"மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயரை குறிப்பிட்டு கட்சிக்கு வாங்கப்படும் நன்கொடைகள் குறித்து பேசினார். நன்கொடை என்பது அகில இந்திய அளவில் பாஜக மற்றும் காங்கிரஸ் போன்ற கட்சிகளும் வாங்கியுள்ளன. அதற்கு வருமான வரி கட்டியிருப்பார்கள். அது அவர்களின் வங்கிக் கணக்கில்தான் இருக்கும். அதை லஞ்சப் பணமாக உருவகப்படுத்துவதே தவறு. அதை அவைக் குறி��்பிலிருந்து நீக்க வேண்டும்." - ஓ.பன்னீர்செல்வம்
#OPanneerSelvam | #DMK | #AadhavArjuna | #TVK | #TNAssembly
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை உண்மை உணர்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் அனைவரின் ஒவ்வொரு வாக்கையும் விலைமதிப்பற்ற நம்பிக்கையாக நான் கருதுகிறேன்.
இப்போது வரை கிடைத்துள்ள புள்ளிவிபரங்களின்படி தி.மு.க. கூட்டணிக்கு 1 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்குகள் கிடைத்துள்ளன. இம்மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியானது, நம்மை விட 17.43 இலட்சம் வாக்குகளை மட்டுமே கூடுதலாகப் பெற்றுள்ளது. நமக்கும் அவர்களுக்குமான வாக்கு விழுக்காடு வேறுபாடு என்பது 3.52 விழுக்காடு மட்டுமே. என்னைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டு மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை வலிமையானதாகவே கருதுகிறேன்.
நமக்கு வாக்களித்த மக்களுக்கு நேரடியாகச் சென்று நன்றி தெரிவிக்கும் கடமையை நாம் எப்போதும் செய்து வருகிறோம். அந்த வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும், உடனடியாக வாக்களித்த மக்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்��� வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மக்களாட்சியில் மக்களே நம் வணக்கத்துக்குரியவர்கள். அவர்களுக்காகவே நாம் கட்சி நடத்துகிறோம். அவர்களுக்காகவே நாம் அரசியலில் இயங்குகிறோம். எனவே, அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிக்க நேரில் செல்லுமாறு அனைத்து வேட்பாளர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகம் ஆறு முறை ஆட்சியில் இருந்துள்ளது. நாம் பார்க்காத வெற்றியும் இல்லை; நாம் சந்திக்காத தோல்வியும் இல்லை. அரசியல் பொதுவாழ்வில் கொள்கையைக் காக்கும் பயணத்தில் நமது கொள்கை தோல்வி அடைந்துவிடக் கூடாது என்பதில்தான் நாம் எப்போதும் கவனமாக இருப்போம். வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும் அதனைச் சமமாகக் கருதி தனது இலட்சியப் பயணத்தை நடத்துபவர்கள்தான் கழக உடன்பிறப்புகள். அதனால்தான் முக்கியமான மாநாடுகள், பொதுக்கூட்டங்களில் பேசும்போத��ல்லாம், தமிழ்நாடு முழுமைக்குமான தொண்டர்கள் அனைவருக்கும் வணக்கம் வைத்து விட்டுத்தான் நான் தொடங்குவேன். இயக்கத்தின் இரத்த நாளங்கள், வேர்கள் நீங்கள்தான்.
எனக்கு ஆறுதல் சொல்லி பலரும் குறுஞ்செய்தி அனுப்பி வைத்து வருகிறீர்கள். உங்களால் உருவாக்கப்பட்ட எனக்கு, உங்களது வலிமையால் வலிமை பெற்ற எனக்கு நீங்கள் உடனிருக்கும் வரை என்ன கவலை? நாம் அனைவரும் தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான ���ன்பு உடன்பிறப்புகள். அந்த உணர்வோடு தொடர்ந்து நாம் பயணிப்போம்.
உங்கள் உழைப்பால் விளைந்த அறுவடைதான் 1.54 கோடி வாக்குகள். உங்கள் உழைப்புக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்? தலைமைத் தொண்டன் என்ற உணர்வோடு நாம் தொடர்ந்து பயணிப்போம்.
ஆளும் கட்சியாக இருந்தால் மக்களுக்கான திட்டங்களைத் தீட்டுவோம். எதிர்க்கட்சியாக இருந்தால் மக்களுக்கான கோரிக்கைகளுக்காகவே போராடுவோம். அந்த வகைய���ல் இப்போது வலிமையான எதிர்க்கட்சியாக இருந்து மக்களுக்கான அரசியலை நாம் தொடர்வோம்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தமிழினத் தலைவர் கலைஞர் வழித்தடத்தில், நூறாண்டு கண்ட திராவிடப் பேரியக்கத்தின் கொள்கைகளைச் செயல்படுத்த, இனம் - மொழி - நாடு காக்கும் பயணத்தைத் தொடர்வோம். நமது பயணத்தில் எவரைய���ம் பின்தங்க நான் விட மாட்டேன். மீண்டும் வெல்வோம்!
தந்தை பெரியாரை நமக்குத் தந்த ஈரோடு, வரும் தேர்தலிலும் பெருவெற்றியைத் தரும்!
⚠️ தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்த அனைவரும் சேர்ந்து அமைத்துள்ளதுதான் NDA கூட்டணி. பா.ஜ.க. உள்ளே புகுந்த எந்த மாநிலமும் வளர்ந்ததில்லை என்பதுதான் அவர்களின் ஒரே record!
⚠️ #NEET, #CAA, #NEP, #கீழடி, கோவை - மதுரை மெட்ரோ மறுப்பு, வரிப்பகிர்வில் வஞ்சனை என இவர்களிடம் இருப்பதெல்லாம் த��ரோகப் பட்டியல்தான்!
🌄 ஆனால், நம்மிடம் இருப்பது சொல்லித் தீராத சாதனைப் பட்டியல், இன்னும் நாம் செய்யவுள்ள வாக்குறுதிகளின் பட்டியல்.
🌄 #DravidianModel வளர்ச்சித் திட்டங்களைப் பட்டியலிட்டுச் சொல்வோம்! #DMKManifesto2026 அறிவிப்புகளை வீடுதோறும் கொண்டுசேர்த்து வெல்வோம்!
#ErodeWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK
கழகத் தலைவரின் வழிகாட்டுதலின்படி, திராவிட மாடல் ஆட்சி தொடர்ந்திடக் கழகத் துணைப் பொதுச்செயலாளர் திருமிகு. @KanimozhiDMK M.P அவர்கள் தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்குகிறார்.
தி.மு.கழகத்தின் நல்லாட்சி தொடரட்டும்; தமிழ்நாடு செழிக்கட்டும்! 🌄
#VoteForDMK
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மண்ணில் தி.மு.கழகத்தின் பெருஞ்சேனை இன்று திரள்கிறது. தென் மண்டல வாக்குச்சாவடி குழுவினருக்கான பயிற்சி மாநாடு மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் தலைமையில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய அயராது உழைப்போம்!
#ஸ்டாலின்_தொடரட்டும்
இளையோர் மற்றும் எளியோருக்கு ஊக்கச் சக்தியாக, உதவிடும் உடன்பிறப்பாக விளங்கும் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! 💐
#HBDUdhay
கொள்கைப் பற்றோடு உழைப்பிலும் உயர்ந்து வரும் உதயநிதிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
இளைஞரணிச் செயலாளராக - விளையாட்டுத் துறை அமைச்சராக - மாண்புமிகு துணை ம���தலமைச்சராக நீ ஆற்றிவரும் பணிகளை மக்களும் கழகத்தினரும் பாராட்டிச் சொல்வதைக் கேட்கும்போது தந்தையாக மட்டுமல்ல தலைவனாக மகிழ்ச்சி அடைகிறேன்!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைத் தொண்டனாக நான் உனக்கு அறிவுறுத்துவது,
காட்சிக்கு எளியனாக, கடுஞ்சொல் சொல்லாதவனாக, மக்களின் அன்புக்குரியவனாக,எப்போதும் அவர்களுக்காகக் களத்தில் நிற்பவனாக நீ திகழ வேண்டும்.
இளைஞர்களிடம் திராவிட இயக்கக் கருத்தியலைத் தொடர்ந்து விதைத்து, அவர்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ வேண்டும்!
@Udhaystalin #HBDUdhay