தமிழ் தேசிய பேரினத்தில் ஓராயிரம் பெரியார் இருக்க இந்த கன்னட ஈ வெ ரா நாயக்கரை ஏன் பெரியாராக ஏற்றுக்கொள்ள வேண்டும்?
1) தமிழர்களை தமிழ்மொழியை முட்டாள் என்று இகழ்த்தவன்
2) தமிழ் இலக்கிய நூல்களான திருக்குறளை ( திருவள்ளுவரை) மற்றும் சிலப்பதிகாரத்தை இகழ்ந்து பேசியவன்
3) கீழவெண்மணியில் தன் சொந்த சாதிகார முதலாளியால் அவர் பண்ணையில் வேலைபார்த்த 15 பேர் குடிசை வீட்டில் எரித்து கொல்லும்போது அந்த விசயத்த மூடி மறைக்க உதவியவன் இந்த திருட்டு ஈ வெ ரா
4) தன் சொத்தை காப்பாத்த தத்து வளர்த்த பெண்ணை மணர்ந்த அயோக்கியன்
5) சாதியை ஒழிக்கணும் என்பான் தன் பெயருக்கு பின்னால் மற்றும் கொயொப்பத்தில் ஈ வெ ரா நாயக்கர் என்று போட்டுக் கொள்வான். 11 வருடங்களுக்கு பிறகு கையொப்பம் சர்ச்சை பெரிதானதால் நாயக்கர் பட்டத்தை துறந்தவன்.
6) முக்கியமாக இவன் எல்லாரிடமும் உன் சாதி என்ன தெரிந்து கொள்வான்( உதாரணமாக திமுக துரைமுருகனிடம்)
7) தமிழை மலம் என்பான் தன் சொந்த தாய்மொழி தெலுங்கை திட்டி இருக்கானா? தமிழர்களை முட்டாள் என்பான் தெலுங்கர்களை முட்டாள் என்பானா?
8) இங்கு கட்சியில் திராவிடம் என்று பெயர் இருக்கும் அனைத்து தலைவர்களும் தெலுங்கு இனமே! ( எகா திமுக தேமுதிக மதிமுக)
9) தமிழர்கள் திராவிட என்ற போர்வையில் ஒழிந்து இருக்கும் தெலுங்கர்களால் வீழ்த்தப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்..
10) இனிமேலாவது யார் வேண்டுமானாலும் ஆளலாம் என்பதை விட்டுவிட்டு தமிழ் மண்ணின் மைந்தர்களை ஆள வையுங்கள்.
11) இந்த ஈ வெ ரா நாயுடுவை காட்டி இங்கு தமிழுக்கு போராடிய ஓராயிரம் தமிழ் பெரியார்கள் மூடி மறைக்கப்பட்டு விட்டார்கள்
12) முழித்துகொள் தமிழனமே . இங்கு தமிழன் ஆளாவிட்டால் தமிழ் இயற்கை கனிம வளங்களை யாரும் காப்பாற்ற முடியாது? ஆந்திரா ஓங்கோலை பூர்விகமாக கொண்ட தத்தி மு க ஸ்டாலின் தமிழகத்தை ஆள்வதால் அவனுக்கு தமிழ் கனிம வளங்கள் எப்படி சென்றால் என்ன?
அரசியல் பழிவாங்கும் நோக்கோடு சகோதரர் பி.ஆர். சுந்தரைக் கைதுசெய்வதா?
@CMOTamilnadu@TVKVijayHQ
ஆட்சி நிர்வாகத்தை விமர்சித்ததற்காக பங்குச்சந்தை முதலீட்டு ஆலோசகர் சகோதரர் பி.ஆர்.சுந்தர் அவர்களின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு, அரசியல் பழிவாங்கல் நோக்கோடு வழக்குத் தொடுத்து, கைதுசெய்திருக்கும் தவெக அரசின் செயல்பாடு மிக மோசமான நிர்வாக நடவடிக்கையாகும். தனிநபர் பகை தீர்க்க, மக்களுக்காக இயங்க வேண்டிய அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் முதல்வர் விஜய்யின் போக்கு வெளிப்படையான அதிகார முறைகேடாகும்
அரசையோ, அரசியல் இயக்கத்தையோ விமர்சித்துப் பேசுவதற்கு அரசியலமைப்புச்சட்டம் வழங்கியிருக்கும் கருத்துரிமை என்பது மிக மிக அடிப்படையான சனநாயக உரிமையாகும். அந்த அடிப்படை உரிமையையே முற்றாக மறுக்கும் வகையில், அதிகாரத்தைக் கொண்டு வழக்குகளைத் தொடுத்து அச்சுறுத்துவதும், மிரட்டுவதுமான அதிகார முறைகேட்டினை கடுமையாக எதிர்க்கிறேன்.
ஆகவே, சகோதரர் பி.ஆர். சுந்தர் மீது உண்மைக்குப் புறம்பாகத் தொடுக்கப்பட்டிருக்கும் வழக்குகளைத் திரும்பப் பெற்று, அவரை உடனடியாக விடுவிக்க வேண்டுமென தவெக அரசை நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
என் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
காவிரியில் நமக்கு தர வேண்டியது உபரி நீர் அல்ல; உரிமை நீர்! உரிய நீர்! என்பதை வலியுறுத்தியும்,
மேகதாட்டுவில் அணைக்கட்டியே தீர்வோம் என்ற கர்நாடக அரசினுடைய முடிவைக் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களின் தலைமையில் இந்த போராட்டம் நடக்கவிருக்கிறது.
நாள் 07-08-2026 வெள்ளிக்கிழமை நேரம் சரியாக பிற்பகல் 2:30 மணிக்கு
இடம்: சென்னை - எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு திடல் அருகில்
இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!
வணக்கம்!
காவிரி நதிநீர்ச்சிக்கலில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்?
@CMOTamilnadu@TVKVijayHQ
காவிரி நதிநீர்ச்சிக்கல் உச்சம்பெற்று, மேகதாதுவில் அணை கட்டுவதில் மிகுந்த முனைப்போடு, அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, கர்நாடக அரசும், அங்குள்ள எதிர்க்கட்சிகளும் ஒருமித்துச் செயல்பட்டு, முன்னெடுப்புகளைச் செய்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் அரங்கேறி வரும் அரசியல் காட்சிகள் மிகுந்த ஏமாற்றத்தைத் தருகின்றன. ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் சேர்ந்ததுதான் அரசாங்கம் எனும் அடிப்படையை மறந்து, இருவரும் பகைமை பாராட்டுவதும், காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுவதும், அரசியல் பழிவாங்கல் செய்வதும்தான் ஆட்சி நிர்வாகமா? மக்களுக்கான அரசியலா? என்ற கேள்வி எழுகிறது. தற்போது நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்குமான தலைகுனிவாகும்.
காவிரி நதிநீர் சிக்கல் தொடர்பாக திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்வைத்த சில கருத்துகள் தேவையற்றவை; எதிர்க்கட்சித்தலைவர் எனும் பதவிக்குரிய மாண்பை மறந்து, கண்ணியக்குறைவான கருத்துக்களை பொதுஅவையில் வைத்திருக்க வேண்டியதில்லை. அதேசமயம், இதனையே வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, கைதுநடவடிக்கை எனும் பெயரில் தவெக அரசு இறங்குவதும் ஏற்புடையதல்ல.
அரசியல் மேடைப் பேச்சுக்கெல்லாம், தவெக அரசு கைது நடவடிக்கை எடுக்குமென்றால், என் மீதும், என் தம்பி, தங்கைகள் மீதும் தனிநபர் விமர்சனமும், அவதூறும், ஆபாசத்தாக்குதலும் நாள்தோறும் தொடுக்கும் தவெகவினர் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்காதது ஏன்? அவ்வாறு அவதூறு பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் மாண்புமிகு நீதியரசரே, சட்ட நடவடிக்கை எடுக்கச் சொல்லி, உத்தரவு கொடுத்துவிட்டப் பிறகும், கைது செய்யாது விட்டிருப்பதேன்? அவர்கள் தவெகவின் ஆதரவாளர்கள் என்பதாலா? இன்று காலை 9 மணிக்குப் புகார் கொடுத்து, இரண்டு மணி நேரத்தில் முற்பகல் 11 மணிக்கெல்லாம் உதயநிதியைக் கைதுசெய்கிற காவல்துறையினர், என்னைப் பற்றி அவதூறுப் பரப்பியவர்களை இத்தனை நாட்களாகியும் கைதுசெய்யாது, காப்பாற்றுவது ஏன்? என்னைப் பற்றி மேடையில் ‘சீமான் பழைய சாமான்’ என்று தரம்தாழ்ந்து பேசிய மதிப்புமிகு லயோலா மணி மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? அப்படி பேசியதை ஊக்கப்படுத்தும் விதமாக பாடநூல் கழகத் தலைவராக அரசுப்பதவி கொடுத்து அழகுபார்ப்பதற்கு பெயரென்ன முதல்வர் அவர்களே? இதுதான் உங்களின் நாகரீக அரசியலா?
என் மீதும், என் தம்பிகள் மீதும் கடந்தகாலத்தில் முந்தைய திமுக அரசு பாய்ச்சாத வழக்குகள் இல்லை; ஏவிவிடாத கைது நடவடிக்கைகள் இல்லை. ஏறக்குறைய 200க்கும் மேற்பட்ட வழக்குகளை திமுகவின் ஆட்சியிலேயேதான் பெற்றிருக்கிறேன். எல்லாவற்றிற்கும் கைது என்று முந்தைய திமுக அரசு, கடைப்பிடித்த அதிகார அடக்குமுறையையே தவெக அரசும் கடைப்பிடிக்குமென்றால், இதுதான் சனநாயக ஆட்சியா? இதுதான் மக்களுக்கான மாற்று அரசியலா? மக்களுக்குத் துளியும் நலன்பயக்காத, தரம்தாழ்ந்த அரசியல் நடைபெற்று வருவதைப் பார்க்கிறபோது மனவலியைத் தருகிறது. முந்தைய திமுகவின் ஆட்சிபோலவே, எல்லாவற்றிற்கும் கைது என தவெகவின் அரசு கிளம்புவது துளியும் சகிப்புத்தன்மையற்ற போக்காகும்.
மேடைதோறும் திமுகவை தீயசக்தியென விமர்சித்துவிட்டு, திமுக கடந்த காலத்தில் செய்த கொடுங்கோன்மையை நிகழ்காலத்தில் தவெக அரசு கட்டவிழ்த்துவிடுவது எந்தவிதத்தில் மாற்று அரசியலாகும்? திருவைகுண்டம் தொகுதியின் தவெகவின் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மீதும், இன்னபிற தவெகவின் நிர்வாகிகள் மீதும் பாலியல் புகார்கள் பொதுவெளியில் முன்வைக்கப்பட்டு, இதுவரை விசாரணை செய்யக்கூடாத நிலையில், இந்த விவகாரத்தில் மட்டும் இவ்வளவு வேகம் காட்டுவதேன்? காவிரி நதிநீர் விவகாரத்தில் காட்டாத வேகத்தை, கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்?
காவிரிப்படுகையில் குறுவை சாகுபடிப் பொய்த்து, சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகியிருக்கும் நேரத்தில், அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, காவிரி நதிநீர் விவகாரத்தில் செய்ய வேண்டிய ஆக்கப்பூர்வ முன்னெடுப்புகளைச் செய்யாது, தவெக அரசு தான்மையுடன் வறட்டுத்தனமான செயல்பாடுகளில் ஈடுபட்டு, தமிழ்நாட்டின் கவனத்தை ஒட்டுமொத்தமாகத் திசைதிருப்பி இருப்பது வெட்கக்கேடானது. காவிரி நதிநீர் விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு ஆளுங்கட்சி காட்டுவதும், காவிரிக்காக தீவிரமாக போராட வேண்டிய சமயத்தில் எதிர்க்கட்சியான திமுக கைதுக்கு எதிராக போராடிக் கொண்டிருப்பதுமான தமிழ்நாட்டின் அரசியல் நிலை சாபக்கேடானதாகும்.
சகிப்புத்தன்மையே சனநாயகத்திற்குத் தேவையான அடிப்படை என்பதை மறந்து, அரசியல் மேடைகளில் பேசுவதற்கெல்லாம் கைது நடவடிக்கை என்பதை எந்த அரசு செய்தாலும் அது மிகத்தவறானது; மேடைகளில் தவறாகப் பேசினால், அவதூறு வழக்கு தொடுக்க வேண்டுமே ஒழிய, எடுத்த எடுப்பிலேயே கைதென இறங்குவது மக்களாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என தவெக அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களின் மேடை பேச்சு இல்லை என்றால் சமூக வலைதளங்களில் பார்வையாளர் விகிதாச்சாரமே குறைந்துவிடும்
இரண்டு மாதங்களுக்குப் பின் மீண்டும் அதே சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் கொண்ட அனல் பேச்சு ...
கொல்லிமலையையும் அதைச் சுற்றி அமைந்த வளப்பூர், வாழவந்தி, திண்ணனூர், சேலூர், அரியூர், குண்டூர், தேவானூர், குண்டுனி, ஆலந்தூர், திருப்புலி, எடப்புலி, சித்தூர், பைல், பெரக்கரை உள்ளிட்ட 14 மலைநாடுகளை அரசாண்ட மாவீரன்...!
புறநானூறு, நற்றிணை, அகநானூறு, குறுந்தொகை, சிறுபாணாற்றுப்படை உள்ளிட்ட
சங்கத்தமிழ் இலக்கியங்கள் போற்றி புகழும் பெருவீரன்..!
இல்லை என்று வந்த புலவர்களுக்கும், பாணர்களுக்கும், இசைவாணர்களுக்கும்
அள்ளிக்கொடுத்து தமிழ் மண்ணில் நிலைத்த வள்ளல்..!
விற்போரில் சிறந்து விளங்கிய
வீரத்தமிழ்மகன் வல்வில் ஓரியின் பெரும்புகழ் போற்றுவோம்!
"உடம்பு முடியாத குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஐபிஎல் போட்டியைப் பார்க்க எந்தத் தகப்பனாவது போவானா? இவனிடம் அமைச்சர் பதவியைக் கொடுத்துள்ளீர்களே, என்ன லட்சணத்தில் இவன் நிர்வாகம் செய்வான்? குழந்தைக்குத் தகப்பனாக இருக்கத் தகுதியற்றவனை எப்படி அமைச்சர் ஆக்கினீர்கள்? மாத்திரையை தண்ணீரில் போட்டாலே கரைந்துவிடும். அதை ஏன் கடனட்டை வைத்து நசுக்க வேண்டும்? பிறகு 500 ரூபாயை வேறு எடுக்கிறார். இதற்கும் மாத்திரைக்கும் என்ன சம்பந்தம்?" - சீமான்
#Seeman | #SarathKumar | #TVK | #NTK
மாற்றம் என்பது சொல் அல்ல; செயல்!
மாறுவோம்!மாற்றுவோம்!
இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
புரட்சிகர அரசியலை நோக்கி
நாம் தமிழர் கட்சியில் புதிய உறவுகள் இணைந்த விழா
பல்லாவரம் | 02-08-2026
https://t.co/ydDyXaft0J
"சீமான் 'பென்ஸ் கார்' வாங்கிட்டாருன்னு சொல்றாங்க.."
'திரள்நிதி' காசுல ஒரு டீ கூட குடிச்சது இல்லடா.. என் மருமகன் வாங்கி கொடுத்த காருடா அது.. தன் மீதான விமர்சனங்களுக்கு சீமான் விளக்கம்!
#Seeman | #NTK | #PolimerNews