🔔 | காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால் அறிவுறுத்தலின்படி,
• தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநகர காவல் ஆணையரகங்களிலும் உள்நாட்டு கண்காணிப்பு பிரிவுகள் (இன்டெர்னல் விஜிலன்ஸ் செல்ஸ்) அமைக்கப்பட்டுள்ளன !
வாக்களிக்க பூத் ஸ்லிப் வரவில்லையா...? கவலை வேண்டாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள விபரங்களை பார்த்து உங்களுடைய பூத் ஸ்லிப் டௌன்லோட் செய்துகொள்ளுங்கள்
https://t.co/EmTkjRT3Kt
Captcha Code பார்த்து சரியாக பதிவிட்டு தேடவும்
உங்களுடைய விபரங்கள் கிடைக்கும்.
#VoteForTVK#VoteForWhistle
மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன?
ஜனநாயகத்தின் நான்காவது தூணான இதழியல் துறைக்கு உரியதான பத்திரிகை சுதந்திர தர்மம் காக்கப்பட வேண்டும். நூற்றாண்டு காணும் விகடனின் இணையத்தளப் பக்கம் முடக்கப்பட்டதற்கு ஒன்றிய அரசுதான் காரணம் என்கிற கருத்து நிலவுகிறது. பத்திரிகை, ஊடகங்களால் வெளியிடப்படும் கருத்துகள் தவறானவையாகவோ, குற்றம் சுமத்துபவையாகவோ இருந்தால் நீதிமன்றம் மூலம் தீர்வு காண வேண்டுமே தவிர, கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் வகையில் செயல்படுவது, அரசியல் சாசன உரிமையைக் கேள்விக்குறி ஆக்குவதன்றி வேறென்ன?
மாநில மொழிக் கொள்கைக்குச் சவால் விடுத்து, தமிழகத்திற்கு நிதி ஒதுக்கமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிப்பதும், விகடன் இணையத்தளப் பக்கத்தை முடக்கியதும் ஜனநாயகத்திற்கு எதிரான, கண்டனத்திற்கு உரிய ஃபாசிச அணுகுமுறையே.
ஃபாசிச அணுகுமுறைகளை எந்த வடிவத்தில் யார் கையிலெடுத்தாலும் அது ஒன்றிய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் மக்கள் பக்கம் நின்று தமிழக வெற்றிக் கழகம் எந்நாளும் தீர்க்கமாக எதிர்க்கும்.