மேடைப் பேச்சு ஒரு பக்கம், நிஜக் கொடுமைகள் மறுபக்கம் பெண்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்குபவர்களைக் கூடவே வைத்துக் கொண்டு பேசுவது நியாயமா முதல்வர் அவர்களே? மாற்றத்தை உங்கள் கட்சியிலிருந்து தொடங்குங்கள், அதன் பின் மக்களுக்குப் பேசுங்கள்!
#TVKFails
காவல்துறையைத் தன் சொந்த பஜனைப் பாடகர்களாக மாற்றிய CM சார்!
அரசு விழாவில், காவல்துறையின் வாத்தியக் குழுவை வைத்து தன்னுடைய சினிமா படப் பாடல்களை வாசிக்கச் செய்து ரசிக்கிறார் முதலமைச்சர் விஜய்.
மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசு இயந்திரத்தையும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையையும் தனது தனிப்பட்ட பில்டப்புக்காகப் பயன்படுத்துவது தான் மக்கள் கேட்ட மாற்றமா?
நிர்வாகத்தை சீர்படுத்துவதை விட்டுவிட்டு, இன்னும் சினிமா உலகத்திலேயே மிதந்துகொண்டிருக்கும் இந்த டம்மி முதலமைச்சரால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் மற்ற மாநிலங்கள் முன் தலைகுனிகிறது.
உங்களின் சொந்த புகழ்ச்சிக்காக காவல்துறையை இப்படித் தரம் தாழ்த்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இனியாவது திருந்துங்கள் CM சார்!
பெண்ணுரிமைக்காகத் தன் வாழ்நாளெல்லாம் குரல் கொடுத்த தந்தை பெரியாரின் கனவுகளைச் சட்டமாக்கி, தமிழ் சமூகத்தில் பெண்களின் மதிப்பை உயர்த்தியவர் நம் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர்!
சொத்துரிமை முதல் 30 சதவீத இடஒதுக்கீடு வரை, எண்ணற்ற திட்டங்களால் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றிய சரித்திர நாயகனின் 103-வது பிறந்தநாளில், அவர் வழியில் நின்று தொடர்ந்து உழைக்க நாம் உறுதியேற்போம்.
#KalaignarForever
மாநில உரிமைகள், மாநில வளர்ச்சி என திராவிட நாயகர் செய்தது எல்லாம் வரலாற்றுச் சம்பவங்கள். மறுபுறம் கருணையுள்ளம் கொண்ட தாயுமானவராக தமிழ்நாட்டு மக்களைக் காத்தவர்!
#DMK4TN
பாலியல் வன்முறை, கொள்ளையடிப்பவர்கள், பண மோசடி செய்பவர்களைத் தவெக நிர்வாகிகளாக நியமித்திருக்கும் நீங்க தூய சக்தி இல்ல நாற சக்திதான் sofa model முதல்வரே!
#TVKFails
காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் 'டம்மி' முதலமைச்சர் விஜய் அவர்களே..
மக்களைக் காக்க வேண்டிய உங்களின் ஒரு தலைமை காவலரே, ஒரு சிறுவனுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கும் அளவுக்குத் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறதே!
சொந்தத் துறையிலேயே உள்ள காமக் கொடூரன்களிடம் இருந்து சிறுவர்களைக் காப்பாற்ற வக்கில்லாத நீங்கள், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் எப்படிப் பாதுகாப்பு கொடுக்கப் போகிறீர்கள்?
#TVKFails
உடன்பிறப்புகளே 🙏🏾
சோபா மாடல் ஆட்சியில் தமிழ்நாடு மிக மோசமான சூழ்நிலையை எதிர்கொண்டு வருகிறது. தினந்தோறும் சீரழிந்து வரும் சட்டம் ஒழுங்கு நிலைமையை மக்களிடமிருந்து மறைக்கவே TVK மற்றும் அதன் ஆன்லைன் மாஃபியா மக்களின் கவனத்தை வேறு பிரச்சினைகளுக்கு திசை திருப்ப முயற்சி செய்கின்றனர்.
எந்தவொரு திசை திருப்பலுக்கும் ஆளாக வேண்டாம்.
துயரசக்தியின் அலங்கோல ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை எதிர்த்து குரல் கொடுப்பதிலும், தமிழ்நாட்டை பாதுகாப்பதிலும் மட்டுமே முழு கவனம் செலுத்துவோம்! Stay focused!
மாற்றம் மாற்றம் என்று மேடை போட்டுப் பேசிய தவெக, இன்று ஆட்சியைக் காப்பாற்றுவதற்காகத் தரங்கெட்ட 'குதிரை பேர' அரசியலில் இறங்கியிருப்பது வெட்கக்கேடானது.
பெரும்பான்மை இல்லாத நிலையில், திமுக கூட்டணித் தலைவர்களிடம் ஆதரவு கேட்டு, பின் சட்டசபைக்குள் பணத்தை வாரி இறைத்து அதிமுக மற்றும் அமமுக உறுப்பினர்களை விலை பேசுவதுதான் உங்கள் 'தூய சக்தி' அரசியலா CM சார்?
இதற்கு மக்கள் கொடுக்கப்போகும் தண்டனையை மட்டும் பொறுத்திருந்து பாருங்கள்!
#TVKFails
விளாத்திகுளத்தில் 12ம் வகுப்பு மாணவி பாலியல் வன்முறை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திமுக அரசு துரிதமாக செயல்பட்டு விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் வாதாட சிறப்பு அரசு வழக்கறிஞரை நியமித்தது. அதன் விளைவாக குற்றம் நடந்து 76 நாட்களில் குற்றவாளிக்கு மரண தண்டனை பெற்று
இந்த வழக்கையும், விரைவான விசாரணை நடத்தும் விதத்தையும் தவெகக அரசு பாடமாக எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டும்.
#TVKFails
இந்த விஜய் தப்பு செய்ய மாட்டான்; யாரையும் தப்பு செய்ய விட மாட்டான் என வீர வசனம் பேசிய முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்களே உங்க கட்சி நிர்வாகிகள் செங்கல் சூளை உரிமையாளர்களை மிரட்டி மாமூல் கேட்ட விவகாரத்தில் காவல்துறையை நடவடிக்கை எடுக்க விடாமல் தடுக்கும் நீங்கள் என்ன சக்தி?
#TVKFails
#BREAKING | திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, இலங்கை நாடாளுமன்றத்தில் பாராட்டு - திராவிட மாடல் அரசின் திட்டங்களை பாராட்டிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீம்!
#MKStalin | #Srilanka | #Kalaignarseithigal
சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து, 234 தொகுதிகளுக்கும் சென்று கள ஆய்வு செய்ய 38 பேர் கொண்ட குழுவினரை நியமித்திருந்தேன்.
இன்று அவர்களுடனான சந்திப்பில் இந்த ஆய்வை எப்படி மேற்கொள்வது என, சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறேன்.
• நீங்கள் ஒவ்வொருவரும் தலைமைக் கழகத்தின் பிரதிநிதிகளாக, எனது சார்பில் அனுப்பி வைக்கப்படுபவர்கள். எனது காதுகளாகச் செல்பவர்கள்.
• தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்றி, கட்சிக்காரர்கள் சொல்லும் உண்மையை அப்படியே வந்து என்னிடம் சொல்வது மட்டுமே உங்கள் வேலை.
• நீங்கள் யாரையும் காப்பாற்றவும் முயற்சி செய்ய வேண்டாம். யாரையும் பழிவாங்கவும் எண்ணக் கூடாது.
• இரண்டு பேர் கொண்ட குழுவாகத்தான் யாரையும் சந்திக்க வேண்டும். ஒருவர் மட்டும் தனியாகச் சந்திக்க கூடாது.
• கழகத்தினரை மனதுவிட்டுப் பேச அனுமதியுங்கள். அவர்களின் குறைகளை, தேர்தல் முடிவுகளுக்கான காரணங்களை அவர்கள் கொட்டித் தீர்க்கட்டும்.
• தலைவரான என் மேலேயே குறை சொன்னாலும் பரவாயில்லை. அதைக் குறித்து வைத்து உங்களது அறிக்கையில் வழங்குங்கள்.
• நிர்வாகிகளின் உணர்வு என்ன? அவர்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள்? அது மட்டும்தான் எனக்குத் தேவை.
• டாக்டரிடம் பொய் சொல்லக் கூடாது என்பார்கள். இப்போது நானும் அந்த இடத்தில்தான் இருக்கிறேன். என்னிடம் எதையும் மறைக்காதீர்கள்.
• நோய் என்னவென்று தெளிவாகத் தெரிந்தால்தான் அதற்கு மருந்து கொடுக்க முடியும்.
• கழகத்தினர் உங்களிடம் சொல்லும் தகவல்களை வேறு யாரிடமும் பகிர்ந்துகொள்ளக் கூடாது. குறிப்பாக, சம்பந்தப்பட்ட நபர்களிடம் சொல்லக் கூடாது.
• அப்படி செய்தால் இந்த ஆய்வின் நோக்கமே வீணாகிவிடும்.
• பிரச்சினைகளைச் சரிசெய்து, நம்மை மாற்றிக் கொண்டால்தான் அடுத்த 100 ஆண்டுகளுக்கு உயிர்ப்போடு இயங்க முடியும்.
• நீங்கள் தரும் அறிக்கையின் அடிப்படையில்தான் கழகத்தில் மாற்றங்கள், சீர்திருத்தங்களைச் செய்யப் போகிறேன்.
• அதனால் scan report போல துல்லியமாக இது இருக்க வேண்டும்.
• ஜூன் 5-க்குள் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, இதன் மீதான நடவடிக்கைகளை ஜூன் மாத இறுதிக்குள் முடித்திட வேண்டும்.
• உடன்பிறப்புகளின் உண்மையான உணர்வினை அறிந்து வந்து சொல்லுங்கள்!