சென்னையில், சனாதன ஒழிப்பு மாநாடு என்ற பெயரில் பிழைப்புவாதிகள் நடத்திய கூட்டமொன்றில் பேசிய திராவிடர் கழகத் தலைவர் திரு. வீரமணி அவர்கள், இந்து மதமும் சனாதன தர்மமும் வேறுவேறல்ல, இரண்டும் ���ன்றுதான். இதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்��ு பேசினார். அவருக்குப் பின்னர் பேசிய அமைச்சர் @Udhaystalin, சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார். இவர்களது நோக்கம் என்ன என்பது அனைவருக்குமே தெரிந்த உண்மை.
ஆனால், இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என்று இவர்கள் பேசிய அதே கூட்டத்தில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு @PKSekarbabu அவர்கள் கலந்து கொண்டதும், இவர்கள் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்ததும் அதிர்ச்சியளிக��கிறது. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராகப் பதவி வகிக்கும் தார்மீக உரிமையை அவர் இழந்து விட்டார்.
இன்னும் ஒரு வார காலத்தில், வரும் செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள், தனது இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து திரு @PKSekarbabu அவர்கள் பதவி விலக வேண்டும். இந்து மதத்தை அழிக்க நினைப்பவர்களுடன் துணை போகிறவருக்கு, இந்து சமய அறநிலையத் துறையில் என்ன வேலை?
வரும் செப்டம்பர் 10 ஆம் தேதிக��குள், திரு @PKSekarbabu அவர்கள் அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகவில்லை என்றால், செப்டம்பர் 11 ஆம் தேதி, சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை தலைமை அலுவலகம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள அலுவலகங்கள் முற்றுகையிடப்படும் என்பதைத் த��ரிவித்துக் கொள்கிறேன்.
#DMKFiles2
1. 3000 Crore Scam – ETL Infrastructure Services Limited
2. 2000 Crore Scam in Transport Department
3. 600 Crore Scam in TNMSC
We will elaborate more on this during our Padayatra to our friends in Press & Media.
We demand answers from the corrupt DMK Government.