பாஜக தலைமையிலான மத்திய அரசு ஒருபோதும் விவசாயிகளை கைவிடாது!!
தமிழக வ���வசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் நோக்கத்தில் தமிழகத்தில் இருந்து ஒரு குவிண்டாலுக்கு ரூ.1,545/- என்ற விலையில் 96,879 டன் தோத்தாபுரி மாம்பழங்களும், மொத்த ஆதரவு விலை ரூ.1,049/- கோடி என்ற மதிப்பில் 8,226 டன் கொப்பரைத் தேங்காய���ம் கொள்முதல் செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழக விவசாயிகளின் நலன் காக்க உரிய நேரத்தில் இத்தைகைய நடவடிக்கை மேற்கொண்ட மாண்புமிகு பாரத பிரதமர் திரு. @narendramodi அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு. @ChouhanShivraj அவர்களுக்கும் தமிழக விவசாயிகள் சார்பில் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
காஷ்மீர் மாநிலத்திற்கென தனி கொடி, தனி பிரதமர், தனி சட்டம் இருப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு மட்டுமல்ல, இறையாண்மைக்கும் எதிரானது என உரக்கக் கோரி காஷ்மீர் மாநிலத்தில் அமலில் இ���ுந்த ஆர்டிகள் 370 சிறப்பு பிரிவை நீக்கக்கோரி காஷ்மீர் மாநிலத்திற்குள் நுழைந்து ஜனநாயகப் போ��ாட்டத்தை நடத்தி கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போதே உயிரிழந்த சுதந்திர பாரதத்தின் முதல் பலிதானி...
இமயம் முதல் குமரி வரை பாரதம் ஒரே நாடு என்கிற இறையாண்மை தத்துவத்தை தீவிரமாக முன்னெடுத்துச் சென்றவர்.
பாரதிய தன்மையோடு சுயராஜ்ய சிந்தனையாடு சுதந்திர பாரதத்தில் ஓர் அரசியல் இயக்கம் இந்த தேசத்தின் வளர்ச்சிக்காக தற்சார்பு தன்மையோடு செயல்பட வேண்டும் என்கிற சிந்தாந்த அடிப்டை���ில் பாரதிய ஜனசங்கத்தை நிறுவியவர்...
ஒரே நாடு ஒரே சட்டம் என்பதே இந்த தேசத்தின் அரசியலமைப்பின் அடிப்படை சாராம்சமாக இருக்க வேண்டுமென்பதை தன் வாழ்நாள் முழுவதும் வலியுறுத்தி அதற்காக போராடி உயிர்நீத்த டாக்டர் ஷ்யாம் பிரசாத் முகர்ஜி அவர்களின் பிறந்த தினத்தில் அவரது தியாகத்தையும், சேவைகளையும் நினைவுகூர்ந்து போற்றி வணங்குகிறேன்.
தமிழக ஆளுநர் மேதகு திரு.
ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் அவர்கள் நேற்றைய தி��ம் மதுரைக்கு சென்றிருந்த போது வைகை ஆறு நீரின்றியும், பராமரிப்பின்றியும் வறண்ட பாலை நிலம் போலும், சுகாதாரமற்ற நிலையிலும் இருப்பதைக் கண்டு அதிர்ந்து போய் ஆளுநர் அவர்கள் வைகை ஆற்றைப் பார்த்து பேரதிர்ச்சி அடைந்து, 'ஆறு இருக்கிறது, நீர் எங்கே?' என்று கேட்டு வைகை நதியை மீட்டெடுக்குமாறு இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்து அறிவுறுத்தியுள்ளார். வைகை ஆற்றை மீட்க யாரும் முன்வராவிட்டால் ஆளுநர் அலுவலகம் தானே களமிறங்கும் என்று இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். இவ்விஷயம் நதிகள் பாதுகாப்பு, நீர் மேலாண்மை, சுற்றுச்சூழல் பராமரிப்பு ம��்றும் எதிர்கால சந்ததிகளின் நலன் சார்ந்த வரவேற்கத்தக்க ஒரு நல்லெண்ண அடிப்படையிலான முன்னெடுப்பாக புரிந்துகொள்ள வேண்டியதாகும்.
ஆனால் தமிழக சட்டத்துறை அமைச்சர் திரு.நிர்மல்குமார் அவர்கள் அரசின் திட்டங்களை ஆய்வு செய்யும் அதிகாரம் ஆளுருக்கு இல்லை என்று கூறி ஆளுநர் பொறுப்பின் மாண்பை அவமதித்துள்ளார்.
தவெக ஆட்சிக்கு வந்த உடன் அக்கட்சியின் நிர்வாகிகள் அரசு அலுவலகங்களுக்கு ச���ன்று ஆய்வு என்கிற பெயரில் ரீல்ஸ் எடுத்து நடத்திய கேளிக்கூத்துக்களை எல்லாம் தமிழக சட்டத்துறை அமைச்சர் மறந்து விட்டாரா?
ஆளுங்கட்சியின் நிர்வாகிகள் அரசு அலுவலகங்களுக்கு சென்று ஆய்வு நடத்திய போது அமைதியாக இருந்த சட்டத்துறை அமைச்சர் அரசின் திட்டங்களை ஆளுநர் ஆய்வு செய்யும் போது மட்டும் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை விடலாமா?
மேலும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் திரு.உதயநிதி ஸ்���ாலின் அவர்கள் ஆளுநருக்கு எதிராக கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
அரசியல் அறத்தை சீரழித்த திமுக ஆளுநரின் அதிகாரம் குறித்து பேசுவது அபத்தமானது.
திமுக ஆட்சியில் நாள்தோறும் நடந்தேறிய கொலை, கொள்ளை, பெண்களுக்கு ��திரான பாலியல் வன்கொடுமைகள் தவெக ஆட்சியிலும் நாள்தோறும் நடந்தேறிக் கொண்டுதான் இருக்கிறது.
பெண்களின் பாதுகாப்பையும், தமிழகத்தின் அமைதியையும் உறுதி செய்ய மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆளும்கட்சியும், எதிர்கட்சியும் சட்டமன்றத்தில் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை முன் வைக்காமல் ஆளுநருக்கு எதிரான விமர்சனங்களை ஆவேசமாக முன்வைப்பதை பார்க்கும் போது...
திமுக ஆட்சியில் ��டந்த முறைகேடுகள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கும் நேரத்தில்...
தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து தமிழக மக்கள் உச்சகட்ட விரக்தியில் இருக்கும் நிலையில்...
தமிழக மக்களின் கவனத்தை திசை திருப்ப ஆளும்கட்சி தவெகவும், எதிர்கட்சி திமுகவும் ஆளுநருக்கு எதிராக அறிக்கைப் போர் தொடுப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அரசின் திட்டங்களை ஆளுநர் ஆய்வு செய்வது அரசியல் சாசனத்திற்க�� உட்பட்டதே.
அரசின் திட்டங்களை ஆளுநர் ஆய்வு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் யாரென்று பார்த்தால் தங்கள் ஆட்சியின் தவறுகளை திருத்திக் கொள்ள மனம் வராதவர்களும், முன்வராதவர்களும் தான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
தமிழகத்தில் கடந்த 6 நாட்களில் மட்டும் 25 படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. சட்டம் ஒழுங்கை காப்பாற்ற காவல்துறையை நேரடி கண்காணிப்பில் வைத்திருக்கிற நீங்கள் எடுத்த நடவடிக்கைகள் என்ன? தமிழக முதல்வர் திரு.ஜோஸப் விஜய் அவர்களே ப��ில் சொல்லுங்கள்? TVKVijayHQ
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த, தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பால��ுருகன் மற்றும், ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த தமிழக வெற்றிக்கழக நிர்வாகி ஜெயபால் இருவரும், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை வேலை வாங்கி தருவதாகக் கூறி ஏமாற்றி, கூட்டு பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ள செய்தி மிகுந்த அதிரச்சியளிக்கிறது.
பெண்கள் பாதுகாப்பு குறித்துத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய தவெக தலைவர் திரு @TVKVijayHQ அவர்கள், தனது கட்சியினரே குற்றச் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்? மாற்று அரசியல் என்று கூறி ஆட்சிக்கு வந்த தவெக, இன்று திமுகவின் பாதையிலேயே பயணிக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
குற்றவாளிகள் இருவர் மீதும், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேலும், இது போல பெண்கள் பாதுகாப்பு கவலைக்குள்ளாகும்படியான சம்பவங்கள் நடைபெறாதவாறு, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும், தவெக அரச��� வலியுறுத்துகிறேன்.
நடிகரும், கார் பந்தய வீரருமான திரு. அஜித் குமார் அவர்களது தாயார், திருமதி. மோகினி அவர்கள், வயது மூப்பின் காரணமாக கா���மான செய்தி, மிகுந்த வருத்தமளிக்கிறது.
இந்தத் துயரமான நேரத்தில், திரு. அஜித் குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது தாயார் ஆன்மா இறைவன் திருப்பாதங்களை அடைய வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
Today marks a historic milestone as our Hon PM Thiru @narendramodi avl completes 12 glorious years since taking charge as our country’s Prime Minister in 2014.
These 12 years have been a golden era of corruption-free, inclusive, and development-oriented good governance, dedicated to eradicating poverty and empowering the marginalised.
The past decade has seen monumental reforms in our laws and governance frameworks, always ensuring that the interests and welfare of the people of India are put first.
With a zero-tolerance policy against terrorism and modernised defence systems, our Hon PM has ensured that India’s borders remain safe and the nation remains completely secure from within.
India’s global stature has grown immensely, and we have emerged as a reliable global partner, always extending a humanitarian hand to help other countries in times of distress and natural calamities.
Wishing our Hon PM many more glorious years of dedicated service to our great nation as we continue our march towards a strong and self-reliant India.
கர்நாடகாவில் சித்தராமையா @CMofKarnataka அவர்கள் தலைமையிலான காங்கிரஸ் அரசு மூலம் திரும்பப் பெறப்பட்ட இந்த வழக்குகளில் ஒரு முக்கியமான ஒற்றுமை உள்ளது. அது யாதெனில் வகுப்புவாத கலவரங்கள், உபா (UAPA), காவல்துறையினர் மீதான கும்பல் தாக்குதல்கள், கொலை முயற்சி, மற்றும் அரசு ஊழியர்களை தாக்கியது உள்ளிட்ட கடுமையான பிரிவுகளில் தொடர்புடைய சிறுபான்மையினர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ஆகும்.
இன்று வெளியாகியுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுக��ில், வெற்றி பெற்றுள்ள அனைத்து மாணவ மாணவியருக்கும், எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எதிர்பார்த்த தேர்வு முடிவுகள் கிடைக்கப் பெறாத மாணவ, மாணவியர் சோர்ந்து போகாமல், மீண்டும் நன்றாகப் படித்து வெற்றி பெற வாழ்த்துக்கள்.
அனைத்து மாணவர்களுக்கும் ஒரு சிறப்பான எதிர்காலம் அமையவும், பல்வேறு துறைகளில் சாதனையாளர்களாக உருவாகவும், இறைவனை வேண்டிக் கொள்கிறேன���.
वर्ष 2014 से हम अपनी नीतियों और कदमों के माध्यम से समाज के हर वर्ग और हर क्षेत्र की सेवा कर रहे हैं।
किसान, गरीब, महिलाएं, युवा और MSMEs हमारे शासन ढांचे के मूल केंद्र में हैं।
पूछना चाहती हूँ :
* क्या 58 करोड़ जनधन खाते अडानी/अंबानी के लिए हैं?
* 57 करोड़ मुद्रा लोन खाते … किसके लिए हैं?
* पीएम विश्व���र्मा योजना, पीएम इंटर्नशिप योजना … किसके के लिए हैं?
* ई-श्रम कार्ड, जी राम जी अधिनियम (जो बिना किसी रिसाव के 125 दिनों का रोजगार प्रदान करता है), आयुष्मान भारत …. किसके लिए हैं?
* 9 करोड़ से अधिक पीएम किसान संवितरण… किसके लिए हैं?
* लखपति दीदी / ड���रोन दीदी... किसके लिए हैं?
* ईंधन पर उत्पाद शुल्क (एक्साइज़ ड्यूटी) में कटौती... किसके लिए है?
* पीएम गरीब कल्याण अन्न योजना... किसके लिए है?
* 1 करोड़ स्वनिधि खाते... किसके लिए हैं?
* हम अंतरराष्ट्रीय स्तर पर उर्वरकों (खाद) की ऊंची कीमतों का बोझ न डालकर किसानों की रक्षा जारी रखे हुए हैं। वह किसके लिए किया गया था?
* हम MSMEs के लिए ECLGS 5.0 लेकर आए। वह किसके लिए था?
* पिछले वर्ष कृषि ऋण वृद्धि (एग्रीकल्चर क्रेडिट ग��रोथ) 15.7% थी। वह किसके लिए थी?
* पिछले वर्ष MSME ऋण वृद्धि 33% थी। वह किसके लिए थी?
ग़रीब, किसान, युवा, महिला - सब ढाँचे का अहम हिस्सा हैं।
हम आम लोगों के कल्याण पर ध्यान केंद्रित कर रहे हैं।
अगर @INCIndia और उसके नेता राष्ट्र-निर्माण में सकारात्मक योगदान नहीं दे सकते, तो उन्हें बाधा डालना बंद कर देना चाहिए। एक जिम्मेदार विपक्ष डर का माहौल पैदा करने का काम नहीं करता।
TVK Minister Thiru Aadhav Arjuna has relived the famous Tamil comedy; "ஏணி சின்னத்துல ஒரு குத்து, தென்னமர சின்னத்துல ஒரு குத்து". For a moment, Thiru Aadhav Arjuna seemed to have forgotten which party he presently belongs to now. Party Hopper’s Paradox!
Even DMK cadres did not go this length to defend Thiru Udhayanidhi Stalin as Thiru Aadhav Arjuna did.
How does Sanathana Dharma become synonymous with the Hindu religion in North India, but conveniently get redefined as inequality the moment the discussion shifts to Tamil Nadu?
Very confusing bro!
Instead of expressing regret for the deeply irresponsible remarks made by the TVK MLA, Thiru Aadhav Arjuna has chosen to justify and normalise them.
Days after DMK MLA Thiru Udhayanidhi Stalin spoke about eradicating Sanathana Hindu Dharma on the floor of the legislative assembly, TVK MLA Thiru VMS Mustafa came in support of Thiru Udhayanidhi Stalin’s remarks. Not only is this very unfortunate but also it shows the level of hatred they harbour in their minds towards an eternal Dharma that helps us to lead a meaningful life!
DMK & TVK, in their very short history, have proven to the people that they are two sides of the same coin. DMK has forgotten what their constant attack on Sanathana Hindu Dharma has brought them to. TVK will also soon remember.
If either DMK or TVK had the courage of conviction, they should have openly declared during their election campaigns that targeting Sanathana Hindu Dharma would be central to their politics. Instead, they hid behind secularism & theatrics, only to reveal their true intentions after seeking votes from the very people whose faith they now insult with arrogance and impunity.
Please be reminded, Sanathana Hindu Dharma is not your punching bag! I sincerely hope their remarks will not go unpunished by our people.
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை, ஒரு குவிண்டாலுக்கு ₹72 உயர்த்தி, ₹2,441 ஆகவும், மேலும் 14 வகை பயிர்கள் ம��்றும் தானியங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்தும், விவசாயிகள் நலனை முன்னிறுத்தி அறிவிப்பு வெளியிட்டுள்ள மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களுக்கு, தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பாக, மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
14 வகை பயிர்கள் மற்றும் தானியங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்திருப்பது, தமிழகத்தில் உள்ள பல ஆயிரக்கணக்கான சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு, அவர்களுக்குச் சிறந்த வருமானத்தையும் உறுதி செய்யும்.
தமிழகத்தில், தேர்தல் வாக்குறுதியாக, ஒரு குவின்டால் நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ₹3,500 வழங்கப்படும் என்று கூ��ி ஆட்சிக்கு வந்துள்ள தமிழக முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள், தமிழக அரசு சார்பாக வழங்கப்படும் ஊக்கத்தொகையை உயர்த்தி, ₹3,500 ஆக விவசாயிகளுக்கு விரைவில் வழங்குவார் என்று எதிர்பார்க்கிறோம்.
சுகாதாரத் துறையின் உயிர்நாடியாகத் திகழ்ந்து, நோயாளிகளின் நலனுக்காக பகலிரவாக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் அனைத்து செவிலியர் சகோதர, சகோதரிகளுக்கும், சர்வதேச செவிலியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மருத்துவத் துறையின் ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னால் அமைதியாக உழைக்கும் செவிலியர்களின் சேவை, சமூகத்தின் ஆரோக்கியமான வாழ்விற்கு மிகப்பெரிய துணையாக உள்ளது. அன்பும், இரக்கமும், மனிதநேயமும் நிறைந்த அவர்கள் பணி, என்றும் போற்றுதலுக்குரியது.
குடும்பத்திற்காகவும் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும் ஓய்வின்றி உழைத்து, அனைவரையும் அன்பால் இணைக்கும் மையப்புள்ளியாகத் திகழும் தாய்மார்கள் அனைவருக்கும், இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நம் வாழ்வின் முதல் ஆசிரியர்களாக இருந்து உலகை அறிமுகப்படுத்தி, எண்ணற்ற தியாகங்களால��� நம்மை வடிவமைப்பது, நமது தாய்மார்களே. தாயின் அன்பும், தியாகமும், தன்னலமற்ற அர்ப்பணிப்பும் மனித வாழ்வின் மிகப் பெரிய வரங்களாகும்.
குடும்பங்களையும் சமூகத்தையும் உறுதியாக வடிவமைக்கும் அனைத்து தாய்மார்களின் பேரன்பும், பொறுமையும் என்றென்றும் போற்றுதலுக்குரியது.
இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகள்.
I bow down to the people of TN for your verdict. Happy to see in my land, people have risen in one voice and spoken
1. No to buying of votes
2. No to dynastic Politics
& yes to a generational shift in politics.
Whoever gets it done has actually done a favour to all!
Congrats and best wishes to TVK & Thiru @TVKVijayHQ avl for a spectacular debut in TN politics. Let Almighty be with you to do what you intend to do.
And to all NDA candidates, it was a hard-fought battle on the ground. Congrats to all those who won, and for those who couldn’t register a victory this time, let’s keep fighting.
Commiserations to Thiru @mkstalin avl & Thiru @Seeman4TN avl for your loss in this election!
Finally & most importantly, I thank my dear @BJP4TamilNadu cadres and leaders for toiling hard on the ground. Better times will come soon!
இந்தியாவே கண்டிராத விஞ்ஞான ஊழல்களை செய்து தமிழகத்தை தலைகுனிய வைத்த தீயசக்தி திமுகவின் ஐந்தாண்டு கால காட்டாட்சிக்கு முடிவு கட்டவும், தமிழகத்தை மீட்டெடுக்கவும் மக்களுடன் கரம் கோர்த்து பயணி��்து வரும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் புதுக்கோட்டை தொகுதியில் களம் காணும் நமது பாஜக வெற்றி வேட்பாளர் திரு. N.ராமச்சந்திரன் அவர்களை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் முன்னாள் அமைச்சர், அண்ணன் திரு. @Vijayabaskarofl அவர்களோடு இணைந்து பங்கேற்று உரையாற்றினேன்.
புதுக்கோட்டையில் கூடியிருந்த திரளான மக்களிடம் திமுகவின் மோசமான ஆட்சி முடியப்போகிறது என்கிற மகிழ்ச்சியையும், மாற்றத்��ிற்கான எழுச்சியையும் காண முடிந்தது. புதுக்கோட்டையின் போட்டோஷூட் எம்.எல்.ஏ திரு.முத்துராஜா அவர்கள், உண்மையில் வசூல்ராஜாவாக தான், கடந்த 5 ஆண்டுகளாக இருந்திருக்கிறார். தன்னுடைய தனியார் மருத்துவமனைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அரசு மருத்துவமனைக்கு அவர் கொடுக்கவில்லை. இப்படிப்பட்ட திமுகவினரால் தமிழக மக்களுக்கு என்ன பயன் கிடைக்கப் போகிறது?
முந்தைய அதிமுக ஆட்சியில் அறிவிக���கப்பட்ட காவிரி - குண்டாறு இணைப்பு திட��டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல், 12 நாளுக்கும், 13 நாளுக்கும் ஒரு முறை குடிநீர் விநியோகம் நடைபெறுவதால், புதுக்கோட்டை மக்கள் மாதம் ரூ.3000 குடிநீருக்காக செலவு செய்யும் அவலநிலையை உருவாக்காகியுள்ளது திமுக அரசு. இந்த நிலை மாறவேண்டும். காவிரி - குண்டாறு - நல்லாறு இணைப்பு திட்டம், கால்நடை மருத்துவக்கல்லூரி, ஒருங்கிணைந்த பேருந்து முனையம் என புதுக்கோட்டைக்கு கொடுத்த வாக்குறுதிகளில் எதையுமே நிறைவேற்றாத திமுகவின் பொய்களை இனியும் மக்கள் நம்பமாட்டார்கள்.
கனிமவளக் கொள்ளையை எதிர்த்து போராடிய சமூக நல ஆர்வலர் திரு. ஜகபர் அலி அவர்களை லாரியேற்றி கொன்ற அவலத்தை தமிழகமே பார்த்தது. தமிழகத்தை சுரண்டி கொள்ளையடிக்கும் கும்பலுக்கு அடைக்கலம் கொடுக்கும் திமுக ஆட்சி இனியும் தமிழகத்தை ஆளக்கூடாது. எனவே, வரும் 23 ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ��ோட்டியிடும் பாஜக வெற்றி வேட்பாளர் திரு. N.ராமச்சந்திரன் அவர்களை புதுக்கோட்டை மக்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். புதிய வளர்ச்சிப்பாதையில் புதுக்கோட்டை பயணி��்க வேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி வெல்லட்டும்! தமிழகத்தில் நல்லாட்சி மலரட்டும்! (1/2)
தமிழகத்தின் வளர்ச்சியும், தமிழக மக்கள் நலனுமே கொள்கை என கொண்டு ஒன்றிணைந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் வாசுதேவநல்லூர் தொகுதியில் களம் காணும் நமது வெற்றி வேட்பாளர் திரு. @AnanthAyyasamy அவர்களை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று உரை���ாற்றினேன்.
தமிழகத்தில் குடும்ப அரசியலும், ஊழல் ஆட்சியுமே அடையாளமாக கொண்ட ஒரே கட்சி திமுக தான். கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில், தமிழகம் இருண்ட காலத்தைச் சந்தித்துள்ளது. தங்களின் சுயநலத்திற்காக��் தமிழகத்தை சுரண்டி கொள்ளையடித்து, மாநிலத்தின் வளர்ச்சியை முடக்கியுள்ள கையாலாகாத திமுக ஆட்சியை வேரோடு பிடுங்கி எறியத் தமிழக மக்கள் காத்திருக்கிறார்கள். திமுக ஆட்சியின் கையாலாகாத்தனத்தால் தமிழகம் போதைப்பொருட்களின் கூடாரமாகவும், பெண்களுக்குப் பாதுகாப்பற்ற மாநிலமாகவும் மாறியுள்ளது. தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல், சாமானிய மக்களை வஞ்சித்து, ஊழலில் திளைக்கும�� இந்த கமிஷன் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய தருணம் இது.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது, திமுக தனது தேர்தல் வாக்குறுதி எண்.84-யில் செண்பகவல்லி அணையை சீரமைப்போம் என கூறியது. கடந்த 5 ஆண்டுகளில், செண்பகவல்லி அணையைச் சீரமைக்கத் துப்பில்லாத திமுக அரசு, வீரகேரளம்புதூர் பகுதியில் இரட்டை குளம் திட்டத்தையும் செயல்படுத்தாமல் உள்ளது. அதனால் 48 குக்கிராமங்களும், 15 கிராம பஞ்சாயத்துகளும் வறட்சியின் பிடியில் உள்ளன. இப்படி விவசாயிகள் வாழ்வாதாரத்தைச் சிதைத்துள்ளது திமுக அரசு. விவசாயிகளின் கண்ணீருக்கு வரவிருக்கும் தேர்தல் பதில் சொல்லும்.
வாசுதேவநல்லூர் தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைக���் நிறைவேறவும், வளர்ச்சியடைந்த வாசுதேவநல்லூர் உருவாகவும், வரும் 23-ஆம் தேதி நடைபெறும் தமிழக சட்டமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திரு. ஆனந்தன் அய்யாசாமி அவர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யவேண்டும். திமுகவின் காட்டாட்சி ஒழியட்டும்! தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையட்டும்! வாசுதேவநல்லூர் வளரட்டும்! (1/2)
வருகின்ற ஏப்ரல் 23 அன்று நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் அதிமுகவின் வெற்றி வேட்பாளர் திரு. கே. பி. பரமசிவம் அவர்களை ஆதரித்து இன்றைய தினம் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு மக்களிடையே உரையாற்றினேன்.
கடந்த 5 ஆண்டுகால திமுகவின் மோசமான ஆட்சியில், கொலைக்களமாக பல்லடம் மாறியுள்ளது. விவசாயியின் குடும்பத்தையே வெட்டி படுகொலை செய்த அதிர்ச்சிகளை நாம் பார்த்தோம். ஆணவப் படுகொலை, சாதிய வன்முறை, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு பிரச்சனை. 8,008 கொலைகள், 2080 பாலியல் வன்கொடுமைகள், 39,999 போக்சோ வழக்குகள் என தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்தது போதும்.
சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து தமி��கத்தில் அனுமதிக்கப்பட்ட மதுபானக் கூடங்களின் எண்ணிக்கையே 323 தான். ஆனால், திமுகவின் ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும், 403 தனியார் மதுபானக் கூடங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. கண்முன்னே நமது அடுத்த தலைமுறை சீரழிவதை பொறுத்துக்கொள்ள முடியுமா? மக்களுக்கு எதிராக செயல்பட்டுவிட்டு, பின்னர் மக்களை ஏமாற்ற மத்திய அரசு மீது பொய் பழி சுமத்தும் இந்த ஊழல் திமுக ஆட்சி ஆண்டது போதும். ம���்திய அரசோடு இணைந்து பணியாற்றும் மக்களுக்கான மக்களின் ஆட்சி அமைந்தாக வேண்டும்.
எனவே, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பல்லடம் தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் திரு. கே.பி.பரமசிவம் அவர்களுக்கு பேராதரவு வழங்கி, பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க ��ல்லடம் மக்கள் தயாராகி விட்டார்கள். இந்த முறை திமுகவின் படுதோல்வி உறுதி. தேசிய ஜனநாயகக் கூட்டணி வரலாற்று வெற்றி பெறுவது உறுதி.
தொழில்துறை முன்னோடியும், இந்தியாவின் எடிசன் எனப் போற்றப்படும் பெருமைக்குரியவருமான, ஐயா ஜி.டி. நாயுடு அவர்களின் பிறந்த தினமான இன்று, அவரை மரியாதையுடன் நினைவு கூர்ந்து வணங்குகிறோம்.
தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சிக்கும், புதுமை சார்ந்த கண்டுபிடிப்புகளுக்கும் விதை இட்டவர். தன்னம்பிக்கை மற்றும் கடின உழைப்பின் மூலம் தமிழக இளை��ர்களுக்கு வழிகாட்டியாக விளங்கியவர். அவரது வாழ்க்கை, இளம் தலைமுறையினருக்கு ஒரு வழிகாட்டி.