துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் முதலமைச்சரின் சிறு விளையாட்டரங்கங்கள், சாம்பியன்ஸ் அறக்கட்டளை, கேலோ இந்தியா, தேசிய ஆடவர் ஹாக்கி, முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் என விளையாட்டு துறையில் தமிழ்நாடு ஒளி வீசி வருகிறது
#DyCMUdhay
100 நாள் வேலை உறுதி திட்டத்தின் (MGNREGA) மூலம் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4034 கோடி நிதியை வழங்காமல் தமிழ்நாட்டை தொடர்ச்சியாக வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து தி.மு.க. சார்பில் அனைத்து ஒன்றியங்களிலும் தலா இரண்டு இடங்களில் 29.3.2025 சனிக்கிழமை அன்று “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்”
- கழகப் பொதுச்செயலாளர் திரு @katpadidmk அவர்கள் அறிக்கை
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், 09-03-2025 அன்று காலை, சென்னை, அண்ணா அறிவாலயம், கழக அலுவலகத்தில் நடைபெற்ற "தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில்" கழக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றும்போது, “தமிழ்நாடு மாநில நலன் குறித்து கேள்விகள் எழுப்பி, அதற்குரிய பதிலை ஒன்றிய அரசிடம் பெற வேண்டும்” என்றும்; அத்துடன் ‘ஒன்றிய அரசு கடந்த நான்கரை மாதங்களாக தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4034 கோடி அளவுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட(MGNREGA) நிதியை வழங்காதது’ குறித்து கேள்வி எழுப்பிட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
கழகத் தலைவர் அவர்களின் அறிவுரைக்கிணங்க, “ஒன்றிய அரசு கடந்த நான்கரை மாதங்களாக தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4034 கோடி அளவுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட(MGNREGA) நிதியை வழங்காதது குறித்து 25.03.2025 அன்று தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பிய போது, அதற்கு எவ்வித பதிலையும் தராமலும் - தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4034 கோடி அளவுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட (MGNREGA) நிதியை வழங்காமலும், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து தி.மு.க. சார்பில் 29.3.2025 சனிக்கிழமை அன்று காலை அனைத்து கழக ஒன்றியங்களிலும் தலா இரண்டு அனுமதிக்கப்பட்ட இடங்களில் 100 நாள் வேலைவாய்ப்பால் பயன்பெறுவோரைத் திரட்டி “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்”நடைபெறும்.
மாவட்டக் கழக நிர்வாகிகள் - கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில், கழக முன்னணியினர் முன்னிலையில் நடைபெறும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளைக் கழகச் செயலாளர்கள் - நிர்வாகிகள், அனைத்து அமைப்புகளில் உள்ள அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கின்ற வகையில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் உரிய ஏற்பாடுகளைச் செய்து, தமிழ்நாடு அரசை வஞ்சிக்கும் ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசுக்கு தங்கள் கண்டனத்தை பதிவு செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தத்தமது மாவட்டங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் குறித்த விவரத்தை தலைமைக் கழகத்திற்கு உடனே தெரிவித்திட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.
துரைமுருகன்
பொதுச்செயலாளர்,
தி.மு.க.
நிதிக்காக இனமானத்தை அடமானம் வைத்து வெகுமானம் பெறும் கொத்தடிமைகளின் ஆட்சியல்ல இது; தடைக்கற்களை உடைத்தெறியும் தடந்தோள்கள் கொண்ட #DravidianModel ஆட்சி இது!
இருமொழிக் கொள்கை என்பது நம் உயிர்க் கொள்கை!
இது பணப்பிரச்சினை அல்ல; இனப் பிரச்சினை!
தமிழ் காக்க - தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட - தமிழினம் உயர - மாநில சுயாட்சியை உறுதிசெய்ய விரைவில் முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறேன்!
#LanguagePolicy #StateAutonomy
இஸ்லாமிய மக்களின் சமூக, பொருளாதார, கல்வி நிலையை மேம்படுத்தும் எண்ணற்ற திட்டங்களைக் கடந்த 4 ஆண்டுகளில் நிறைவேற்றிய பெருமிதம் பொங்க, உள்ளார்ந்த அன்போடு இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன்!
சிறுபான்மையின மக்களின் அரசியல் உரிமைகளைப் பாதிக்கும் எந்த நடவடிக்கையையும் தி.மு.க. உறுதியாக எதிர்க்கும்! உங்களுக்கு என்றும் துணைநிற்கும்!
#TrekTamilNadu is more than just an adventure. In three months, 4,792 trekkers have explored its breathtaking trails, generating Rs. 63.43 lakh in revenue. Rs. 49.51 lakh has gone directly to the tribal youth who lead the way, making tourism meaningful for communities.
The trails will reopen in April after the fire season. Tamil Nadu is ready to welcome trekkers to its enchanting natural beauty.