அகில இந்திய காங்கிரஸ் அமைப்பு பொதுச்செயலாளர் திரு. கே.சி. வேணுகோல் அவர்களை தமிழ்நாடு அரசின் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா அவர்கள் இன்று புதுடெல்லியில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இச்சந்திப்பின் போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. மாணிக்கம் தாகூா் ,ப. எம்.பி. அவா்கள் உடன் இருந்தார்.
#TNCongress
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் 12-வது பட்டியல் அறிவிப்பு.
விழுப்புரம் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய / பகுதி, நகர, பேரூராட்சித் தலைவர்கள் மற்றும் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு.
#TNCongress#SSA2
காவிரி நீர் உரிமை மற்றும் மேகதாது அணைத் திட்டம் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு. ப. மாணிக்கம் தாகூர் எம்.பி. அவர்கள் விரிவான கடிதம்.
#TNCongress#Cauvery
முன்னாள் ஆளுநர்,மத்திய உணவு மற்றும் வேளாண்துறை அமைச்சர் திரு. சி. சுப்பிரமணியம் அவர்களின் நினைவு தினமான இன்று, அவர்களுக்கு எங்களது நினைவஞ்சலி.
#TNCongress#CSubramaniam
Wishing a very happy birthday to the Hon’ble Chief Minister of Telangana, and a brother Shri @revanth_anumula garu
May God bless him with a long, healthy and successful life ahead!
#HBDRevanthAnna
A deeply personal story six decades in the making is finally here. Warmest congratulations to Sonia Gandhi Ji on the global release of her highly anticipated memoir, Belonging: A Journey of Love. #SoniaGandhiBook
மோடி–அமித் ஷா தலைமையிலான பாஜக–ஆர்.எஸ்.எஸ் ஒன்றிய அரசின் படுதோல்வி அடைந்த பொருளாதாரக் கொள்கைகளாலும் தொலைநோக்கற்ற நிர்வாகத்தினாலும் நாட்டின் வேலைவாய்ப்புச் சூழல் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிகக் கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.
நகர்ப்புறங்களில் படித்துவிட்டு வேலை தேடும் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் வேலையின்மை விகிதம் முந்தைய காலாண்டில் இருந்த 18.2 சதவீதத்திலிருந்து 18.9 சதவீதமாக உயர்ந்து, ஜனவரி–மார்ச் 2022 காலகட்டத்திற்குப் பிறகு 18 காலாண்டுகளில் இல்லாத அளவிற்குப் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. குறிப்பாக, நகர்ப்புற இளம்பெண்களின் வேலையின்மை விகிதம் முந்தைய ஆண்டின் ஜூலை–செப்டம்பர் காலாண்டில் 25.3 சதவீதமாக இருந்து தற்போது 26.1 சதவீதமாக அதிகரித்துள்ளது பாஜக–ஆர்.எஸ்.எஸ் அரசின் நிர்வாகச் சீர்கேட்டையும் பெண்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் திறனின்மையையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மேலும், ஒட்டுமொத்த நகர்ப்புற வேலையின்மை விகிதமும் முந்தைய காலாண்டில் இருந்த 6.7 சதவீதத்திலிருந்து 6.8 சதவீதமாக உயர்ந்து ஓராண்டு கால உச்சத்தை எட்டியுள்ளது.
கிராமப்புறங்களில் முறையான புதிய ஊதிய வேலைவாய்ப்புகள் இல்லாத காரணத்தால் ஒட்டுமொத்தத் தொழிலாளர் அமைப்பிலும் பெரும் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. ஊரகப் பகுதிகளில் பணிபுரியும் பெண்களில் 72.8 சதவீதம் பேரும், ஆண்களில் 57.2 சதவீதம் பேரும் சுயதொழில் அல்லது ஊதியமில்லா குடும்பப் பணிகளையே சார்ந்து வாழ வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். மேலும் ஊரகப் பெண்களில் 74.5 சதவீதம் பேரும், ஆண்களில் 47.2 சதவீதம் பேரும் விவசாயத் துறையையே ஒரே வாழ்வாதாரமாக நம்பியிருக்கும் நிலைக்குப் பின்தள்ளப்பட்டிருப்பது, மோடி–அமித் ஷா ஆட்சியில் தொழில்துறை மற்றும் உற்பத்தித் துறை அடைந்துள்ள இமாலய வீழ்ச்சியை அப்பட்டமாக நிரூபிக்கிறது.
மாணவர்கள் மற்றும் படித்த இளைஞர்களின் எதிர்கால வளர்ச்சி குறித்தோ, நாட்டின் பெண்களின் பொருளாதார நலன் மற்றும் பாதுகாப்பு குறித்தோ சற்றும் கவலைப்படாமல் பாஜக–ஆர்.எஸ்.எஸ் அரசு ஆழ்ந்த கும்பகர்ண தூக்கத்தில் கிடக்கிறது. ஆண்டுதோறும் இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று பம்மாத்து காட்டி மோடி–அமித் ஷா அரசு, பத்தாண்டுகளுக்கு மேலாக நாட்டின் எதிர்காலத் தலைமுறையினரான மாணவர்களையும் பெண்களையும் நடுரோட்டில் தவிக்கவிட்டு வெறும் விளம்பர அரசியலில் மட்டுமே திளைத்து வருகிறது.
வெற்று விளம்பர மாயைகளையும் மக்களைத் திசைதிருப்பும் மலிவான அரசியலையும் நம்பி இனியும் ஏமாற நாட்டின் இளைஞர்களும் பெண்களும் தயாராக இல்லை; அவர்களின் எதிர்காலத்தோடு விபரீத விளையாட்டுகளை விளையாடி நாட்டை சீரழிக்கும் மோடி–அமித் ஷா தலைமையிலான ஒன்றிய பாஜக அரசை மிகக் கடுமையாக கண்டிக்கிறேன்!
#TNCongress #Unemployment
தமிழ்நாட்டில் இந்திய தேசிய காங்கிரஸ் காங்கிரஸ் பேரியக்கத்தை மீண்டும் வலிமைப்படுத்தி, அடிமட்டத்திலிருந்து கட்டமைப்பைப் பலப்படுத்தும் நோக்கில் "வாக்கைக் காப்போம் - நாட்டைக் காப்போம்" மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் பயிற்சி முகாம்கள் நேற்று (12.11.2026) எழுச்சியுடன் தொடங்கியுள்ளன. புதுக்கோட்டை வடக்கு மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற முதல் பயிற்சி முகாமில் திருச்சி தெற்கு, திருச்சி வடக்கு, திருச்சி மாநகர் மற்றும் புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு ஆகிய 5 மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளைச் சேர்ந்த புதிதாக நியமிக்கப்பட்ட மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்வு மிகுந்த நம்பிக்கையையும் புதிய உத்வேகத்தையும் அளித்துள்ளது.
ராய்ப்பூர் காங்கிரஸ் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் கட்சியை இயக்க ரீதியாகவும் கட்டமைப்பு ரீதியாகவும் பலப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன்படி மண்டல காங்கிரஸ் கமிட்டிகள் உருவாக்கப்பட்டு, அடுத்தகட்டமாக கிளை காங்கிரஸ் கமிட்டிகள் அமைக்கும் பணி தொடங்கவுள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு கிளை அமைப்பதுடன், ஒரு கிளைத் தலைவர், ஒரு பிரதிநிதி மற்றும் ஒரு BLA2 ஆகியோரை நியமிக்கும் முக்கியப் பணியை மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் விரைவில் தொடங்கவுள்ளனர்.
இந்த அமைப்பு ரீதியான மாற்றங்கள் தமிழ்நாடு காங்கிரஸுக்கு மிகுந்த பலத்தைத் தரும் என்பதோடு, வரும் டிசம்பர் மாதத்தில் தமிழ்நாடு செயற்குழு கூட்டம் முடிவு செய்யும் தேதியில் இருந்து தொடர் பிரச்சாரங்களும் முன்னெடுக்கப்பட உள்ளன. அதன் தொடர்ச்சியாக, இன்று (13.11.2026) திண்டுக்கல் மத்திய மாவட்டத்தில் நடைபெறும் பயிற்சி முகாமில் திண்டுக்கல் மத்திய, கிழக்கு, மேற்கு, மதுரை மாநகர், வடக்கு, தெற்கு மற்றும் தேனி ஆகிய 7 மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் மண்டல ஒருங்கிணைப்பாளர்களைச் சந்திக்கச் செல்கிறேன். மக்கள் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் வழிகாட்டுதலில், மிகுந்த நம்பிக்கையோடு, தமிழ்நாட்டில் காங்கிரஸ் பேரியக்கம் நிச்சயம் மீட்டெடுக்கப்பட்டு ஒரு பலமான சக்தியாக உருவெடுக்கும் என்ற உறுதியுடன் நமது பயணம் தொடர்ந்து முன்னேறுகிறது.
“நம்பிக்கையுடன் காங்கிரஸ் “
#TNCongress #SSA2
தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. செ. ராஜேஷ்குமார் அவர்களின் சகோதரியின் கணவர் திரு. வி. நிர்மல்குமார் அவர்கள் உடல்நலக்குறைவால் திடீரென காலமான செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.
அன்னாரை இழந்து வாடும் திரு. @RajeshKumarSMLA அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், இயக்க நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.