தமிழ்நாடு சட்டப்பேரவையில் #SofaModel அரசு அளித்த அறிக்கையை Comma, Full Stop கூட மாறாமல் ஆளுநர் அப்படியே வாசித்திருப்பது பாஜக - த.வெ.க-வின் மறைமுக கூட்டணியை அம்பலப்படுத்தி இருக்கிறது.
ஆளுங்கட்சியினர் Reels போடுவதற்கான Content Material-ஆக அமைந்துள்ள ஆளுநர் உரையில் வளர்ச்சிக்கான திட்டங்கள் ஏதும் இல்லை.
தொடர் மின்வெட்டு - பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கெடு - விவசாயிகள் பிரச்சினை போன்றவற்றிற்கு எந்த தீர்வும் ஆளுநர் உரையில் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
கழகத்தலைவர் @mkstalin அவர்கள் ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட சாதனைகளுக்கு Sticker ஒட்டியும், த.வெ.க அரசின் சறுக்கல்களுக்கு கழகத்தின் மீது பழிபோடும் வகையிலும் அமைந்துள்ள ஆளுநர் உரையை கண்டிக்கிறோம். #TNAssembly
கழகத்தின் வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் சகோதரர் @DrKalanidhiV அவர்களின் அன்பு மகன் வி.கே.சித்தார்த் - அஷ்ரயா இணையரின் திருமணத்தை கழகத் தலைவர் @mkstalin அவர்கள் வானகரத்தில் இன்று நடத்தி வைத்த நிகழ்வில் பங்கேற்றோம்.
கலைஞரும் - கழகமும் போல மணமக்கள் பல்லாண்டு வாழ்வென வாழ்த்தி மகிழ்ந்தோம்!
திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி திண்டுக்கல் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட திண்டுக்கல் மாவட்டம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து சீலப்பாடி, முள்ளிப்பாடி,தாமரைப்பாடி வழியாக வேல்வார்கோட்டை வரை பள்ளி மாணவர்கள், கிராம பொது மக்களின் கோரிக்கைகளை ஏற்று இன்று புதிய சிற்றுந்து பேருந்து வழித்தடத்தை திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்களும் நானும் கொடி அசைத்து பேருந்து சேவையை துவக்கி வைத்தோம்.
உடன் திண்டுக்கல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சகோதரர் பிரபாகரன், திமுக திண்டுக்கல் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சகோதரர் வெள்ளிமலை, கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய கழக செயலாளர் தம்பி சரத், திமுக கிழக்கு ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் தம்பி சதிஷ், கழக நிர்வாகிகள் பொது மக்கள் உடன் இருந்தனர்.
@mkstalin@Udhaystalin@IPeriyasamy_
மகிழ்ச்சியான நாள்…
திராவிட மாடல் ஆட்சியில் கொடைக்கானல் அரசு மகளிர் கல்லூரியை இருபாலர் (ஆண்கள் மற்றும் பெண்கள்)கல்லூரியாக மாற்றி கடந்த ஆண்டு அரசு ஆணை வழங்கி,
நடப்பாண்டு முதல் 2026-2027 மாணவ மாணவிகள் சேர்க்கை தொடங்கிய நிலையில் ,
மக்கள் தலைவர் கழக தலைவர் திராவிட மாடல் நாயகர் மாண்புமிகு அண்ணன் #தளபதியார் @mkstalin அவர்களுக்கும்
கழக இளைஞர் அணி செயலாளர் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு அண்ணன் @Udhaystalin அவர்களுக்கும் கழக துணை பொதுச் செயலாளர் மாண்புமிகு ஐயா @IPeriyasamy_ அவர்களுக்கும் கொடைக்கானல் மக்கள் சார்பாக நன்றி நன்றி நன்றி...
தமிழ்த் திரையுலகின் பாதையை மாற்றியமைத்து, புதுப்போக்கினை உருவாக்கிய ‘இயக்குநர் இமயம்’ திரு. பாரதிராஜா அவர்களின் மறைவு பெரும் வேதனையைத் தருகிறது. தமிழ்த்திரையுலகிற்குப் பேரிழப்பாகிவிட்ட அந்தப் பெருங்கலைஞனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரைமொழியில் தனிமொழி பேசித் தனிச் சகாப்தத்தையே உருவாக்கியவர் பாரதிராஜா. ஸ்டூடியோக்களுக்குள் அடைபட்டிருந்த கேமராக்கள் பாரதிராஜா அவர்களால் கிராமங்களுக்குள் நுழைந்தன. கிராமத்து மனிதர்களையும் அவர்களது வாழ்க்கையையும் திரைக்குக் கொண்டு வந்து, தமிழ்ச்சினிமாவை யதார்த்தத்திற்கு மிக அருகில் கொண்டு சென்றார்.
16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, டிக் டிக் டிக், முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள், வேதம் புதிது, கருத்தம்மா உள்ளிட்ட அவரது படைப்புகளைத் தமிழ்ச்சினிமாவின் வரலாற்றை எழுதும் எவர் ஒருவரும் தவிர்க்க முடியாது. தனது படைப்பாற்றலின் வழியாகப் பிற மொழிகளிலும் படங்களை இயக்கி, அங்கும் தன் முத்திரையைப் பதித்த அவரை இந்தியத் திரை வரலாறு என்றைக்கும் உச்சத்தில் வைத்து நினைவுகூரும்!
தலைவர் கலைஞர் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தவர். தமிழ் மீதும் தமிழினத்தின் மீதும் பற்றுகொண்டு, தமிழ்நாட்டின் உரிமைகள் தொடர்பான போராட்டங்களில் திரையுலகை ஈடுபடுத்தியதில் பாரதிராஜா அவர்களுக்கு மிகப்பெரிய பங்களிப்பு உண்டு.
‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா - ‘இசைஞானி’ இளையராஜா - ‘கவிப்பேரரசு’ வைரமுத்து ஆகியோரது கூட்டணியில் உருவான பாடல்கள் ஒவ்வொரு நிமிடமும் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் ஒலித்துக்கொண்டும், ஆயிரக்கணக்கான மக்களை மகிழ்வித்துக்கொண்டும்தான் இருக்கின்றன.
அவரது உடல்நலன் குறித்து விசாரிக்கவும், அவரது மகன் மனோஜ் பாரதிராஜாவின் மறைவுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறவும் பாரதிராஜா அவர்களைச் சந்தித்து உரையாடிய தருணங்களைத் தற்போது நினைக்கையில் நெஞ்சம் மேலும் பாரமடைகிறது.
பாரதிராஜா அவர்களின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகைச் சேர்ந்த கலைஞர்களுக்கும், பாரதிராஜாவின் மாணவர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அல்லிநகரத்தில் பிறந்து, அழியாத படைப்புகளைக் கொடுத்த ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா அவர்கள், சினிமா ரசிகர்களின் மனங்களில் - தமிழ் மக்களின் மனங்களில் என்றும் வாழ்வார்!
திரு. பாரதிராஜா அவர்களுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியபோது, அவரை அரசு மரியாதையுடன் வழியனுப்பி வைக்க வேண்டும் என்று அவர் உடனிருந்தோர் கோரினர். இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் சாதனைகளைப் போற்றும் வகையிலும், அவரைச் சார்ந்தோரின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையிலும் ஆவன செய்ய வேண்டுமெனத் தமிழ்நாடு அரசினைக் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்த்திரையுலகின் தனிப்பெரும் ஆளுமை ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா சாரின் திருவுடலுக்கு நீலாங்கரையில் உள்ள அவரது இல்லம் சென்று மாலை வைத்து அஞ்சலி செலுத்தினோம்.
சிகிச்சை முடித்து வீடு திரும்பியவர், எப்படியும் மீண்டு வருவார் என்று எதிர்பார்த்த நிலையில், அவரது மரணச் செய்தி இன்று காலை பேரிடியாக வந்தது.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பாசத்திற்குரிய இயக்குநர். நம் கழகத் தலைவர் அவர்களின் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவர்.
எளிய மக்களின் வாழ்க்கையை – உணர்வைப் பிரதிபலித்து, தமிழ்ச் சினிமாவில் புதுப்பாய்ச்சலை ஏற்படுத்திய பாரதிராஜா சாரின் மறைவு, கலையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.
அரங்கிற்குள் இருந்த சினிமாவை வயல்வெளிக்கும் – கடற்கரைக்கும் – கிராமங்களுக்கும் எடுத்துச் சென்ற திரையுலக வித்தகர்.
எக்காலத்திற்கும் நிலைத்திருக்கும் படைப்புகளைத் தந்து, திறமையான கலைஞர்கள் பலரை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர்.
பாரதிராஜா சாரின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் - அவரது குடும்பத்தினர், ரசிகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் என் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
'என் இனிய தமிழ் மக்களே' என்ற மண் வாசனை மிகுந்த அவரது குரல் நம் செவிகளில் என்றுமே ஒலித்துக் கொண்டு இருக்கும்.
பாராதிராஜா சார், அவர் படைப்புகளின் வழியே என்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருப்பார்.
#Bharathiraja
தவெக ஆட்சியில் 10 வயது குழந்தை முதல் 80 வயது கிழவி வரை பாதுகாப்பு இல்லை..,
இன்னும் சொல்லப்போனால் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய பெண் காவலர்களுக்கே இங்கு பாதுகாப்பு இல்லை..!
இதுதான் மாற்றத்திற்கான அரசா..?
#சோபா_மாடல்_அரசின்_கொடுமைகள்#TVKFails#dmkforever#ip_wings#ip_force
மெழுகுவர்த்தி ஏத்த மெழுகுவற்றியை கொடுக்கவில்லை என்பதற்காக செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் கொடுக்க தெரிந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு,
தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறதே என்ற கேள்வியை எழுப்பிய செய்தியாளர்களுக்கு ஏன் பதில் விளக்கம் கொடுக்கவில்லை?
#சோபா_மாடல் அரசு
இன்று (04/06/2026)
திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகர மற்றும் ஊரக பகுதிகளில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு பொதுமக்கள் என்னிடம் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் என்கிற முறையில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு. டாக்டர். பிரதீப் அவர்களிடம் இன்று வழங்கினேன்.
@mkstalin@Udhaystalin@IPeriyasamy_@r_sakkarapani
தந்தை பெரியாரின் வழியில் மானமிகு சுயமரியாதை போராளியாய், பேரறிஞர் அண்ணா வழியில் மொழியுரிமை, மாநில உரிமைகள் காத்த தமிழினத் தலைவராய் வாழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் புகழ் போற்றுவோம்!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளில் கழகத்தலைவர் @mkstalin அவர்கள் வழியில் மக்கள் பணி, கழகப் பணி தொடர உறுதியேற்போம்.
#Kalaignar103 #KalaignarForever
“என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே” என்ற ஒற்றைக்குரலில் கோடானு கோடி கழகத் தொண்டர்களை கட்டிப்போட்ட முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 103 ஆவது பிறந்தநாள் இன்று!
சென்னை மெரினா கடற்கரை அருகேயுள்ள கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் மலர்தூவி மரியாதைச் செலுத்தினோம்.
கலைஞர் அவர்கள் காட்டிய வழியில் அயராது உழைப்போம். மீண்டு எழுவோம் - மீண்டும் வெற்றிக் கொடி ஏற்றுவோம்!
ஓங்குக கலைஞர் புகழ்!
தலைவரின் பிறந்தநாள்!
தமிழினத் தலைவரின் பிறந்தநாள்!!
மூப்படைந்து சக்கர நாற்காலியில் உட்கார்ந்த பின்பும் ஓய்வின்றி, தனது இறுதி மூச்சுவரை, தமிழினத்திற்காக - தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காக உழைத்திட்ட உன்னதத் தலைவர்!
என்னை என்றும் இயக்கும் தலைவர் கலைஞர் அவர்களே…
வெற்றியைத் தலையிலும், தோல்வியை நெஞ்சிலும் ஏற்றாமல், சோதனைக் கடல்களைச் சோர்வின்றி நீந்திக் கடந்த உங்களது ஆற்றல் என்னிடமும் இருக்கிறது.
நீங்கள் நிறைந்தபோது, உங்களின் ஆற்றலை வேண்டினேன். அந்த ஆற்றலோடு தொடர் வெற்றிகளைப் பெற்று, தமிழ்நாட்டை வரலாறு போற்றும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றோம். இப்போது, வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். எனினும் உங்களது ஆற்றல், என்னோடு மட்டுமல்ல, நீங்கள் உணர்வூட்டி வளர்த்தெடுத்த ஒவ்வொரு உடன்பிறப்பிடமும் இருக்கிறது.
உறுதியாய்ச் சொல்கிறோம்…
மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம்! உதயசூரியனின் ஒளியால் தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம்!
#KalaignarForever