மக்கள் மனங்களில் புதிய நம்பிக்கையையும், புத்துணர்வையும், மகிழ்ச்சியையும் மலரச் செய்யும் தீபாவளித் திருநாளில், அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்!
இருள் நீங்கி ஒளி பிறக்கும் நாளாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் வெற்றித் திருநாளாகவும் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையைப் பாதுகாப்போடும், மிகுந்த உற்சாகத்தோடும் கொண்டாடி, அளவற்ற அன்பையும், மகிழ்ச்சியையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்வோம்.
இல்லங்கள்தோறும் ஆனந்தம் பெருகி, அனைவரின் வாழ்விலும் புது நம்பிக்கை பிறந்து, உற்சாகம் பொங்கிப் பெருகும் நாளாக இத்திருநாள் அமையட்டும்!
#CMJosephVijay
மண், மொழி, மானம் காத்தவர்களே நாங்கள்தான்; தமிழ் மொழியைக் கண்டுபிடித்ததே நாங்கள்தான்; தமிழ் மொழியியலின் மூளையே நாங்கள்தான்; தமிழ் இலக்கியக் கடலை எங்கள் சட்டைப் பையில் அடக்கி வைத்திருக்கும் அதிகாரம் பெற்றவர்களே நாங்கள்தான்; தமிழே நாங்கள்தான் என்று ஊரை ஏமாற்றுவதற்காக உரக்கக் கூவும் கூட்டமே எப்போதும் ஊழல் கூட்டமாக இருக்கும் என்பதற்கு உதாரணம், ஊழலின் ஊற்றுக்கண்ணான தி.மு.க.தான் என்பது ஊரறிய வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான நூல் பரிந்துரைக் குழு அமைக்கப்பட்டு, கடந்த தி.மு.க. ஆட்சியில் 5.11.2025 தேதியிட்ட அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அக்குழுவில்
நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வு நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் திரு.பெருமாள் முருகன் அவர்களே, பெரியார் அறிவுலகத்திற்கு நூல் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார். ஊழலின் ஊற்றுக்கண்ணைக் கண்டறிந்துள்ள அவரைப் பாராட்டியே ஆக வேண்டும்.
நாம் அரசியலுக்கு வந்தபோதே பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடித்து வருவது தி.மு.க.தான் என்று பகிரங்கமாக நமது மாநாட்டிலேயே அறிவித்தோம். ஊழலின் ஊற்றுக்கண்ணே தி.மு.க.தான் என்பதையும் இன்று வரை நாம் மட்டுமே சமரசமின்றிச் சொல்லி வருகிறோம். எப்போதும் தி.மு.க. பற்றி நாம் சொல்வது உண்மைதான் என்பதைத் தி.மு.க.வே மெய்ப்பித்து உள்ளது. அதற்கான இப்போதைய உதாரணமாக, கோவை பெரியார் அறிவுலகத்தில் நடந்துள்ள புத்தகக் கொள்முதல் ஊழலே சாட்சியாகி உள்ளது.
தி.மு.க. கொஞ்சம் வித்தியாசமாக ஊழல் செய்து, கோவை பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியிருக்கிறது. ஊழல் இலக்கியம் படைப்பதில் தி.மு.க. உயர் ரகம்தான் என்பதும் தெரிய வந்துள்ளது.
பெரியார் அறிவுலகத்தைப் பார்த்துப் பார்த்துக் கட்டியதாகத் தம்பட்டம் அடித்துக்கொண்ட தி.மு.க. தலைமை, இப்படி நூல்கள் கொள்முதல் செய்வதிலும் பார்த்துப் பார்த்து, தரமற்ற நூல்களாகப் பரிந்துரை செய்து ஊழல் செய்துள்ளதை உலகமே பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறது.
கடந்த தி.மு.க. ஆட்சியில்தான் எத்தனை எத்தனை ஊழல்கள் நடந்துள்ளன! நகராட்சித் துறையில் ஊழல்! டாஸ்மாக்கில் ஊழல்! டெண்டர்களில் ஊழல்! ஒவ்வொரு துறையிலும் ஊழலோ ஊழல் எனத் தங்களுக்காக ஒரு மிகப் பெரிய ஊழல் உலகத்தையே உருவாக்கியதுதான் தி.மு.க. என்பது அடுத்தடுத்து அம்பலமாகி வருகிறது.
இந்த ஊழல்களின் வரிசையில், நம் வீட்டுப் பிள்ளைகள் மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த பள்ளிக் கல்வித் துறையில் ஊழல் நடந்துள்ளதும் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதும் உலகறிந்த செய்தியே. ஆனால், அதன் தொடர்ச்சியாக இப்போது நம் பிள்ளைகளும் மாணவர்களும் பயன்படுத்தக் கட்டப்பட்ட அறிவுலக நூலகம் சார்ந்தும் ஊழலா?
தி.மு.க.வின் வரலாறு தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் அதிர்ச்சிக்கு உரியதன்று. ஆனால், அனைத்தும் மக்கள் பணம் என்பதால்தான் நம் மனம் பதைபதைக்கிறது.
மக்களின் வாழ்வை நேரடியாகப் பாதிக்கின்ற வகையில் தொடர்ந்து ஊழல் செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ள தி.மு.க.வைத் தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையும் மன்னிக்கவே மன்னிக்காது. தமிழ்நாட்டுக் குடும்பங்களும் இனி தி.மு.க.வை அப்புறப்படுத்தாமல் விடமாட்டார்கள்.
பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் தமிழை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் ஒரு வரலாறாகவே நிகழ்த்தி வரும் தி.மு.க., மக்கள் மன்றத்தில் இனி நிமிரவே முடியாமல் நிரந்தரமாகத் தலைகுனிந்து நிற்கப் போவது உறுதி.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (2.11.2026) புதுக்கோட்டையில் நடைபெற்ற அரசு விழாவில், 68 கோடியே 31 இலட்சம் ரூபாய் செலவிலான 44 முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, 11 கோடியே 72 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 70 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 13,676 பயனாளிகளுக்கு 62 கோடியே 73 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay inaugurated 44 completed projects worth Rs.68.31 crore, laid the foundation stone for 70 new projects valued at Rs.11.72 crore, and distributed welfare assistance totaling Rs.62.73 crore to 13,676 beneficiaries at a government function held in Pudukkottai today (02.11.2026).
#CMJosephVijay
Warm greetings to the people of Tamil Nadu on the special occasion of Tamil Nadu Day!
The hardworking and enterprising people of Tamil Nadu have made outstanding contributions to India’s progress. From manufacturing, automobiles and textiles to electronics, space technology, healthcare and emerging industries, the state has distinguished itself through innovation, skill and industrial excellence.
The people of Tamil Nadu take immense pride in their cultural identity and traditions. Tamil culture has enriched our nation’s civilisational journey in innumerable ways.
May this occasion bring happiness, success and new opportunities to every person of Tamil Nadu in the times to come.
தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்த சிறப்பான தமிழ்நாடு தினத்தில் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
தொழில்முனைவோடு கடின உழைப்பும் மிக்கவர்களாய் விளங்கும் தமிழ்நாட்டு மக்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளனர். உற்பத்தித் துறை முதல் வாகனங்கள் மற்றும் ஜவுளித்துறை, மின்னணுவியல், விண்வெளி தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் வளர்ந்துவரும் தொழில்துறைகள் வரை, தமிழகம் தனித்துவமிக்க கண்டுபிடிப்பு, திறன் மற்றும் தொழில்துறை சிறப்புகளை தன்னகத்தே கொண்டு சிறந்து விளங்குகிறது.
தமிழ்நாட்டு மக்கள் தங்கள் பண்பாடு, தனித்துவம் மற்றும் பாரம்பரியம் குறித்து பெருமிதம் கொள்கின்றனர். தமிழ் கலாச்சாரம் நம் நாட்டின் நாகரிகப் பயணத்தைப் பல வழிகளில் செழுமையாக்கியுள்ளது.
இந்த நன்னாள் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் இன்றும் வரும் காலங்களிலும் மகிழ்ச்சியையும், வெற்றியையும், புதிய வாய்ப்புகளையும் வாரி வழங்கட்டும்.
ஸ்டாலின் சார் மனசாட்சி...
குறிப்பு :
தன் ஆட்சியில் நடந்த அவலங்களை முன்பு ஆட்சியில் இருந்த முன்னாள் முதல்வரே ஒப்புக்கொண்டு பேசினால் எப்படி இருக்கும் என்று சொல்லும், A.I. தொழில்நுட்பத்தால் உருவாக்கப் பட்ட கற்பனைக் காணொளி.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, இன்று (30.10.2026) சென்னை, நந்தனம் சந்திப்பில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, அவர்களது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
The Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru.C.Joseph Vijay, today (30.10.2026), on the occasion of the birth anniversary of freedom fighter Pasumpon Muthuramalinga Thevar, paid floral tributes by garlanding his statue and offering flowers to his portrait at Nandanam Junction, Chennai.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (29.10.2026) சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை 2026 நிறைவு விழாவில், மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் 142 தங்கம், 97 வெள்ளி, 80 வெண்கலப் பதக்கங்களோடு முதலிடத்தைப் பிடித்த சென்னை மாவட்டத்திற்கும், 64 தங்கம், 43 வெள்ளி, 36 வெண்கலப் பதக்கங்களோடு இரண்டாம் இடத்தைப் பிடித்த செங்கல்பட்டு மாவட்டத்திற்கும், 27 தங்கம், 37 வெள்ளி, 54 வெண்கலப் பதக்கங்களோடு மூன்றாம் இடத்தைப் பிடித்த கோயம்புத்தூர் மாவட்டத்திற்கும் கோப்பைகளை வழங்கி, விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளைப் பாராட்டினார். மேலும், ஜப்பானில் நடைபெற்ற 5-வது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையாக 6 கோடியே 85 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.
The Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru.C.Joseph Vijay, presented trophies to Chennai District, which secured first place in the State-Level Sports Competitions with 142 gold, 97 silver and 80 bronze medals; Chengalpattu District, which secured second place with 64 gold, 43 silver and 36 bronze medals; and Coimbatore District, which secured third place with 27 gold, 37 silver and 54 bronze medals, and felicitated the sportspersons at the closing ceremony of the Chief Minister’s Trophy 2026, held at the Jawaharlal Nehru Indoor Stadium, Chennai, today (29.10.2026).
Further, the Hon’ble Chief Minister presented cheques totalling Rs.6.85 crore as high incentive awards to 9 sportspersons from Tamil Nadu who won medals at the 5th Asian Para Games held in Japan.

முதலமைச்சர் கோப்பை 2026
நிறைவு விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்
The Hon’ble Chief Minister of Tamil Nadu at the Closing Ceremony of the Chief Minister’s Trophy 2026
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (27.10.2026) தலைமைச் செயலகத்தில், சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற உலகத் திறன் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஒருவருக்கும், சிறப்புத் தகுதிப் பதக்கங்களை வென்ற 4 நபர்களுக்கும், போட்டிகளில் பங்கேற்ற 7 நபர்களுக்கும் என தமிழ்நாட்டைச் சேர்ந்த மொத்தம் 12 போட்டியாளர்களுக்கு 49 இலட்சம் ரூபாய் ஊக்கத்தொகைக்கான காசோலைகளை வழங்கிப் பாராட்டினார்.
The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay presented cheques towards cash incentives totaling Rs. 49 lakh and felicitated 12 competitors from Tamil Nadu comprising 1 silver medalist, 4 Medal for Excellence winners, and 7 participants, who competed in the WorldSkills Competition held in Shanghai, China, at the Secretariat today (27.10.2026).
#CMJosephVijay
தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில், "மக்கள் சக்திக்கு முன்னால் எந்த ஆதிக்கமும் நிலைக்காது" என்பதை உலகறியச் செய்த மாபெரும் கொள்கைப் புரட்சி அரங்கேறிய திருநாள் இன்று!
சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இதே அக்டோபர் 27 (2024) அன்று...
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலை எனும் வெற்றிச் சாலையில், கடல் போல் திரண்ட லட்சக்கணக்கான மக்கள் மற்றும் கழகப் படைவீரர்களின் பேரெழுச்சியோடு நமது தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது மாநில மாநாடு "வெற்றிக் கொள்கைத் திருவிழாவாக" வரலாறு படைத்தது.
100 அடி உயரக் கொடிக்கம்பத்தில் நமது கழகக் கொடியை ஏற்றி வைத்து,
"இது வெறும் அதிகார ஆட்டமல்ல... எளிய மக்களின் விடியலுக்கான தத்துவார்த்தக் களம்!" என்று நமது மக்கள் முதல்வர் தலைவர் தளபதி ஆற்றிய அனல் பறக்கும் முதல் கொள்கை உரைதான், தமிழகத்தில் அரை நூற்றாண்டு கால அரசியலின் போக்கைத் திசை திருப்பிப் போட்டது!
பலரும் ஏளனம் பேசிய அவதூறுகளை உடைத்தெறிந்து, அன்று மாநாட்டில் உருவான அந்தத் தன்னெழுச்சி அலைதான், தமிழகத்தில் ஒரு மாபெரும் அரசியல் மாற்றத்திற்கும் ஆட்சி மாற்றத்திற்கும் அடித்தளமாய், தொடக்கப் புள்ளியாய் அமைந்தது. இன்று தமிழ்நாட்டிற்கு ஒரு பொற்கால ஆட்சியைத் தந்து, மக்களின் கண்ணீரைத் துடைக்கும் விடியலாகத் திகழ்கிறது!
@CMOTamilnadu | @TVKVijayHQ@BussyAnand | @TVKHQITWingOffl
#2YearsOfVikravandiMaanaadu #TVKHistoricConference #ThalapathyVijay #MaduraiNorthMLA #TVKMadurai #TVKVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற உலகத் திறன் போட்டிகளில் பதக்கங்கள் வென்று சாதனை படைத்தவர்கள் மற்றும் போட்டிகளில் பங்கேற்றவர்கள் என தமிழ்நாட்டைச் சேர்ந்த மொத்தம் 12 போட்டியாளர்களுக்கு ரூ.49 இலட்சத்திற்கான ஊக்கத்தொகையை வழங்கிப் பாராட்டினார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (27.10.2026) தலைமைச் செயலகத்தில், சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற உலகத் திறன் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஒருவருக்கும், சிறப்புத் தகுதிப் பதக்கங்களை வென்ற 4 நபர்களுக்கும், போட்டிகளில் பங்கேற்ற 7 நபர்களுக்கும் என தமிழ்நாட்டைச் சேர்ந்த மொத்தம் 12 போட்டியாளர்களுக்கு 49 இலட்சம் ரூபாய் ஊக்கத்தொகைக்கான காசோலைகளை வழங்கிப் பாராட்டினார்.
The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay presented cheques towards cash incentives totaling Rs. 49 lakh and felicitated 12 competitors from Tamil Nadu comprising 1 silver medalist, 4 Medal for Excellence winners, and 7 participants, who competed in the WorldSkills Competition held in Shanghai, China, at the Secretariat today (27.10.2026).
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (21.10.2026) சென்னை, காவல்துறை தலைமை அலுவலக வளாகத்தில் காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், வீரமரணம் அடைந்த காவலர்களைக் கௌரவிக்கும் வகையில் காவலர் நினைவுச் சின்னம் முன்பாக மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தி, தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரிந்து, பணியின்போது உயிரிழந்த 6 காவலர்களின் குடும்பங்கள் மற்றும் கோமா நிலையிலுள்ள ஒரு காவலர் என மொத்தம் 7 காவலர்களின் குடும்பங்களுக்கு, தமிழ்நாடு அரசின் சம்பளத் தொகுப்புத் திட்டத்தின்கீழ் தனிநபர் விபத்துக் காப்பீட்டுத் தொகையாக மொத்தம் 5 கோடியே 96 இலட்சம் ரூபாய்க்கான ஆணைகளை வழங்கினார்.
The Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru.C.Joseph Vijay, today (21.10.2026) laid a wreath at the Police Memorial during the Police Commemoration Day event held at the Police Headquarters premises in Chennai, paying tribute to police personnel who had laid down their lives in the line of duty. He also handed over orders for personal accident insurance payments totalling Rs. 5.96 crore under the Government of Tamil Nadu’s Salary Package Scheme to the families of seven Tamil Nadu Police personnel—six who died in the line of duty and one who is presently in coma state.
#CMJosephVijay
1959-ஆம் ஆண்டு லடாக் எல்லைப் பகுதியில் தாய்நாட்டைக் காப்பதற்காக வீரமரணமடைந்த 10 மத்திய ரிசர்வ் காவல் படைக் காவலர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க தியாகத்தைப் போற்றும் காவலர் வீரவணக்க நாளில், நாட்டில் அமைதியையும், சட்டம்-ஒழுங்கையும் நிலைநாட்டும் உயரிய கடமையில் தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்த காவல் துறையினர் அனைவருக்கும் வீர வணக்கங்கள்!
இயற்கைப் பேரிடர்கள், விபத்துகள், குற்றச் சம்பவங்கள், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் சூழல்கள் எனப் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு, துணிவுடனும், விழிப்புடனும் பணியாற்றும் காவலர்களின் அர்ப்பணிப்பு போற்றுதலுக்குரியது.
கடமையின் பாதையில் இன்னுயிர் நீத்து, அமரர்களான வீரத் தியாகிகளுக்குத் தலைவணங்கி அஞ்சலி செலுத்துவதோடு, காலநேரம் கருதாமல், அயராது உழைத்து, நாட்டின் அரணாகத் திகழும் காவல் துறையினரின் உன்னதப் பணிகளைப் போற்றிடுவோம்!
#CMJosephVijay
#PoliceCommemorationDay