"மக்கள் மேடை" எனும் மக்கள் சக்தியின் சேவைகளின் ஒரு அங்கமாக, நம் நிர்வாகிகளின் முழு முயற்சியில் குடியாத்தத்தை சேர்ந்த, திருமதி. தனசேகர் அவர்களுக்கு செயற்கை கால்களை பொருத்த உதவியதுடன் அவரின் இயல்பு வாழ்கைக்கு மேற்கொண்டு ஏதேனும் தேவைகள் இருப்பின் நாம் நிற்போம் என உறுதி அளித்துள்ளோம்
நேர்மையான, திறமையான தலைவர்களை உருவாக்கும் நமது பயணத்தில், நமது https://t.co/bpwUirXkR4 இணையதளம் வழியாக, 18 லட்சம் உறுப்பினர்கள் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நமது APJ Abdul Kalam centre for Ethics and Politics வழியாக, அரசியலில் களமிறங்க விரும்பும் இளைஞர்களுக்குத் தேவையான அடிப்படை அறிவு, சட்டம் மற்றும் நன்னெறிப் பயிற்சிகளை முன்னெடுக்கவிருக்கிறோம்.
அது தொடர்பான பணிகளை, வரும் ஜூலை மாதத்திலிருந்து, தொடங்கவிருக்கிறோம். நமது அடுத்த கட்டப் பணிகள், தேர்தல் பணிகள் உள்ளிட்டவை குறித்து, நமது We the Leader அமைப்பு, 50 லட்சம் உறுப்பினர்களை எட்டும்போது, மீண்டும் நாம் கலந்துரையாடுவோம்.
கன்னியாகுமரி மாவட்டம் சென்றிருந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியும் மனநிறைவும் அளித்தது.
அங்கு நடைபெற்ற அறப்பணியின் ஒரு பகுதியாக, ஐந்து பெண்கள் பயனாளிகளுக்கு ஐந்து ஆட்டோக்களையும், மிகவும் தேவையுள்ள 27 பேருக்கு செயற்கை கை மற்றும் கால் உறுப்புகளையும் வழங்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் உறுதியும் மகிழ்ச்சியும் என்னை மிகவும் நெகிழச்செய்தது.
இந்த அறப்பணிப் பயணத்தின் இது எனக்கு ஒரு தொடக்கம் மட்டுமே. என் குடும்பத்தின் சார்பாகவும், எங்கள் குடும்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தியும், இனியும் இதுபோன்ற பல நல்ல செயல்களை தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற உறுதியுடன் இருக்கிறேன்.
மனநெகிழ்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும், ஆசீர்வதிக்கப்பட்ட உணர்வுடனும், நன்றியுடனும் இருக்கிறேன். 🙏🏻🙏🏻🙏🏻