நாடாளுமன்றத் தேர்தல் - 2024
மக்களுக்காக மக்களோடு என்றும் களம் கானும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் பரப்புரை மற்றும் பயணங்களின் புள்ளிவிவரங்கள் .
@Seeman4TN@NaamTamilarOrg
நாம் தமிழர் கட்சி ❤️💛
அடிப்படை அமைப்பு அரசியல் மாற்றம் என்பதன் அடிப்படையில் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 20 பெண் மற்றும் 20 ஆண் வேட்பாளர்களுடன் அனைத்து தொகுதியிலும் தனித்து , தனித்துவமாக போட்டியிடும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி .
இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி 💪
நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்போம் !
நாளைய தலைமுறைக்கு வாழ்வளிப்போம் !
@Seeman4TN@NaamTamilarOrg
#மக்களின்_சின்னம்_மைக்
#Mike_VoiceOfPeople
#Elections2024
#seeman#seemanspeech#naamtamilar காவல் துறையினர் மீது இருக்கும் பொது பிம்பத்தை உடைத்த சீமான்.. ஆழ்ந்து கவனித்த மக்கள்.. அங்கிருந்த போலீஸ் செயல் தான் ஹைலைட்
குமரி மாவட்டம் அருமநல்லூர் ஊராட்சியில் திமுக பிரமுகர் ஒருவரின் தனிப்பட்ட பகைக்காக எளிய மக்களின் வீடுகள் முன்னறிவிப்பின்றி இடிக்கப்பட்டிருக்கிறது.நம்மால் முடிந்த நடவடிக்கைகளை எடுப்போம் என உறுதியளித்துள்ளோம். அதிகாரம் மிக வலிமையானது. #வெல்வோம்#NTKJennifer4Kumari#நாம்தமிழர்கட்சி
சாதி பார்த்துதான் வாக்குச் செலுத்துவீர்கள் என்றால் எங்களுக்கு அந்த வாக்கை செலுத்தாதீர்கள் .
மானத் தமிழர்கள் தமிழ் நாங்கள் இந்த மக்களுக்காகவும் , மண்ணுக்காகவும் நிற்போம் என்று நம்பினால் எங்களுக்கு வாக்களியுங்கள் .
#கிருஷ்ணகிரி#மாத்தூர்
-செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
@Seeman4TN
#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
#NTK_Symbol_Mike
#Elections2024
அண்ணன்!
சற்று முன் தம்பி கார்த்திக் அழைத்திருந்தார்
கார்த்திக்- கும்முடிப்பூண்டி தொகுதி செயலாளராக இயங்கியவர் தொகுதியில் ஏற்பட்ட சிறு குழப்பத்தால் பொறுப்புகள் அனைத்தும் அண்ணன் சீமானால் கலைக்கப்பட்டு இது வரை நிரப்பப்படாமல் இருந்தாலும் தொகுதியின் பொறுப்பாளராக நின்று கொஞ்சமும் மனம் தளராமல் பணமாகவும் இனமாகவும் களத்தில் நின்று கட்சிக்காக கரைந்துக் கொண்டிருப்பவர்...
சொல்லுங்க கார்த்திக் என்றேன்
ஒன்றுமில்லை அண்ணா நேற்று அண்ணன் சீமான் வந்து போனதிலிருந்து மனம் மிகவும் கவலை படர்ந்து கிடக்கிறது அண்ணா என்றார்
இதுவரை கார்த்திக் அப்படி மனமுடைந்து பேசி கேட்டவனில்லை என்பதால் எனக்கும் கவலை தொற்றிக் கொண்டது
என்ன விடயம் விபரமாக சொல்லுங்க என்றேன்
நேற்று அண்ணன் சீமான் கும்முடிப்பூண்டி வருவதையொட்டி அவருக்கு மாலை உணவு ஏற்பாடு செய்ய மண்டல செயலாளர் சொல்லியிருந்தார் எனக்கு ஹோட்டல் உணவை ஏற்பாடு செய்ய மனமில்லாமல் வீட்டில் செய்து எடுத்து வரட்டுமா ஐயா என்றேன் அவரும் சரி என்றார்
எனக்கு மகிழ்சியாக இருந்தது
காலையிலேயே கடைக்கு போய் கிடா ஆட்டுக்கறி, மீன் வாங்கி வந்து அம்மாவிடம் சமைக்க கொடுத்து விட்டேன், 3 நாட்டுக் கோழிகளை அடித்து குழம்பு வறுவல் சோறு என தடபுடலாக எடுத்துக் கொண்டு அண்ணன் வந்து தங்கப் போகும் கும்முடிப்பூண்டி லே ராஜ் கோர்ட்யார்ட் ஹோட்டலில் சரியாக 2 மணிக்கு இருந்தேன்
சென்னை தண்டையார்பேட்டையில் வாகன பரப்புரையை முடித்துக் கொண்டு மாலை 3 மணியளவில் ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தவரை பார்த்த எங்களுக்கு உண்மையிலேயே வேதனையாக இருந்தது அண்ணா
மிக களைப்பாக இருந்தார், முகம் கழுவிக் கொண்டு மேஜையில் அமர்ந்தார்
அவரின் தோற்றம் மனசுக்குள் கலக்கத்தை உண்டாக்கி இருந்தாலும்
அண்ணனுக்கு உணவு பரிமாறும் ஆவலோடு இலையை விரித்து சோறு வைத்தேன்
ஒரு கரண்டி சோறுக்கு போதும் என்று கை அமர்த்தியவர், கோழி வறுவலை கொஞ்சமாக வைக்க சொல்லி, கிடாக்கறி குழம்பை மட்டும் கொஞ்சமாக பிசைந்து சாப்பிட்டு முடித்தார்
வீட்டில் செய்ததா என்றவர் ஆம் அம்மா சமைத்தார்கள் என்றேன் நன்றாக இருக்கிறது என்றார்
அவர் எடுத்துக் கொண்ட உணவு ஐந்து வயது குழந்தையின் அளவைக் காட்டிலும் குறைவாக இருந்தது, அதற்கு மேல் அவரால் சாப்பிட முடியவில்லை அது தான் உண்மை அண்ணா என்றவரின் குரலில் ஈரம் வழிந்தது எதிர் முனையில் நானும் முகம் நனைந்து இருந்தேன்
சாப்பிட்டு ஓய்வு எடுக்க மேலே அறைக்கு சென்றவர் அரை மணி நேர இடைவெளியில் கீழே இறங்கி வந்தார், படிகளில் இறங்கிக் கொண்டிருந்தவர் ஒரு கணம் நிலை தடுமாறி கீழே விழ சரிந்தவரை அருகில் இருந்த பாதுகாவலர் பிடித்து அணைத்துக் கொண்டார் அண்ணா
நாங்கள் எல்லோரும் பதறிப் போனோம் என்று சில நொடிகள் மவுனம்....
வார்த்தைகள் இல்லாது கார்த்திக் வலிகளை விழுங்கிக் கொண்டிருந்ததை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது
பொறுப்புகள் கலைக்கப்பட்டு இன்னும் நிரப்படாமல் இருந்தது வலியை தந்தது உண்மை தான் என்றாலும் அண்ணன் சீமானின் உழைப்பிற்கும் அர்ப்பணிப்பிற்கும் முன்னால் என் போன்றவர்கள் ஏதுமில்லை அண்ணா என்றார்
அண்ணனுக்காக எத்தனை வலியையும் தாங்கிக் கொள்ள உடன் உழைக்க பயணிக்க இனி நான் எப்போதும் இருப்பேன் அண்ணா என்று தேங்கினார்
என் விசும்பல் அவருக்கும் கேட்டிருக்கும்....
அண்ணன் சீமான், எல்லா நம்பிக்கைகளும் தோற்று போய் இழப்பின் சேற்றில் ஊறிக் கிடந்த இனத்தை மீட்க வந்து அதற்கான உழைப்பை பயணத்தை முழுமையாக ஏற்று நிற்கும் மகத்தான மனிதன் மாபெரும் தலைவன்
கை விட்டு விடாதீர்கள் தமிழர்களே!
ஒரு பாறை வலிகளை தாங்கி தன்னைத் தானே செதுக்கி சிலையாக்கி கொள்ளும் அபூர்வத்தை உண்மையும் நேர்மையும் மிகுந்து அரசியலில் செய்து கொண்டிருக்கிறார் அண்ணன் சீமான்
மாற்றார் சூழ்ச்சியோ வஞ்சகர் துரோகமோ அவரை ஏதும் செய்ய விடாது இந்த நிலத்தின் அதிகாரத்தை அவர் கைகளில் கொண்டு சேர்க்கும் கடமை தமிழர்கள் நம் அனைவருக்கும் இருக்கிறது
இந்த மண்ணின் மீட்சிக்கும் மக்களின் வாழ்வுக்கும் அவர் செய்யும் சமரசமற்ற சண்டைக்கும் கருத்தியல் பேராற்றலுக்கும் வெறும் கைத்தட்டலை வழங்கிவிட்டு கையேந்தி பெறும் ஐநூறு ஆயிரத்திற்கு வாக்கை செலுத்தும் பெரும் மூடத்தை துரோகத்தை இனியும் செய்யதீர்கள் தமிழர்களே...
அண்ணன் சீமானோடு உளமார நின்று உழைப்போம்
எளிய பிள்ளைகளின் உண்மையும் நேர்மையமான அரசியல் வெல்லட்டும்
நாளைய தலைமுறையேனும் தலை நிமிர்ந்து வாழட்டும்.
நாம் தமிழர்.
~ ஆறுமுகம் ஜெகனாதன்
#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #NTK_Symbol_Mike
#VoteForMike
#Watch | "கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் பெற்ற 20,000 வாக்குகளும் வட மாநிலத்தவர்கள் போட்டது..!"
- திருவள்ளூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரிப்பு
#SunNews | #Seeman | #NTK | #BJP