பொலிவியா, அர்ஜென்டினாவில் நீர்வளத்தைச் சூறையாடி, அம்மக்களின் போராட்டத்தால் துரத்தியடிக்கப்பட்ட சூயஸ் எனும் பிரான்சு நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனத்திற்கு சேலம் மாநகராட்சியின் தண்ணீர் விநியோகத்தைத் தாரைவார்ப்பதா?
@CMOTamilnadu@TVKVijayHQ
சேலம் மாநகராட்சியின் குடிநீர் வியோகத்தை 25 ஆண்டுகளுக்கு சூயஸ் எனும் பிரான்சு நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறு���னத்திற்குத் தாரைவார்��்திருக்கும் தவெக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. அர்ஜென்டினா மற்றும் பொலிவியா நாடுகளுக்குள் குடிநீர் விநியோகம் செய்வதாய் உள்நுழைந்து, தண்ணீரை விற்பனைப் பண்டமாக்கி, அம்மண்ணின் நீர்வளத்தைச் சூறையாடி, அந்நாட்டு மக்களால் துரத்தியடிக்கப்பட்ட சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்டு, சேலம் மாநகரத்தின் நீர் விநியோகத்தை வழங்கியிருக்கும் தவெக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
நீர் என்பது மனிதர்களுக்கு மட்டுமானதல்ல; அது புல், பூண்டு, பூச்சி, ஆடு, மாடு, கரடி, மான், புலி, சிங்கம் என உலகில் வாழும் அத்தனை உயிர்களுக்குமான உயிருடைமை. அதனை மனிதர்களுக்கு மட்டுமானதாக்கி, விற்பனைப்பண்டமாக மாற்றி, சந்தைப்படுத்திப் பொருளீட்டுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. நீரை விற்பனை செய்யும் மானுடகுலத்தின் செயல் உலக உயிர்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகமாகும். புட்டிகளிலு���், போத்தல்களிலும் அடைக்கப்பட்டுள்ள நீரை மனிதர்கள் விலைகொடுத்து வாங்கிப் பருகிவிட முடியும். காக்கையும், குருவியும், மைனாவும், சிட்டும் தனது தாகத்திற்கு என்ன செய்யும்? எனும் கேள்வியை உளச்சான்றோடு ஒவ்வொரு குடிமகனும் எழுப்ப வேண்டும். தண்ணீர் விநியோகத்தைத் தனியார்மயமாக்குவதும், குடிநீரை சந்தைப்பொருள் ஆக்குவதும் ஏற்கவே முடியாத சனநாயகத் துரோகம். வரிசெலுத்தி, வாக்குச் செலுத்தி ஓர் அரசை நிர்மாணிக்கும் குடிமக்களுக்கு தூய குடிநீரைத் தங்குதடையின்றித் தர வேண்டியது ஒரு அரசின் தலையாயப் பொறுப்பும், முதன்மைக�� கடமையுமாகும்.
கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோகம் தொடர்பாக கடந்த 2018ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமிடப்பட்டு, அதற்கெதிராகப் பரப்புரையும், போராட்டமும் செய்து வரும் நிலையில், தற்போது சேலம் மாநகரத்தின் குடிநீர் விநியோகத்தை அதே சூயஸ் நிறுவனத்திடம் தவெக அரசு கையளித்திருப்பது பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையைத் தன்னுடைய நேரடிக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் விஜய் அவர்கள் குடிநீர் வழங்குவதைத் தனியாருக்குத் தாரைவார்க்க உத்தரவிட்டது ஏன்? பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தால் குடிநீர் விநியோகத்தைச் சிறப்பாகச் செய்ய முடியும்; இவ்வள��ு பெரிய நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்ட ஒரு அரசு இயந்திரத்தால் செய்ய முடியாதா? பன்னாட்டு நிறுவனங்களின் முதலாளிகள் இலாபத் தேவைக்குத்தான் வேலைசெய்வார்களே ஒழிய, மக்கள் சேவைக்கு ஒருநாளும் வேலை செய்ய மாட்டார்கள் எனும் அடிப்படைப் புரியாதா? நீர்வளத்தையும், நீராதாரங்களையும் பன்னாட்டு நிறுவனங்களிடம் கையளித்தால், நீர் இறையாண்மை முழுக்க முழுக்க அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும். அவர்கள் சொல்கிற விலைக்குக் குடிநீரை மக்கள் வாங்க வேண்டியப் பேராபத்துமிக்க சூழல் நாளை உருவாகும். இது வருங்காலத் தலைமுறையின் நலவாழ்வினைப் பன்னாட்டு நிறுவனத்திடம் அடமானம் வைக்கும் பேரபாயம். அர்ஜென்டினாவிலும், பொலிவியாவிலும் சூயஸ் நிறுவனம் செய்த மானுடகுலக் கொடுமைகள் வரலாறாக விரிகையில், கண்முன்னே சாட்சியாக இருக்கையில், அந்நிறுவனத்திடமே சேலம் மாநகரத்தின் நீர்விநியோ���த்தை வழங்குவது மக்கள் விரோதப்போக்கின் உச்சமாகும்.
ஆகவே, சேலம் மாநகராட்சியின் குடிநீர் விநியோகத்தை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தத்தை உடனடியாகத் திரும்பப் பெற்று, மாநில அரசே தரமான குடிநீரை மக்களுக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டுமென தவெக அரசை நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
பொலிவியா, அர்ஜென்டினாவில் நீர்வளத்தைச் சூறையாடி, அம்மக்களின் போராட்டத்தால் துரத்தியடிக்கப்பட்ட சூயஸ் எனும் பிரான்சு நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனத்திற்கு சேலம் மா���கராட்சியின் தண்ணீர் விநியோகத்தைத் தாரைவார்ப்பதா?
@CMOTamilnadu @TVKVijayHQ
சேலம் மாநகராட்சியின் குடிநீர் வியோகத்தை 25 ஆண்டுகளுக்கு சூயஸ் எனும் பிரான்சு நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனத்திற்குத் தாரைவார்த்திருக்கும் தவெக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. அர்ஜென்டினா மற்றும் பொலிவியா நாடுகளுக்குள் குடிநீர் விநியோகம் செய்வதாய் உள்நுழைந்து, தண்ணீரை விற்பனைப் பண்டமாக்கி, அம்மண்ணின�� நீர்வளத்தைச் சூறையாடி, அந்நாட்டு மக்களால் துரத்தியடிக்கப்பட்ட சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்டு, சேலம் மாநகரத்தின் நீர் விநியோகத்தை வழங்கியிருக்கும் தவெக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
நீர் என்பது மனிதர்களுக்கு மட்டுமானதல்ல; அது புல், பூண்டு, பூச்சி, ஆடு, மாடு, கரடி, மான், புலி, சிங்கம் என உலகில் வாழும் அத்தனை உயிர்களுக்குமான உயிருடைமை. அதனை மனிதர்களுக்கு மட்டுமான���ாக்கி, விற்பனைப்பண்டமாக மாற்றி, சந்தைப்படுத்திப் பொருளீட்டுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. நீரை விற்பனை செய்யும் மானுடகுலத்தின் செயல் உலக உயிர்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகமாகும். புட்டிகளிலும், போத்தல்களிலும் அடைக்கப்பட்டுள்ள நீரை மனிதர்கள் விலைகொடுத்து வாங்கிப் பருகிவிட முடியும். காக்கையும், குருவியும், மைனாவும், சிட்டும் தனது தாகத்திற்கு என்ன செய்யும்? எனும் கேள்விய�� உளச்சான்றோடு ஒவ்வொரு குடிமகனும் எழுப்ப வேண்டும். தண்ணீர் விநியோகத்தைத் தனியார்மயமாக்குவதும், குடிநீரை சந்தைப்பொருள் ஆக்குவதும் ஏற்கவே முடியாத சனநாயகத் துரோகம். வரிசெலுத்தி, வாக்குச் செலுத்தி ஓர் அரசை நிர்மாணிக்கும் குடிமக்களுக்கு தூய குடிநீரைத் தங்குதடையின்றித் தர வேண்டியது ஒரு அரசின் தலையாயப் பொறுப்பும், முதன்மைக் கடமையுமாகும்.
கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோக��் தொடர்பாக கடந்த 2018ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமிடப்பட்டு, அதற்கெதிராகப் பரப்புரையும், போராட்டமும் செய்து வரும் நிலையில், தற்போது சேலம் மாநகரத்தின் குடிநீர் விநியோகத்தை அதே சூயஸ் நிறுவனத்திடம் தவெக அரசு கையளித்திருப்பது பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையைத் தன்னுடைய நேரடிக்கட்டுப்பாட்டில் வைத்திரு��்கும் முதல்வர் விஜய் அவர்கள் குடிநீர் வழங்குவதைத் தனியாருக்குத் தாரைவார்க்க உத்தரவிட்டது ஏன்? பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தால் குடிநீர் விநியோகத்தைச் சிறப்பாகச் செய்ய முடியும்; இவ்வளவு பெரிய நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்ட ஒரு அரசு இயந்திரத்தால் செய்ய முடியாதா? பன்னாட்டு நிறுவனங்களின் முதலாளிகள் இலாபத் தேவைக்குத்தான் வேலைசெய்வார்களே ஒழிய, மக்கள் சேவைக்��ு ஒருநாளும் வேலை செய்ய மாட்டார்கள் எனும் அடிப்படைப் புரியாதா? நீர்வளத்தையும், நீராதாரங்களையும் பன்னாட்டு நிறுவனங்களிடம் கையளித்தால், நீர் இறையாண்மை முழுக்க முழுக்க அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும். அவர்கள் சொல்கிற விலைக்குக் குடிநீரை மக்கள் வாங்க வேண்டியப் பேராபத்துமிக்க சூழல் நாளை உருவாகும். இது வருங்காலத் தலைமுறையின் நலவாழ்வினைப் பன்னாட்டு நிறுவனத்திடம் அடமானம் வைக்கும் பேரபாயம். அர்ஜென்டினாவிலும், பொலிவியாவிலும் சூயஸ் நிறுவனம் செய்த மானுடகுலக் கொடுமைகள் வரலாறாக விரிகையில், கண்முன்னே சாட்சியாக இருக்கையில், அந்நிறுவனத்திடமே சேலம் மாநகரத்தின் நீர்விநியோகத்தை வழங்குவது மக்கள் விரோதப்போக்கின் உச்சமாகும்.
ஆகவே, சேலம் மாநகராட்சியின் குடிநீர் விநியோகத்தை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தத்தை உடனடியாகத் திரும்பப் பெற்���ு, மாநில அரசே தரமான குடிநீரை மக்களுக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டுமென தவெக அரசை நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
அணுக்கனிமக் கொள்ளை, கதிரியக்கத் திட்டத்திற்கு துணைபோகும் வகையில் தவெக அரசு IREL நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட கால நீட்டிப்பு அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி,
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைந்த கன்னியாகுமரி மாவட்டம் நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
நாள��� : 10.07.2026 - வெள்ளிக்கிழமை | மாலை 3.30 மணிக்கு.
இடம் : வேப்பமூடு சந்திப்பு (நாகர்கோயில்).
@Seeman4TN @NaamTamilarOrg
பரங்கிப்பேட்டை அருகே கடலுக்குள் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு, அனுமதி வழங்க��் கூடாது என்பதை வலியுறுத்தி,
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைந்த கடலூர் மாவட்டம் நடத்தும்,
மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் !
நாள்: ஆனி 20 சனிக்கிழமை | 04-07-2026
மாலை 05 மணிக்கு.
இடம்: பரங்கிப்பேட்டை (வண்டிக்காரத் தெரு)
@Seeman4TN @NaamTamilarOrg
ஜவ்வாது மலையின் இயற்கை வளங்களை தனியாருக்குத் தாரைவார்க்கும் தமிழ்நாடு அரசு அதானியின் அல்லேரி -நீரேற்றுப் புனல்மின் திட்டத்தை உடனடியாக ரத்து செய்க!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி
@Seeman4TN@NaamTamilarOrg
கன்னியாகுமரி அணுக்கனிமக் கொள்ளை: கதிரியக்கத் திட்டத்திற்குத் துணைபோகும் அனுமதி நீட்டிப்பு ஆணையைத் த.வெ.க அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
@CMOTamilnadu@drtkprabhu_TVK@CTR_Nirmalkumar@DAEIndia@moefcc@byadavbjp
கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டத்திற்கு உட்பட்ட 1144 ஹெக்டேர் பரப்பளவில் கதிரியக்கத் தாக்கம் ஏற்படுத்தும் கனிமங்களைப் பிரித்தெடுக்கும் இந்திய அருமணல் நிறுவனத்தின் (IREL) அழிவுத் திட்டத்திற்கு, மேலும் ஓராண்டு கால நீட்டிப்பு வழங்கி அரசாணை (G.O. Ms No. 12) வெளியிட்டிருக்கும் தமிழக வெற்றிக் கழக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியதாகும். அதிகாரத்திற்கு வருவதற்கு மு��்பு, கடந்த 03.11.2024 அன்று நடந்த த.வெ.க-வின் செயற்குழுக் கூட்டத்தில், "தென் தமிழகத்தைப் பாழ்படுத்தும் அபாயம் விளைவிக்கும் நாசகார, நச்சுத் திட்டம்" என இந்த அணுக்கனிம அகழ்வுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றினார்கள். ஆனால், இன்று அதே திட்டம் 10.06.2026 அன்றுடன் முழுமையாகக் காலாவதியாக இருந்த நிலையில், சரியாக இறுதி நாளில் அத்திட்டத்தை மீண்டும் உயிர்ப்பித்து, ஒட்டுமொத்தத் தென் தமிழக மக்களையு��் கதிரியக்கப் பாதிப்பிற்குள்ளாக்கும் செயலுக்கு துணைபோயிருக்கிறது த.வெ.க அரசு.
கீழ்மிடா��ம், மிடாலம், இனயம்புத்தன்துறை, ஏழுதேசம், கொல்லங்கோடு ஆகிய கிராமங்களில் தாது மணலில் இருந்து மோனசைட் (Monazite), சிர்கான் (Zircon) உள்ளிட்ட கதிரியக்கக் கனிமங்களைப் பிரித்தெடுப்பது ஈடுசெய்ய முடியாத சூழலியல் பேரழிவை ஏற்படுத்தும். இந்த அகழ்வினால் ஏற்படக்கூடிய கதிரியக்கம் சுற்றுப்புறக் கிராமங்களில் பரவிப் பொதுமக்களைப் புற்றுநோய்க்கு ஆளாக்கும் ஆபத்து உள்ளது. கடலோர மணலில் இருந்து தாதுப் ப��ருட்களைப் பிரித்து எடுத்த பிறகு கழிவு நீரையும் மணலையும் கொட்டுவதால் கடல் நீரின் தன்மை மாறுவதோடு, மீன் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் அழிந்து மீனவர்களின் வாழ்வாதாரம் நிரந்தரமாகச் சீரழிக்கப்படும்.
சென்ற மாதம் தான் தமிழ்நாட்டின் குவாரிகளுக்கு புகைப்படக் கலைஞர் குழு புடைசூழ பார்வையிட்டு ‘இயற்கை வளப் பாதுகாவலர்’ என்று சமூக ஊடகங்களில் தன் ரசிகர் பட்டாளத்தை வைத்துப் பாராட்டு��் பத்திரம் வாசித்துக் கொண்டிருந்தார் மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ��ி.கே. பிரபு அவர்கள். ஆனால், அந்த விளம்பரங்களின் சாயம் வெளுக்க ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதே அமைச்சகத்தின் கீழ் இருக்கும் இயற்கை வளங்கள் துறைதான், கன்னியாகுமரியின் 1144 ஹெக்டேர் பரப்பளவை அணுக்கனிமக் கொள்ளைக்குத் தாரைவார்க்கும் அரசாணையில் கையெழுத்திட்டுள்ளது. குவாரிகளை சீரமைப்பது போல் பாவனை செய்துவிட்டு, ஒட்டுமொத்தக் கடலோரத்தையே கதிரியக்கப் பாதிப்பிற்குள்ளாக்கும் ஒன்றிய அரசின��� IREL நிறுவனத்திற்கு சிகப்பு மின்கம்பளம் விரிப்பதுதான் அமைச்சர் பிரபு அவர்களின் ‘அதிரடி’ நிர்வாகமா? விளம்பரத்திற்கு ஒரு முகம், ஒன்றிய அரசுக்கு ஒரு முகம் காட்டும் இந்த இரட்டை வேடத்தைத்தான் மக்கள் கடந்த மாதம் கொண்டாடித் தீர்த்தார்களா?
மக்களின் எதிர்ப்பைக் கண்டு அஞ்சிய ஒன்றிய பாஜக அரசு, 08.09.2025 அன்று அறிவித்திருந்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தையே நடத்தாமல் திரும்பபெற்று, எப்படியாவது இத்திட்டத்தை செயல்படுத்திவிட முடியாதா என்று முயற்சிக்கும் நேரத்தில் மாநில அரசோ, IREL நிறுவனத்திற்குத் தேவையான கடலோர ஒழுங்குமுறை மண்டல (CRZ) அனுமதியைப் பெற வசதியாகக் கால நீட்டிப்பை வழங்கியுள்ளது. ஒன்றிய அரசின் கனிமவளக் கொள்ளைக்குத் தலையாட்டி பொம்மையாகச் செய���்படுவதைத் தவெக அரசு கைவிட வேண்டும்.
தமிழ்நாடு அரசு உடனடியாகத் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி, IREL நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட கால நீட்டிப்பு அரசாணையை திரும்பப்பெற வேண்டும். கன்னியாகுமரி மண்ணையும் மக்களையும் பாதுகாக்கும் இந்த சட்டப்போராட்டத்திலும், களப்போராட்டத்திலும், இத்திட்டத்தை முழுமையாகக் கைவிடும் வரை மக்களுடன் இணைந்து மாபெரும் எதிர்ப்பினை நாம் தமிழர் கட்சி முன���னெடுக்கும் என எச்சரிக்கின்றேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
@Seeman4TN @NaamTamilarOrg
கன்னியாகுமரி அணுக்கனிமக் கொள்ளை: கதிரியக்கத் திட்டத்திற்குத் துணைபோகும் அனுமதி நீட்டிப்பு ஆணையைத் த.வெ.க அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
@CMOTamilnadu@drtkprabhu_TVK@CTR_Nirmalkumar@DAEIndia@moefcc@byadavbjp
கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டத்திற்கு உட்பட்ட 1144 ஹெக்டேர் பரப்பளவில் கதிரியக்கத் தாக்கம் ஏற்படுத்தும் கனிமங்களைப் பிரித்தெடுக்கும் இந்திய அருமணல் நிறுவனத்தின் (IREL) அழிவுத் திட்டத்திற்கு, மேலும் ஓராண்டு கால நீட்டிப்பு வழங்கி அரசாணை (G.O. Ms No. 12) வெளியிட்டிருக்கும் தமிழக வெற்றிக் கழக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியதாகும். அதிகாரத்திற்கு வருவதற்கு ம��ன்பு, கடந்த 03.11.2024 அன்று நடந்த த.வெ.க-வின் செயற்குழுக் கூட்டத்தில், "தென் தமிழகத்தைப் பாழ்படுத்தும் அபாயம் விளைவிக்கும் நாசகார, நச்சுத் திட்டம்" என இந்த அணுக்கனிம அகழ்வுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றினார்கள். ஆனால், இன்று அதே திட்டம் 10.06.2026 அன்றுடன் முழுமையாகக் காலாவதியாக இருந்த நிலையில், சரியாக இறுதி நாளில் அத்திட்டத்தை மீண்டும் உயிர்ப்பித்து, ஒட்டுமொத்தத் தென் தமிழக மக்களைய��ம் கதிரியக்கப் பாதிப்பிற்குள்ளாக்கும் செயலுக்கு துணைபோயிருக்கிறது த.வெ.க அரசு.
கீழ்மிடாலம், மிடாலம், இனயம்புத்தன்துறை, ஏழுதேசம், கொல்லங்கோடு ஆகிய கிராமங்களில் தாது மணலில் இருந்து மோனசைட் (Monazite), சிர்கான் (Zircon) உள்ளிட்ட கதிரியக்கக் கனிமங்களைப் பிரித்தெடுப்பது ஈடுசெய்ய முடியாத சூழலியல் பேரழிவை ஏற்படுத்தும். இந்த அகழ்வினால் ஏற்படக்கூடிய கதிரியக்கம் சுற்றுப்புறக் கிராமங்களில் பரவிப் பொதுமக்களைப் புற்றுநோய்க்கு ஆளாக்கும் ஆபத்து உள்ளது. கடலோர மணலில் இருந்து தாதுப் பொருட்களைப் பிரித்து எடுத்த பிறகு கழிவு நீரையும் மணலையும் கொட்டுவதால் கடல் நீரின் தன்மை மாறுவதோடு, மீன் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் அழிந்து மீனவர்களின் வாழ்வாதாரம் நிரந்தரமாகச் சீரழிக்கப்படும்.
சென்ற மாதம் தான் தமிழ்நாட்டின் குவாரிகளுக்கு புகைப்படக் கலைஞர் குழு புடைசூழ பார்வையிட��டு ‘இயற்கை வளப் பாதுகாவலர்’ என்று சமூக ஊடகங்களில் தன் ரசிகர் பட்டாளத்தை வைத்துப் பாராட்டுப் பத்திரம் வாசித்துக் கொண்டிருந்தார் மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டி.கே. பிரபு அவர்கள். ஆனால், அந்த விளம்பரங்களின் சாயம் வெளுக்க ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதே அமைச்சகத்தின் கீழ் இருக்கும் இயற்கை வளங்கள் துறைதான், கன்னியாகுமரியின் 1144 ஹெக்டேர் பரப்பளவை அணுக்கனிமக் கொள்ளைக்குத் தாரைவார்க்கும் அரசாண��யில் கையெழுத்திட்டுள்ளது. குவாரிகளை சீரமைப்பது போல் பாவனை செய்துவிட்டு, ஒட்டுமொத்தக் கடலோரத்தையே கதிரியக்கப் பாதிப்பிற்குள்ளாக்கும் ஒன்றிய அரசின் IREL நிறுவனத்திற்கு சிகப்பு மின்கம்பளம் விரிப்பதுதான் அமைச்சர் பிரபு அவர்களின் ‘அதிரடி’ நிர்வாகமா? விளம்பரத்திற்கு ஒரு முகம், ஒன்றிய அரசுக்கு ஒரு முகம் காட்டும் இந்த இரட்டை வேடத்தைத்தான் மக்கள் கடந்த மாதம் கொண்டாடித் தீர்த்தா��்களா?
மக்களின் எதிர்ப்பைக் கண்டு அஞ்சிய ஒன்றிய பாஜக அரசு, 08.09.2025 அன்று அறிவித்திருந்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தையே நடத்தாமல் திரும்பபெற்று, எப்படியாவது இத்திட்டத்தை செயல்படுத்திவிட முடியாதா என்று முயற்சிக்கும் நேரத்தில் மாநில அரசோ, IREL நிறுவனத்திற்குத் தேவையான கடலோர ஒழுங்குமுறை மண்டல (CRZ) அனுமதியைப் பெற வசதியாகக் கால நீட்டிப்பை வழங்கியுள்ளது. ஒன்றிய அரசின் கனிமவளக் கொள்ளைக்குத் தலையாட்டி பொம்மையாகச் செயல்படுவதைத் தவெக அரசு கைவிட வேண்டும்.
தமிழ்நாடு அரசு உடனடியாகத் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி, IREL நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட கால நீட்டிப்பு அரசாணையை திரும்பப்பெற வேண்டும். கன்னியாகுமரி மண்ணையும் மக்களையும் பாதுகாக்கும் இந்த சட்டப்போராட்டத்திலும், களப்போராட்டத்திலும், இத்திட்டத்தை முழுமையாகக் கைவிடும் வரை மக்களுடன் இணைந்து மாப��ரும் எதிர்ப்பினை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என எச்சரிக்கின்றேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
ஜவ்வாது மலையின் இயற்கை வளங்களை தனியாருக்குத் தாரைவார்க்கும் தமிழ்நாடு அரசு – அதானியின் அல்லேரி நீரேற்றுப் புனல்மின் திட்டத்தை உடனடியாக ரத்து செய்க!
@CMOTamilnadu@drtkprabhu_TVK@CTR_Nirmalkumar@moefcc@byadavbjp
தமிழ் சமூகத்தின் நீண்ட பண்பாட்டுடன் தொடர்புடைய கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் முக்கிய அங்கமான ஜவ்வாது மலையின் இயற்கை வளங்களையும், அரிய உயிரினங்களையும் அழித்து, கார்ப்பரேட் நி���ுவனங்களிடம் ஒப்படைக்க முயலும் தமிழ்நாடு அரசின் மக்கள் விரோத, சூழல் விரோத நடவடிக்கையை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவிற்குட்பட்ட அரசம்பட்டு காப்புக்காட்டில் உள்ள அல்லேரி மலையில் 1800 மெகாவாட் திறன் கொண்ட நீரேற்றுப் புனல்மின் திட்டத்திற்காக 25.11.2025 அன்று தமிழ் நாடு பசுமை எரிசக்திக் கழக நிறுவனமானது அதானி குழுமத்தைச் சேர்ந்த அதானி ��ைட்ரோ போர்டின் லிமிடெட் (ADANI HYDRO ENERGY FOURTEEN LIMITED) நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது.
கனிம வளங்களையும், இயற்கை வளங்களையும் சுரண்டி இலாபம் ஈட்டும் நிறுவனத்திடம் தமிழ்நாட்டின் அரிய காடுகளையும் நீராதாரங்களையும் ஒப்படைப்பது எந்த வகையிலும் ஏற்க முடியாதது. தமிழர்களின் வாழ்வாதாரத்தை விட, கார்ப்பரேட் ��ுதலாளிகளின் இலாபம் தான் இந்த அரசுக்கு முக்கியமா என்கிற கேள்வி எழுகிறது.
இந்தத் திட்டத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள 337.452 எக்டேர் நிலப்பரப்பில் 228.352 எக்டேர் அரசம்பட்டு காப்புக்காடாகும். மேல் மற்றும் கீழ் நீர்த்தேக்கங்கள் அமைப்பதன் மூலம் இந்த அடர்ந்த காடுகள் நீரில் மூழ்கும் பேராபத்து ஏற்பட்டுள்ளது.
அரசம்பட்டு காப்புக்காடு வெறும் மரங்கள் நிறைந்த பகுதியல்ல; ஆயிரக்கணக்கான உயிரினங்களின் வாழ்விடமாகும். குறிப்பாக சாம்பல் இருவாச்சி, வெண்முதுகு ஆந்தை, புள்ளி ஆந்தை உள்ளிட்டப் பல அரிய பறவைகள், உலகிலேயே ஜவ்வாது மலையில் மட்டுமே காணப்படும் ஜவ்வாது இலைச்சருகு அரணை (Jawadhu leaf-litter skink), இலங்கை மரந்தாவும் பாம்பு, மலபார் குழி விரியன், எறும்புத்தின்னி, தேவாங்கு, மலபார் மலை அணில், செந்நாய், காட்டுமாடு மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டக் கரடிகள் உள்ளிட்ட பல அரிய உயிரினங்களி��் புகலிடமாக இப்பகுதி விளங்குகிறது. இவ்வளவு முக்கியமான உயிரியல் வளத்தை அழிப்பது இயற்கைக்கு எதிரான வரலா��்றுப் பிழையாகும்.
அல்லேரி மலையிலிருந்து பாயும் நீரை நம்பியே மலையடிவாரப் பகுதிகளில் உள்ள ஏரிகள், கிணறுகள் மற்றும் விவசாய நிலங்கள் செழித்து வருகின்றன. புவிசார் குறியீடு (GI) பெற்ற இலவம்பாடி முள் கத்தரிக்காய் உள்ளிட்ட விவசாய உற்பத்திகளும் இந்த மலைகளில் இருந்து கிடைக்கும் நீராதாரத்தைச் சார்ந்தே உள்ளன.
மேலும், கீழணையிலிருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விரிஞ்சிபுரம் ப���லாற்றிலிருந்து குழாய்கள் மூலம் நீர் எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் குழாய்கள் செல்லும் வழியிலுள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதோடு, ஆண்டிற்கு மிகக் குறுகிய காலமே நீர் ஓடும் பாலாற்றின் நீர்வளமும் சுரண்டப்படும் அபாயம் உள்ளது.
சூழலியல் பாதிப்பு ஒரு புறம் இருக்க, பொருளாதார அடிப்படையிலும் இந்தத் திட்டம் தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும் சுமையாக அமையும். இத்திட்டத்தின் வழி உற்பத்தியாகும் மின்சாரத்தின் அடக்க விலை யூனிட்டுக்கு ரூ.9.10 எனக் கூறப்படுகிறது. நிறுவனத்தின் இலாபத்துடன் சேர்ந்து தமிழ்நாடு அரசுக்கு விற்கப்படும் விலை ரூ.10னைத் தாண்டும். அதே நேரத்தில், நவீன தொழில்நுட்பத்தில் சூரிய ஆற்றல், காற்றாலை மற்றும் மின்கல சேமிப்பு வசதிகள் மூலம் குறைந்த செலவில் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். ஏற்கனவே பெரும் கடன் சுமையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மீது மேலும் பொருளாதாரச் சுமை ஏற்றுவது எந்த நியாயமும் இல்லை.
எனவே அல்லேரி, தென்மலை, ஆழியார் உள்ளிட்ட வனப்பகுதிகளில் நீரேற்றுப் புனல்மின் திட்டங்களை அமைப்பதற்காக அதானி குழுமத்துடன் மேற்க���ள்ளப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களையும், தமிழ்நாடு அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ஒன்றிய அரசு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கினாலும், மாநில வனத்துறை இந்தத் திட்டத்திற்கு அனுமதி மறுக்க வேண்டும்.
தமிழர்களின் மண்ணையும், மலைகளையும், நீரையும், காடுகளையும் கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாபத்திற்காக அழிக்க முயன்றால், அதை ஒருபோதும் நாம் தமிழர் கட்சி அனுமதிக்காது. இயற்கையையும், மக்களின�� வாழ்வாதாரத்தையும் காக்க நாம் தமிழர் கட்சி மக்களைத் திரட்டி மக்களாட்சி வழியில் மாபெரும் அறப்போராட்டங்களை முன்னெடுத்து இந்தத் திட்டத்தை முறியடிக்கும் என்பதை தமிழ்நாடு அரசுக்கும், ஒன்றிய அரசுக்கும் எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
@Seeman4TN @NaamTamilarOrg
ஜவ்வாது மலையின் இயற்கை வளங்களை தனியாருக்குத் தாரைவார்க்கும் தமிழ்நாடு அரசு – அதானியின் அல்லேரி நீரேற்றுப் புனல்மின் திட்டத்தை உடனடியாக ரத்து செய்க!
@CMOTamilnadu@drtkprabhu_TVK@CTR_Nirmalkumar@moefcc@byadavbjp
தமிழ் சமூகத்தின் நீண்ட பண்பாட்டுடன் தொடர்புடைய கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் முக்கிய அங்கமான ஜவ்வாது மலையின் இயற்கை வளங்களையும��, அரிய உயிரினங்களையும் அழித்து, கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்க முயலும் தமிழ்நாடு அரசின் மக்கள் விரோத, சூழல் விரோத நடவடிக்கையை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவிற்குட்பட்ட அரசம்பட்டு காப்புக்காட்டில் உள்ள அல்லேரி மலையில் 1800 மெகாவாட் திறன் கொண்ட நீரேற்றுப் புனல்மின் திட்டத்திற்காக 25.11.2025 அன்று தமிழ் நாடு பசுமை எரிசக்திக் கழ�� நிறுவனமானது அதானி குழுமத்தைச் சேர்ந்த அதானி ஹைட்ரோ போர்டின் லிமிடெட் (ADANI HYDRO ENERGY FOURTEEN LIMITED) நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது.
கனிம வளங்களையும், இயற்கை வளங்களையும் சுரண்டி இலாபம் ஈட்டும் நிறுவனத்திடம் தமிழ்நாட்டின் அரிய காடுகளையும் நீராதாரங்களையும் ஒப்படைப்பது எந்த வகையிலும் ஏற்க முடியாதது. தமிழர்களின் வாழ்வாதாரத்தை விட, கார்ப்பரேட் முதலாளிகளின் இலாபம் தான் இந்த அரச��க்கு முக்கியமா என்கிற கேள்வி எழுகிறது.
இந்தத் திட்டத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள 337.452 எக்டேர் நிலப்பரப்பில் 228.352 எக்டேர் அரசம்பட்டு காப்புக்காடாகும். மேல் மற்றும் கீழ் நீர்த்தேக்கங்கள் அமைப்பதன் மூலம் இந்த அடர்ந்த காடுகள் நீரில் மூழ்கும் பேராபத்து ஏற்பட்டுள்ளது.
அரசம்பட்டு காப்புக்காடு வெறும் மரங்கள் நிறைந்த பகுதியல்ல; ஆயிரக்கணக்கான உயிரினங்களின் வாழ்விடமாகும். குறி���்பாக சாம்பல் இருவாச்சி, வெண்முதுகு ஆந்தை, புள்ளி ஆந்தை உள்ளிட்டப் பல அரிய பறவைகள், உலகிலேயே ஜவ்வாது மலையில் மட்டுமே காணப்படும் ஜவ்வாது இலைச்சருகு அரணை (Jawadhu leaf-litter skink), இலங்கை மரந்தாவும் பாம்பு, மலபார் குழி விரியன், எறும்புத்தின்னி, தேவாங்கு, மலபார் மலை அணில், செந்நாய், காட்டுமாடு மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டக் கரடிகள் உள்ளிட்ட பல அரிய உயிரினங்களின் புகலிடமாக இப்பகுதி விளங்குகிறது. இவ்வளவு முக்கியமான உயிரியல் வளத்தை அழிப்பது இயற்கைக்கு எதிரான வரலாற்றுப் பிழையாகும்.
அல்லேரி மலையிலிருந்து பாயும் நீரை நம்பியே மலையடிவாரப் பகுதிகளில் உள்ள ஏரிகள், கிணறுகள் மற்றும் விவசாய நிலங்கள் செழித்து வருகின்றன. புவிசார் குறியீடு (GI) பெற்ற இலவம்பாடி முள் கத்தரிக்காய் உள்ளிட்ட விவசாய உற்பத்திகளும் இந்த மலைகளில் இருந்து கிடைக்கும் நீராதாரத்தைச் சார்ந்தே உள்ளன.
மேலு���், கீழணையிலிருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விரிஞ்சிபுரம் பாலாற்றிலிருந்து குழாய்கள் மூலம் நீர் எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் குழாய்கள் செல்லும் வழியிலுள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதோடு, ஆண்டிற்கு மிகக் குறுகிய காலமே நீர் ஓடும் பாலாற்றின் நீர்வளமும் சுரண்டப்படும் அபாயம் உள்ளது.
சூழலியல் பாதிப்பு ஒரு புறம் இருக்க, பொருளாதார அடிப்படையிலும் இந்தத் திட்டம் தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும் சுமையாக அமையும். இத்திட்டத்தின் வழி உற்பத்தியாகும் மின்சாரத்தின் அடக்க விலை யூனிட்டுக்கு ரூ.9.10 எனக் கூறப்படுகிறது. நிறுவனத்தின் இலாபத்துடன் சேர்ந்து தமிழ்நாடு அரசுக்கு விற்கப்படும் விலை ரூ.10னைத் தாண்டும். அதே நேரத்தில், நவீன தொழில்நுட்பத்தில் சூரிய ஆற்றல், காற்றாலை மற்றும் மின்கல சேமிப்பு வசதிகள் மூலம் குறைந்த செலவில் மின்சாரம் உற்பத்��ி செய்ய முடியும். ஏற்கனவே பெரும் கடன் சுமையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மீது மேலும் பொருளாதாரச் சுமை ஏற்றுவது எந்த நியாயமும் இல்லை.
எனவே அல்லேரி, தென்மலை, ஆழியார் உள்ளிட்ட வனப்பகுதிகளில் நீரேற்றுப் புனல்மின் திட்டங்களை அமைப்பதற்காக அதானி குழுமத்துடன் மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களையும், தமிழ்நாடு அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ஒன்றிய அரசு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கினாலும், மாநில வனத்துறை இந்தத் திட்டத்திற்கு அனுமதி மறுக்க வேண்டும்.
தமிழர்களின் மண்ணையும், மலைகளையும், நீரையும், காடுகளையும் கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாபத்திற்காக அழிக்க முயன்றால், அதை ஒருபோதும் நாம் தமிழர் கட்சி அனுமதிக்காது. இயற்கையையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் காக்க நாம் தமிழர் கட்சி மக்களைத் திரட்டி மக்களாட்சி வழியில் மாபெரும் அறப்போராட்டங்களை முன்னெடுத்து இந்தத் திட்டத்தை முறியடிக்கும் என்பதை தமிழ்நாடு அரசுக்கும், ஒன்றிய அரசுக்கும் எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
IREL நிறுவனத்தின் அணுக்கனிம சுரங்க ஒதுக்கீட்டுக்கு த.வெ.க. அரசு அனுமதி நீட்டிப்பு அளித்துள்ளது கடும் கண்டனத்திற்குரியதாகும���.
ஜூன் 11, 2021ல் 1144 ஹெக்டேரில் ஒதுக்கப்பட்ட இத்திட்டத்திற்கான இட அனுமதியின் காலக்கெடு 5 ஆண்டுகள் மட்டுமே. இது தற்பொழுது முடிவடையவிருந்த நிலையில், ஆளும் தவெக அரசு காலாவதியாகிப் போக இருந்த இந்த அ��ுமதியினை மேலும் ஓராண்டிற்குப் புதுப்பித்து இந்நாசகரத் திட்டத்திற்குப் புத்துயிர் ஊட்டியுள்ளது.
ஆனால், நவம்பர் 2024ல் தவெக கூட்டிய செயற்குழு கூட்டத்திலோ இத்திட்டத்தினைக் கைவிட வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனால்தான் சொல்கிறோம் தவெகவிற்கும் வளப்பாதுகாப்பு மற்றும் தமிழ்நாட்டின் நலனிற்கும் எவ்விதத் தொடர்புமில்லை என்று! பாஜக மட்டுமில்லை, தவெகவும் தமிழ்நாட்��ிற்குத் தொடர்பற்றத் தேவையில்லாத சக்திதான்.
- வெண்ணிலா தாயுமானவன்
மாநிலச் செயலாளர்
சுற்றுச்சூழல் பாசறை
நாம்தமிழர் கட்சி.
@vennilaVT
புகழ் வணக்கம்:-
தமிழ்நாட்டின் சூழலியல் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர்.
தமிழ்நாட்டில் விஸ்கோஸ் ஆலை பவானி ஆற்றை மாசுப்படுத்திக் கொண்டிருந்த காலத்தில், அதனை எதிர்த்துப் போராடிய மக்கள் இயக்கத்துக்குத் தலைமை தாங்கியவர். பவானி ஆறு பாதுகாப்பிற்காகத் தனது வாழ்வை அற்பணித்த மருத்துவர் சத்தியசுந்தரி அம்மா அவர்கள் ஜூன் 28 அன்று இயற்கை எய்தினார்.
அம்மாவிற்குப் புகழ்வணக்கம்.
இரங்கல் செய்தி:-
மணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியின் மாநில சுற்றுச்சூழல் பாசறை துணைச் செயலாளர் கொணலை பல்தசார் அவர்கள் இன்று, 22.06.26, மாலை 5 மணி அளவில் இயற்கை எய்தினார் என்ற செய்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐயா அவர்களுக்கு எங்களின் கண்ணீர் வணக்கம். இந்த மண்ணுக்கும் மக்களுக்காகவும் ஆயிரக்கணக்கான மரங்களை நட்டு வளர்த்த இயற்கைக் காவலன் இயற்கை எய்தினார்.
புகழ்வணக்கம். 🙏🏽
"உழைக்கும் தொழிலாளர்களின் உயிர்களைப் போக்கிய இக்கோர (அம்மோனியா வெளியேற்றம்) விபத்துக்கானப் பின்புலமும், பின்னணியும் கண்டறியப்பட்டு, தொழிற்சாலை நிர்வாகத்தின் மீதும், அதில் தொடர்புடையவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும், உயிரிழந்தவர்களின் குட���ம்பத்தினருக்கு தலா 50 இலட்ச ரூபாய் துயர்துடைப்புத்தொகை வழங்கப்பட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தவெக அரசை வலியுறுத்துகிறேன்."
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
திருவள்ளூர், பெரியபாளையம் அருகே அமோனியா கசிவில் 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு : தொழிற்சாலை நிர்வாகத்தின் மீதும், தொடர்புடையவர்கள் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
@CMOTamilnadu@TVKVijayHQ
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா நச்சுக்காற்று கசிவில் 7 தொழிலாளர்கள் உயிரிப்பு; 60க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதி எனும் துயரச்செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோனர் பெண்கள் என்பது துயரத்தை மேலும் அதிகரிக்கிறது. உயிரிழந்தத் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, இப்பெருந்துயரில் பங்கெடுக்கிறேன்.
ஏற்கனவே, வடசென்னை பகுதியில் அவ்வப்போது நிகழும��� நச்சுக்காற்று கசிவால் அப்பகுதி மக்கள் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் துயரம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, கடந்த சூன் 2 அன்று துறைமுகம் பகுதியிலிருந்து கசிந்த நச்சுப்புகையால் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தி��் இருந்தவர்களே மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டதும் நிகழ்ந்தேறியது. அதன்பிறகாவது, தவெக அரசு தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வுசெய்ய உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் தற்போது திருவள்ளூரில் இத்தகைய கொடும் விபத்து நிகழ்ந்திருக்காது. தொழிற்சாலைகளில் அரசு தொடர்ச்சியாக முறையான ஆய்வுகளை மேற்கொள்வதன் மூலம் மட்டுமே இதுபோன்ற க���டும் விபத்துகள் நிகழ்வைத் தவிர்க்க முடியும்.
சூழலியல் சீர்கேடுகளைப் பற்றிக் கவலைப்படாமல், வளர்ச்சி என்ற பெயரில், வேலைவாய்ப்புகளைக் காரணமாகக் காட்டி, பன்னாட்டு, உள்நாட்டு தனியார் தொழிற்சாலைகளுக்கு சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்கும் அரசுகள், இதுபோன்ற தொழிற்சாலைகள் விதிகளை முறையாகக் கடைப்பிடிக்கின்றவா? என ஒருநாளும் கண்காணிப்பதுமில்லை; சோதிப்பதுமில்லை. அதன் விளைவாகவே, இதுபோன்ற கோரவிபத்துகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. ஆகவே, தவெக அரசு இனியேனும் தமிழ்நாடு முழுவதுமுள்ள தொழிற்சாலைகளை ஆய்வுசெய்து தொழிலாளர்களின் பாதுகாப்பினையும், சூழலியல் நலத்தினையும் உறுதி செய்திட வேண்டும். மேலும், இவ்விபத்து நடந்தேறிய கன்னிகைப்பேர் பகுதியில் வாழும் மக்கள��க்கு எவ்வித உடல்நலக்குறைபாடும் ஏற்படாவண்ணம் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
ஆகவே, உழைக்கும் தொழிலாளர்களின் உயிர்களைப் போக்கிய இக்கோர விபத்துக்கானப் பின்புலமும், பின்னணியும் கண்டறியப்பட்டு, தொழிற்சாலை நிர்வாகத்தின் மீதும், அதில் தொடர்புடையவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும், உயிரிழந்தவர்களின் குடு���்பத்தினருக்கு தலா 50 இலட்ச ரூபாய் துயர்துடைப்புத்தொகை வழங்கப்பட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
(21/6/26) - கடலூர் மா���ட்டம், விருத்தாசலம் தொகுதி, நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக விருத்தாச்சலம் மணிமுத்தாறு ஆற்றங்கரையில் (300) பனை விதைகள் நடவு செய்யப்பட்டது, நிகழ்வில் பங்கேற்ற உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
#NTKGreenPolitics
#EnvironmentalWing_NTK
@Seeman4TN
@NaamTamilarOrg
பள்ளிக்கரணை சதுப்புநிலப்பகுதியில் முன்னெடுக்கப்படவிருந்த Brigade Morgan Heights திட்டத்தி���்கு ஒன்றிய அரசின் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதியை மறுத்திருப்பது வரவேற்கத்தக்க மற்றும் முக்கியமான முடிவாகும்.
@CMOTamilnadu @Chief_Secy_TN @CMDA_Official @RamsarConv @moefcc @byadavbjp
இதில் நடைபெற்ற விதிமீறல்களை வெளிக்கொணர்ந்து, தொடர்ந்து போராடி வரும் அறப்போர் இயக்கத்திற்கு புரட்சிகர வாழ்த்துகள்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சென்ற அக்டோபர் 26, 2025 அன்று வெளியிட்ட விரிவான அறிக்கையில் இந்த மோசடியை தெளிவாக அம்பலப்படுத்தினார். “ராம்சார் எல்லைக்குள் நிரந்தர கட்டுமானம் Wetlands Rules 2017-ன் படி தடை செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல், வனம், CMDA துறைகள் சட்டத்தை மீறி அனுமதி கொடுத்துள்ளன. ₹2000 கோடி ஊழல் எப்படி நடந்தது?” எனக் கேள்வி எழுப்பி, உடனடி மறுப்பு, கட்டுமான நிறுத்தம், DVAC விசாரணை உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்தார்.
தற்போது சுற்றுச்சூழல் அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து CMDA திட்ட அனுமதியை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்.
ஏற்கெனவே தொடங்கிய கட்டுமானப் பணிகளை முழுவதுமாக நிறுத்தி, சதுப்புநிலப் பகுதியை மீட்டெடுக்க வேண்டும். மேலும் ஊழலுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மற்றும் திமுக அமைச்சர்கள் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை வலியுறுத்துகிறது.
நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறையின் செயலாளர் வெண்ணிலா தாயுமானவன் அவர்கள் தென்மண்டல தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடுத்திர���ந்த வழக்கில் பேனா நினைவு சின்னம் அமைப்பது குறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு வழங்கப்பட்ட CRZ அனுமதியை எதிர்த்து வெண்ணிலா தாயுமானவன் வழக்கு தொடர்ந்திருந்தார். இன்று 19.06.2026 இவ்வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் தமிழ்நாடு அரசு இத்திட்டத்தை முன்னெடுக்கிறதா அல்லது கை விடுகிறதா என்று தெரிவிக்க வேண்டும் என அவர் தரப்பில் நாம் தமிழர் சுற்றுச்ச��ழல் பாசறையின் செய்தித்தொடர்பாளர் வழக்கறிஞர் பா. விக்னேஷ் அவர்கள் வாதிட்டார். CRZ அனுமதி வழங்கப்பட்டு மூன்று ஆண்டுகளாகியும் இத்திட்டத்திற்கானக் கட்டுமானங்கள் எதுவும் நடைபெறாத நிலையில் தமிழ்நாடு அரசு திட்டத்தை கைவிடுமானால் வழக்கை முடித்து வைக்கலாம் என்றும், இதுகுறித்து பதிலளிக்கவும் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பேசும்பொழுது ந���தியரசர் புஷ்பா சத்தியநாராயணன் அவர்கள் நினைவு சின்னங்கள் அமைப்பதில் தவறு இல்லை, அதை நாங்கள் எதிர்க்கவில்லை, ஆனால் கடலுக்குள் வைப்பது ஏன்? பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு தான் செயல்பட முடியும் என்றும் கூறினார்.
இவ்வழக்கு 28.07.2026 அன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடலூர் பரங்கிப்பேட்டை கடற்பகுதியில் புதிதாக 4 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கக்கூடாது!
@CMOTamilnadu@TVKVijayHQ
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகிலுள்ள கடற்பகுதியில் புதிதாக மேலும் 4 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க ஹிந்துஸ்தான் எண்ணெய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. சுற்றுச்சூழலைச் சீரழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எக்காரணம் கொண்டும் தமிழ்நாட்டில் அனுமதிக்கக்கூடாது என்று போராடி வரும் ��ிலையில் ஹிந்துஸ்தான் நிறுவனம் 4 ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு விண்ணப்பித்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
நிலத்தையும், நீரையும் மாசுபடுத்திச் சுற்றுச்சூழலை சீர் கெடுக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை தமிழ்நாட்டின் எந்தவொரு பகுதியிலும் அனுமதிக்கக்கூடாது என்று நாம் தமிழர் கட்சி தொடர்ந்து போராடி வருகின்றது. காவிரிப்படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்���ு, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட சுற்றுச்சூழல் சீர்கேடுகள் திட்டங்களை அனுமதிக்கமாட்டோம் என்று உறுதியளித்தது. அதனையடுத்து, திமுக ஆட்சிக்காலத்தில் திருவாரூர் மாவட்டம் பெரியகுடி, இராமநாதபுரம் கடற்கரை பகுதி, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் தொடங்கவிருந்த ஹைட்ரோ கார்பன் திட்டங்களும் கடும் எதிர்ப்புப்போராட்டங்கள் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டது. தற்போது மீ���்டும் ஹிந்துஸ்தான் எண்ணெய் நிறுவனம் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையிலிருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் கடலுக்குள் ரூ.425 கோடி மதிப்பீட்டில் 4 புதிய ஹைட்ரோகார்பன் எண்ணெய் கிணறுகள் அமைக்க ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் (TNCZMA) சுற்றுச்சூழல் அனுமதிகோரி விண்ணப்பித்துள்ளது. கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை கடற்பகுதி பாரம்பரிய மீன்பிடித் தொழ���ல் பகுதி மட்டுமல்லாது சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். இப்பகுதியில் தொடங்கப்படும் ஹைட்ரோ கார்பன் திட்ட��ானது கடல் நீரை மாசுபடுத்தி, மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் பல்லுயிர் பெருக்கத்தை அழித்து, பாரம்பரிய மீன்பிடித் தொழிலுக்கே பேராபத்தை ஏற்படுத்தும்.
தனியார் பெருநிறுவனங்களின் நலனுக்காக மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும், பல்லுயிர் பெருக்கத்தையும், கடல் வளத்தையும் அழித்தொழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தவெக அரசு அனுமதியளிக்க வேண்டாமென வலியுறு��்துகிறேன்.
https://t.co/q88qhKZCWD
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
@Seeman4TN @NaamTamilarOrg
கடலூர் பரங்கிப்பேட்டை கடற்பகுதியில் புதிதாக 4 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கக்கூடாது!
@CMOTamilnadu@TVKVijayHQ
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகிலுள்ள கடற்பகுதியில் புதிதாக மேலும் 4 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க ஹிந்துஸ்தான் எண்ணெய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. சுற்றுச்���ூழலைச் சீரழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எக்காரணம் கொண்டும் தமிழ்நாட்டில் அனுமதிக்கக்கூடாது என்று போராடி வரும் நிலையில் ஹிந்துஸ்தான் நிறுவனம் 4 ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு விண்ணப்பித்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
நிலத்தையும், நீரையும் மாசுபடுத்திச் சுற்றுச்சூழலை சீர் கெடுக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை தமிழ்நாட்டின் எந்தவொரு பகுதியிலும் அனுமதிக்கக்���ூடாது என்று நாம் தமிழர் கட்சி தொடர்ந்து போராடி வருகின்றது. காவிரிப்படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட சுற்றுச்சூழல் சீர்கேடுகள் திட்டங்களை அனுமதிக்கமாட்டோம் என்று உறுதியளித்தது. அதனையடுத்து, திமுக ஆட்சிக்காலத்தில் திருவாரூர் மாவட்டம் பெரியகுடி, இராமநாதபுரம் கடற்கரை பகுதி, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் தொடங்கவிருந்த ஹைட்ரோ கார்பன் திட்டங்களும் கடும் எதிர்ப்புப்போராட்டங்கள் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் ஹிந்துஸ்தான் எண்ணெய் நிறுவனம் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையிலிருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் கடலுக்குள் ரூ.425 கோடி மதிப்பீட்டில் 4 புதிய ஹைட்ரோகார்பன் எண்ணெய் கிணறுகள் அமைக்க ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திட��் (TNCZMA) சுற்றுச்சூழல் அனுமதிகோரி விண்ணப்பித்துள்ளது. கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை கடற்பகுதி பாரம்பரிய மீன்பிடித் தொழில் பகுதி மட்டுமல்லாது சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். இப்பகுதியில் தொடங்கப்படும் ஹைட்ரோ கார்பன் திட்டமானது கடல் நீரை மாசுபடுத்தி, மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் பல்லுயிர் பெருக்கத்தை அழித்து, பாரம்பரிய மீன்பிடித் தொழிலுக்கே பேராபத்தை ஏற்படுத்தும்.
தனியார் பெருநிறுவனங்களின் நலனுக்காக மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும், பல்லுயிர் பெருக்கத்தையும், கடல் வளத்தையும் அழித்தொழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தவெக அரசு அனுமதியளிக்க வேண்டாமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
சூன்-8, உலகப் பெருங்கடல் நாள்!
"பெருங்கடல் முக்கியத்துவமற்றது என நீங்கள் கருதினால், கடலில்லாத உலகின��� எண்ணிப் பாருங்கள். செவ்வாய் கிரகம் தான் உங்கள் நினைவுக்கு வரும். இது உணர்த்துவது - கடல் இல்லையெனில் உயிற்ச்சூழல் இல்லை என்பதே." - சில்வியா எர்லி.
#உலகப்பெருங்கடல்நாள்
#WorldOceanDay2026
#EnvironmentalWing_NTK
#NTK_GreenPolitics
@Seeman4TN @NaamTamilarOrg @_ITWingNTK
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பாலக்கரை சந்திப்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ஒரு முறைபயன்படுத்தக்கூடிய நெகிழி குடுவைகளை தடை செய்ய கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேடுத்த அனைவருக்கும் வாழ்த்துகள்.
#NTKGreenPolitics
#EnvironmentalWing_NTK
@Seeman4TN@NaamTamilarOrg
‘மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடைய தரண்’ என்று நல்லதொரு நாட்டில் நாம் பா��ுகாப்பாக வாழ்வதற்கான சூழலை வரையறுக்கிறார் நம்முடைய மூதாதை வள்ளுவப் பெரும்பாட்டன்!
நாம் வாழும் பூமி நமக்கானது மட்டுமன்று; வருங்கால நம் தலைமுறைகளுக்குமானது! அதனைப் பாதுகாப்பாக அவர்களிடம் கையளித்து செல்வது ஒன்றே நம் ஒவ்வொருவர���ன் வாழ்நாள் பெருங்கடமை!
நிலம், நீர், காற்று, மலை, காடு, அருவி, ஆறு, கடல் என்று இயற்கையின் அருங்கொடைகள் அனைத்தையும் நாம் மாசுபடுத்தி, அழித்தொழிக்கக் கூடாது. தொழில் வளர்ச்சி, நாட்டின் முன்னேற்றம் என்ற பெயரில்
நம்மை ஆளும் ஆட்சியாளர்கள் இயற்கை வளங்களை அழிப்பதை நாம் ஒருபோதும் அனுமதிக்கவும் கூடாது.
நம் கண் முன்னே இரசாயன ஆலைக்கழிவுகள் கலந்து நிலமும், நீரும், காற்றும், கடலும் மாசுபடு���்தப்படுவதையும், காடுகள் அழிக்கப்படுவதையும், மலைகள் வெட்டப்படுவதையும், ஆற்று மணல் சுரண்டப்படுவதையும் தடுக்கத்தவறினால், அது வருங்கால தலைமுறைக்கு மட்டுமல்ல, மற்ற உயிரினங்களுக்கும் நாம் செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.
‘நஞ்சில்லா உணவு அதுவே நம் கனவு!’ என்றார் நம்முடைய பெரிய தகப்பன் வேளாண் பேரறிஞர் ஐயா நம்மாழ்வார் அவர்கள்.
மண்ணையும், நீரையும், காற்றையும் மாசுபடுத்திவிட்டு எத��� நாம் உண்ணப்போகிறோம்?
எப்படி சுவாசிக்க போகிறோம்?
உயிர்கள் வாழவே முடியாத பூமியில் வளம் எதற்கு? வளர்ச்சி எதற்கு?
நீர்வழிப்பாதைகளை அழித்து, மழைநீரை வீணாக்கிவிட்டு, கடல் ��ீரைக் குடிநீராக்க பல்லாயிரம் கோடிகளைக் கொட்டுவதையும், மரங்களை அழித்து தொழிற்சாலைகளை அமைத்து காற்றை மாசுபடுத்திவிட்டு, அதிக விலை கொடுத்து நல்ல காற்றை வாங்குவதையும் வளர்ச்சி எனக் கட்டமைப்பது அறிவுக்குப் புறம்பானது என்பதை என்றைக்கு நாம் உணரப்போகிறோம்?
வளமாக வாழ்வதை விடவும் நலமாக வாழ்வது முக்கியம்!
வசதியாக வாழ்வதை விடவும்; நிம்மதியாக வாழ்வது முக்கியம்!
நம்மை வாழ வைப்பதா�� நாம் நம்பும் சாமிகள் கூட ஆயிரம் உண்டு; ஆனால் நாம் வாழ்வதற்கான பூமி ஒன்றுதான் உண்டு என்ற உண்மையை என்பதை உணர்ந்து..,
நாம் வாழும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்! வருங்காலத் தலைமுறைக்கு வாழ்வளிப்போம் என உலக சுற்றுச்சூழல் நாளில் உறுதியேற்போம்!
https://t.co/h3Vq9ZRiex
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
#WorldEnvironmentDay
@Seeman4TN
@NaamTamilarOrg
‘மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடைய தரண்’ என்று நல்லதொரு நாட்டில் நாம் பாதுகாப்பாக வாழ்வதற்கான சூழலை வரையறுக்கிறார் நம்முடைய மூதாதை வள்ளுவப் பெரும்பாட்டன்!
நாம் வாழும் பூம��� நமக்கானது மட்டுமன்று; வருங்கால நம் தலைமுறைகளுக்குமானது! அதனைப் பாதுகாப்பாக அவர்களிடம் கையளித்து செல்வது ஒன்றே நம் ஒவ்வொருவரின் வாழ்நாள் பெருங்கடமை!
நிலம், நீர், காற்று, மலை, காடு, அருவி, ஆறு, கடல் என்று இயற்கையின் அருங்கொடைகள் அனைத்தையும் நாம் மாசுபடுத்தி, அழித்தொழிக்கக் கூடாது. தொழில் வளர்ச்சி, நாட்டின் முன்னேற்றம் என்ற பெயரில்
நம்மை ஆளும் ஆட்சியாளர்கள் இயற்கை வளங்களை அழி��்பதை நாம் ஒருபோதும் அனுமதிக்கவும் கூடாது.
நம் கண் முன்னே இரசாயன ஆலைக்கழிவுகள் கலந்து நிலமும், நீரும், காற்றும், கடலும் மாசுபடுத்தப்படுவதையும், காடுகள் அழிக்கப்படுவதையும், மலைகள் வெட்டப்படுவதையும், ஆற்று மணல் சுரண்டப்படுவதையும் தடுக்கத்தவறினால், அது வருங்கால தலைமுறைக்கு மட்டுமல்ல, மற்ற உயிரினங்களுக்கும் நாம் செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.
‘நஞ்சில்லா உணவு அதுவே நம் கனவு!’ என்றார் நம்முடைய பெரிய தகப்பன் வேளாண் பேரறிஞர் ஐயா நம்மாழ்வார் அவர்கள்.
மண்ணையும், நீரையும், காற்றையும் மாசுபடுத்திவிட்டு எதை நாம் உண்ணப்போகிறோம்?
எப்படி சுவாசிக்க போகிறோம்?
உயிர்கள் வாழவே முடியாத பூமியில் வளம் எதற்கு? வளர்ச்சி எதற்கு?
நீர்வழிப்பாதைகளை அழித்து, மழைநீரை வீணாக்கிவிட்டு, கடல் நீரைக் குடிநீராக்க பல்லாயிரம் கோடிகளைக் கொட்டுவதையும், மரங்களை அழித்து தொழிற்சாலைகளை அமைத்து காற்றை மாசுபடுத்திவிட்டு, அதிக விலை கொடுத்து நல்ல காற்றை வாங்குவதையும் வளர்ச்சி எனக் கட்டமைப்பது அறிவுக்குப் புறம்பானது என்பதை என்றைக்கு நாம் உணரப்போகிறோம்?
வளமாக வாழ்வதை விடவும் நலமாக வாழ்வது முக்கியம்!
வசதியாக வாழ்வதை விடவும்; நிம்மதியாக வாழ்வது முக்கியம்!
நம்மை வாழ வைப்பதாக நாம் நம்பும் சாமிகள் கூட ஆயிரம் உண்டு; ஆனால் நாம் வாழ்வதற்கான பூமி ஒன்றுதான் உண்ட��� என்ற உண்மையை என்பதை உணர்ந்து..,
நாம் வாழும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்! வருங்காலத் தலைமுறைக்கு வாழ்வளிப்போம் என உலக சுற்றுச்சூழல் நாளில் உறுதியேற்போம்!
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
#WorldEnvironmentDay
திருப்பூர் மாவட்டம், அவிநாசி சட்டமன்ற தொகுதி பெரியாயிபாளையம் கிராமத்தில் திருவள்ளுவ��் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரில் கொட்டப்பட்டிருந்த குப்பைகளை அகற்றி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டது. களப்பணியாறிய உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
#NTKGreenPolitics #EnvironmentalWing_NTK
@NaamTamilarOrg
@Seeman4TN