ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் திராவிட மாடல் நல்லாட்சியின் நாயகருக்கு வாழ்த்துக்கள்
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை
தமிழ்நாட்டில் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் நல்லாட்சி ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைப்பதில் அளப்பரிய மகிழ்ச்சி.
ஒட்டுமொத்த இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாகத் தமிழ்நாட்டை முன்னிறுத்துவதில் பெரு முனைப்புக் காட்டி வருகிறார்.
மகளிருக்கு உரிமை தொகை, பேருந்தில் இலவச பயணம், கல்வித்துறையில் தமிழ்நாட்டை இந்திய அளவில் இரண���டாம் இடத்திற்கு உயர்த்தியது, மக்களைத் தேடி மருத்துவம், மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம், தொழில் துறை முதலீட்டில் உகந்த சூழலைத் தமிழ்நாட்டிற்கு உருவாக்கித் தந்தது, நாட்டின் ஏற்றுமதி தயார் நிலை குறியீட்டில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) பங்களிப்பில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தை பிடித்திருப்பது உள்ளிட்ட கணக்கில் அடங்காத சாதனைகளைப் படைத்திருக்கிறார்.
பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையினர் பட்டியல் இன மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்தி விடுகிறார்.
மக்கள் விரோத ஆட்சி நடத்தி வரும் ஒன்றிய பாஜக அரசின் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்து வருபவர். இந்த நான்கு ஆண்டுகளும் இவர் கடந்து வந்த பாதை கரடு முரடானது. ஆனாலும் தமிழ் மீதும் தமிழ்நாட்டு மக்க��் மீதும் கொண்ட அக்கறையின் காரணமாகச் சீரோடும் சிறப்போடும் நல்லாட்சியை நல்கிக் கொண்டிருக்கும் நல்லிணக்க நாயகர்
மு க ஸ்டாலின் அவர்களுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு.
எம். எச். ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
#MKStalinGovt #MKStalin
#DravidaModel
@CMOTamilnadu
பாஜக விற்கு அளிக்கும் வாக்கு தமிழ்நாட்டிற்கு வைக்கும் வேட்டு.!
வாக்களிப்பீர் INDIA கூட்டணி கட்சிகளின் சின்னங்களுக்கு.
#Vote4INDIA#INDIAAlliance#DMKAllaince
தேர்தல் வந்தால் மாதத்திற்கு நான்கு முறை தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு எந்த நிதியும் தருவதில்லை.! ஆனால் பூட்டானுக்கு மட்டும் 10 ஆயிரம் கோடி நிதி உதவி.!
தமிழ்நாட்டில் வரிப்பணத்தில் ஒரு ரூபாய்க்கு 29 பைசா மட்டுமே கொடுக்கும் மோடி
#29PaisaModi#mmkitwing
தேர்தல் வந்தால் மாதத்திற்கு நான்கு முறை தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு எந்த நிதியும் தருவதில்லை.! ஆனால் ���ூட்டானுக்கு மட்டும் 10 ஆயிரம் கோடி நிதி உதவி.!
தமிழ்நாட்டில் வரிப்பணத்தில் ஒரு ரூபாய்க்கு 29 பைசா மட்டுமே கொடுக்கும் மோடி
#29PaisaModi
#mmkitwing
மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. @jawahirullah_MH, பொதுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான திரு. பி.அப்துல் சமது மற்றும் நிர்வாகிகள் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 10 இலட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
#CycloneMichaung
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்களை மனிதநேய மக்க���் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு.@jawahirullah_MH, பொதுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான திரு.பி.அப்துல் சமது மற்றும் நிர்வாகிகள் சந்தித்து
1/2
#CMMKSTALIN | #TNDIPR | #CycloneMichaung |
ஒன்றிய பாஜக அரசு தனது ஒட்டுமொத்தப் படு தோல்விகளை மறைக்கின்ற படுதாவாக மகளிர் இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்துவது மிக வெளிப்படையாகவே தெரிகிறது .
மகளிர் முன்னேற்றத்தின் மீது ஒன்றிய பாஜக அரசுக்கு உண்மைய���கவே அக்கறை இருந்திருக்குமேயானால் ஆட்சியின் அந்திமக் காலம் வரை காத்திருந்திருக்காது.
2010ல் ஐக்கிய முற்போக்கு��் கூட்டணி முன்மொழிந்த இந்த மசோதாவிற்கு பாஜக அன்றே ஆதரவு தெரிவித்திருந்தால் இந்த மசோதா அப்போதே நிறைவேறியிருக்கும்.
நரேந்திரமோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பின்
>நாட்டின் அமைதியைக் குலைத்து வேளாண் குடிகளை வேரோடு சாய்க்கும் மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது.
>இஸ்லாம் மார்க்கமே 1400 ஆண்டுகளுக்கு முன் தடை செய்து விட்ட முத்தலாக்கை தானே தடைச் சட்டம் இய��்றித் தடுத்தது போல நாடகமாடியது.
> காஷ்மீரின் சிறப்புத் தகுதியை உறுதிப்படுத்தும் அரசியல் சாசனப் பிரிவு 370 ஐ ரத்து செய்து காஷ்மீரை மூன்றாகக் கூறு போட்டு வெறியாட்டம் நடத்தியது. அதனால் ராணுவத்தினர் உட்பட ஏராள மனித உயிர்கள் பலியாகக் காரணமாக இருந்தது.
> குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியாவையே கொந்தளிக்க வைத்தது.
இவ்வாறு வேண்டாத சட்டங்களால் ��ாட்டில் வேதனை அலைகளை உருவாக்கிய ஒன்றிய பாஜக அரசு அப்போதெல்லாம் ஏன் மகளிர் இட ஒதுக்கீடு குறித்து மருந்துக்கும் பேசவில்லை?
இப்போது இந்தியா கூட்டணி பாஜகவின் வயிற்றில் புளியைக் கரைத்து வரும் வேளையில் மகளிர் இட ஒதுக்கீடு என்ற முக்காட்டைப் போர்த்திக் கொண்டு தனது மூர்க்கத்தனங்களை மறைக்க முயல்கிறது.
மானுடத்தின் சரிபாதியான மகளிருக்கு இடஒதுக்கீடு மிகவும் அவசியமானது.
அதே நேரம��� மகளிர் இட ஒதுக்கீட்டிலும் சமூகநீதி பேணப்பட வேண்டும்.
ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை இனங்களைச் சார்ந்த மகளிருக்கு அதில் உள் ஒதுக்கீடு கண்டிப்பாக இருந்திட வேண்டும். இல்லையேல் சமூகநீதி அர்த்தமிழந்து போகும்.
தொகுதி மறுவரைக்குப் பிறகே மகளிர் இடஒதுக்கீடு நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொகுதி மறுவரை என்ற பெயரில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள��ல் உள்ள தொகுதிகள் குறைக்கப்படுவதையும் வடமாநிலத் தொகுதிகள் அதிகரிக்கப்படுவதையும் ஒரு போதும் ஏற்க இயலாது.
மகளிர் இட ஒதுக்கீட்டில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உள் ஒதுக்கீட்டில் ஒன்றிய பாஜக அரசு உடனடியாகத் தனது நில���ப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
#WomenReservationBill2023
@GunasekaranMu @karthickselvaa @dinathanthi @ThanthiTV @TamilTheHindu @news7tamil @sathiyamnews @sunnewstamil @News18TamilNadu @DinakaranNews @Murasoli180
எதிர்க்கட்சிகள் குறித்து தவறான பிரசாரத்தை மேற்கொள்ளும் செய்தி தொகுப்பாளர்கள் மற்றும் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்க இந்தியா கூட்டணி முடிவு!
14 ஊடகவியலாளர்கள் பெயர் பட்டியலை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வெளியிட்டு அறிக்கை!
#INDIA | #Media |#mmkitwing
எதிர்க்கட்சிகள் குறித்து தவறான பிரசாரத்தை மேற்கொள்ளும் செய்தி தொகுப்பாளர்கள் மற்றும் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்க இந்தியா கூட்டணி முடிவு!
14 ஊடகவியலாளர்கள் பெயர் பட்டியலை ஒருங்க���ணைப்புக் குழுக் கூட்டத்தில் வெளியிட்டு அறிக்கை!
#mmkitwing | #INDIA | #Media