கர்நாடகாவிலிருந்து மீண்டும் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள @kharge அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
அரசியலமைப்பின் விழுமியங்கள், சமூக நீதி, சமத்துவம் மற்றும் மக்கள் நலன் ஆகியவற்றிற்காக தாங்கள் வாழ்நாள் முழுவதும் ஆற்றி வரும் அர்ப்பணிப்பான சேவை, நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு தொடர்ந்து உத்வேகமாக உள்ளது.
தங்களின் அனுபவமிக்க தலைமையும், தொலைநோக்கு பார்வையும் நாடாளுமன்றத்திலும், நாட்டின் ஜனநாயகப் பயணத்திலும் மேலும் சிறப்பான பங்களிப்பை வழங்கட்டும்.
தேச சேவையின் இந்த புதிய பதவிக்காலம் வெற்றிகளும் சாதனைகளும் நிறைந்ததாக அமைய மனமார்ந்த வாழ்த்துகள். ஜெய் ஹிந்த்! 🇮🇳
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள், புதுதில்லியில் உள்ள 10 ஜன்பத் இல்லத்தில் காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் அன்னை சோனியா காந்தி அவர்களையும், எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பு, ஜனநாயக மதிப்புகள், மாநில உரிமைகள் மற்றும் நாட்டி
எதிர்கால வளர்ச்சி குறித்த ஆக்கப்பூர்வமான உரையாடலுக்கு வழிவகுத்துள்ளது.
#JosephVijay #SoniaGandhi #RahulGandhi #TamilNadu #NewDelhi
காங்கிரஸ் கட்சியையும் அதன் தலைவர்களையும், குறிப்பாக அண்ணன் @manickamtagore அவர்களையும் குறிவைத்து தொடர்ந்து அவதூறு பரப்புவதே அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களின் முழுநேர வேலையாகிவிட்டது போல் தெரிகிறது.
கட்சி தாவுதலில் சாதனை படைத்ததால்தான் உங்களுக்கு “அணில் ராதாகிருஷ்ணன்” என்ற பெயர் வந்ததா என்பது மக்களின் கேள்வி!
முதல் குழந்தைக்கு தாய்மாமன் சீர் செய்யாமல், அடுத்த குழந்தைகளுக்கு மட்டும் சீர் செய்யும் தாய்மாமன் !!
மாட்டிகிட்டே பங்கு !!! @arivalayam@DMKITwing
திருமதி மீனாட்சி நடராஜன் அவர்களின் மாநிலங்களவை வேட்புமனு நிராகரிப்பு என்பது ஒரு தனிநபர் மீதான அரசியல் நடவடிக்கை மட்டுமல்.
மக்களின் அரசியல் பிரதிநிதித்துவ உரிமையை பறிக்கும் எந்த முயற்சியும் ஏற்றுக்கொள்ள முடியாது. மத்தியப் பிரதேசத்தில் ஜனநாயக நடைமுறைகளை திசைதிருப்ப பாஜக சதி செய்திருப்பதாக எழும் குற்றச்சாட்டுகள் மிகுந்த கவலை அளிக்கின்றன.
அரசியல் லாபத்திற்காக அரசியலமைப்பு
றிமுறைகள் பலியிடப்படும்போது, மக்களின் ஜனநாயக நம்பிக்கை சிதைகிறது.
ஜனநாயகத்தை காப்போம்!
அரசியலமைப்பை பாதுகாப்போம்!
#MeenakshiNatarajan #RajyaSabha #Democracy #Constitution #Congress #INDIAAlliance
"12 சிலிண்டர்கள்" என்று ஆரவாரத்தோடு தொடங்கப்பட்ட உஜ்வாலா திட்டத்தின் கசப்பான உண்மை இன்று அம்பலமாகியுள்ளது!
2016-ல் ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு மானியம் என ஆரம்பித்து, பின்னர் அதை 9 ஆகக் குறைத்து, இன்று வெறும் 4 சிலிண்டர்களுக்கு மட்டுமே மானியம் என்ற நிலைக்கு மோடி அரசு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.
ஒரு ஏழைப் பெண் தன் குடும்பத்திற்காக 365 நாட்களும் சமைக்க வேண்டும். ஆனால் இந்த அரசு ஆண்டுக்கு வெறும் 4 முறை மட்டுமே உதவத் தயாராக இருக்கிறது. "ஏழைகளின் சராசரி நுகர்வே 4 சிலிண்டர்கள்தான்" என்று அரசு கூறும் வாதம் அப்பட்டமான பொய்!
உண்மை என்னவெனில், சிலிண்டரின் அதீத விலை உயர்வால் ஏழைக் குடும்பங்களால் அதை மீண்டும் நிரப்ப முடிவதில்லை. வறுமையின் காரணமாக மக்கள் வாங்குவதைக் குறைத்துக் கொண்டதை, தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது அரசு.
பெண்களின் வாழ்வை மேம்படுத்தும் திட்டமாக விளம்பரப்படுத்தப்பட்டு, இன்று ஏழைப் பெண்களுக்குச் செய்யப்பட்ட மிகப்பெரிய துரோகமாக மாறியிருக்கிறது.
பணவீக்க நாயகன் மோடியின் அடுத்த சவுக்கடி!
உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானிய விலையிலான LPG சிலிண்டர்களின் எண்ணிக்கை தற்போது ஆண்டுக்கு வெறும் 4 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது!
மானியத்தின் தொடர் சரிவு:
முன்பு: மானியத்துடன் 12 சிலிண்டர்கள்
பின்னர்: 9 ஆகக் குறைப்பு
இப்போது: வெறும் 4 சிலிண்டர்கள் மட்டுமே!
காங்கிரஸ் ஆட்சியில் அனைவருக்கும் கிடைத்த LPG சிலிண்டர் மானியத்தை மோடி அரசு ஏற்கனவே ரத்து செய்துவிட்டது.
ஏழை மக்கள் அன்றாட வாழ்க்கையை நடத்தத் தவிக்கிறார்கள்.
ஆனால், பாஜக அரசின் வசூல் வேட்டை மட்டும் தொடர்கிறது.
இதுதானா நீங்கள் வாக்குறுதி அளித்த “வளர்ச்சி”?
பதில் சொல்லுங்கள், மோடி
வேற்றுமையில் ஒற்றுமை" என்ற தாரக மந்திரத்தை முன்னிறுத்தி, தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தியா (INDIA) கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது.
காங்கிரஸ் கட்சியின் தலைமையில் நடைபெற்ற இந்த முக்கியக் கூட்டத்தில், கூட்டணியில் அங்கம் வகிக்கும் 23 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் வரும் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முக்கிய முன்னெடுப்புகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
அனைத்து வேறுபாடுகளையும் கடந்து, பொதுவான இலக்கை நோக்கி ஒருங்கிணைந்து செயல்படுவதில் இந்தியா கூட்டணி உறுதியாக இருப்பதை இந்தக் கூட்டம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
#INDIAAlliance
#UnityInDiversity
#வேற்றுமையில்ஒற்றுமை
#DelhiMeeting
#OppositionUnity
இனமானம், தன்மானம் பற்றி பேச தி.மு.க.விற்கு எந்தத் தகுதியும் இல்லை. தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றியது போதும்.
இனமானம், தன்மானம் என்று பேசிக் கொள்ளும் திராவிட முன்னேற்றக் கழகம், தனது ஜென்மவிரோதியாக கருதப்பட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன், தேர்தல் முடிந்தவுடன் அதுவும் அதே கட்சியின் தலைமையில் ஆட்சி அமைக்க Connecting Call பேச்சுவார்த்தை நடத்தியது எந்த வகையில் இனமானம், தன்மானம் காக்கும் செயலாக கருதப்படும்?
மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
1963-ல் காமராஜர் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தபோது, அவர் இந்திய அரசியலின் உச்சத்தில் இருந்தார். தமிழகத்தில் அவருடைய செல்வாக்குக்கு ஈடு இணையில்லை. அந்த அதிகாரத்தை இழக்க நேரிடும் என்ற பயமும் அவருக்கு இல்லை. ஆனாலும் நாட்டின் நலனுக்காகவும், காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், அரசியலில் புதிய தலைமுறையை உருவாக்கவும் அவர் தன்னார்வமாக பதவியை விட்டார்.
அது தனிப்பட்ட அரசியல் எதிர்காலத்திற்காக எடுக்கப்பட்ட முடிவு அல்ல.
புதிய கட்சி தொடங்குவதற்காகவோ, தனக்கென ஒரு அரசியல் மேடை அமைப்பதற்காகவோ அவர் அந்த முடிவை எடுக்கவில்லை. காமராஜர் தனது தனிப்பட்ட அரசியல் வளர்ச்சியை விட கட்சியின் வளர்ச்சியை முக்கியமாகக் கருதினார்.
அதனால்தான் இன்று வரை அவரது பெயர் தியாகம், எளிமை மற்றும் நேர்மையின் அடையாளமாக உள்ளது.
ஆனால் அண்ணாமலையின் நிலைமை அதற்கு முற்றிலும் மாறுபட்டது.
பாஜகவின் மாநிலத் தலைவராக இருந்த காலத்தில் அவர் தமிழக மக்களிடம் பெரிய அளவிலான எதிர்பார்ப்புகளை உருவாக்கினார்.
“தமிழக அரசியலில் மாற்றம்”,
“பாஜக தனித்து ஆட்சி”
போன்ற பல பெரிய வாக்குறுதிகள் தொடர்ந்து கூறப்பட்டன. ஆனால் தேர்தல் முடிவுகள் அந்தக் கூற்றுகளை உறுதிப்படுத்தவில்லை. அவர் நேரடியாக போட்டியிட்ட தேர்தல்களிலும் வெற்றி பெற முடியவில்லை. தமிழகத்தில் பாஜக இன்னும் முக்கிய அரசியல் சக்தியாக உருவாகவில்லை என்பதும் உண்மை.
இப்போது அந்தக் கட்சியிலிருந்து விலகி புதிய கட்சி தொடங்கும் முடிவை எடுப்பது அவரது அரசியல் உரிமை. அதில் யாருக்கும் பிரச்சினை இருக்க வேண்டியதில்லை. ஆனால் அந்த முடிவை காமராஜரின் வரலாற்று தியாகத்துடன் ஒப்பிட முயற்சிப்பது வரலாற்றையும் காமராஜரின் மரபையும் தவறாக பயன்படுத்தும் செயலாகும்.
காமராஜர் அதிகாரத்தைத் துறந்தார்; ஆனால் கட்சியைத் துறக்கவில்லை.
அண்ணாமலை கட்சியைத் துறக்கிறார்; ஆனால் அதனை அதிகாரத் துறப்பு எனக் காட்ட முயல்கிறார்.
காமராஜர் ஒரு இயக்கத்தை வலுப்படுத்த தனது பதவியை விட்டார்.
அண்ணாமலை ஒரு புதிய அரசியல் வாய்ப்பை உருவாக்க தனது கட்சியை விட்டு செல்கிறார்.
இரண்டிற்கும் இடையே அடிப்படை வேறுபாடு உள்ளது.
மேலும், காமராஜரின் அரசியல் தத்துவம் கூட்டுத் தலைமையை வலியுறுத்தியது. தனிநபர் வழிபாட்டை அவர் ஒருபோதும் ஊக்குவிக்கவில்லை. இன்று புதிய கட்சி தொடங்கும் அறிவிப்பை ஒரு தனிநபர் மையப்படுத்தப்பட்ட அரசியல் முயற்சியாக மக்கள் பார்க்கிறார்கள். அதற்கு காமராஜரின் பெயரை இணைப்பது அவரது அரசியல் பாரம்பரியத்தை குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்துவதாகவே தோன்றுகிறது.
காமராஜரை மதிப்பது என்றால் அவரது பெயரை மேற்கோள் காட்டுவது மட்டும் போதாது. அவர் காட்டிய எளிமை, தியாகம், நேர்மை, மக்கள் சேவை மற்றும் அதிகார ஆசையற்ற அரசியல் பண்புகளை நடைமுறையில் பின்பற்ற வேண்டும்.
காமராஜர் தனது வாழ்க்கை முழுவதும் மக்களுக்காக வாழ்ந்தார். அவர் எந்த பதவியையும் தேடிச் செல்லவில்லை; பதவிகள்தான் அவரைத் தேடி வந்தன.
அதனால் இன்று எழும் கேள்வி ஒன்றே:
காமராஜரின் பெயரைச் சொல்வதால் ஒருவர் காமராஜரின் அரசியல் மரபின் வாரிசு ஆகிவிட முடியுமா?
அல்லது காமராஜர் போல தியாகமும் சேவையும் செய்து காட்டினால்தான் அந்த மரபுக்கு உரிமை கோர முடியுமா?
இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியது அண்ணாமலை அல்ல. தமிழக மக்கள்தான்.
@annamalai_k@BJP4TamilNadu@amarprasadreddy@PttvNewsX@polimernews@vikatan@News18India
@vikatan திரும்ப திரும்ப காங்கிரசையோ ராகுல்காந்தியையோ விமர்சிப்பதன் மூலம் திமுக அடைய நினைப்பது என்ன?
அவர்களின் தோல்விக்கு என்ன காரணம் என்பதை ஆராய்ச்சி செய்ய சொல்லுங்கள்.
5 லட்சம் மெம்பர்ஷிப் கதைகளை சொல்லி மக்களை ஏமாற்றாதீர்கள். @annamalai_k
அவ்வளவு ஆதரவு இருந்தால் அண்ணாமலை போட்டியிட்ட தேர்தல்களில் ஏன் வெற்றி பெறவில்லை?
பூனை தன்னை புலி என்று நினைத்துக் கொள்ளலாம்…
மெம்பர்ஷிப் அல்ல, ஓட்டுதான் மக்கள் ஆதரவு!
@BJP4TamilNadu
This #WorldEnvironmentDay, I want to ask every young Indian one question:
What kind of India do you want to inherit?
One where rainforests have been bulldozed for casinos, coral reefs erased from maps, tribal communities pushed off their land, and the air we breathe turned into poison?
Or one where India’s natural heritage is protected, our tribal communities are safe, and progress works with nature - not against it.
Right now, the Modi government is destroying Great Nicobar Island. More than 1.5 crore trees, ancient coral reefs, irreplaceable rainforests are being destroyed - to profit one businessman.
This is your inheritance they are bulldozing. And only you can stop them.
Sign the petition. Tell the Modi government we choose #GreenOverGreed 🇮🇳
#NicobarMatters
https://t.co/bJOIt0tzgs
Hon. Karnataka Chief Minister Shri @DKShivakumar ji addressed party leaders, office bearers, and dedicated workers at the KPCC office with an inspiring and emotional message. Reaffirming that the strength of the Congress Party is the strength of India, he called upon every Congress worker to remain united and committed to the ideals of democracy, social justice, and inclusive development. Attended this significant gathering. Witnessing the immense enthusiasm and energy among the party cadres, alongside our senior leaders, made it a deeply memorable occasion for the Congress family in Karnataka.
@kharge@soniagandhi@Jairam_Ramesh@priyankagandhi@kcvenugopalmp@siddaramaiah@rssurjewala@INCIndia@INCKarnataka
ரூபாயின் மதிப்பை காப்பாற்ற 12 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கத்தை ஆர்பிஐ விற்றதாக வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன.
இது உண்மையா? உண்மை என்றால் நாட்டின் பொருளாதார நிலை என்ன? இந்தியாவின் தங்கக் கையிருப்பை பயன்படுத்த வேண்டிய சூழல் ஏன் ஏற்பட்டது?
நாட்டின் நிதி அமைச்சர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? பிரதமர் மோடி அரசிடம் மக்கள் தெளிவான விளக்கத்தை எதிர்பார்க்கிறார்கள்.
பொருளாதார மேலாண்மையில் தோல்வியா? அல்லது மக்களிடமிருந்து மறைக்கப்படும் இன்னும் பெரிய பிரச்சினையா?
@BJP4TamilNadu@nsitharaman
மோடியின் “கொள்ளை ஆட்சியில்”, மக்களிடமிருந்து மாதம் மாதம் திட்டமிட்ட கொள்ளை.
கடந்த 5 மாதங்களில் மட்டும், வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலை ₹1,571.50 உயர்த்தப்பட்டுள்ளது.
பதில் சொல்லுங்கள், மோடி.