சில பாடல்கள் இருக்கும். அவை படத்திற்கு முன்னரோ அல்லது படத்தோடு பார்த்துவிட்டு, படம் முடிவு தெரிந்த பின்னால், அந்தப் பாட்டை மீண்டும் பார்க்கும் போதோ கேட்கும் போதோ ஒரு haunting மனநிலையை கொடுக்கும்.
இளையராஜா இசையில் கண்ணதாசன் எழுதிய இந்த பாடல், படம் பார்க்கும் முன் வானொலியில் கேட்கும் பொழுது,
ச���ர்க்கம் எப்போதுமே நம் கையிலே அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே
என்னும் வரிகளை அசால்டாக கடந்துவிட்டேன். சினிமா புரியும் வயதில் இந்த படத்தை பார்த்துவிட்டு, அடுத்த முறை இந்தப் பாடலை கேட்கும் போதோ பார்க்கும்போது ஒரு இனம் புரியாத கலக்கம் மனதை பிசையும்.
https://t.co/ky1hhD0YCb
முழு மகாபாரதத்தை ஒரு படமாக எடுப்பது கடினம். பல பாகங்கள் தேவைப்படும். ஆனால் ஒவ்வொரு கேரக்டரை சுற்றியும் விதவிதமாக தனிப்படங்கள் எடுக்கலாம். சிவாஜி கணேசன் நடித்த கர்ணன், என் டி ஆர், எஸ் வி ரங்காராவ் நடித்த மாயா பஜார் என தமிழிலும் தெலுங்கிலும் சொல்லிக் கொண்டே போகலாம்
கமல்ஹாசனின் விஸ்வரூபம் படம் கூட விராடபர்வம் பாகத்தை இன்ஸ்பிரேஷன் ஆகக் கொண்டது.
மாயாபஜார் படத்தில் அபிமன்யுவின் காதலை சேர்க்க அனைவரும் செய்யும் முயற்சி என்னும் பகுதி மட்டும். அந்தப் படம் நன்கு ஓடியது.
வீர அபிமன்யு திரைப்படம் கர்ணன் போல முழுக்க முழுக்க அபிமன்யுவின் வாழ்வை முழுமையாக எடுத்த படம்.
இப்போது வீர அபிமன்யு டிஜிட்டல் ரீஸ்டோர் செய்யப்பட்டு யூடியூப் தளத்தில் வெளியாகி உள்ளது.
https://t.co/ezemTKzYEA
பாரதிராஜா அவர்களுக்கு டைரக்சன் கற்றுக் கொடுத்த குரு திரு புட்டண்ணா கனகல் இயக்கிய படம். ஒரு நாவலை அடிப்படையாக கொண்டது. இந்தப் படத்தில் பாரதிராஜா அசோசியேட் இயக்குனர்.
ஒன்று போல் இருக்கும் உறவுப் பெண்கள், தங்கள் சிக்கல்கள் தீருவதற்காக இடமாற்றம் செய்து கொள்கிறா��்கள். அதனால் ஏற்படும் விளைவுகள் சுவராசியமாக சொல்லப்பட்டிருக்கும்.
அந்தக் கால பிரபல குணச்சித்திர நடிகர்களான எஸ் வி ரங்காராவ், எஸ் வி ��ுப்பையா, சித்தூர் நாகையா ஆகியோருடன் நாயகர்களாக முத்துராமன் ஏவிஎம் ராஜன் நடித்திருந்தார்கள். போதாக்குறைக்கு நாகேஷூம்.
இந்த படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோரும் பிரமாதமானவர்கள். பராசக்தி அந்த நாள் அன்பே வா போன்ற படங்களை ஒளிப்பதிவு செய்த மாருதி ராவ் ஒளிப்பதிவு, கே. வி மகாதேவன் அவர்கள் இசை.
Digital restore செய்யப்பட்டு 5.1 ஒலி தரத்தில் யூ டியூபில் வெளியாகியுள்ளது.
https://t.co/3Gt39tuNlI
All those who used fake videos to incite hate & violence must be dealt with as per the law.
But this doesn’t absolve those who’re openly calling for violence against #Hindi speaking people in #TN
Why no action against likes of @SeemanOfficial for their vitriolic utterances?