இன்று மாலை பொள்ளாச்சியில், @WTLFoundation சார்பில் நடைபெற்ற 'போதை இல்லா தமிழகம்' – We the Leaders மாநாட்டில் பங்கேற்று என்னுடைய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஜூலை 2026 முழுவதும் 'White Band மாதம்' என்ற மக்கள் இயக்கத்தை முன்னெடுக்க, தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் திரண்டு வந்த ஆயிரக்கணக்கான We the Leaders தலைவர்கள், குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், சகோதர, சகோதரிகள் மற்றும் பெரியவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். நமது இயக்கத்தில் இணைந்திருப்பவர்களில் 17% பெண்கள் என்பது, சமூக மாற்றத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் மிகப்பெரிய சான்றாகும்.
தமிழ்நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிராக சமரசமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது. போதைப்பொருளை ஒழிக்க வேண்டுமெனில் அதன் தேவையையே வேரோடு அழிக்க வேண்டும். இந்தப் போராட்டம் அரசின் பொறுப்பு மட்டுமல்ல; ஒவ்வொரு குடும்பமும், ஒவ்வொரு குடிமகனும் ஏற்க வேண்டிய சமூகப் பொறுப்பு. அதனால்தான் இனி ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் "போதை விழிப்புணர்வு மாதம்" ஆகக் கடைப்பிடித்து, இந்த விழிப்புணர்வு இயக்கத்தை ஒவ்வொரு வீடு, தெரு, கிராமம், குடியிருப்பு மற்றும் கல்வி நிலையம் வரை எடுத்துச் செல்ல உறுதி எடுத்துள்ளோம்.
சமூக மாற்றம் போதை ஒழிப்போடு முடிவடைவதில்லை. ஆகஸ்ட் மாதம், "சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாதம்" ஆகக் கடைபிடித்து, தமிழகம் முழுவதும் 50 லட்சம் மரக்கன்றுகள் நடும் மக்கள் இயக்கத்தை முன்னெடுக்கிறோம். மேலும், வரும் அக்டோபர் 15, 2026, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளில் "A.P.J. Abdul Kalam Centre for Ethics and Politics" தொடங்கப்பட்டு, நற்பண்புகளையும், சமூக மாற்றத்திற்கான பயிற்சியையும் கொடுத்து, 1.5 லட்சம் தலைவர்களை அடுத்த ஆண்டுக்குள் உருவாக்கும் பயணத்தைத் தொடங்குகிறோம்.
அடுத்த ஆறு மாதங்களில் We the Leaders இயக்கம், சமூகத்தின் பல முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் மக்களுடன் இணைந்து பணியாற்றும். ஆக்கபூர்வமான விமர்சனங்கள் மூலம், ஆளும் அரசைப் பொறுப்பேற்கச் செய்வதோடு, மக்களின் நலனையே ஒரே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவோம்.
மாற்றம் என்பது யாரோ ஒருவர் மட்டுமே உருவாக்குவது அல்ல; ஒவ்வொரு குடிமகனும் தலைமைப் பொறுப்பை ஏற்கும் தருணத்தில்தான் அது தொடங்குகிறது. பாதுகாப்பான, போதை இல்லாத, பசுமை நிறைந்த, நேர்மையான, வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டை நாம் அனைவரும் இணைந்து உருவாக்குவோம்.
மாறுவோம்... மாற்றுவோம்! (1/3)
4️⃣2️⃣4️⃣ int'l matches 🙌
1️⃣8️⃣5️⃣7️⃣5️⃣ int'l runs 👏
3️⃣8️⃣ int'l hundreds 💯
Here's wishing former #TeamIndia Captain and former BCCI President Sourav Ganguly @SGanguly99 a very happy birthday 🥳
Thank you ICC and Chairman Jay shah @JayShah for inducting me in the hall of fame .. it’s a huge honour ..One of the 10 Indians to be inducted in the hall of fame ever .. Amazing to be a part of some great names .. @bcci
தமிழ்த் திரைத்துறையின் முன்னணி நடிகரும், சிறந்த கார் பந்தய வீரருமான அன்புச் சகோதரர் பத்மபூஷன்
திரு. #அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
நீண்ட ஆயுள் மற்றும் உடல்நலத்துடன் தாங்கள் தொடர்ந்து பணியாற்றிட வாழ்த்துகிறேன்.
#HBDAjithKumar@AIADMKOfficial
இனி எத்தனை fast bowlers வந்தாலும், accuracy, line & lengthன்னு சொன்னா முதல்ல நினைவுக்கு வர்ற பேர் ஒன்னே ஒன்னு Glenn McGrath 💯
130–135 km/h தான்,
ஆனா அதே இடத்துல… அதே line-ல… அதே length-லball-ஆ போடுற consistency
ஒரு bowling machine கூட போட மாட்டேங்குது.. GOAT💥
திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில், 10% கூட முழுமையாக நிறைவேற்றாமல், நாளொரு நாடகம் நடத்திக் கொண்டு, நாட்டு நடப்பு என்னவென்றே தெரியாமல், யார் எதை எழுதிக் கொடுத்தாலும், அதை அப்படியே கிளிப்பிள்ளை போல ஒப்பிக்கும் முதலமைச்சர் @mkstalin அவர்களே,
Samagra Shiksha திட்டத்தின் ஒரு அங்கமான PM Shri பள்ளிகளை தமிழகத்தில் கொண்டு வருவோம் என்று கடிதம் மூலமாக தெரிவித்துவிட்டு, பின்னர் அந்தர் பல்டி அடித்தது ஏன்? நிறைவேற்றாத திட்டத்துக்கு நிதி எப்படி ஒதுக்குவார்கள்?
Delimitation-ல் தென் மாநிலங்களில் எந்த தொகுதியும் குறைக்கப்படாது என்று, மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு @AmitShah அவர்கள், கடந்த 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதமே தெரிவித்துவிட்டார். உங்களுக்கு செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் இருக்க வாய்ப்பில்லை. உங்களுக்கு எழுதிக் கொடுப்பவர்களுக்குமா இல்லை?
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு அதலபாதாளத்தில் இருக்கும்போது, ஆளுநர் உங்களுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? உங்கள் நிர்வாகத் தோல்விக்கு ஆளுநரை குற்றம் சொல்வதை எப்போது நிறுத்துவீர்கள்?
100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம் என்று நீங்கள் தேர்தல் வாக்குறுதி கொடுத்து ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால், ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாமல் இருக்கிறீர்கள். மத்திய அரசு தற்போது அதனை 125 நாட்களாக உயர்த்தி இருக்கிறது. இனிமேலும் அத்திட்டத்தில் உங்கள் கட்சியினரால் ஊழல் செய்ய முடியாது என்ற இயலாமை, உங்களை இப்படி புலம்ப வைத்திருக்கிறது.
AIIMS கட்டுமானம் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. வேங்கைவயலுக்குதான் நீங்கள் போகவில்லை. மதுரைக்குச் சென்று பார்த்திருக்கலாமே? உங்களை யார் தடுத்தார்கள்? நீங்கள் விரும்பவில்லை என்றாலும், இந்த வருடம் மதுரை AIIMS, மக்கள் பயன்பாட்டிற்கு வரும். மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைப்போம் என்று நீங்கள் கொடுத்த வாக்குறுதி நினைவில் இருக்கா? குறைந்தபட்சம் ஒரு செங்கல்லாவது வைத்தீர்களா?
இயற்கை பேரிடர்களுக்கான நிதியை மத்திய அரசு விடுவித்துவிட்டது. 5000 கோடி ரூபாய் செலவு செய்தும், வருடந்தோறும் சென்னையை வெள்ளக்காடாக மாற்றுவதே உங்கள் சாதனை.
கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு வேண்டுமென்றே உங்கள் அரசு தவறான DPR-ஐ வழங்கியது உங்களுக்கு நினைவில் இருக்கிறதா? திருத்தம் செய்யப்பட்ட DPR-ஐ மீண்டும் சமர்ப்பிக்க எண்ணம் இருக்கிறதா இல்லையா?
கீழடி ஆய்வறிக்கை, உலகளாவிய அளவில் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதால், மேலும் அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் வேண்டும் என்று கேட்கிறது மத்திய அரசு. அந்த ஆதாரங்களைக் கொடுக்க என்ன தயக்கம் உங்கள் அரசுக்கு?
நீட் தேர்வை, தமிழக மக்கள் எதிர்க்கவில்லை. ஏழை, எளிய மாணவர்களுக்கு, நீட் ஒரு வரப்பிரசாதம் என்பதை, ஆண்டுதோறும் மருத்துவக் கல்லூரிகளில் இணையும் எளிய பின்புலம் கொண்ட பெற்றோர்கள் கூறுவார்கள். மருத்துவக் கல்வி இடங்களை விற்று, இத்தனை ஆண்டு காலம் பல கோடி சம்பாதித்த திமுக கும்பலுக்கு மட்டுமே நீட் தேர்வு கசக்கிறது.
ஒரு காலத்தில், தங்களுக்குப் பிடிக்காதவர்கள் குறித்து, பொதுக்கழிவறைகளில் கரித்துண்டால் எழுதி அற்ப சந்தோஷப்படும் மோசமான பழக்கத்தை, AI காலத்திலும் தொடராதீர்கள் முதலமைச்சர் திரு @mkstalin அவர்களே. இனியாவது மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
#NDA4TN