"நாம எல்லாரும் வாழ்க்கையில ஒருத்தரை ரகசியமா லவ் பண்ணிருப்போம். அவங்ககிட்ட பேசக்கூட தைரியம் இல்லாம, தூரத்துல இருந்து பாத்துட்டுப் போயிருப்போம்ல? அந்த உணர்வை அப்படியே திரையில கொண்டு வந்த படம்தான் இந்த "One Day" (2016)
#oneday
கதை என்னன்னா:
டென்சாய் (Denchai) ஒரு ஐடி (IT) கம்பெனியில வேலை பாக்குற ஒரு சாதாரண 'கீக்' (Geek). அவன் யாராலயும் கவனிக்கப்படாத ஒரு ஆளு. ஆனா, அதே ஆபீஸ்ல வேலை செய்யுற நுய்க்கு (Nui) மேல அவனுக்குக் கொள்ளை காதல். ஒரு விபத்துல நுய்க்கு ஒரு நாள் மட்டும் ஞாபக மறதி (Temporary Amnesia) வருது. அந்த ஒரு நாளைத் தனக்குச் சாதகமாக்கி, அவளோட காதலன் மாதிரி டென்சாய் நடிக்கிறான். அந்த ஒரு நாள்ல அவங்க ரெண்டு பேருக்கும் இடையில என்ன நடக்குது, அந்த நாள் முடிஞ்சதும் அந்த காதல் என்ன ஆச்சுங்கிறதுதான் கதை.