போன மாதம் என்னை நாய் கடித்து விட்டது. நேற்றுதான் கடைசி இன்ஜெக்ஷன் போட்டேன்.
அன்று மாலை நாய் கடித்த உடன், உடனடியாக, அதிகமான சோப்பால் காயத்தை கழிவி விட்டு, அரசு மருத்துவமனைக்குச் சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டேன். அப்போதே அந்த ரிஜிஸ்டரில் பார்த்தேன் 10 பேருக்கு மேல் அன்று நாயால் கடிபட்டு வந்திருந்தார்கள்.
திருமங்கலம் போன்ற ஒரு ஊரில் மட்டும் சராசரியாக தினமும் 10 பேருக்கு மேல் நாய் கடிக்கு ஆளாகிறார்கள். தமிழ்நாடு முழுவதும் நிச்சயம் ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான பேர் நாய் கடிக்கு ஆளாகிறார்கள்.
இதில் போதிய விழிப்புணர்வு இல்லாமல் சுண்ணாம்பு தடவினால் சரியாக போய்விடும் நாய் வளர்த்த வீட்டில் கஞ்சி வாங்கி குடித்தால் சரியாகப் போய்விடும் என்று கூட இன்னும் சிலர் கிராமத்தில் இருக்கிறார்கள். அதிர்ஷ்டவசமாக ரேபிஸ் நோய்க்கு பலர் தப்பி வருகிறார்கள். உலகத்திலேயே கொடுமையான மரணம் என்பது ரேபிஸ் நோய் வந்து இறப்பது தான்.
இந்த அளவிற்கு ஒவ்வொரு நாளும் நாய்க்கடி படுபவர்கள் அதிகம் இருந்தாலும், நாய்க்கு சோறு வைப்பவர்கள், அடுத்த தெரு நாய்க்கு பிஸ்கட் போடுபவர்கள் அதிகமாகிக் கொண்டே வருகிறார்கள்.
பாதுகாப்பிற்காக நாய் வளர்ப்பவர்கள் தவிர்த்து, பெரும்பாலான நாய் வளர்ப்பவர்கள்/ நாய்க்கு சோறு/ பிஸ்கட் போடுபவர்களை கவனித்து பார்த்தால் உளவியல் ரீதியாக,அவர்கள் கொஞ்சம் மற்றவர்களுடன் குறைவாக பழகுவது,அந்த தெருவில் தனித்து இருப்பது உறவினர் நண்பர்களிடமிருந்து ஒதுங்கி இருப்பது என்பது போன்ற காரணங்களும் இருக்கின்றன.
என்னை மதிக்க, என்னிடம் unconditional பாசம் காட்ட, இந்த நாய் ஒன்றுதான் இருக்கிறது என்பது அவர்களுடைய மனது. உலகில் வேறு யாரும் unconditional love யாருக்குமே தரமாட்டார்கள். நாய்கள் ஒன்றுதான் அப்படி ஒரு பாசத்தை காட்டுகின்றன.
ஆனால் அதற்காக ஏராளமானவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அறியாமையால் பலரது உயிர்களும் பறிபோகின்றன.
கைரேகைச் சட்டம் அமலில் இருந்த காலத்திலும், அரசியல் இயக்கங்கள் தடை செய்யப்பட்ட காலத்திலும் கூட இதுபோன்ற சுற்றறிக்கையை வட்டாட்சியர்கள் பிறப்பித்ததில்லை. ...Continued in comment..
#Qatar📷 mourns the #passing of His Highness the #Father Amir Sheikh Hamad bin Khalifa Al Thani, whose lifelong service and leadership helped shape the nation's modern history. As the country bids farewell to one of its most influential figures, prayers are offered that Allah grant him His boundless mercy, eternal peace and the highest place in Jannah.