@kavitha_priyan@sathishmunisamy திமுக எதிர்ப்பு என்பதை விட்டுவிட்டு முழு நேரமும் தமிழக வெற்றி கழகத்தை விமர்சித்தது இந்த தேர்தலில் தோல்விக்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாகும்
ஆண்ட-ஆளும் கட்சிகளுக்கு மீனவ சமூகம் வெறும் வாக்கு வங்கி மட்டுமே .
மீனவ மக்களின் மதிப்பு ஒரு ஓட்டு மட்டுமே.
இன்னும் எத்தனை காலம் இந்த நிலையிலே இருக்கப் போகிறோம்.
இந்தமுறை நம் வாக்குகள் சுயமரியாதைக்கான வாக்குகளாக இருக்கட்டும்.
மீனவ சமூகத்திற்கான மேம்பாட்டு திட்டங்களுடன் தேர்தலை சந்திக்கும் நாம் தமிழர் கட்சியை ஆதரித்து வாக்களியுங்கள்.
@NaamTamilarOrg
#கனவு_கன்னியாகுமரி
#மக்களோடு_மரியஜெனிபர் #MariaJennifer #Manidhi #NaamTamilar
என் அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியின் உறவுகளே.... மாற்றத்திற்கான உங்கள் வாக்குகளை விவசாயி சின்னத்தில் செலுத்துங்கள்.
வாக்குப்பெட்டியில் நமது வரிசை எண் 3
@NaamTamilarOrg
உள்நாட்டு மீனவர்களுக்கு குளங்களில் மீன்பிடிக்கும் உரிமை என்பது அவர்களுக்கான பொருளாதார வளர்ச்சி மட்டுமின்றி நம் நீர்நிலைகளுக்கான பாதுகாப்பு.
நாம் தமிழர் கட்சி தனது ஆட்சி வரைவறிக்கையில் உள்நாட்டு மீனவர்களை ஒருங்கிணைத்து குழுமங்களை உருவாக்கி அக்குழுமங்களுக்கு ஏரி,கண்மாய்,குளம் ஆகியவற்றில் மீன்பிடிக்கும் உரிமை வழங்கப்படும் என உறுதியளித்திருக்கிறது.
@NaamTamilarOrg
#கனவு_கன்னியாகுமரி
#மக்களோடு_மரியஜெனிபர் #MariaJennifer #Manidhi #NaamTamilar
இளைஞர்கள் விவசாயத்தை விரும்பி செய்ய முன்வந்தாலும் இந்த அரசின் அமைப்பு வேளாண் விரோத அமைப்பாகத்தான் இருக்கிறது.
இந்த நிலை மாற, வேளாண்மையை முதன்மை பொருளாதாரமாக முன்வைக்கும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து வலுப்படுத்துங்கள்.
உங்கள் சின்னம் விவசாயி.
@NaamTamilarOrg
#கனவு_கன்னியாகுமரி
#மக்களோடு_மரியஜெனிபர் #MariaJennifer #Manidhi #NaamTamilar
நாகர்கோவிலில் ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம் என்ற பெயரில் இடம்பெயர்க்கப்பட்ட மக்களை அஞ்சுகாராமம் பால்குளம் பகுதியில் அடிப்படை வசதிகள் எதுவுமற்ற அடுக்குமாடி குடியிருப்பில் சிறைவைத்ததுபோல் வைத்திருக்கிறது அரசு.
அரசு மீதும் அமைப்பு மீதும் சினம் கொண்ட மக்கள் வாக்கு சேகரிக்க சென்ற நம்மிடம் தங்கள் ஆதங்கங்களையும் குற்றச்சாட்டுகளையும் கொட்டி தீர்த்தனர்.
இந்த நிலை மாற அடிப்படை அரசியல் அமைப்பு மாற்றமே ஒரே வழி என்பதையும் நாம் தமிழர் கட்சி அதை முன்வைத்து தான் உங்கள் வாக்குகளை கேட்டு வந்திருக்கிறோம் என்பதையும் மக்களிடம் விளக்கி கூறினோம்.
நம் மக்களின் இந்த நிலைக்கு காரணமானவர்கள் ஓட்டு கேட்க கூட இந்த பக்கம் போகமாட்டார்கள் என்பது தான் உண்மை. ஆனால் இந்த மக்களின் கோபம் மாற்றத்திற்கான வாக்குகளாக மாறும் காலம் வந்துவிட்டது.
@NaamTamilarOrg
#கனவு_கன்னியாகுமரி
#மக்களோடு_மரியஜெனிபர் #MariaJennifer #Manidhi #NaamTamilar
ஆதித்தமிழ்குடி மக்கள் வாழும் பகுதிகளில் சமுதாய தலைவர்கள் என்ற பெயரில் தேர்தல் நேரங்களில் மட்டும் பரபரப்பாக செயல்படும் சில அரசியல் தரகர்கள்,
தன்னை தலைவராக நம்பிய எளிய மக்கள் கூட்டத்தை 500க்கும் 1000த்திற்கும் பெரும் அரசியல்வாதிகளிடம் அடகுவைப்பதை தவிர சமுதாயத்திற்கு செய்தது என்ன?
இந்த சமுதாயத் தலைவர்கள் உண்மையிலேயே சமுதாயத்தின் நலனுக்காக செயல்பட்டிருந்தார்கள் என்றால் குறைந்தபட்சம் நம் மக்களின் அடிப்படை வசதிகளாவது நிறைவேறியிருக்குமே!
@NaamTamilarOrg
#கனவு_கன்னியாகுமரி
#மக்களோடு_மரியஜெனிபர் #MariaJennifer #Manidhi #NaamTamilar
இன்றையதினம் வாகன பரப்புரையானது கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியின் நெய்தல் பகுதிகளையொட்டி நடக்கவிருக்கிறது, பயணத்தை ஆரோக்கியம் பகுதியிலிருந்து துவங்கியிருக்கிறோம். பயணத்தை வலுசேர்க்கும் வகையில் திரளாக கலந்துகொண்ட நாம் தமிழர் உறவுகள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நன்றிகள்.
@NaamTamilarOrg
#கனவு_கன்னியாகுமரி
#மக்களோடு_மரியஜெனிபர் #MariaJennifer #Manidhi #NaamTamilar
மலர் விவசாயத்தை மேம்படுத்தாமல், மலர் விவசாயிகளை ஆதரித்து ஊக்குவிக்காமல்
கடந்த 15 ஆண்டுகளில் தோவாளையின் மலர் விவசாயத்தை படிப்படியாக அழிந்து தோவாளையை வெறும் மலர் சந்தையாக மட்டும் ஆக்கியிருக்கின்றனர் ஆட்சியாளர்கள்.
தோவாளையின் அடையாளத்தை மீட்டெடுக்க, 'நிலமும் வளமும் சார்ந்த தொழில் வளர்ச்சி' என்பதை தொழிற் கொள்கையாக கொண்ட நாம் தமிழர் கட்சியை கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி மக்கள் ஆதரிக்க வேண்டும்.
@NaamTamilarOrg
#கனவு_கன்னியாகுமரி
#மக்களோடு_மரியஜெனிபர் #MariaJennifer #Manidhi #NaamTamilar
பரப்புரை பயணங்களில் நம் மக்கள் இதுவரை ஆண்ட - ஆளும் கட்சிகளுக்கு எதிரான, கொதிப்பான மனநிலையில் இருப்பதை பார்க்க முடிகிறது.
மாற்றம் வேண்டுமெனில் மக்கள் தான் மாற்று அரசியலை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கருத்தோடு, நாம் தமிழர் கட்சி எவ்வாறு ஒரு சிறந்த மாற்று அரசியல் சக்தியாக இருக்கும் என்பதையும் விளக்கி வாக்குகளை சேகரிக்கிறோம்.
தொடர்ந்து எம் மக்களை அரசியல் படுத்துவோம். மக்கள் எங்கள் கைகளில் உறுதியாக அதிகாரத்தை பரிசளிப்பார்கள்.
@NaamTamilarOrg
#கனவு_கன்னியாகுமரி
#மக்களோடு_மரியஜெனிபர் #MariaJennifer #Manidhi #NaamTamilar