ஸ்ரீநிகமாந்த மஹாகுருவையே குறிக்கும். இப்படி இந்த ’தேசிக’ சப்தம் ஈரரசு (இரு பொருள்) படாதபடிச் செய்த பெருமை நம் ஸ்வாமி ஸ்ரீ தேசிகனுக்கே உரியதாகும்" என்கிறார்.
யதோக்தகாரி, சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோயில் அருகே மீண்டும் நம் தேசிகனுடன் சேர்த்துவிட்டார் அந்த ஆட்டோ ஓட்டுநர். அங்கிருந்து காஞ்சி வரதன் கோயிலுக்குத் தேசிகனுடன் நடக்கும் போது வழியில் வரும் பேருந்துகளிலிருந்து மக்கள் வழிவிட்டு அவர் போகும் திசையிலெல்லாம் "கோவிந்தா" என்று சொல்ல ஊரே ஸ்வாமி தேசிகனைக் கொண்டாடியதைப் பார்க்க முடிந்தது.
தேசிகனின் பல்லக்கின் கீழ் குடுமி, திருமண்ணுடன் குட்டி தேசிகன் மாதிரி அவர் நிழலில் கூடவே வந்துகொண்டு இருந்ததைப் பார்க்க வியப்பாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே
என்ற பாடல் தான் நினைவுக்கு வந்தது. ஸ்வாமி தேசிகனே திருவேங்கடத்தான் அம்சம் தானே! அந்தச் சிறுவனை வணங்கிவிட்டு "உன் பேர் என்ன?" என்றேன்.
என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு "வகுளாபரணன்" என்றான். ஸ்வாமி தேசிகனுடன் நம்மாழ்வார் துணைக்கு வருகிறார் போல என்று நினைத்துக்கொண்டேன்.
அஹோபில மடத்தைக் கடக்கும் போது 46ஆம் பட்டம் ஸ்ரீ அழகியசிங்கர் நம் தேசிகனுக்கு மங்களாசாசனம் செய்யக் காத்துக்கொண்டு இருந்தார். அவருடன் சேர்ந்து தூப்புல் ஸ்ரீ வேதாந்த தேசிகனைச் சேவிப்பது மிக இனிமையான அனுபவமாக அமைந்தது.
"சுடரொளி பரந்தன சூழ்திசையெல்லாம்" என்பது போலப் பட்டாசுகள் வெடிக்கத் தேசிகன் வரதராஜன் கோயிலுக்கு உள்ளே பிரவேசித்தார்.
முதலில் அங்கே இருக்கும் ராமர் சன்னதிக்கு எழுந்தருளி ரகுவீர கத்யம் சாதிக்க, அது உள்ளே பட்டாசு மாதிரிக் கேட்டது. ஹயக்ரீவர் அவர் நாக்கில் கொஞ்சம் அழுத்தியே எழுதிவிட்டார் என்று நினைத்துக்கொண்டேன்.
மற்ற சன்னதிகளுக்கு மங்களாசாசனம் செய்துவிட்டுப் பெருந்தேவி தாயார் சன்னதிக்குச் சென்று ஸ்ரீ ஸ்துதி சேவித்துவிட்டு வெளியே வரும் போது, தேசிகன் கிட்டத்தட்ட எல்லாவற்றுக்கும் ஸ்லோகம் எழுதியிருக்கிறார் என்று வியப்பே மிஞ்சியது.
நரசிம்மர் சன்னதியில் மங்களாசாசனம் செய்துகொண்டு இருக்கும் போது ஒருவர் என்னிடம் வந்து "யார் சாமி இது?" என்றார்.
"இவர்தான் வேதாந்த தேசிகன் - ஆசாரியன்"
"இவருக்கும் ராமானுஜருக்கும் என்ன வித்தியாசம்?"
"ராமானுஜருக்குப் பிறகு 250 ஆண்டுகள் கழித்து அவரை மாதிரியே அவதரித்தவர்" என்று அவரிடம் நம் ஸ்ரீவைஷ்ணவ குருபரம்பரை பற்றிச் சிறு நேரம் பேசிய பின், அவர் தன் மொபைலைத் திறந்து ஒரு படத்தைக் காண்பித்தார். அதில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி அளித்தார்.
"எந்தக் கோயில்?" என்றேன்.
"கோயில் இல்லை, எங்கள் வீட்டில்.. எனக்குப் பெருமாள் மீது ரொம்ப ஆசை.. பெருமாள் பெயர் எல்லாம் தெரியாது… இதை வீட்டுக்கு வாங்கிவந்துவிட்டேன்… எப்படி ஆராதனம் செய்வது என்று எல்லாம் தெரியாது"
"உங்களுக்குப் பிரேமை இருக்கு, அதனால் ஆராதனம் பற்றி எல்லாம் கவலைப்படாமல்.. பராசரபட்டர் மாதிரி செய்யுங்கள்" என்று பட்டர் செய்த ஆராதனம் என்ன என்று சொன்னேன். கூடவே ஸ்ரீவைஷ்ணவம் பற்றியும் கொஞ்ச நேரம் பேசினேன்.
"உங்களுக்கு எவ்வளவு பசங்க?" என்றேன்.
"நான் நாகர்கோவிலில் பிசினஸ் செய்கிறேன். என் பையன் LKG படிக்கிறான். அவனை டாக்டர், என்ஜினீயர் ஆக்குவதைவிட அவனுக்கு ஸ்லோகம், பிரபந்தம் எல்லாம் சொல்லித்தர வேண்டும்" என்றார். என்ன ஒரு conviction என்று வியப்பாக இருந்தது.
"உங்கள் பையனுக்கு என் ஆசிகள். அவனுக்குத் திருப்பாவை முப்பதும், கண்ணிநுண் சிறுத்தாம்பு இது இரண்டையும் சொல்லித்தந்துவிடுங்கள். இதை மனதில் விதைத்தால் மற்றவையெல்லாம் பெருமாளே பார்த்துக்கொள்வார்" என்று தட்டிக்கொடுத்துவிட்டு நகர்ந்த போது, தேசிகன் நரசிம்மருக்கு மங்களாசாசனம் செய்து முடித்து வரதனைச் சேவிக்கக் கிளம்பிக்கொண்டு இருந்தார். கூடச் சென்றேன்.
ஸ்வாமி தேசிகன் பேரருளாளன் சன்னதிக் கர்ப்பக்கிரகத்தின் உள்ளே நுழைந்து அவர் காலடியில் இருக்க, இந்த கண்கொள்ளாக் காட்சியைக் காணக் கூட்டம் அலைமோதியது. சேவித்துவிட்டு வெளியே வருபவர்கள் முகத்தில் ஆனந்தமும், உடம்பில் வேர்வையும், அவர்களை உற்று நோக்கினால் நெரிசலில் கொஞ்சம் இளைத்தும் இருந்தார்கள்.
இதற்குப் பிறகு தேசிகன் தூப்புல் கிளம்பும் வரை பெருமாளையே பார்த்துக்கொண்டு இருப்பார்.
இன்னும் இரண்டு மணி நேரம் கழித்துத்தான் புறப்பாடு என்று பேசிக்கொண்டார்கள். அதுவரை தேசிகனுடைய வைராக்கியம் பற்றிப் பார்க்கலாம்.
வைராக்கியம் என்றால் என்ன என்று கேட்டால் உடனே பதில் சொல்ல முடியாது. கொஞ்சம் யோசிப்போம். ஞான, பக்தி வைராக்கியம் என்று கேள்விப்பட்டிருப்போம்.
சுலபமாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் தாய், தந்தை, தாத்தா, பாட்டி, மாமா, நண்பர்கள் என்று எல்லோரிடத்திலும் நமக்கு அன்பு இருக்கும்; ஆனால் காதல் என்பது மனைவி (அ) காதலியிடம் மட்டுமே இருக்க முடியும்.
பெருமாளிடம் காட்டும் காதல் தான் வைராக்கியம். நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் அதனால் தான் நாயகி பாவத்தில் பெருமாளிடம் அன்பு காட்டினார்கள். ஆண்டாளுக்கு அந்தப் பிரச்சனையெல்லாம் இல்லை; அவள் பெண்ணாக இருப்பதால் added advantage! பிள்ளை உறங்காவில்லி தாஸர் அரங்கனைப் பார்த்த போது தன் காதலியிடம் வைத்த அன்பைப் பெருமாளிடம் டைவர்ட் செய்தார். பட்டரிடம் அருளிச்செயலுக்கு வியாக்கியானம் அருள வேண்டும் என்று கேட்க, அதற்கு அவர் ‘முலை உள்ள ஒருவர் தான்’ எழுத முடியும் என்றாராம். அதாவது பெருமாளைக் காதலிக்கும் ஒருவர் தான் எழுத முடியும் என்று பொருள்.
ஒரு பொருளைப் பற்றி அறிவு ஏற்பட்டால் அது ஞானம். அப்பொருளிடத்து அன்பு ஏற்பட்டால் அதுவே பக்தி. அந்தப் பொருளின் அருமை பெருமைகளை உணர்ந்து மற்ற பொருட்களின் மீது நமக்குப் பற்றற்ற தன்மை ஏற்பட்டால் அதுவே வைராக்கியம். இங்கே பொருள் என்பது பெருமாள். அது மூன்றும் பூரணமாகப் பெற்றவர் நம் ஸ்வாமி தேசிகன்.
தன் ஆயுள் முழுவதும் ஸ்வாமி தேசிகன் உஞ்சவிருத்தி செய்துதான் வாழ்க்கை நடத்தினார். அவர் சன்னியாசம் வாங்கவில்லை, ஆனால் இல்லத்துறவி! ஒரு நிகழ்ச்சியைப் பார்க்கலாம் -
அவர் வாழ்ந்த காலத்தில் செல்வந்தராகவும், வேதாந்தியாகவும் இருந்த வித்யாரண்யர், ஸ்வாமி தேசிகனின் ஏழ்மையைப் போக்கி இவரையும் செல்வந்தராக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசனைச் சந்திக்க வேண்டும் என்று ஒரு கடிதத்தை அனுப்பினார். ஸ்வாமி தேசிகன் அதற்குப் பதிலாக ‘வைராக்கிய பஞ்சகம்’ என்று ஐந்து ஸ்லோகங்கள் எழுதினார்.
அதில் ’மூதாதையர்கள் காட்டிய வரதராஜர் என்ற பேரருளாளப் பெருஞ்செல்வம் இருக்க நான் எதற்குக் கையேந்த வேண்டும்?’ என்கிறார். வைராக்கியமே இவருடைய செல்வம்!
ஸ்ரீரங்கம் கோயிலில் தேசிகன் ஏன் உள்ளேயே இருக்கிறார் என்று காஞ்சி வரதராஜப் பெருமாளிடம் கேட்க, அதற்கு அவர் ஒரு விடையைச் சொன்னார். அதை கடைசியில் சொல்கிறேன்.
இப்போது மேளம் கொட்டும் சத்தம் கேட்க, வாருங்கள் ஸ்ரீ பேரருளாளன், ஸ்ரீ வேதாந்த தேசிகனுடன் மீண்டும் பயணிக்கலாம்.
நம் வீட்டுக்கு வரும் நெருங்கிய உறவினரை நாம் வீட்டு வாசல் வரை வந்து வழியனுப்பி வைப்போம். என் அம்மா எனக்கு நாற்பது வயதானாலும் தெருக்கோடியில் திரும்பும் வரை ‘டாட்டா’ காண்பித்துக்கொண்டு இருப்பார். ஸ்ரீ பெருந்தேவி தாயார் - பேரருளாளனுடன் தேசிகனுடைய உறவு அத்தகையது.
4 நாதஸ்வரம், 5 சாக்ஸ், 6 தவில் என்று தடபுடலாக ஸ்ரீ பேரருளாளனைப் பார்த்துக்கொண்டு இஞ்ச் இஞ்சாக ஸ்வாமி தேசிகன் நகரும் காட்சி ஒரு தனி அனுபவம். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து ஸ்ரீ பெருந்தேவி தாயார் சன்னதிக்கு வெளியே வந்தவுடன் தாயார் கீழே இறங்கி தேசிகனை வழியனுப்ப வருகிறார்.
சற்று நேரத்தில் ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ பேரருளாளன் திருமஞ்சன மண்டபத்தில் வீற்றிருக்க, அவர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு ஸ்வாமி தேசிகன் தூப்புல் புறப்படுகிறார்.
பிரிய மனமில்லாமல், மிக மிக மெதுவாகப் பின்னோக்கி ஆமை போல நகர்ந்து செல்லுகிறார். அப்போது பேரருளாளன் (பெருந்தேவி தாயார் சிபாரிசாக இருக்கும்) நம் தேசிகனுக்குப் புஷ்ப வ்ருஷ்டி செய்ய, தேவப்பெருமாள் பெருந்தேவித் தாயாரிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு ஸ்வாமி ஸ்ரீ தேசிகன் தூப்புல் புறப்படுகிறார். பிரியாவிடை.
இரவு 10.30 மணிக்கு ஸ்வாமி தேசிகன் புஷ்பப் பல்லாக்கில் (தேவப்பெருமாள் ஏற்பாடு!) தூப்புல் புறப்பட, அவருடன் கொஞ்ச தூரம் பின்சென்றேன். மீண்டும் அஹோபில மடத்து வாசலில் 46ஆம் பட்டம் அழகியசிங்கருடன் மீண்டும் ஸ்வாமி தேசிகனைச் சேவித்துவிட்டுப் பதினொரு மணி பஸ்ஸில் கிளம்பினேன்.
தேவப்பெருமாள் சொன்ன ரகசியத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். ஆசாரியனுக்குக் கைமாறு செய்வது என்பது சாதாரண ஜீவனால் இல்லை, அந்தப் பரமாத்மாவாலும் முடியாது. இதை நான் சொல்லவில்லை, வேதாந்த தேசிகனே சொல்லுகிறார்.
ஆஞ்சநேயரை ஆசாரியர் ஸ்தானத்தில் வைக்கிறார் ஸ்ரீ வேதாந்த தேசிகன். ராமாயணத்தில் பெருமாள் பிராட்டியைப் பிரிந்து இருக்கும் போது ஆஞ்சநேயர்தான் இருவருக்கும் பாலமாக இருந்தார்.
ராவணனை வீழ்த்திய பின் அனுமார் சீதாபிராட்டியிடம் பெருமாள் காத்துக்கொண்டு இருக்கிறார் என்று சொன்ன போது, பிராட்டி சொன்ன வார்த்தை "உனக்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன்" என்பதுதான்.
அதற்கு அனுமார் "இதையே தான் ராமரும் சொல்லி என்னைக் கட்டியணைத்துக்கொண்டார்" என்கிறார்.
ஸ்ரீரங்கம் பெரிய பெருமாள் கண்ணன் என்றால் நம்பெருமாள் ஸ்ரீராமர்.
ஸ்ரீரங்கம் நம்பெருமாளைக் காக்க ஒரு குழு ஸ்ரீ பிள்ளை லோகாச்சாரியாருடன் செல்ல, ஸ்ரீரங்கத்தில் தங்கிச் செயல்பட்டவர்களுக்குத் தலைமை தாங்கிய சுதர்சன பட்டர் கோயிலை நோக்கி ஓடினார். பெரிய பெருமாளுக்கு முன் சுவர் எழுப்பி, தாயாரை வில்வ மரத்துக்கு அடியில் எழுந்தருளச் செய்து (புதைத்து)... அவருக்கு வயதாகிவிட்டது அதனால் என்ன செய்வது என்று தெரியாத சுதர்சன பட்டர் ஸ்ரீபாஷ்யத்திற்கு எழுதிய ‘ஸ்ருத பிரகாசிகை’ என்ற உரையையும் (நடாதூர் அம்மாள் காலட்சேபக் குறிப்புகள்), பட்டரின் இரண்டு புதல்வர்களையும் காப்பாற்றும் பொறுப்பை ஸ்ரீவேதாந்த தேசிகரிடம் ஒப்படைத்துவிட்டு மீண்டும் பண்டார சன்னதிக்குச் சென்ற போது, அங்கே 12,000 ஸ்ரீவைஷ்ணவர்கள் கொல்லப்பட்டு அந்த இடமே போர்க்களமாக, அவரும் அங்கேயே கொல்லப்பட்டுப் பரமபதித்தார்.
வேதாந்த தேசிகன் ஊரைவிட்டுக் கிளம்பும் முன் உலூக் கான் படை ஸ்ரீரங்கத்தை ஆக்கிரமித்துக்கொண்டு கோரதாண்டவம் ஆடியது. எந்த இடத்தில் தங்கினாலும் தனக்கும் குழந்தைகளுக்கும் ஆபத்து என்பதை உணர்ந்திருந்தார். அதனால் தானும் இரண்டு குழந்தைகளும் பிணக்குவியல்களுக்கு (சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் dead and the dying) நடுவே பிணமாகக் கிடந்தார்.
உலூக் கான் படை அந்த இடத்தை விட்டு அகன்ற பின்னர், சத்தியமங்கலம் வழியாக மேல்கோட்டை வந்தடைந்தார் வேதாந்த தேசிகர். கூடவே கையில் ‘ஸ்ருத பிரகாசிகை’ ஓலைச்சுவடியும், பட்டரின் இரண்டு குழந்தைகளும். இதனால்தான் ஸ்ரீபாஷ்யத்தைச் சேவிக்கும் முன் இன்றும் ஸ்ரீவேதாந்த தேசிகரின் தனியன்கள் சேவிக்கப்படுகிறது; பல அர்ச்சாரூபத் திருமேனிகளில் ஒரு கையில் இருப்பது ஸ்ரீபாஷ்யம்.
அனுமாரைப் போன்ற தேசிகனுக்கு நம்பெருமாளின் மீது இப்பேர்ப்பட்ட தாக்குதல் என்றால் அவர் மனம் எப்படிப் புண்பட்டிருக்க வேண்டும்?
திருநாராயணபுரம் என்னும் மேல்கோட்டையில் தங்கியிருந்த வேதாந்த தேசிகர், ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாளும் பிராட்டியும் பிரிக்கப்பட்டு அதனால் புண்பட்ட பரிவின் காரணமாக ‘அபீதி ஸ்தவம்’ என்னும் உயர்ந்த ஸ்தோத்திரத்தை அருளினார்.
திடபக்தியும் நம்பிக்கையுடனும் எழுதிய இந்த ஸ்லோகங்களால் எதிரிகள் அழிந்து, கோப்பணார்யன் மூலமாக நம்பெருமாள் மீண்டும் ஸ்ரீரங்கம் எழுந்தருளிய போது உற்சவங்கள் பல நின்றுபோயிருந்தன; அத்யயனோற்சவம் எனப்படும் இராப்பத்துத் திருவிழாவை நடத்தவிடாமல் இடையூறு ஏற்பட்டது. மீண்டும் ஸ்ரீநிகமாந்த மஹாதேசிகனைத் திருவரங்கத்துக்கு அழைத்து அவருடைய உதவியோடு உற்சவங்களை மீண்டும் தொடங்கினார்கள். ஸ்ரீராமானுஜர் விட்டுச் சென்ற ஸ்ரீரங்கச் செல்வத்தை மீண்டும் நிலைநிறுத்திய பெருமை நம் தேசிகனையே சாரும். ஸ்ரீராமர், சீதைக்கு ஆஞ்சநேயர் என்றால் நம்பெருமாள், தாயாருக்கு ஸ்வாமி தேசிகன் என்றால் மிகையாகாது.
ஸ்ரீரங்கம் பெரிய பெருமாள் தேசிகனை வேதாந்தாசார்ய பீடத்தில் அமர்த்தி அழகு பார்த்தார். தாயார் ஒரு படி மேலே சென்று நம் தூப்புல் சிங்கத்திற்குச் ‘சர்வ தந்திர சுவதந்திரர்’ என்ற பட்டத்தைக் கொடுத்து, ‘என்ன கைமாறு செய்யப் போகிறேன்’ (அனுமாருக்குச் சீதாபிராட்டி சொன்ன மாதிரி) என்று தன் கடாட்சத்திற்குப் பாத்திரமாக "எப்போதும் இங்கேயே இருந்துவிடும்" என்று சொல்லிவிட்டாள் என்று நினைக்கிறேன். அதனால்தான் இன்றும் தாயார் சன்னதிக்கு எதிர்புறம் இருக்கிறார்.
ஸ்ரீவைஷ்ணவத்தில் இரண்டு சிங்கங்களுக்குப் பெருமை. ஒன்று நரசிம்மம், இன்னொரு சிங்கம் ’கவிதார்க்கிக சிங்கம்’. இந்த இரண்டு சிங்கங்களும் ஒன்றாகத் தாயார் சன்னதிக்கு முன் இன்றும் ஸ்ரீரங்கச் செல்வத்தைக் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
கவிதார்க்கிக சிங்கமான தேசிகன் ஶ்ரீரங்கம் சன்னதிக்குள்ளேயே தான் இருக்கிறார் என்றெல்லாம் நாம் கவலைப்படத் தேவையில்லை. சிங்கம் குகைக்குள் தான் இருக்கும். நாம் செய்ய வேண்டியது இந்தக் கவிதார்க்கிக சிங்கத்திற்கு நம் மனம் என்னும் குகையில் எப்போதும் வசித்துக் கொண்டிருக்கும்படி செய்வதுதான். அவரை நெஞ்சில் நிறுத்திவிட்டால், அவர் நெஞ்சில் ‘கலியனுரை குடிகொண்ட கருத்துடையோன் வாழியே’ என்று திருமங்கையாழ்வார் வாசம் செய்கிறார். கலியனோ ‘கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்’ என்று நாராயணனுடன் மஹாலக்ஷ்மியோடு வாசம் செய்கிறான். இதைவிட வேறு என்ன வேண்டும்?
பிகு: காஞ்சியில் பெருமாள், தாயார் முன்பு ஸ்ரீ வேதாந்த தேசிகன் பிரியாவிடை சேவிக்க முடியவில்லை என்று வருத்தப்பட வேண்டாம். ஸ்ரீரங்கத்தில் 365 நாளும் தாயார் முன்பு தேசிகன் அதேபோலச் சேவை சாதிக்கிறார். அடுத்த முறை செல்லும் போது சேவித்துவிட்டு வரவும்.
./சுஜாதா தேசிகன்
2018ல் எழுதியது.
தூப்புல் ஸ்ரீ வேதாந்த தேசிகனே! இன்னுமொரு நூற்றாண்டிரும்!
வருடம் - 1273. காஞ்சிபுரம். ஸ்ரீ வரதராஜர் கோயில். காலை.
நடாதூர் அம்மாள் என்ற வைணவப் பெரியவர் மரப் பலகை மீது அமர்ந்து காலக்ஷேபம் செய்துகொண்டு இருந்தார். அவரைச் சுற்றி, வடக்கு திருவீதிப் பிள்ளை, சுருதபிரகாசிக பட்டர் போன்ற பெரியவர்கள் கூர்ந்து கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அந்தச் சமயம் பளிச் என்ற திருமண்ணுடன் குட்டி ராமானுஜர் போல ஐந்து வயதுக் குழந்தை, தன் மாமாவான கிடாம்பி அப்புள்ளார் கையைப் பிடித்துக்கொண்டு சிரித்த முகத்துடன் உள்ளே வர, எல்லோரும் அந்தக் குழந்தையை வியந்து, ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.
நடாதூர் அம்மாள் மெய்மறந்து “அடடா! என்ன முகப்பொலிவு! நம் ராமானுஜரே குழந்தையாக நடந்து வருவது போல இருக்கிறதே!” என்று தன் ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் “கிடாம்பி அப்புள்ளாரே! இந்தக் குழந்தை யார்?” என்று கேட்க, அப்புள்ளார் “என் சகோதரியின் மகன். என் மருமான். பெயர் ’திருவேங்கட நாதன்’” என்றார்.
உடனே அந்தக் குழந்தை நடாதூர் அம்மாளை விழுந்து சேவித்தது. அம்மாள் குழந்தையைக் கையில் எடுத்து தன் மடியில் வைத்துக்கொண்டு மீண்டும் தன் காலக்ஷேபத்தைத் தொடர ஆரம்பித்தார். ஆனால் எந்த இடத்தில் விட்டோம் என்று அவருக்கு மறந்துவிட்டது. “இந்தக் குழந்தை வந்தபோது எங்கே நிறுத்தினேன்?” என்று கேட்க, கேட்டுக்கொண்டு இருந்தவர்களுக்கும் நிறுத்திய இடம் தெரியவில்லை. அவர்களும் மறந்திருந்தார்கள்.
மடியில் இருந்த குழந்தை ”அடியேன் வரும்போது நீங்கள் நிறுத்திய இடம் இதுதானே!” என்று கடைசியாகக் கேட்ட வாக்கியத்தை மழலையில் கூற, உடனே அந்தக் குழந்தையை வியப்புடன் மார்போடு அணைத்துக்கொண்டு உச்சி முகர்ந்து, ‘நம் எம்பெருமானார் போல் நம் சம்பிரதாயத்தை நிலைநிறுத்தி, திருமழிசை ஆழ்வார் நெல்லைக் கிள்ளி சுட்டிக் காட்டியது போல இன்று காட்டிக் கொடுத்த இந்தக் குழந்தை, திருமழிசை ஆழ்வார் போல மற்ற மதங்களை நிராகரித்து வேதச் செழும் பொருள் காண்பித்த நாராயணனைத் தவிர வேறு தெய்வம் இல்லை என்று உரைத்து, அதை எல்லோரிடமும் கொண்டு செல்லப் போகிற அவதாரப் புருஷராக விளங்கப் போகிறான்!’ என்று அக்குழந்தைக்குத் தீர்க்கதரிசனத்துடன் ஆசீர்வாதமாக ஒரு ஸ்லோகத்தை அருளினார்.
“ப்ரதிஷ்டாபித வேதாந்த: ப்ரதிக்ஷிப்த பஹிர்மத:
பூயா: த்ரைவித்யமாந்ய: த்வம் பூரிகல்யாண பாஜநம்”
அம்மாள் திருவாக்கில் வந்த ஸ்லோகத்தின் பொருள்: “பிற மதங்களைக் கண்டித்து விலக்கி, நம் வேதாந்த சித்தாந்தத்தை ஸ்தாபித்து, வித்துவான்களின் பெருமதிப்பு பெற்று, சகல மங்களங்களையும் பெறுவாய்!”
ஸ்லோகம் மூலம் அருள் ஆசீர்வாதம் செய்த அம்மாள் அப்புள்ளாரை நோக்கி, “வேங்கடநாதனுக்கு அடியேனே நம் சம்பிரதாயத்தைக் கற்றுக் கொடுக்க ஆசை, ஆனால் என் முதுமை காரணமாக அப்பாக்கியம் கிட்டப் போவதில்லை! அப்புள்ளாரே! அதனால் நீரே இக்குழந்தைக்கு ஆசாரியராக இருந்து, நம் சம்பிரதாயப் பொக்கிஷங்களான வேதங்களையும், சாஸ்திரங்களையும், ஆழ்வார்களின் அருளிச்செயல்களையும், நம்மாழ்வாரின் பகவத்விஷயங்களையும், உடையவரின் ஸ்ரீபாஷ்யத்தையும், திருமந்திரம், த்வயம், சரமஸ்லோகத்தின் அர்த்த விசேஷங்களையும் பிரசாதிக்க வேண்டும். இதுவே உடையவரின் திருவுள்ளத்துக்கு உகப்பாக இருக்கும்!” என்றார்.
“தங்கள் அனுகிரஹித்தபடியே எல்லாப் பெருமைகளையும் பெறுவான் என்பதில் ஐயம் இல்லை!” என்று அப்புள்ளார் கூறியபோது, கோயிலில் மணி ஓசை கேட்டது. அம்மாள் திருவாக்கைப் பேரருளாளனும் சேர்ந்து ஆமோதிப்பது போல இருந்த அச்சமயம், அம்மாள் குழந்தையின் கையைப் பிடித்து அப்புள்ளாரிடம் கொடுக்க, அப்புள்ளாரும் குழந்தையும் அம்மாளை வணங்கிவிட்டு பேரருளாளனைத் தரிசிக்கக் கிளம்பினார்கள்.
அந்தக் குழந்தைதான் பின்னாளில் ஸ்ரீ வேதாந்த தேசிகன் என்று போற்றப்பட்ட அவதாரப் புருஷர்!
ஆங்கிலத்தில் அதிகமாக உபயோகப்படுத்தும் எழுத்து 'E' என்று 'frequency distribution' வைத்துக் கண்டுபிடிப்பார்கள். 'E' எழுத்துக்கு 12.7%. இந்த E எழுத்தைப் பற்றி இன்னொரு தகவல்: 'Georges Perec' என்றவர் 1969-ல், La Disparition (A Void) என்னும் 200 பக்கம் கொண்ட நாவலை பிரெஞ்சு மொழியில் எழுதினார். அதில் பிரெஞ்சு எழுத்து 'e' கிடையாது. இன்னொரு அதிசயம் இருக்கிறது. Gilbert Adair என்பவர் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அதிலும் ஆங்கில எழுத்து 'e' கிடையாது.
’E’ இல்லாமல் ஒரு நாவலை எழுதிவிடலாம், ஆனால் ஸ்வாமி தேசிகன் பற்றிச் சொல்லாமல் ஓர் உபன்யாசம், காலட்சேபம் செய்வது என்பது நினைத்துக் கூடப் பார்க்க முடியாதது.
நாளை ஸ்ரீமந்நிகமாந்த மஹாதேசிகன் திருநட்சத்திரம்.
,/சுஜாதா தேசிகன்