@hari_kishoreD First half superr but second half enaku pudikala work aagala and nothing exciting for me in second half
Overall good to theatrical watch. 💯♥️✨
🏠 20 வருடம் கழிச்சு Home Loan முடிஞ்சதும்... வீடு Free ஆ கிடைக்க ஒரு வழி இருக்கா?
இருக்கே. எப்படின்னு பக்கலாமா?
இத உங்களுடைய வீட்டு லோனுக்கு ஏத்த மாதிரி calculate பண்ண ஒரு calculator ரெடி பண்ணியிருக்கேன். யூஸ் பண்ணி பார்த்து, பிளான் பண்ணுங்க.
https://t.co/6Ii0mcfpaJ
₹1 கோடிக்கு ஒரு வீடு வாங்குறீங்கன்னு வச்சிக்கலாம்.
- 20% Down Payment ₹20 லட்சம்.
- Home Loan ₹80 லட்சம்.
- Interest 8%.
- Loan Period 20 வருடம்.
- EMI சுமார் ₹66,900.
20 வருடத்துல Bank க்கு EMI மூலமா மட்டும் சுமார் ₹1.61 கோடி கட்டியிருப்பீங்க.
இதுல...
- Principal ₹80 லட்சம்.
- Interest மட்டும் சுமார் ₹80.6 லட்சம்.
₹80 லட்சம் வாங்கி, Bankக்கு ₹1.61 கோடி திருப்பிக் கொடுக்கிறோம். Bank நமக்கு வீடு வாங்க Help பண்றாங்க. Free ஆ வாங்கி கொடுக்கலை மக்களே. 😄
சரி. Home Loan ஆரம்பிக்கிற அதே நேரத்துல ஒரு SIP யும் ஆரம்பிச்சா?
20 வருடம். வருடத்திற்கு சராசரியா 10% Return கிடைக்குது ன்னு ஒரு கணக்குக்கு எடுத்துக்கலாம்.
ஆனா இங்க ஒரு முக்கியமான Rule. நாம் SIP ல போட்ட பணத்தை கணக்கில் எடுத்துக்கக்கூடாது. நாம் போட்டது நம்முடைய பணம். அதற்கு மேல Investment சம்பாதிச்சு கொடுத்த Return மட்டும் வீட்டுக்கு செலவு செய்த பணத்தை Recover பண்ணணும்.
இப்ப கணக்கு interesting ஆ இருக்கும் பாருங்க.
💰 கணக்கு 1 - Principal மட்டும் recover செய்ய:
Loan Principal ₹80 லட்சத்தை Investment Return மட்டும் சம்பாதிக்கணும்ன்னா:
- இதுக்கு மாதம் சுமார் ₹15,400 முதலீடு பண்ணணும்.
- 20 வருடத்துல நாம முதலீடு செய்தது சுமார் ₹37 லட்சம்.
- 20 வருடம் கழிச்சு Investment Value சுமார் ₹1.17 கோடி.
இதுல நம்முடைய Investment ₹37 லட்சத்த கழிச்சா, அதற்கு மேல கிடைத்த Returns மட்டும் சுமார் ₹80 லட்சம்.
அதாவது Loan Principal க்கு சமமான Amount ஐ Investment Return சம்பாதிச்சிருக்கும்.
🏦 கணக்கு 2 - Interest மட்டும் recover செய்ய:
Bank க்கு கட்டிய Interest மட்டும் Investment Return ல திரும்ப வரணும்ன்னா.
Interest சுமார் ₹80.6 லட்சம்.
இதுக்கு மாதம் சுமார் ₹15,500 முதலீடு பண்ணணும்.
20 வருடத்துல நாம முதலீடு செய்தது சுமார் ₹37.2 லட்சம்.
Final Corpus சுமார் ₹1.18 கோடி.
இதுல நாம போட்ட ₹37.2 லட்சத்தை கழிச்சா...
Investment சம்பாதிச்ச Returns மட்டும் சுமார் ₹80.6 லட்சம்.
அதாவது Bank க்கு 20 வருடத்துல கொடுத்த Interest ஐ Investment Growth மட்டும் திரும்ப சம்பாதிச்சு கொடுத்திருக்கும்.
இது கொஞ்சம் நல்லா இருக்குல்ல?
🏠 கணக்கு 3 - Principal + Interest ரெண்டயுமே recover செய்ய:
Principal + Interest ரெண்டுமே Investment Returnல திரும்ப வரணும்ன்னா...
Bank க்கு EMI மூலமா மொத்தம் கட்டியது சுமார் ₹1.61 கோடி. அந்த ₹1.61 கோடியும் நம்முடைய Investment Amount லிருந்து வரக்கூடாது.
Return மட்டும் ₹1.61 கோடி இருக்கணும்.
- இதுக்கு மாதா மாதம் சுமார் ₹30,900 முதலீடு பண்ணணும்.
- 20 வருடத்துல நாம Pocket லிருந்து முதலீடு செய்தது சுமார் ₹74.2 லட்சம்.
- Final Investment Corpus சுமார் ₹2.35 கோடி.
இதுல நம்முடைய ₹74.2 லட்சம் அப்படியே இருக்கு. அதற்கு மேல Investment சம்பாதிச்ச லாபம் மட்டும் ₹1.61 கோடி.
அதாவது Bankக்கு EMI மூலமா கட்டிய Principal + Interest முழுவதையும் Investment Return ஈடு செய்திருக்கும்.
😄 அப்ப வீடு Free ஆயிடுச்சா?
ஒரு நிமிஷம். முக்கியமான Down Payment ₹20 லட்சத்தை மறந்துட்டோமே. வீடு வாங்க ஆரம்பிக்கும்போதே நம்ம Pocket லிருந்து ₹20 லட்சம் போயிருக்கு. அதையும் Investment Return மூலமா Recover பண்ணணும்னா...
Total Target:
₹20 லட்சம் Down Payment
₹80 லட்சம் Principal
₹80.6 லட்சம் Interest
= சுமார் ₹1.81 கோடி.
இந்த ₹1.81 கோடியும் Investment Return மட்டும் சம்பாதிக்கணும்னா மாதம் சுமார் ₹34,800 முதலீடு பண்ணணும்.
- 20 வருடத்துல நாம முதலீடு செய்தது சுமார் ₹83.5 லட்சம்.
- Final Corpus சுமார் ₹2.64 கோடி.
இதுல நம்முடைய ₹83.5 லட்சம் அப்படியே இருக்கும். Investment Growth மட்டும் சுமார் ₹1.81 கோடி.
இப்ப சொல்லலாம்... Down Payment + Principal + Interest எல்லாத்தையும் Investment Return Recover பண்ணிடுச்சு.
வீடு கிட்டத்தட்ட Free. 😄
கிட்டத்தட்டன்னு ஏன் சொல்றேன்?
Stamp Duty இருக்கு.
Registration இருக்கு.
Maintenance இருக்கு.
Property Tax இருக்கு.
Repairs இருக்கு.
Interior இருக்கு.
அதையும் சேர்த்து பாக்கனும்னா Calculator இன்னும் கொஞ்சம் வேலை செய்யணும்.
📊 இத Simple ஆ ஞாபகம் வச்சிக்கணும்னா:
20 வருடம், 10% Return illustration ல...
🔹 ₹80 லட்சம் Principal அளவுக்கு Return வேணும்னா மாதம் சுமார் ₹15,400 முதலீடு பண்ணனும்.
🔹 ₹80.6 லட்சம் Interest அளவுக்கு Return வேணும்னா மாதம் சுமார் ₹15,500 முதலீடு பண்ணனும்.
🔹 ₹1.61 கோடி Principal + Interest அளவுக்கு Return வேணும்னா மாதம் சுமார் ₹30,900 முதலீடு பண்ணனும்.
₹1.81 கோடி Down Payment + Principal + Interest அளவுக்கு Return வேணும்னா மாதம் சுமார் ₹34,800 முதலீடு பண்ணனும்.
இங்க ஒரு விஷயம் ரொம்ப முக்கியம். நாம பார்த்த இந்த Amount எல்லாமே Final Corpus Target கிடையாது. Investment ல நாம போட்ட பணத்தை கழிச்சப்புறம் கிடைக்கிற Profit மட்டும் இந்த Amount க்கு சமமாக இருக்கணும்னு கணக்கு போட்டிருக்கோம்.
💡 இதுல இருக்குற Lesson என்ன?
"EMI யே கஷ்டப்பட்டு கட்டுறோம். இதுல அதுக்கு மேல முதலீடு பண்ணுன்னா பணத்துக்கு எங்க போவேன்" ன்னு புலம்புறவங்களுக்கு:
₹66,900 EMI கட்டும்போது அது பெரிய Amount ஆ தெரியும். அதோட ₹15,000 அல்லது ₹30,000 முதலீடு பண்றது இன்னும் கஷ்டமா தெரியலாம். ஆனா Salary வருடா வருடம் Increase ஆகும்போது EMI பொதுவாக அதே Amountல இருக்கும்.
அப்ப SIP ஐ Step Up பண்ணிக்கணும்.
₹5,000 ல ஆரம்பிக்கலாம்.
அடுத்த வருடம் ₹7,500.
அதுக்கப்புறம் ₹10,000.
Bonus வந்தா Invest பண்ணலாம்.
இதுல முக்கியமானு மேட்டர் Amount மட்டும் கிடையாது. 20 வருடம் தொடர்ந்து Investment பண்ணிக்கிட்டே இருக்கனும். அதுதான் மேட்டர்.
⚠️ ஒரு Warning
நான் எடுத்த 10% Return Guarantee கிடையாது. Market Investmentல 10% ஒவ்வொரு வருடமும் கிடைக்காது. சில வருடம் 20% கிடைக்கும். சில வருடம் Negative ஆ இருக்கும். இந்த returns % அ நீங்க நீண்ட கால அடிப்படையில தான் பாக்கணும்.
20 வருடத்துக்கான annualised return 8% ஆ இருந்தா தேவையான SIP அதிகமாகும். 12%ஆ இருந்தா குறையும். Tax மற்றும் Investment Costம் Actual Result ஐ பாதிக்கும். அதனால இந்த Numbers ஐ Promise ஆ பார்க்காதீங்க. Concept புரிஞ்சிக்க ஒரு Illustration ஆ மட்டும் பாருங்க. "இந்தாளு சொல்ற 10% returns எங்க கிடைக்கிது" ன்னு என்ன கடிச்சி வைக்காதீங்க.
கடைசியா...
Home Loan எடுத்துட்டு EMI மட்டும் கட்டிக்கிட்டு இருக்காதீங்க. அதே நேரத்துல உங்களுக்காகவும் ஒரு Investment ஆரம்பிங்க. Bankக்கு Interest கொடுக்கிறோம். அது தவிர்க்க முடியாது. ஆனா அந்த 20 வருடத்துல Compounding அ நமக்காக வேலை செய்ய வைக்க முடியுமே.
20 வருடம் கழிச்சு...
- Home Loan Outstanding ₹0.
- வீடு முழுசா உங்களுடையது.
- Investment Corpusவும் உங்களுடையது.
அதுல கிடைத்த Return, வீட்டுக்காக நீங்கள் செலவு செய்த பணத்தையே ஈடு செய்திருந்தா...
அப்ப உங்க வீட்டைப் பார்த்து நீங்க சொல்லலாம்...
"இப்பதான் நீ உண்மையிலேயே Free ஆ கிடைச்ச மாதிரி இருக்கு" ன்னு. 😄
புரிஞ்சுதா மக்களே!!! 👍👍👍
கணக்கின் அடிப்படை:
₹1 கோடி வீடு, ₹20 லட்சம் Down Payment, ₹80 லட்சம் Loan, 8% வட்டி, 20 வருடம், EMI சுமார் ₹66,915. முதலீடு மாத இறுதியில் செய்யப்படுகிறது என்றும் 10% annualised return கிடைக்கிறது என்றும் illustrationக்காக எடுத்திருக்கிறேன். இங்கே recovery என்பது final corpus அல்ல; total investment contributionஐ கழித்த பிறகு கிடைக்கும் investment gain மட்டும்.
The moment someone supports LGBTQ+ people, throwing “gay, lesbian, bla bla” at them as an insult exposes the prejudice behind the argument.
Supporting LGBTQ+ people doesn’t mean forcing anyone to change their identity. It simply means believing that everyone deserves dignity, equality and the freedom to live without discrimination.
You can criticize a movie or its message but mocking an entire community or attacking those who stand with them is prejudice, not criticism. 🏳️🌈❤️
#Dorothy #LGBTQ #StopHomophobia
என் மூளைச் சிதைவைத் தடுக்க நான் கடைபிடிக்கும் வழக்கங்கள்:
• பேனா மற்றும் காகிதத்துடன் என் நாளைத் திட்டமிடுதல்
• ஹெட்ஃபோன்கள் இல்லாமல் உடற்பயிற்சி செய்தல்
• இயல்பாகவே என் கைபேசியை வீட்டில் விட்டுவிடுதல்
• ஒவ்வொரு காலையும் கையால் ஏதாவது 3 பக்கங்கள் எழுதுதல்
• ஒரு புத்தகத்தின் ஒரு அத்தியாயத்தைப் படித்தல்
• என் கைபேசியிலிருந்து தேவையில்லாத சமூக ஊடக செயலிகளை நீக்குதல்
• மனத்தூண்டல்களைத் தணிப்பதற்காக 10 நிமிடங்கள் அமைதியாக அமர்ந்திருத்தல்
• நாள் முழுவதும் நிஜ வாழ்க்கையில் மக்களுடன் பேசுதல்
• செயற்கை நுண்ணறிவு (AI) இல்லாமல் சிந்தித்து முடிவெடுத்தல், பின்னர் அவற்றைச் செயல்படுத்த செயற்கை நுண்ணறிவின் உதவியைப் பயன்படுத்துதல்.
நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் நண்பர்களே...
வாழ்க்கை சலிப்பாக இருப்பதாக நீங்கள் உணரும்போது...
・வாரநாட்களில் மதியம் திரைப்பட அரங்குக்குச் செல்லுங்கள்
・காலை 5 மணிக்கு உணவகத்திற்கு செல்லுங்கள்
・சூரிய உதயத்தில் வியர்வையை வெளியேற்றி, அதனுடன் உங்கள் விரக்திகளையும் கழுவி விடுங்கள்
・இரவில் 15 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள்
・உங்களைப் புரிந்துகொள்ளும் நண்பர்களுடன் உணவருந்துங்கள்
・உங்கள் கைபேசியை வீட்டிலேயே வைத்துவிட்டு, ஒரு காஃபேவில் அமர்ந்து படியுங்கள்
・ஒரு ஆடம்பரமான ஹோட்டலில் தனியாக பஃபே உணவு உண்ணுங்கள்
・தேவையற்ற பொருட்களை அகற்றி சுத்தம் செய்ய உறுதி கொள்ளுங்கள்
・அறியாத ஒரு ஊரில் திடீரென்று இறங்கி உலாவச் செல்லுங்கள்.
தினசரி வாழ்க்கையிலிருந்து கிடைக்கும் இந்தச் சிறிய இடைவேளைகள், வாழ்க்கையை 100 மடங்கு மகிழ்ச்சியாக மாற்றும்.