விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில், கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்!
கொங்கு மண்டலத்தின் தொழில் & பொருளாதார வளர்ச்சிக்கு, கோவை விமான நிலைய விரிவாக்கம் மிகவும் அத்தியாவசியமானதாகும். 2011 முதல் நமது கழக (அதிமுக) ஆட்சிக்காலத்தில் சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்தபோது, இத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல அனைத்து நடவடிக்கைகளும் விரைவாக மேற்கொள்ளப்பட்டன. நில உரிமையாளர்களுக்கு நியாயமான, மிகச்சிறந்த இழப்பீட்டுத் தொகையை உறுதி செய்து, ₹2,081 கோடிக்கும் அதிகமான நிதியை அரசாணைகள் மூலம் பெற்றுத் தந்து, 627 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணியை வெற்றிகரமாக சாத்தியமாக்கியது நமது கழக அரசே ஆகும்.
ஆனால், தற்போது அமைக்கப்படும் விமான நிலைய நுழைவுச் சாலைச் சுவரால் சின்னியம்பாளையம், இருகூர், ஆர்.ஜி.புதூர் பகுதி விவசாயிகளின் நிலங்களுக்குச் செல்லும் ஒரே வழியான 20 மீட்டர் உள்ளூர் சாலை மூடப்பட்டு, வீடுகளும் விவசாய நிலங்களும் தனிமைப்படுத்தப்படும் அபாயச் சூழல் உருவாகியுள்ளது.
வளர்ச்சியும் வேண்டும், அதே வேளையில் விமான நிலையத்திற்காக நிலம் கொடுத்த விவசாயிகளின் வாழ்வாதாரமும் காக்கப்பட வேண்டும். தற்போதைய த.வெ.க. அரசின், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த விவகாரத்தில் உடனடியாக, நேரடியாகத் தலையிட்டு அப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்படாதவண்ணம் நடவடிக்கை எடுத்து, இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இதற்காக அரசு செய்ய வேண்டியவை:
1) நுழைவுச் சாலையின் இருபுறமும் 10 மீட்டர் சேவைச் சாலை (Service Road) அமைத்து விவசாயிகளின் போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும்.
2) வழித்தடத்தை உறுதி செய்ய முடியாத இடங்களில், எஞ்சிய நிலங்களை தற்போதைய நியாயமான சந்தை விலைக்கே, அரசே கையகப்படுத்த வேண்டும்.
3)தமிழக அரசும், இந்திய விமான நிலைய ஆணையமும் (AAI) உடனடியாக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இப்பிரச்சினையை விரைவாகத் தீர்க்க வேண்டும்.
இத்திட்டத்தை தடையின்றி செயல்படுத்தவும், விவசாயிகளைக் காக்கவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து விமான நிலைய விரிவாக்கப் பணிகளைத் தொய்வின்றி விரைந்து முடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ@AAI_Official
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், கழகப் பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர் அண்ணன் திரு. #எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க,
#கோவை மாவட்டம், #தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதி, சுகுணாபுரம் கிழக்குப் பகுதியில் மாண்புமிகு மாநிலங்களவை உறுப்பினர் திரு. மு.தம்பிதுரை அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து புதியதாகக் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை கட்டிடத்தைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தேன்.
உடன், 92A டிவிஷன் கழகச் செயலாளர் திரு. ஏ.செல்லப்பன், பகுதிக் கழகச் செயலாளர் திரு. மதனகோபால் மற்றும் கழக நிர்வாகிகள்.
@EPSTamilNadu@AIADMKOfficial@ADMK_Kovai #Coimbatore #AIADMK #அஇஅதிமுக
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா மற்றும் மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோரின் நல்லாசியுடன் நடைபெற்ற எனது மகன் V.விஜய் விகாஷ் - C.T.தீக்க்ஷனா இணையரின் திருமணத்திற்கும்,
#கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற, திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய,
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், கழகப் பொதுச்செயலாளர், முன்னாள் முதல்வர், புரட்சித்தமிழர், அண்ணன் திரு. #எடப்பாடியார் அவர்களுக்கும், மேதகு முன்னாள், இந்நாள் ஆளுநர்கள், முன்னாள் அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள், மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்வேறு கட்சிகளின் மாநில தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள், கழகத்தின் அனைத்து நிலை நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள், அனைத்து மதங்களின் ஆன்மிகப் பெரியோர்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் எனது அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
@EPSTamilNadu@AIADMKOfficial@AIADMKITWINGOFL@ADMK_Kovai #AIADMK #Coimbatore #அஇஅதிமுக