மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (18.9.2026) தலைமைச் செயலகத்தில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத் தொடக்கம் மற்றும் செயல்படுத்துதல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (18.9.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத் தொடக்கம் மற்றும் செயல்படுத்துதல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில் இன்று (18.9.2026) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில், தமிழ்நாடு அரசால் சென்னையில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள OMR GCC வழித்தடத்தில் அமைந்துள்ள DLF Downtown தரமணி வளாகத்தில் முதலாம் ஆண்டு 250 நபர்களுக்கு உயர் மதிப்பு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலும், வரும் ஆண்டுகளில் விரிவாக்கம் மேற்கொள்ளும் வகையிலும் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட வால்கிரீன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அமைக்கவுள்ள தனது முதல் உலகளாவிய திறன் மையத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் தந்தை பெரியார் அவர்களின் 148-வது பிறந்தநாளை முன்னிட்டு, சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (17.9.2026) தலைமைச் செயலகத்தில், தந்தை பெரியார் அவர்களின் 148-வது பிறந்தநாளை முன்னிட்டு, மாண்புமிகு சட்டமன்றப் பேரவைத் தலைவர் திரு.ஜே.சி.டி.பிரபாகர், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், தலைமைச் செயலாளர் முனைவர் மு.சாய்குமார், இ.ஆ.ப., அரசு துறைச் செயலாளர்கள், காவல்துறை மற்றும் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (17.9.2026) தலைமைச் செயலகத்தில், தந்தை பெரியார் அவர்களின் 148-வது பிறந்தநாளை முன்னிட்டு, தந்தை பெரியார் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
#CMJosephVijay
வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் நீடுழி வாழ உளமார வாழ்த்துகிறேன்.
I extend my heartfelt birthday wishes to the Hon’ble Prime Minister of India Thiru. Narendra Modi avargal, who leads with dedication towards building a strong India.
I wholeheartedly wish you a long life filled with good health.
#CMJosephVijay
இங்கிலாந்து, இலண்டனில் இன்று (14.09.2026)அசோக் லேலண்ட் (Ashok Leyland) நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் திரு. தீரஜ் ஹிந்துஜா, ஃபினோலெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (Finolex Industries Limited) நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் திரு. பிரகாஷ் பி. சாப்ரியா, இயக்குநர் திருமதி ரீட்டா ஹிந்துஜா சாப்ரியா ஆகியோர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
இச்சந்திப்பில், ஆகஸ்ட் 2026-ல் நடைபெற்ற 'வெற்றி' (VETTRI) தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது மேற்கொள்ளப்பட்ட ரூ. 2,500 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) அடிப்படையில் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள், தமிழ்நாட்டில் ஹிந்துஜா குழும முதலீடுகளின் முன்னேற்றம் குறித்து திரு. ஹிந்துஜா அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் விளக்கினார். தமிழ்நாட்டில் தொடர்ந்து முதலீடு செய்வதிலும், வணிகத்தை விரிவுபடுத்துவதிலும் ஹிந்துஜா குழுமத்திற்கு உள்ள உறுதிப்பாட்டை விளக்கியதோடு, தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில், குறிப்பாகக் காற்றாலை மின்சக்தித் துறையில் முதலீடுகளை மேலும் அதிகரிப்பதில் இக்குழுவினர் ஆர்வம் தெரிவித்தனர்.
மேலும், தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் வணிக வாகனங்களின் ஏற்றுமதியை அதிகரிப்பது குறித்தும், வாகன உற்பத்தித் துறைக்கான ஏற்றுமதி மையமாக தமிழ்நாட்டின் பங்கை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இச்சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது.
இந்நிகழ்வின்போது இங்கிலாந்து நாட்டிற்கான இந்தியத் தூதர் திரு. குமரன் பெரியசாமி, IFS, திருமதி நிதி மணி திரிபாதி, இ.ஆ.ப., Minister (Economic), High Commission of India , London மற்றும் தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
#CMJosephVijay
இங்கிலாந்து, இலண்டன் நகரில் இன்று (14.09.2026), தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறையின் அடுத்த கட்ட வளர்ச்சியாக, திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.300 கோடி முதலீடு செய்து 400 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் ‘வில்சன் பவர் சொல்யூஷன்ஸ்’ (Wilson Power Solutions) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் குழுமத் தொழில்நுட்ப இயக்குநர் திரு. ஹரி கிருஷ்ணா மலேபதி, குழும நிதியியல் இயக்குநர் திரு. டென்னிஸ் சோர்பி ஆகியோரும், தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. தீபக் ஜேக்கப், இ.ஆ.ப. ஆகியோரால் கையெழுதிடப்பட்டு, ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், இங்கிலாந்து நாட்டிற்கான இந்திய தூதர் திரு. குமரன் பெரியசாமி, IFS, நிறுவனப் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
#CMJosephVijay
https://t.co/Z0AJxrwmX9 #ThalapathyVijay & Thala #AjithKumar create magic . Amazing camaraderie & friendship, that will create a new benchmark, after the deep friendship & bonding between #SuperStarRajinikanth sir & #KamalHaasan sir 👍❤️
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டில், 2026 மிச்செலின் லீ மான்ஸ் கோப்பைக்கான (2026 Michelin Le Mans Cup) கார் பந்தயத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
#CMJosephVijay