கழகத்திற்காக தனது இன்னுயிரை நீத்த
சகோதரர் தஞ்சை KAS.மகேந்திரன் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கும் விதமாக மேலூர் நகர் அஇஅதிமுக சார்பில் நகர் கழக செயலாளர் திரு.S.M.சரவணக்குமார் அவர்களின் தலைமையில் மேலூர் பேருந்து நிலையம் முன்பாக மலர் தூவி அஞ்சலி செலுத்திய பொழுது…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தகைசால் தமிழர், அய்யா இரா.நல்லகண்ணு அவர்கள் காலமானார்...
அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்...
ஆழ்ந்த இரங்கல்
#RIPNallakannu || #AIADMK
தமிழகஅரசின் 2026-27ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை ஏழை, எளிய, சாமானிய மக்களுக்கு எந்தவிதத்திலும் பயனளிக்காத சம்பிரதாய விளம்பர அறிக்கை.
திமுகவினர் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது 505 வாக்குறுதிகளை அளித்து மக்களை நம்பவைத்து ஏமாற்றி ஆட்சியைப் பிடித்தனர். திமுகஅரசு 5 வருடங்களை கழித்த நிலையில் 10% வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்றவில்லை. இதுவரை தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கைகளில் சொன்ன திட்டங்கள் எதுவும் இன்னமும் நிறைவேற்றப்படாமல் வெற்று அறிவிப்புகளாகவே காகிதத்தில் மட்டும் இருக்கிறது.
இதுவரை 41 புதிய அரசுதொழிற்பயிற்சி நிலையங்கள் அமைத்திட ரூ298 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது நிதி நிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்தெந்த இடங்களில் தொழிற்பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டது என்ற எந்த விபரமும் இல்லை. தமிழக மக்கள்தான் இதை கண்டுபிடித்து கொடுக்கவேண்டும்.
ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகளாக பலவித கம்பிகட்டும் கதைகளை அவிழ்த்துவிட்ட திமுகஅரசு ஆட்சியே முடிந்த நிலையில் போகிற போக்கில் புதிதாக கப்பல் கட்டும் கதையையும் சொல்லியிருக்கிறது.
ஒருங்கிணைந்த நீர்வள மேம்பாட்டு திட்டம் என்று பக்கம் பக்கமாக அறிவித்து என்ன பயன்?டெல்டா மாவட்டங்களில் வடிநீர் கால்வாய்கள் முறையாக தூர்வாராமல் இருப்பதால் இரண்டு நாட்கள் மழை பெய்தாலே பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகள் கடும் நஷ்டம் அடைகின்றனர். மழைநீரை சேகரிப்பது, தடுப்பணைகள் கட்டுவது போன்ற நீர்மேலாண்மை திட்டங்கள் எதுவுமே நிறைவேற்றவில்லை.
கடந்த 5 ஆண்டுகளில் ரூ6,121 கோடி மதிப்பீட்டில் 12,087 புதிய பேருந்துகள் வாங்க நிதி ஒதுக்கியதாக நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எத்தனை புதிய பேருந்துகள் வாங்கப்பட்டன? எங்கு நிறுத்தி வைத்துள்ளீர்கள்? தமிழக சாலைகளில் பராமரிப்பு இல்லாத பழைய பேருந்துகளும், படிக்கட்டுகள் உடைந்த, இருக்கைகள் கழண்டு கீழே விழும் பேருந்துகளும்தான் பயன்பாட்டில் உள்ளன. நீங்கள் அறிவித்துள்ள 12,087புதிய பேருந்துகள் எங்கே இருக்கிறது என்று மக்களும் காண ஆவலோடு இருக்கிறார்கள்.
திமுகஆட்சி வந்தது முதல் வேளாண்துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை போட்டு எந்த பயனும் இல்லை. டெல்டா மாவட்டங்களில் அரசு நெல்கொள்முதல் நிலையங்கள் முறையாக இயங்காமல் விவசாயிகள் பரிதவிக்கின்றனர். நெல்மூட்டைகளை பாதுகாப்பாக வைக்கபோதுமான கிடங்குகள் இல்லை. நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணானது. ரத்தத்தை வியர்வையாக சிந்தி கடுமையாக உழைத்த விவசாயிகள் திமுக ஆட்சி எப்போது முடியும் என்று காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
தமிழகமக்கள் பயனடையும் வகையில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கொண்டுவந்த அனைத்து மக்கள் நலத்திட்டங்களையும் நிறுத்திவிட்டு, மக்களை ஏமாற்றியது தான் திமுகஅரசின் 5 ஆண்டு சாதனை. 2026-27ஆம் ஆண்டில் திமுகஅரசு ரூ1.78 லட்சம் கோடி அளவிற்கு மொத்தக் கடன் பெற திட்டமிட்டுள்ளது. திமுக பொறுப்பேற்றபோது தமிழக அரசின் கடன் ரூ4.56 லட்சம் கோடியாக இருந்தது, இதுவரை யாரும் செய்யாத வரலாற்று சாதனையாக 5 ஆண்டுகளில் ரூ6.15 லட்சம் கோடி கடன் பெற்று, இன்றைக்கு தமிழகத்தின் மொத்த கடன்சுமை ரூ10.71 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் பொதுத்துறை நிறுவனங்களின் கடன்சுமை 2லட்சம் கோடியையும் சேர்த்தால் சுமார் 13 லட்சம் கோடிக்கு மேல் மொத்த கடன்சுமையை தமிழகத்தின் தலையில் வைத்துவிட்டு, திமுக வீட்டுக்கு செல்ல இருக்கிறது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் தலையிலும் 1.26 லட்சத்திற்கு மேல் கடன் சுமையை வைத்ததுதான் திராவிட மாடல் திமுகஅரசின் வரலாற்று சாதனை! நாட்டிலேயே அதிக கடன்சுமை கொண்ட முதல் மாநிலமாக தமிழகத்தை உருவாக்கியது தான் திமுக அரசின் சாதனையாகவும் விளங்குகிறது.
அம்மா ஆட்சியில்2016-17 ஆம் ஆண்டின் இறுதியில் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.15 ஆயிரம் கோடியாக இருந்தது. ஆனால் இன்றைக்கு திமுகஆட்சியில் 2026-27ஆம் நிதியாண்டின் வருவாய் பற்றாக்குறை ரூ.48 ஆயிரம் கோடியாக உள்ளது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அனைத்து மக்கள் நலத்திட்டங்களையும் ஒன்றுவிடாமல் செயல்படுத்திக்கொண்டு, தனது நிர்வாகதிறமையால் வருவாய் பற்றாக்குறையையும் அதிகரித்துவிடாமல் கட்டுப்படுத்தி வைத்திருந்தார்கள். ஆனால் இன்றைய திமுகஅரசு மக்களுக்கு எந்தவித திட்டங்களையும் செயல்படுத்தாமல், வருவாய் பற்றாக்குறையை மூன்று மடங்காக அதிகரித்து வைத்திருப்பது திமுக அரசின் நிர்வாகத்திறமையின்மையை காட்டுகிறது.
எனவே, இந்த திமுக விளம்பர ஆட்சி என்றைக்கு வீட்டுக்கு அனுப்பப்படுகிறதோ அன்றுதான் தமிழகம் வளர்ச்சியடையும். இதனை நிறைவேற்ற தமிழகமக்களும் தயாராக இருக்கிறார்கள். வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான இந்த மன்னராட்சிக்கு தக்க பாடம் புகட்ட மக்கள் தீர்மானித்துவிட்டார்கள் என்பதை இந்நேரத்தில் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுக தலைமையிலான அரசு மகளிருக்கு ரூ.5000 வழங்கியிருப்பது மக்களை ஏமாற்றுகின்ற ஒரு மாய்மாலவித்தை தானேதவிர வேறொன்றும்இல்லை. தமிழகத்தில் திமுக பொறுப்பேற்றது முதல்தமிழக மக்களை கசக்கி பிழிந்து பல்வேறுஇன்னல்களுக்கு ஆளாக்கிவிட்டு தற்போது தேர்தலில் தோற்றுவிடுவோம் என்பதை அறிந்து மக்களை எப்படியாவது ஏமாற்றிவிடலாம் என இதுபோன்றநடவடிக்கைகளில் திமுகவினர் இறங்கியுள்ளனர். தமிழக மக்கள் மிகவும் புத்திசாலிகள்,இதற்கெல்லாம் ஏமாறமாட்டார்கள். மக்களை குறைத்து எடைபோட்டால் கடைசியில்ஏமாறப்போவது திமுகவினர்தான் என்பதைஇந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்
தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள ஒருதிட்டத்தை யாரோ முடக்கப்பார்க்கிறார்கள் என்று ஒரு கற்பனைகதையினை கட்டிவிட்டு மூன்று மாதத்திற்கான உதவித்தொகையை வழங்குவதாக சொல்வது மிகவும் வேடிக்கையாகஇருக்கிறது. மேலும், கோடைக்காலத்திற்கு உதவித்தொகை என்ற பெயரில் ரூ2000 கொடுத்த்துள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தது முதல் தமிழ்நாட்டில்கோடைக்காலமே வரவில்லையா? ஏதோஇந்தவருடம் மட்டும்தான் கோடைகாலம் வருவதுபோன்று ஒரு வேஷத்தை போட்டு மக்களைஏமாற்ற திமுக நினைக்கிறது. மேலும், திமுகமீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் மகளிருக்கு மாதம்ரூ2000 தரப்போவதாக சொல்வதும் தேர்தலை மனதில்வைத்துதானே தவிர வேறொன்றும் இல்லை.
திமுகவினர் கடந்த தேர்தலில்505 வாக்குறுதிகளைகொடுத்து, அதில் 10 சதவீதம்கூட நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிவிட்டு தற்போது மீண்டும்வாக்குறுதிகளை அளித்தால்மக்கள் அதனை படித்துக்கூட பார்க்கமாட்டார்கள் என்ற உண்மையைஅறிந்தவுடன் பணத்தைகொடுத்தால் மக்கள்எல்லாவற்றையும் மறந்துவிடுவார்கள் என்றுதிமுகவினர் தப்புக்கணக்கு போடுகிறார்கள். ஆனால் ஏமாறப்போவது மக்கள்இல்லை திமுகவினர்தான் என்பதைதெரிவித்துக் கொள்கிறேன்.
திமுகவினர் கடந்த தேர்தலின் போதுஅனைத்துமகளிருக்கும் ரூ1000 தருவதாகதேர்தல் அறிக்கையில் சொல்லிவிட்டு, ஆட்சிக்குவந்து 28 மாதங்கள் கழித்து 1 கோடிபெண்களுக்குமட்டும் கொடுத்து,மற்றவர்களுக்கு தகுதியில்லை என்று நிராகரித்தனர். மேலும் கோடைகாலநிதி என்று அறிவித்து இருக்கிறார்கள். மழை வெள்ளத்தால் தமிழகமக்கள் தங்கள்வீடு, உடைமைகளை இழந்து, வயிற்றுக்கு சோறுகிடைக்காமல், குடிதண்ணீர் கூடகிடைக்காமல் தவித்து நின்றநேரத்தில் கண்டும்காணாமல் இருந்த திமுகஅரசு, விவசாயபெருங்குடி மக்கள் மழை வெள்ளத்தின்போதுகடுமையாக பாதிப்படைந்து நிவாரணஉதவி கிடைக்காமல் பரிதவித்து நின்றபோதுஏறெடுத்தும் பார்க்காத திமுக அரசு தற்போது கோடைகால நிதிஎன்ற பெயரில் மக்களை ஏமாற்ற நினைப்பதுவன்மையாக கண்டிக்கத்தக்கது.
திமுகவினர் செய்தது என்ன? அம்மாஆட்சியில் கொண்டு வந்த அனைத்து மக்கள்நலத்திட்டங்களையும் நிறுத்தியதுதான் மிச்சம். தமிழகத்தில் இன்றைக்கு பாதுகாப்பு என்பதுயாருக்கும் இல்லை. குறிப்பாக பெண்கள் யாருமேவெளியில் நடமாடக்கூட முடியவில்லை. தமிழகத்தில் போதை கலாச்சாரத்தை கொண்டுவந்து அதில் தெரியாமல் மாட்டிக்கொண்டஎண்ணற்ற நம் பிள்ளைகளின் வாழ்வைசீரழித்ததுதான் திமுகவினர் செய்த சாதனை. அதுமட்டுமல்ல தமிழ்நாட்டின்பொருளாதாரம் இன்றைக்கு படுபாதாளத்தில்கிடக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தபோது 5.18 லட்சம் கோடியாக இருந்த தமிழகத்தின் கடன்சுமையை இன்றைக்கு இரு மடங்காக 10 லட்சம் கோடிக்கு கொண்டு வந்து சேர்த்தபெருமை திமுகவை சேரும். மேலும் அனைத்துபொதுத்துறை நிறுவனங்களின் கடன்தொகை5.50 லட்சம் கோடியாக உள்ளது. இதன் மூலம்தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரின் பெயரிலும்ரூ1.95 லட்சம் கடன் உள்ளது. இந்தியாவிலேயே அதிக கடன் உள்ளமுதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை ஆக்கியதுதான் திமுக தலைமையிலான திராவிட மாடல்அரசின் ஒரே சாதனை. தமிழகத்தில் உள்ள நிதிநிலைமையைப் பற்றி நன்றாக அறிந்தபோதும், பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றிவிடலாம் என்றுதிமுகவினர் நினைக்கிறார்கள்.
ஆவின் பால்பொருட்களின்விலை உயர்வு, மின்கட்டண உயர்வு, சொத்துவரிஉயர்வு என பல்வேறு வழிகளில் வரிகளாகவும், அபராதமாகவும் தமிழக மக்களிடமிருந்து திமுகவினர் லட்சக்கணக்கான ரூபாய்களை கொள்ளைஅடித்துவிட்டு தற்போது ரூ5000மட்டும்கொடுத்து ஏமாற்றப்பார்க்கிறார்கள். இது ஏழைஎளியசாமானிய மக்களிடமிருந்துபெற்ற பணம் தானே தவிர, திமுகவினரின் கட்சிநிதியிலிருந்து ஒன்றும் கொடுக்கப்படவில்லை. தமிழக மக்களாகியஉங்களிடமிருந்து வலுக்கட்டாயமாக அபகரித்தஉங்களுடைய பணத்திலிருந்து ஒருசதவிகிதத்தை மட்டும் தற்போது திமுகவினர் கொடுத்துஉங்களை ஏமாற்றத் துடிக்கிறார்கள். ஏமாற்ற நினைப்பவர்கள் ஏமாந்து போவார்கள் என்பதற்கேற்ப, திமுகபோன்ற ஏமாற்று பேர்வழிகளை வீட்டுக்கு அனுப்பமக்கள் ஏற்கனவே தயாராகிவிட்டனர். எனவே, வரும் சட்டமன்றதேர்தலில் மக்கள்பணத்தைகொள்ளையடிக்கும் திமுகதலைமையிலானகொடுங்கோல் ஆட்சிக்கு தமிழக மக்கள் தக்கபாடம் புகட்டுவார்கள் என்பதை இந்நேரத்தில்தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று 10.02.2026 கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் மாண்புமிகு சின்னம்மா அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றேன்...
@AmmavinVazhi#AIADMK || #Chinnamma || #MelurYasin
இன்று 10.02.2026 பிறந்த நாள் காணும்
மாண்புமிகு சின்னம்மா அவர்களின் சகோதரர், கல்வி காவலர், முனைவர், அப்பா திருமிகு. வி.திவாகரன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்…
#AIADMK || #Chinnamma || #MelurYasin
அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் திரு.சே.பசும்பொன் பாண்டியன் அவர்களின் தாயார் திருமதி.சே.முத்துச்சரம் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
தனது தாயை இழந்து வாடும் அன்பு சகோதரர் திரு.சே.பசும்பொன் பாண்டியன் அவர்களுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
இந்திய நாட்டின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றாக விளங்கும் பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகளை ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு இந்திய அரசு வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில் 2026-ஆம் ஆண்டுக்கான விருது பெற உள்ளவர்களின் பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பத்ம பூஷண் விருதுக்கு தேர்வாகியுள்ள தமிழகத்தை சேர்ந்த புகழ்பெற்ற இரைப்பை குடலியல் நிபுணரான மருத்துவர் திரு.கள்ளிப்பட்டி இராமசாமி பழனிசாமி அவர்களுக்கும், சமூக சேவைக்காக ஈரோடு தொழிலதிபர் எஸ்.கே.எம்.மயிலானந்தன் அவர்களுக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், பத்ம பூஷண் விருதுக்கு தேர்வாகியுள்ள டென்னிஸ் ஜாம்பவான் திரு.விஜய் அமிர்தராஜ் அவர்களுக்கும், மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டாரான திரு.மம்மூட்டி அவர்களுக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோன்று, பத்ம ஸ்ரீ விருதுகளுக்கு தேர்வாகியுள்ள தமிழகத்தை சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி திரு.கே.விஜயகுமார் அவர்களுக்கும், இலக்கியம் மற்றும் கல்வித் துறையில் மிகச் சிறந்த எழுத்தாளராக விளங்கும் அன்பு சகோதரி திருமதி.சிவசங்கரி அவர்களுக்கும், அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவில் சிறந்து விளங்கும் திரு.கே.ராமசாமி அவர்களுக்கும், முன்னாள் அமைச்சர் திரு.எச்.வி.ஹண்டே அவர்ளுக்கும், கலைத்துறையில் சாதித்த கர்நாடக இசை பாடகிகள் காயத்ரி பாலசுப்ரமணியம் மற்றும் ரஞ்சனி பாலசுப்ரமணியம் அவர்களுக்கும், கலைப்பிரிவில் ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன் அவர்களுக்கும், மருத்துவத்துறை பிரிவில் கால்நடை மருத்துவர் திரு.புண்ணியமூர்த்தி நடேசன் அவர்களுக்கும், சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்த ஐம்பொன் சிலை சிற்ப கலைஞரான ராஜாஸ்தபதி திரு.காளியப்ப கவுண்டர் அவர்களுக்கும், புகழ்பெற்ற மிருதங்க வித்வான் திருவாரூர் திரு.பக்தவத்சலம் அவர்களுக்கும், சென்னை ஐஐடி இயக்குநர் திரு.வீ.காமகோடி அவர்களுக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், கோத்தகிரி ஆலு குறும்பர் பழங்குடியினத்தை சேர்ந்த ஓவியர் மறைந்த திரு.கிருஷ்ணன் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், புதுச்சேரியைச் சேர்ந்த சிலம்பக் கலைஞர் திரு.கே.பழனிவேல் அவர்களுக்கும், கடந்த 2024ஆம் ஆண்டில் டி20 உலகக் கோப்பை மற்றும் 2025ஆம் ஆண்டில் சாம்பியன்ஸ் கோப்பை ஆகிய இரு ஐசிசி கோப்பைகளை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் திரு.ரோகித் சர்மா அவர்களுக்கும், கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த மகளிர் உலக கோப்பை ஒருநாள் தொடரில் முதல் முறையாக இந்திய அணிக்கு உலக கோப்பை வென்று தந்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அவர்களுக்கும், நடிகர் திரு.மாதவன் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய நாட்டின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றாக விளங்கும் பத்ம பூஷண் மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகளுக்கு தேர்வாகியுள்ள தமிழகத்தை சேர்ந்த 14 நபர்களுக்கும் அவரது குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது உளப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
மேலும், இந்தியாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியதன் மூலம், பத்ம விருதுகளுக்கு தேர்வாகியுள்ள 19பெண்களை உள்ளடக்கிய 131 நபர்களுக்கும், அவரது குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம்
நமது தாய் மொழியாம் தமிழ் மொழிக்காக தங்கள் இன்னுயிரை நீத்த, மொழிப்போர் தியாகிகளின் நினைவுதினத்தில் அவர்களின் தன்னலமற்ற தியாகங்களை நினைவு கூர்ந்து, வீர வணக்கம் செலுத்திடுவோம்.
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசால் திணிக்கப்பட்ட இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து, 1965 ஜனவரி 25ஆம் நாள் தமிழகத்தில் தொடங்கப்பட்ட போராட்டம் உலகம் காணாத ஒரு மாபெரும் புரட்சியாகும். "இந்தி திணிப்பை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" என்று வீர முழக்கமிட்டு, விஷம் அருந்தியும், தூக்கிட்டும், துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாகியும் உயிர் நீத்த மாணவர்களின் நினைவைப் போற்றும் வகையில், நம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடத்தி தியாகிகளின் பெருமைகளையும், நம் தமிழ் மொழியின் சிறப்புகளையும் தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் கொண்டு சேர்த்துள்ளதை இந்நேரத்தில் பெருமையோடு எண்ணிப்பார்க்கிறேன்.
அறிஞர் அண்ணாவின் வழியில், புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் வழியில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தஞ்சையில் 1995-ஆம் ஆண்டு 8-வது உலக தமிழ் மாநாடு நடத்தி நம் தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்ததையும் இந்நாளில் நினைவுகூற விரும்புகிறேன்.
அன்னைத் தமிழுக்காக உயிர்த் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் நினைவை போற்றிடும் வகையில், நம் கழகத் தொண்டர்கள், குறிப்பாக மாணவச் செல்வங்கள் அனைவரும், தியாக செம்மல்களுக்கு வீர வணக்கம் செலுத்தி, தமிழ் மொழியின் சிறப்புகளை மென்மேலும் உயர்த்திட உறுதியேற்றிடுவோம்.
கழக மூத்த முன்னோடியும், கழக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு.வைத்திலிங்கம் அவர்களின் இந்த முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது. அவர் தாய் கழகம் என்று நினைத்து கொண்டு ஒரு தீய கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார். இதனை அவரோடு இத்தனை காலம் உடன்பயணித்தவர்கள், ஏன் அவரது தொகுதியை சார்ந்த பொதுமக்கள் கூட இந்த முடிவைஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆனால் இந்த நிலைமைகளுக்கெல்லாம் காரணம் ஒன்றே ஒன்றுதான். அது ஒரு சிலரின் சுயநலத்தால் நடப்பதே தவிர வேறொன்றுமில்லை.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பேரியக்கம் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, புரட்சித்தலைவி அம்மா அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட மாபெரும் ஒரு பேரியக்கம். இது ஏழை, எளிய, சாமானிய மக்களுக்காகவே உருவான இயக்கம். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் “இன்னும் 100ஆண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும்” என்று சூளுரைத்தார்கள். ஆனால், இன்றைக்குதங்களை தாங்களே தலைவர்களாக அறிவித்துக்கொண்டவர்கள் இயக்கத்தை காப்பாற்ற முடியாமல் தோல்வியடைந்துஇருப்பதைத்தான் இது காட்டுகிறது. இன்றைக்கு யாராக இருந்தாலும் கட்சியை வளர்ப்பதை விட்டுவிட்டு, அழிக்கின்ற செயல்களில் ஈடுபடுவது மன்னிக்க முடியாத செயலாகும். இது போன்ற கட்சிக்கு பாதகமான நடவடிக்கைகள் மூலம் திமுகவினரின் ஆசைதான் நிறைவேறியிருப்பதாக தெரிகிறது. இதைத்தான் திமுகவினர் அனுதினமும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள். கழகத்தை அழிக்க துடிக்கும் திமுகவினரின் எண்ணத்திற்கு வலு சேர்த்திடும் வகையில் நம் கழகத்தினரே செயல்படுவது மிகவும் வேதனையாக இருக்கிறது. இது போன்ற செயல்கள் நுனிக்கிளையில் அமர்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டுவது போன்றது. இது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற ஆலமரத்திற்கு கேடாக அமைந்து விடும்.
அம்மா அவர்களது ஆட்சி காலங்களில் மாற்றுக் கட்சிகளில் இருப்பவர்கள் தான் நம்மை தேடி வந்து இருக்கிறார்கள். அவர்களையும் இணைத்துக்கொண்டு நாம் பயணித்து வெற்றிகளை பெற்று இருக்கிறோம். ஆனால் இன்றைக்கு அதற்கு நேர்மாறாக நடப்பது ஏன் என்று அனைவரும் சிந்தித்து பார்க்கவேண்டும். நம் கட்சியின் சார்பாக போட்டியிட்டு வென்ற சட்டமன்ற உறுப்பினர்களே தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மாற்றுக்கட்சிகளுக்கு செல்கின்ற ஒரு அவல நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் காலங்களில் திமுகவினரின் சித்து விளையாட்டுகள், முயற்சிகள் அனைத்தையும் முறியடித்து இந்த கட்சி அழிந்துவிடாமல் பல்வேறு சந்தர்ப்பங்களில் போராடி காப்பாற்றியிருக்கிறோம். ஆனால் இன்றைக்கு நடக்கின்றவைகளை பார்க்கும்பொழுது நம் இருபெரும் தலைவர்கள் இந்த கட்சிக்காக பட்ட துன்பங்கள் தான் நினைவிற்கு வருகிறது.
இன்றைக்கு யார் யாரோடு வேண்டுமானாலும் சேர்ந்து தங்களது நிலைப்பாட்டினை மாற்றிக்கொள்ளலாம். ஆனால் எனது நிலைப்பாடு ஒரே நிலைப்பாடுதான். எனது இறுதி மூச்சு உள்ளவரை தீயசக்தி திமுகவை எதிர்ப்பது. இந்த மக்கள் விரோத மன்னர் ஆட்சியை தமிழகத்திலிருந்து அகற்றுவது தவிர வேறொன்றுமில்லை. எனது வாழ்நாள் முழுவதும்தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும் தொடர்ந்து பாடுபடுவேன், ஓய்ந்துவிடமாட்டேன் என்பதை இந்நேரத்தில் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
புரட்சித்தலைவர் அவர்கள் திமுக ஒரு தீயசக்தி என்பதை மக்களிடத்தில் தோலுரித்து காட்டிய அதே கொள்கைப்பிடிப்பினையும், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் சுயமரியாதையினையும் தொடர்ந்து கடைபிடித்து வரும் நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மக்கள் விரோத ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப புதிய வியூகங்களை வகுத்துக்கொண்டு இருக்கிறேன். புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களும், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் பயணிக்கின்ற சிங்கங்கள் அனைவரும் வாருங்கள், ஒன்றிணைந்து களம் காண்போம், வென்று காட்டுவோம்,
வரலாறு படைப்போம்.
நாளை நமதே!
வெற்றி நிச்சயம்!
பேரறிஞர் அண்ணா நாமம் வாழ்க!
புரட்சித்தலைவர் நாமம் வாழ்க!
புரட்சித்தலைவி அம்மா நாமம் வாழ்க!
நன்றி,
வணக்கம்.
செங்கல்பட்டு மாவட்டம்,கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலை ஆகியவற்றுக்கு இடையே நெம்மேலியில் புதிய நீர்த்தேக்கம் அமைப்பதற்காக திமுக தலைமையிலான அரசு திட்டமிட்டு இருப்பதன் மூலம் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியிருக்கிறது. இதனைபல்வேறு கடல்வாழ் உயிரினங்களை அழிக்கக்கூடிய வகையில் முற்றிலும் இயற்கைக்கு மாறான செயலாகத்தான் பார்க்கமுடியும். திமுக தலைமையிலான அரசு வரும் சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து வெற்று விளம்பரத்திற்காக அவசரக்கோலத்தில் அறிவித்துள்ள இத்திட்டத்தால் மக்களுக்கு எந்தவித பயனும் கிடைக்கப்போவதில்லை. மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ள இந்த புதிய நீர்த்தேக்க திட்டத்தினை உடனே கைவிட வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த புதிய நீர்த்தேக்க திட்டத்தை நெம்மேலியில் முட்டுக்காடு முகத்துவாரத்தில் இருந்து மாமல்லபுரம் வரை 5,161 ஏக்கர் பரப்பளவில் ரூ.342.6 கோடி மதிப்பீட்டில்அமைக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிதான் சென்னையின் புறநகர் பகுதியில் எஞ்சியுள்ள ஒரே உவர்நீர் ஈரநிலமாக இருந்து வரும் நிலையில் ஏராளமான உயிரினங்களின் வாழ்வாதாரத்திற்கும் இன்றியமையாததாக விளங்குகிறது. பழைய மாமல்லபுரம் சாலையின்மேற்கு பகுதியில் 500 கிராமங்களில் உள்ள பல்வேறு ஏரிகளிலிருந்து வெளியேறும் மழைநீர் பக்கிங்காம் கால்வாய் வழியாகத்தான் கடலில் கலக்கிறது. இதன் காரணமாக இங்கு மீன், இறால், நண்டு, கிளிஞ்சல்கள் இயற்கையாகவே வளர்கின்றன. எனவே, இது இயற்கையாக அமைந்துள்ள தனித்த சூழல் தன்மைகளைக் கொண்ட ஒரு உப்பங்கழி, கழுவேலி நீர்நிலையாக அமைந்துவிட்டது. இதனை அழித்து புதிதாக நீர்த்தேக்கம் உருவாக்குவது என்பது ஒரு அறிவியல்பூர்வமான நடவடிக்கையாகாது.
மேலும், இதுபோன்ற உப்புநீர் சூழ்ந்த பகுதிகள் மற்றும் பக்கிங்காம் கால்வாய் ஆகியவற்றை மாற்றி அமைப்பதால் மீன்களின் இனப்பெருக்கம் பாதிப்படையும் அபாயம் உள்ளது.
மாமல்லபுரம் முதல் கானத்தூர், ரெட்டிக்குப்பம் பகுதி வரை 18 மீனவ கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மீனவர்கள் மழை, புயல், வெள்ளம் காலங்களில் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாத போது, இந்த உபவடி நிலப்பரப்பில் தான் இறால், நண்டு மற்றும் மீன் ஆகியவற்றை பிடித்து தங்களது வாழ்வாதாரத்தை காப்பாற்றி வருகின்றனர்.
எனவே, இப்பகுதியை சேர்ந்த மீனவர் அமைப்புகள் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் அவர்களது நியாயமான கோரிக்கைகளை புறந்தள்ளிவிட்டு இன்றைக்கு தமிழக முதல்வர் இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.
நடைமுறைக்கு ஒத்துவராத இந்த திட்டத்திற்கு 15 நாட்களில் அரசு அவசர அவசரமாக அனுமதி வழங்கியிருப்பது பல்வேறு சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது. எல்லாவற்றிற்கு மேலாக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடியஇந்த திட்டத்தை திமுக தலைமையிலான அரசு உடனே கைவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
அன்புக்குரிய தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டின் கலாச்சார சின்னமாக விளங்கும் ஜல்லிக்கட்டு, ஒவ்வொரு ஆண்டும் நமது பழமை, பாரம்பரியம், கலாச்சாரம் ஆகியவற்றை பாதுகாத்திடும் வகையில்,தொடர்ந்து நடைபெற்று வருவதை நாம் அனைவரும் அறிவோம். இவ்வாறு பழமை மாறாமல் நாம் தொன்றுதொட்டு கடைபிடித்துவந்த மரபுகளை அழித்திடும் வகையில் தற்போது திமுக தலைமையிலான அரசு மதுரையில் நடந்து வரும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு மைதானத்தில் விளம்பர பதாகைகளை வைத்து மாடுபிடி வீரர்களின் பாதுகாப்பினை கேள்விக்குறியாக்கியிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.
தமிழகத்தின் கலாச்சாரத்தோடு தொடர்புடைய ஜல்லிக்கட்டை வெறும் ஒரு விளையாட்டாக மட்டும் பார்க்கமுடியாது. ஈராயிரம் ஆண்டுகளைக் கடந்தும் இன்றைக்கும் தமிழர்கள் வாழ்வில் ஒரு அங்கமாக இருக்கிறது. இது தமிழர்களின் வீரத்திற்கு அடையாளமாக விளங்கக்கூடியது. ஜல்லிக்கட்டு காளைகளை தங்களுடைய பிள்ளைகளாக வளர்த்து பாதுகாப்பது தமிழக விவசாயிகளின் வாழ்வியல் முறையாக இருந்து வருகிறது. ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பவர்கள், காளைகளை தங்கள் பிள்ளைகளைப்போன்று அன்புடன் நேசித்து, பராமரித்து வருகின்றனர். ஜல்லிக்கட்டு காளைகள் வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்து, மாடுபிடி வீரர்களின் கைகளில் சிக்காமல் வீரமாக நின்று விளையாடும் அழகை யாராலும் மறக்க முடியாது. இத்தகைய சிறப்புவாய்ந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் எல்லாம் மரக்கம்புகளை கொண்டு வாடிவாசல் அமைப்பதும், மைதானத்தை சுற்றி மரக்கம்புகளால் ஆன வேலிகளை அமைப்பதையும் பார்த்து இருக்கிறோம்.
ஆனால், தற்போது மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் வாடி வாசல் அருகிலேயே அமைக்கப்பட்டுள்ளகம்பி வேலிகளின் மீது திமுக அரசு அதிகமான விளம்பர பதாகைகளை வைத்துள்ளதால் மாடுபிடி வீரர்களுக்கு பெரிய அளவில் இடையூறும், பாதுகாப்பு இல்லாத ஒரு அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஒரு சில முரட்டு காளைகள் சீறி வரும்போது மாடுபிடி வீரர்கள் அங்குள்ள கம்பி வேலிகளை பிடித்துதான் மேலே ஏறி தங்களை பாதுகாத்து கொள்வார்கள். ஆனால் கம்பிவேலி முழுவதும் அரசின் விளம்பர பதாகைகள் ஆக்கிரமித்து இருப்பதால் தற்போது கம்பிகளை பிடிக்க வழியில்லாமல் மாடுபிடி வீரர்கள் தவிப்பதை பார்க்கவே மிகவும் வேதனையாக இருக்கிறது. இளைஞர்களின் உயிரை விட இந்த அரசுக்கு விளம்பரம்தான் முக்கியமாக உள்ளதா? இவற்றையெல்லாம் மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர், திமுகவைச் சேர்ந்த அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் அங்கேயே உட்கார்ந்து பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். ஏற்கனவே மாடுபிடி வீரர்கள் அணிகின்ற டி-ஷர்ட் முழுவதும் உங்கள் விளம்பரம்தான் உள்ளது. தற்போது அது போதாது என்று விளம்பர பதாகைகளையும் வைத்து அவர்களை ஏன் இவ்வாறு துன்பப்படுத்துகிறீர்கள். மாடுபிடி வீரர்களின் பாதுகாப்பிற்கு ஏதேனும் குந்தகம் ஏற்பட்டால் திமுக தலைமையிலான அரசுதான் முழுப்பொறுப்பேற்க வேண்டும். நம் இளைஞர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய ஒரு அரசே இவ்வாறு நடந்து கொள்வது மிகவும் கண்டனத்திற்குரியது.
எனவே, இளைஞர்களின் பாதுகாப்பினை உறுதிசெய்திடும் வகையில் வாடிவாசல் அருகில் உள்ள அனைத்து விளம்பர பதாகைகளையும் உடனே அகற்றவேண்டும். அதேபோன்று தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் அனைத்து இடங்களிலும் மாடுபிடி வீரர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் உள்ள விளம்பர பதாகைகளை உடனே அகற்றவேண்டும். வெற்று விளம்பரத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல் இளைஞர்களின் பாதுகாப்பினை உறுதிசெய்திட வேண்டும் என திமுக தலைமையிலான அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுவதாக கூறியதிமுக புதிதாக ஒரு ஓய்வூதிய திட்டத்தை அறிவித்திருப்பது ஒரு கண் துடைப்பு நாடகம்.
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்த திமுக தலைமையிலான அரசு தற்போது புதிதாக ஒரு ஓய்வூதிய திட்டத்தை அறிவித்து இருப்பது தமிழக மக்களை வழக்கமாக ஏமாற்றுகின்ற மற்றொரு நாடகமாகத்தான் பார்க்கமுடிகிறது. திமுகவினர் கடந்த 2021 தேர்தல் அறிக்கையில் வரிசை எண் 309ல் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவருவதாக தெரிவித்து ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட 56 மாதங்களை முடித்துவிட்ட நிலையில், ஆட்சியை விட்டு இறங்க இன்னும் 4 மாதங்களே உள்ள சூழலில், அரசு ஊழியர்களை ஏமாற்றும் விதமாக ‘உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்’ என்ற ஒரு புதிய திட்டத்தை அறிவித்திருப்பது வருகின்ற தேர்தலை மனதில் வைத்து அரசு ஊழியர்களை மீண்டும் ஏமாற்றும் செயல்தானே தவிர வேறொன்றும் இல்லை.
திமுக தற்போது அறிவித்துள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தை எப்பொழுது செயல்படுத்த போகிறது என்ற எந்த விவரமும் இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக திமுக இந்த திட்டத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவதாக அறிவித்துள்ளது என்று ஆராய்ந்து பார்த்தால் இதிலும் அரசு ஊழியர்களுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சுகிறது. அதாவது புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட பங்களிப்புகொண்ட ஓய்வூதிய திட்டத்தில் (CPS) மாதாந்திர சம்பளத்தில் 10% பிடித்தம் செய்து, அரசும் 10% செலுத்தி இதற்கான வட்டி 8% எல்லாம் சேர்த்து மொத்த தொகையையும் ஊழியர்கள் திரும்ப பெற முடியும். தமிழகத்தில் இதுவரை நடைமுறையில் இருந்த CPS என்ற ஓய்வூதிய திட்டத்தில் ஒரு ஊழியர் பணி ஓய்வு பெறும் போது கிடைக்கப்பெறும் தொகையை விட குறைவான பலனைத்தான் தற்போது கொண்டு வந்துள்ள இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் பெற முடியும் என்ற நிலைக்கு அரசு ஊழியர்கள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, அரசு ஊழியர்களுக்கு திமுக தற்போது அறிவித்துள்ள ஓய்வூதிய திட்டமானது ஒரு ஏமாற்று திட்டம் தான் என்பது நிரூபணம் ஆகிறது.
திமுக தலைமையிலான அரசின் பித்தலாட்டத்தை அரசு ஊழியர்கள் நன்றாக புரிந்து கொள்ளவேண்டும். அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்த பழைய ஓய்வூதிய திட்டத்தின்படி ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து மாதாமாதம் எந்த பிடித்தமும் செய்வதில்லை. ஆனால் இன்றைக்கு திமுக அறிவித்துள்ள இந்த புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து மாதாமாதம் 10% பிடித்தம் செய்யப்படுவதோடு அதை திருப்பி ஊழியர்களுக்கு தரப்படுவதில்லை. மொத்தத்தில் ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்து அதைத்தான் அவர்களுக்கு ஓய்வூதியமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, அரசு ஊழியர்களின் சட்டை பையிலிருந்து அவர்களின் பணத்தை எடுத்து, அவர்களுக்கே ஓய்வூதியமாக திருப்பி வழங்கும் திட்டம் தான் தற்போது திமுக கொண்டுவந்துள்ள இந்த புதிய ஓய்வூதிய திட்டம். இதைத்தான் திமுகவினர் விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்வதில் கைதேர்ந்தவர்கள் என்று நாங்கள் தொடர்ந்து சொல்லி வருகிறோம்.
மேலும், திமுக தலைமையிலான அரசு இத்திட்டத்தை செயல்படுத்துவதால் முதலாம் ஆண்டு ரூபாய் 13 ஆயிரம் கோடி என்றும், வருடாவருடம் ரூபாய் 11 ஆயிரம் கோடி அளவுக்கு அரசுக்கு செலவு ஏற்படுவதாக அறிவித்து இருப்பதன் மூலம் ஒரு பச்சைப்பொய்யை சொல்லியிருக்கிறது. உண்மையில் கணக்கு பார்த்தால் ரூபாய் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் கோடிக்கு மேல் செலவு ஏற்படாது என்றே தெரியவருகிறது. எனவே, இவ்வாறு அறிவித்து இருப்பதால் இதன் உள்நோக்கம் என்னவென்று திமுகவினருக்கே வெளிச்சம்.
எனவே, திமுகவினர், அரசு ஊழியர்களை ஏமாற்றுவதை விட்டுவிட்டு அவர்களுக்கு உண்மையாக இருங்கள். அவர்களின் நலனில் அக்கறை செலுத்தக்கூடிய திட்டங்களை கொண்டு வாருங்கள். அரசு ஊழியர்களுக்கு நலன் பயக்கக்கூடிய ஆட்சி என்றால் அது புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சியாகத்தான் இருக்கமுடியும் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், அரசு ஊழியர்கள் திமுகவினரின் சூழ்ச்சிக்கு இரையாகிவிடாமல் விழிப்புடன் இருந்து, வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
ஆங்கிலேயர்களின் அடக்குமுறைகளுக்கு அடிபணியாமல் துணிவுடன் எதிர்த்துப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரரான வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் வீர வரலாற்றை போற்றி வணங்கிடுவோம்.
தமிழ்நாட்டின் பாஞ்சாலங்குறிச்சி எனும் ஒரு சிறிய பாளையத்தை ஆண்ட பாளையக்காரரான வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள் ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்ட மறுத்து துணிச்சலுடன் அவர்களை எதிர்த்து நின்று போராடிய மாவீரர்.
ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட கயத்தாறில், அவர்களது நினைவை போற்றும் விதமாக, புரட்சித்தலைவி அம்மா அவர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களுக்கு மணிமண்டபம் அமைத்துள்ளதையும் இந்நாளில் நினைவுகூற விரும்புகிறேன் .
தென்னிந்தியாவின் தலைசிறந்த விடுதலை போராட்ட வீரர்களில் ஒருவரான வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் வீர வரலாற்றை நம் வருங்கால சந்ததியினர் அறிந்திடும் வகையில் அவர்தம் பிறந்தநாளைப் போற்றி நினைவில் கொள்வோம்.
தஞ்சையில் உள்ள தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் இணையதளத்திலிருந்துபொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பெயரையும், படத்தையும் நீக்கியிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. திமுக தலைமையிலான அரசின் ஆணவப்போக்கிற்கும், அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கும் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழுக்கென்று தனி பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும் என்று கரந்தையில் உள்ள தமிழ் சங்கத்தால் கடந்த 1918-ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின்னர் 1981-ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து அன்றைக்கு தமிழக முதல்வராக இருந்த பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் தஞ்சையில் தமிழ்ப்பல்கலைக்கழகத்தை திறப்பதாக அறிவித்து,பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 15-ஆம் தேதி 1981-ஆம் ஆண்டு தமிழ் பல்கலைக்கழகம் தஞ்சையில் நிறுவப்பட்டது.
அதேபோன்று, 1977 - 1988 காலக்கட்டத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் தலைமையிலான அரசு அண்ணா பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், மகளிருக்கென்று தனியாக அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் போன்ற உயர்ந்த பல்கலைக்கழகங்களை உருவாக்கியதையும் யாராலும் மறைத்துவிட முடியாது. இந்த பல்கலைக்கழகங்களிலிருந்து வெளிவந்த எத்தனையோ அறிஞர்கள், சாதனையாளரகள் இன்றைக்கும் வியத்தகு சாதனைகளை நிகழ்த்தி கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணமாக விளங்கிய புரட்சித்தலைவர் அவர்களின் பெயரையும், படத்தையும் திமுகவினர் நீக்கிவிட்டால் மக்களிடம் இருந்து புரட்சித்தலைவரை பிரித்துவிடலாம் என்று கனவு காண்கின்றனர். ஆனால், திமுகவினரின் கனவு என்றைக்கும் பலிக்காது. பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் அவர்கள் தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரின் உள்ளங்களிலும் நிறைந்து இருக்கிறார். இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் கள்ளமில்லா முகம் அனைவரது நினைவிலும் நீங்காமல் இருக்கும். திமுகவினர் என்னதான் தில்லுமுல்லுகளை அரங்கேற்றினாலும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்து இப்பூவுலகில் ஒலித்துக்கொண்டேதான் இருக்கும் என்பதை இந்நேரத்தில் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் மொழிக்கு தாங்கள் ஒருவர் மட்டும்தான் பாதுகாவலர் என்று நாள்தோறும் தம்பட்டம் அடிக்கும் திமுகவினர் தமிழ் மொழிக்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும் இதுவரை எதையும் செய்ததில்லை. மேலும், தாங்கள் இம்மண்ணின் மைந்தர்கள் என்று பெருமை பேசுகின்ற திமுகவினருக்கு, தஞ்சையில் உள்ள தமிழ்ப்பல்கலைக்கழகத்தை உருவாக்கியதே புரட்சித்தலைவர்தான் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல், பொறாமையாலும், காழ்ப்புணர்ச்சியினாலும் புரட்சித்தலைவரின் பெயரையும், படத்தையும் பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து நீக்கியிருப்பது மிகவும் சிறுபிள்ளைத்தனமான செயல் ஆகும்.
எனவே, தஞ்சையில் உள்ள தமிழ்ப்பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து திமுக தலைமையிலான விளம்பர அரசால் நீக்கப்பட்ட புரட்சித்தலைவரின் பெயரையும், படத்தையும் மீண்டும் அதில் இடம்பெற செய்யவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.