@thirumaofficial விரட்டியடிப்போம்!!
விரட்டி அடிப்போம்
சனாதனத்தை
விரட்டியடிப்போம்!!
🟦🟥சமூக நீதியை வென்றெடுப்போம்!!
அனைத்து சிறுத்தைகளுக்கும் என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்🙏💐
சமூக நீதி என்றால் வாழும் எழுச்சித் தமிழர் என் அவர்களே!!🟦🟥
தம்பி பாவரசு மறைவு:
---------------
இயக்கத்தையும் என்னையும் ஆழமாக நேசித்தவர்! முப்பத்தைந்து ஆண்டுகளாக எனது பணிச்சுமைகளைப் பகிர்ந்து கொண்டவர்!
ஓய்வின்றி உழைத்த போராளிக்கு எனது வீரவணக்கம்!
-------------------
கட்சியின் மூத்த முன்னோடியும் முதன்மை செயலாளருமான தம்பி ஏ.சி. பாக்கியம் என்கிற ஏ.சி. பாவரசு அவர்கள் இன்று விடியற்காலை இயற்கை எய்திய தகவல் ம���குந்த அதிர்ச்சி அளிக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்னர் மதுரைக்குச் சென்று தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவரைப் பார்த்தேன். மருத்துவர்களிடம் அவரது உடல்நிலை குறித்து விசாரித்தேன்.
சிறுநீரகம் பாதிக்கப்பட்டு குருதியில் கலந்துள்ள உப்பை நீக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது பற்றியும், இதயம் உள்ளிட்ட பிற உறுப்புகளின் செயல்திறன் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்பது பற்றியும், அவர் உயிருக்குப் போராடும் நிலையில் இருப்பது பற்றியும் மருத்துவர்கள் என்னிடத்தில் விளக்கினர். இந்நிலையில், அவரைக் காப்பாற்றுவது கடினம் என்பதை அறிந்தேன். அதனால் மென்மேலும் வேதனை மிகுந்தது. அங்கிருந்து என்னால் நகர இயலவில்லை. எனினும், என்னை நானே தேற்றிக்கொண்டு பாவரசிடம், "தைரியமாக இருங்கள் ; மீண்டு வந்து விடுவீர்கள்" என்று கூறினேன். அப்போது அவர் மெ��்ல தலையசைத்தார். என்னிடம் ஏதோ பேச முயன்றார்; ஆனால், அவரால் இயலவில்லை. பின்னர், அவரது மகள் மற்றும் உறவினர்களிடம் நான் ஆறுதலாகப் பேசிவிட்டு விடைபெற்றேன்.
எப்படியும் நலம்பெற்று வருவார் என்று நம்பிக்கொண்டிருந்த நிலையில்,
இடி விழுந்ததைப் போல இப்படியொரு செய்தி இன்று அதிகாலையில் வந்து சேர்ந்தது. இந்த அதிர்ச்சியிலிருந்து எப்படி மீளுவேன்; என்னை நானே தேற்றிக் கொள்வேன் என்று எனக்கு���் தெரியவில்லை.
1990-களின் தொடக்கத்திலிருந்து என்னோடு பயணித்தவர்களுள் ஒருவர் தம்பி பாவரசு. என்னையும் இயக்கத்தையும் ஆழமாக நேசித்தவர். ஓய்வின்றி உழைத்த போராளி. கட்சிப் பணிகள் மட்டுமே அவரது முழுநேரப் பணிகள் என என்னோடு கடந்த 35 ஆண்டுகளாகச் சுற்றிச் சுழன்று தமிழ்நாடு முழுவதும் களமாடியவர்.
மறைந்த தோழர் உஞ்சை அரசன் அவர்களும் இவரும் 'இரட்டையராக' இருந்து அனைத்து மாவட்டங்களிலும் பயணம் செய்து இயக்கத்தை முறைப்படுத்தும் பணிகளை ஆற்றியவர்கள். எனக்கு உற்றத்துணையாக இருந்து இயக்கப் பணிகளைப் பகிர்ந்து கொண்ட இருவருமே இன்று இல்லை என்பது எனக்கு நேர்ந்த ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும்.
தம்பி பாவரசு அவர்கள், 1991-இல் மதுரை அழகர் திருவிழாவில் 'தண்ணீர் பீய்ச்சும்' ஒரு பக்தராக எனக்கு அறிமுகமானார். அதன் பின்னர் அந்த நிலையிலிருந்து முற்றாக மாறி, முழுநேர சிறுத்தையாகப் பரிணாமம் பெற்று, கட்சியில் படிப்படியாகப் பல்வேறு பொறுப்புகளை வகித்து இன்று முதன்மை செயலாளர் என்கிற நிலைக்கு உயர்ந்தார்.
அவர் பயணிக்காத மாவட்டம் இல்லை; சந்திக்காத பொறுப்பாளர்கள் இல்லை என்கிற அளவுக்கு அவரது களப்பணிகள் அமைந்தன. உட்கட்சி முரண்களைச் சரிசெய்வது உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளிலும் தானே முன்வந்து தலையிட்டு தீர்வுக் காண்பதில் அக்கறை செலுத்தியவர். மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் போதெல்லாம் முழுமையாக என்னோடு இருந்து இரவு பகல் கண்துஞ்சாமல் பணியாற்றியவர்.
தற்போதைய மறுசீரமைப்பு நடவடிக்கைகளிலும் அவரது பங்களிப்��ு மகத்தானதாகும். கடந்த சில மாதங்களாக உடல்நலம் சீராக இல்லாத நிலையிலும் இயக்கத்தின் மறுசீரமைப்புக்கான பணிகளை ஆற்றுவதில் எனக்குப் பெருந்துணையாக இருந்தார். ஓய்வெடுக்க சொல்லியும் அதனைப் பொருட்படுத்தாமல் எனக்கு உடனிருந்து உதவியவர்.
எனக்கு எந்த நெருக்கடியும் தராமல் கட்சியின் நலன்களை மட்டுமே முன்னிறுத்தி தன்னால் இயன்ற அளவில் மக்கள் பணியாற்றியவர். அவரது இழப்பு ஈடுசெய்ய இயலாத மிகப்பெரும் இழப்பாகும். நன்றி பெருக்கோடு அவருக்கு எனது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன். அவரை இழந்து வாடுகிற அவரது மகள் செந்தமிழ�� நிலா உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் யாவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவண்:
தொல்.திருமாவளவன்,
நிறுவனர்-தலைவர்,விசிக.
ஜனவரி 1, 1818 ல் மகாராஷ்டிரா மாநிலம் பூனா அருகே பீமா கோரேகானில் நடைபெற்ற போரில் பங்கேற்று வீரச்சாவடைந்த ஒடுக்கப்பட்ட மக்களை நினைவு கூர்ந்து இன்று அம்பேத்கர் திடலில் வீரவணக்கம் செலுத்தினேன்!
வாக்குரிமை பறிபோனால்
வாழ்வுரிமையும் பறிபோகும்
நண்பர்களே! புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறி முடித்துவிட்டோம். தமிழ்நாட்டின் எதிர்காலம் குறித்துக் கொஞ்சம் அக்கறை கொள்வோம்! எஸ்.ஐ.ஆர் என்னும் வாக்குப் பறிப்புத் திட்டத்தை அலட்சியம் செய்தால் மிகப்பெரிய ஆபத்தில் தமிழ்நாடு சிக்கும்!
“ பாசிஸ ஆட்சியாளர்கள் மக்களில் சில பிரிவுகளிடம���ருந்து வாக்குரிமையைத் திட்டமிட்டுப் பறிப்பார்கள். சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட ஆதிக்கக் குழுவே சிறந்தது, மதிப்புடையது என்று ஆக்குவதற்காக, வாக்குரிமைப் பறிக்கப்பட்டவர்களை ‘அரை குடிமக்கள்’ என்ற நிலைக்குத் தள்ளுவார்கள்.” எனப் பாசிஸம் குறித்து ஆய்வு நூல்களை எழுதியுள்ள அறிஞர் ஜேஸன் ஸ்டான்லி கூறுவது இந்தியாவுக்கு அப்படியே பொருந்துகிறது.
எஸ்.ஐ.ஆர் எப்படி வாக்குகளைப் பறிப்பத��்கென்றே வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதை திரு யோகேந்திர யாதவ் தனது கட்டுரைகள் மூலம் விளக்கி வருகிறார். தி இந்து ஆங்கில நாளேட்டில் எழுதப்பட்டிருக்கும் தலையங்கமும் முக்கியமானது.
இந்தியாவில் பாராளுமன்ற சனநாயக முறை தொடரவேண்டும் என விரும்புகிற ஒவ்வொருவரும் எஸ்.ஐ.ஆர் குறித்து அக்கறை காட்டவேண்டும். மோடி அரசின் வாக்குரிமைப் பறிப்பு மோசடியைத் தடுக்க வேண்டும்!
சனவரி 05 அன்று பிற்பகல் 3.00 மணியளவில் சென்னை-சைதை, கலைஞர் நினைவு வளைவு அருகே சிறுத்தைகளின் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
கிறித்தவம் பின்பற்றும் இம்மண்ணின் மைந்தர்களுக்கு எதிராக சங் பரிவா��் கும்பல் நாடெங்கும்கட்டவிழ்த்துவிட்டுள்ளவன்முறைவெறியாட்டம் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு அரசியல் ஆகியவற்றைக் கண்டிக்க வெகுண்டெழுவோம்.
இசுலாமியர், கிறித்தவர் பாதுகாப்பை உறுதிப்படுத்த உரத்துக் குரலெழுப்புவோம்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் புரட்சிப்புயல் அண்ணன் வைகோ அவர்கள் இன்று மேற்கொள்ளும் 'சமத்துவ நடைபயணம்' தொடக்க விழாவில் பங்கேற்று வாழ்த்தி உரையாற்றினேன்.
மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் @mkstalin அவர்கள் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
தோழமை கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
🔵🔴எமையெல்லாம் மனிதர்களாக தலைநிமிர வைத்த மகத்தான தலைவர் புரட்சியாளர் B.R. அம்பேத்கர் அவர்களுக்கு புகழ் வணக்கத்தை செலுத்துகின்றோம்.
தருமபுரி மாவட்டம் அரூர் எமது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக புகழ் வணக்கத்த��� செலுத்துகின்றோம்🙏🔵🔴
@KKSelvakumaroff 🦅🔵🔴தர்மபுரி மாவட்டம் அடங்கா சிறுத்தை நகரம் அரூர் எமது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக சமூக நீதி போராளி தலைவருக்கு புகழ் வணக்கத்தை செலுத்துகின்றோம்🐆🐆���
எனது சிற்றன்னை செல்லம்மாள் (78)அவர்கள் சற்றுமுன் இயற்கை எய்தினார்.
கடந்த ஆக 07 அன்று மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டு சுயநினைவு இழந்தநிலையில் பெரம்பலூரில் உள்ள தனலட்சுமிசீனிவாசன் மருத்துவமனையில�� தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மிகுந்த கவனத்தோடு மருத்துவர்கள் தீவிர கண்காணிப்புடன் சிகிச்சை அளித்தனர். எனினும், பலனின்றி தற்போது காலமானார்என்பது
பெருந்துயரமளிக்கிறது.
பள்ளிப் பருவத்தில் எனக்கு ஆடை உடுத்தி, தலையில் எண்ணெய்த் தடவி இரட்டை சடைபின்னிவிட்டுப் பள்ளிக்கு அழைத்துச் சென்ற தாய்! தந்தை என்னைக் கண்டிக்கும் போதெல்லாம் எனக்காக வாதாடிய தாய்! வீட்டில��� மூத்த மகன் என்பதால் 'பெரியதம்பி, பெரியதம்பி' என்று என்னைச் செல்லமாக அழைத்த தாய்! நான் பட்டவகுப்பை முடித்த காலத்திலிருந்து, 'படித்தது போதும் கல்யாணம் பண்ணு பா' என அறிவுறுத்திய தாய்! பத்தாண்டுகளுக்கு முன்னரே பக்கவாதத்தால் உடல் நலிவுற்று நினைவு தடுமாறி வீட்டிலேயே முடங்கிய நிலையிலும் எப்போதாவது நான் ஊருக்குச் செல்லும்போது, என் குரல் கேட்டதும் 'தம்பீ தம்பீ' என்று ஓடிவந்து என் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு அன்பைப் ��ொழிந்த தாய்! இன்று எம்மோடு இல்லை என்பது வாழ்வே வெறுமையாய் உள்ளது. துக்கத்தால் மனம் கனக்கிறது.
அப்பா(2010), அக்கா,(2020), சின்னம்மா (2025)என அடுத்தடுத்து இழப்புகளை எதிர்கொள்ளும் அவலம். துயரங்களைத் தாங்கும் நிலை.
அம்மாவுக்கு எனது வீரவணக்கம்!
@thirumaofficial 🔵🔴 ஆகஸ்ட் 17 தமிழரின் எழுச்சி நாள்
என் சேரியின் விடுதலை நாள்🔵🔴
🔵🔴உலகில் உள்ள நறுமணமிக்கு மலர்களை கொண்டு என் சேரியில் மலர்ந்த தாய் சிறுத்தை தியாகச் செம்மல் எழுச்சித்தமிழர் அண்ணன் அவர்களை வாழ்த்துகிறேன்💐🙏🔵🔴