Heartfelt congratulations to Tamilaga Vettri Kazhagam led by CM Vijay avl on their by-election victory, from AnbudanGautami💐
Wishing you every success in honouring the people’s trust and serving their welfare.
#TVK#Vijay#ByElection#AnbudanGautami
வெற்றித் தலைவரின் ஐந்து மாத நல்லாட்சிக்கு மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்
வெற்றியே சாட்சி !
தீயசக்தியும்,தீர்ந்துபோன சக்தியும் மீண்டும், மீண்டும் மக்களால் வீழ்த்தப்படுவது உறுதி!
மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் மதசார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் திருமதி மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோர் வெற்றி பெற்று உள்ளனர்.
வாகை சூடிய அவர்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக வெற்றி கழகத் தலைவர் @TVKVijayHQ , ஜோசப் விஜய் @CMOTamilnadu அரசின் மீதான நம்பிக்கையை இரு தொகுதிகளிலும் வாக்காளப் பெருமக்கள் வெளிப்படுத்தி உள்ளனர்.
மதுராந்தகம், தாராபுரம் வாக்காள பெருமக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
#vaiko #mdmk #TVKVijay
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல்களில்,மாண்புமிகு தமிழக முதலமைச்சர்,தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்,திரு. @TVKVijayHQ அவர்களின் மீது முழு நம்பிக்கை வைத்து, தவெக-விற்குப் பெருவாரியான வாக்குகளை அளித்து வெற்றி பெறச் செய்த தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி..
களத்தில் நின்று,இரவு பகல் பாராமல்,தவெக-வின் வெற்றிக்காகக் கடுமையாக உழைத்த நமது கழகத் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும்,கூட்டணிக் கட்சியினருக்கும், முகவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் நன்றிகளும்..
#TVK #CMJosephVijay