பொலிவியா, அர்ஜென்டினாவில் நீர்வளத்தைச் சூறையாடி, அம்மக்களின் போராட்டத்தால் துரத்தியடிக்கப்பட்ட சூயஸ் எனும் பிரான்சு நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனத்திற்கு சேலம் மாநகராட்சியின் தண்ணீர் விநியோகத்தைத் தாரைவார்ப்பதா?
@CMOTamilnadu@TVKVijayHQ
சேலம் மாநகராட்சியின் குடிநீர் வியோகத்தை 25 ஆண்டுகளுக்கு சூயஸ் எனும் பிரான்சு நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனத்திற்குத் தாரைவார்த்திருக்கும் தவெக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. அர்ஜென்டினா மற்றும் பொலிவியா நாடுகளுக்குள் குடிநீர் விநியோகம் செய்வதாய் உள்நுழைந்து, தண்ணீரை விற்பனைப் பண்டமாக்கி, அம்மண்ணின் நீர்வளத்தைச் சூறையாடி, அந்நாட்டு மக்களால் துரத்தியடிக்கப்பட்ட சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்டு, சேலம் மாநகரத்தின் நீர் விநியோகத்தை வழங்கியிருக்கும் தவெக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
நீர் என்பது மனிதர்களுக்கு மட்டுமானதல்ல; அது புல், பூண்டு, பூச்சி, ஆடு, மாடு, கரடி, மான், புலி, சிங்கம் என உலகில் வாழும் அத்தனை உயிர்களுக்குமான உயிருடைமை. அதனை மனிதர்களுக்கு மட்டுமானதாக்கி, விற்பனைப்பண்டமாக மாற்றி, சந்தைப்படுத்திப் பொருளீட்டுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. நீரை விற்பனை செய்யும் மானுடகுலத்தின் செயல் உலக உயிர்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகமாகும். புட்டிகளிலும், போத்தல்களிலும் அடைக்கப்பட்டுள்ள நீரை மனிதர்கள் விலைகொடுத்து வாங்கிப் பருகிவிட முடியும். காக்கையும், குருவியும், மைனாவும், சிட்டும் தனது தாகத்திற்கு என்ன செய்யும்? எனும் கேள்வியை உளச்சான்றோடு ஒவ்வொரு குடிமகனும் எழுப்ப வேண்டும். தண்ணீர் விநியோகத்தைத் தனியார்மயமாக்குவதும், குடிநீரை சந்தைப்பொருள் ஆக்குவதும் ஏற்கவே முடியாத சனநாயகத் துரோகம். வரிசெலுத்தி, வாக்குச் செலுத்தி ஓர் அரசை நிர்மாணிக்கும் குடிமக்களுக்கு தூய குடிநீரைத் தங்குதடையின்றித் தர வேண்டியது ஒரு அரசின் தலையாயப் பொறுப்பும், முதன்மைக் கடமையுமாகும்.
கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோகம் தொடர்பாக கடந்த 2018ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமிடப்பட்டு, அதற்கெதிராகப் பரப்புரையும், போராட்டமும் செய்து வரும் நிலையில், தற்போது சேலம் மாநகரத்தின் குடிநீர் விநியோகத்தை அதே சூயஸ் நிறுவனத்திடம் தவெக அரசு கையளித்திருப்பது பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையைத் தன்னுடைய நேரடிக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் விஜய் அவர்கள் குடிநீர் வழங்குவதைத் தனியாருக்குத் தாரைவார்க்க உத்தரவிட்டது ஏன்? பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தால் குடிநீர் விநியோகத்தைச் சிறப்பாகச் செய்ய முடியும்; இவ்வளவு பெரிய நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்ட ஒரு அரசு இயந்திரத்தால் செய்ய முடியாதா? பன்னாட்டு நிறுவனங்களின் முதலாளிகள் இலாபத் தேவைக்குத்தான் வேலைசெய்வார்களே ஒழிய, மக்கள் சேவைக்கு ஒருநாளும் வேலை செய்ய மாட்டார்கள் எனும் அடிப்படைப் புரியாதா? நீர்வளத்தையும், நீராதாரங்களையும் பன்னாட்டு நிறுவனங்களிடம் கையளித்தால், நீர் இறையாண்மை முழுக்க முழுக்க அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும். அவர்கள் சொல்கிற விலைக்குக் குடிநீரை மக்கள் வாங்க வேண்டியப் பேராபத்துமிக்க சூழல் நாளை உருவாகும். இது வருங்காலத் தலைமுறையின் நலவாழ்வினைப் பன்னாட்டு நிறுவனத்திடம் அடமானம் வைக்கும் பேரபாயம். அர்ஜென்டினாவிலும், பொலிவியாவிலும் சூயஸ் நிறுவனம் செய்த மானுடகுலக் கொடுமைகள் வரலாறாக விரிகையில், கண்முன்னே சாட்சியாக இருக்கையில், அந்நிறுவனத்திடமே சேலம் மாநகரத்தின் நீர்விநியோகத்தை வழங்குவது மக்கள் விரோதப்போக்கின் உச்சமாகும்.
ஆகவே, சேலம் மாநகராட்சியின் குடிநீர் விநியோகத்தை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தத்தை உடனடியாகத் திரும்பப் பெற்று, மாநில அரசே தரமான குடிநீரை மக்களுக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டுமென தவெக அரசை நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
ஆதித்தமிழர் எழுச்சிநாள்
ஆனி 23 (07-07-2026)
தமிழ்நாட்டில் சாதிய அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்ட மக்களின் இழிவு நீங்கவும், சமவுரிமை பெற்றுக் கண்ணியமாக வாழவும் பாடுபட்டதோடு, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், விடுதலைக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் போராடிய சமூகநீதிப்போராளி..!
“எந்தச் சொல் உன்மீது இழிச்சொல்லாகச் சுமத்தப்படுகிறதோ, அந்தச் சொல்லை நீ எழுச்சிச் சொல்லாக மாற்றாத வரை உனக்கு விடுதலை இல்லை” என்று முழங்கிய புரட்சியாளர்!
வர்ணாசிரம கோட்பாட்டிற்கு எதிராக ஒரு மாற்றுக் கோட்பாட்டை நீ உருவாக்கிக்கொள்ளாத வரை உனக்கு விடுதலை இல்லை என்று கற்பித்த பெருந்தகை..!
இலண்டன் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்குக் குரல்கொடுத்த போராளி..!
சாதியக் கொடுமைகளுக்கு எதிராக சட்டமன்றத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்களை முன்மொழிந்து அவை நிறைவேற காரணமான சமூகச் சீர்திருத்தவாதி..!
அண்ணல் காந்தியடிகளுக்கு தமிழ்ப் படிக்கவும், தமிழில் கையெழுத்திடவும் கற்றுக்கொடுத்த தமிழறிஞர்..!
தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் பிறந்த நாளில் சமத்துவச் சமுதாயம் உருவாக்கிட வேண்டும் என்ற அவருடைய உயரிய கனவினை நிறைவேற்ற தொடர்ந்து அயராது பாடுபடுவோம் என்ற உள உறுதியோடு, அவருடைய பேரப்பிள்ளைகளாகிய நாம் பெருமிதத்தோடும், திமிரோடும் நம்முடைய புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்!
‘ஆதித்தமிழர் எழுச்சி நாளில்’ தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்!
அரசுப்பள்ளிக்கு சென்று மாணவியின் தந்தை என்ன செய்கிறார் என்று கேட்டது தவறு !
அதுவும் ஆங்கிலத்தில் கேட்டு அந்த மாணவிக்கு ஆங்கிலம் தெரியாது என அவருடைய தன்னம்பிக்கையை உடைத்தது தவறு!
ஆங்கிலம் தெரிந்தால்தான் நம்பிக்கையும் தைரியமும் வரும் என சொன்னது தவறு !
கடைசி இருக்கை மாணவர்களை எதுவும் தெரியாதவர்கள் போல் பேசியது தவறு !
உங்கள் தவறுகளை மறைக்க நானும் அரசுப்பள்ளியில் படித்தவள் என நாடகமாடுவது அதை விட தவறு !
அதிகாரம் நிலையானது அல்ல ரொம்ப ஆடாதிங்க .
A4 Paperயில் எழுதிக் கொடுத்தால்தான் பரப்புரைக் கூட்டம் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர்வரை எல்லாவற்றிலும் வாய்திறக்க முடியும் எனும் கையாலாகா நிலையிலிருக்கும் ஒருவரைத் தலைவராக வைத்துக் கொண்டு, அரசுப்பள்ளிக் குழந்தையைக் கேள்வி கேட்டு, கூனிக் குறுக வைக்கும் அமைச்சர் கீர்த்தனாவின் செயல்பாடு பச்சை அயோக்கியத்தனம்!
என்ன நண்பா @LoyolaMani ?
கேட்டக் கேள்விக்குப் பதில் சொல்லாம, என்ன என்னமோ எழுதி வச்சு இருக்க?
விமர்சனத்துக்கும், குற்றச்சாட்டுக்கும் விளக்கமோ, மறுப்போ, தர்க்கமோ வைக்கணும். தொலைக்காட்சி விவாதம் மாதிரியே இங்கயும், வாய்க்கு வந்தத உளறிக் கொட்டக்கூடாது நண்பா!
கோவை மாவட்டம், வால்பாறை பகுதியில் இரண்டு அரசுத் தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக இன்றுகூட செய்தி வந்திருக்கிறது. அதற்கு தவெக அரசைப் பொறுப்பேற்கச் சொல்லவில்லை.
முந்தைய திராவிட அரசுகள் போல அல்லாது, பள்ளிக்கல்வித்துறையைச் சீரமைக்கச் சொல்கிறோம்; அரசுப்பள்ளிகள் மீது கவனமெடுக்கச் சொல்கிறோம்; தரம் உயர்த்தச் செயல்பாடுகளை முன்னெடுக்கச் சொல்கிறோம். அமைச்சர் ராஜ்மோகனோ தனியார் பள்ளிகள் மீதுதான் கரிசனம் காட்டுகிறார். அதனைத்தான் அண்ணன் சீமான் அவர்கள் சுட்டிக்காட்டிக் கண்டித்திருக்கிறார்.
தனியார் பள்ளிகளின் ஒப்புதலுக்கு இலஞ்சம் வாங்கவில்லை என்கிறார் அமைச்சர் ராஜ்மோகன். அதேபோல, தனியார் பள்ளிகள் கட்டணக் கொள்ளையில் ஈடுபட தவெக அரசு விடவில்லை என உறுதியளிப்பாரா ராஜ்மோகன்? இன்றளவும் கட்டணக் கொள்ளை நடந்துகொண்டுதானே இருக்கிறது.
இதனைத்தானே அண்ணன் சீமான் அவர்கள் கேட்கிறார்.
//உரிமம் பெறுவதில் நடைபெறும் ஊழல்களைத் தடுத்து தனியார் பள்ளி முதலாளிகளுக்கு உதவிய அமைச்சர் ராஜ்மோகன், தனியார் பள்ளிகளின் கட்டணக்கொள்ளையைத் தடுத்து ஏழை, நடுத்தர வர்க்க பெற்றோர்களுக்கு உதவ எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? //
// தனியார் பள்ளிகளின் உரிமம் பெறுவதில் நடைபெறும் ஊழல்களைக் களைய பல்வேறு நடவடிக்கைகளை வேக வேகமாக எடுத்துவரும் அமைச்சர் ராஜ்மோகன், அதே வேகத்தோடு அரசுப்பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே ஏன்? //
அதற்கு உரிய விளக்கத்தை அளிக்காது, முந்தைய திமுக அரசைக் கைகாட்டித் தப்பிக்க முயற்சிக்கிறீர்கள். நாங்கள் அதனை ஏதோ கண்டிக்காதது போல தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறீர்கள்.
இதோ,முந்தைய திமுக அரசினுடைய பள்ளிக்கல்வித்துறையின் நிர்வாகச்சீர்கேடுகளைக் கண்டித்து அண்ணன் சீமான் விடுத்த அறிக்கைகளிலிருந்து ஒரு சில...
(https://t.co/r9FCyk8a4s)
(https://t.co/tSb3xCLVZH)
(https://t.co/N0QeX5vjOu)
(https://t.co/eRDxOHbHxG)
(https://t.co/mbuES2wcl6)
(https://t.co/skzoTNfTCy)
போகட்டும்!
அப்புறம் என்ன..? நாங்க திராவிட ஆதரவாளரா? திராவிடத்தை எதிர்க்கணுமா? அடடா.. விஜய் திராவிடத்தை எதிர்க்கிறார் போல! இருக்க இடத்தை மறந்துட்டு same Side Goal போட்றீயே நண்பா?
திமுக ஆட்சியின் அத்தனை அவலங்களையும் எதிர்த்து நாங்கள் போராடியிருக்கிறோம். பாதிக்கப்பட்ட மக்களோடு நாளும் களநாயகனாகப் போராட்டக்களத்தில் நின்று இருக்கிறார் அண்ணன் சீமான். கடலுக்கு நடுவே கருணாநிதியின் பேனா சிலை வைக்கும் முடிவு உட்பட பல மக்கள் விரோதத் திட்டங்களைத் தடுத்து நிறுத்தியது அண்ணன் சீமான்தான். திமுக அரசின் கொடுங்கோல் திட்டங்களையும், செயல்பாடுகளையும் எதிர்த்து சமரசமின்றிப் போராடியது நாம் தமிழர் கட்சி மட்டும்தான். அவ்வளவு ஏன்? திமுக முன்வைக்கும் 'திராவிடம்' எனும் கற்பிதத்தையும், 'பெரியார்' எனும் பிம்பத்தையும் உடைத்து எறிந்திருக்கிறோம். அதனால், திராவிடத்தையும், திமுகவையும் எதிர்க்க எங்களுக்குப் பாடமெடுக்கிற அதிகபிரசங்கித்தனம் வேண்டாம்.
வேற என்ன.. உதயநிதியை நேரில் சந்திச்சுட்டா நாங்க திமுகவோட உறவுல இருக்கோமா? என்ன அறிவு நண்பா உனக்கு?
அதுசரி! INDIA கூட்டணிக்குள் தொடர்ந்து நீடிக்கவும், செயல்படவும் வேண்டுமென திமுகவைக் கூப்பிடுறாரே உங்க கூட்டணிக் கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர் திமுகவோட எந்த உறவுல இருக்காரு? அவரை தவெக அரசு கண்டித்ததா? திமுகவை தோழமைச் சக்தி எனச் சொல்கிற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வீரபாண்டியனும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாம் கட்ட நிர்வாகிகளும் என்ன உறவுல திமுகவோட இருக்காங்க? அவங்கள எல்லாம் கண்டிச்சுட்டீங்களா?
வேற என்னது.. அமைச்சர் ராஜ்மோகன் மீது வன்மமா? எழுதணும்ங்குறதுக்காக எதையாவது எழுதாத நண்பா..
கடைசியா என்ன சொன்ன நண்பா.. பதிலடியா? தொலைக்காட்சி விவாதம் பக்கம் தலையவே காட்டுறது இல்லையே ஏன் நண்பா? அங்க வாங்க நண்பா.. யாருக்கு யார் பதிலடி கொடுக்குறான்னு பாப்போம்..
கடைசியா ஒரே கேள்வி நண்பா.. இதுக்கு மட்டுமாவது பதில் சொல்லு..
முந்தைய திமுக, அதிமுக ஆட்சிகளில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்கள் தனியார் பள்ளிகளின் ஒப்புதலுக்கு இலஞ்சம் வாங்கினார்கள் எனும் நந்தகுமாரின் குற்றச்சாட்டை முழுமையாக நாங்கள் ஏற்கிறோம்.
2017ஆம் ஆண்டு முதல் 2021வரை பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் செங்கோட்டையன். அவர் தனியார் பள்ளிகளின் ஒப்புதலுக்கு இலஞ்சம் வாங்கினாரா? இல்லையா?
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தனியார் பள்ளிகளுக்கு மட்டும்தான் அமைச்சரா? அல்லது அரசுப்பள்ளிகளுக்கும் அமைச்சரா? தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகள் மீதும் காட்டத்தவறுவது ஏன்?
@CMOTamilnadu@TVKVijayHQ@imrajmohan
"தனியார் பள்ளிகளுக்கான உரிமங்கள் ஜூலை மாதம் முதல் 100 விழுக்காடு இணையதளம் வாயிலாகப் பெறலாம்; நகைகளை அடமானம் வைத்து மிகுந்த சிரமங்களுக்கு இடையே தனியார் பள்ளிகளை நடத்தி வருகின்றனர். பள்ளிகளை நடத்துவது இலாப கணக்கு அல்ல; புண்ணியக் கணக்கு” என்று தனியார் பள்ளி நிறுவனங்கள் குறித்துப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கண்ணீர் வடித்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தனியார் பள்ளிகளுக்கான அமைச்சர் மட்டும்தானா? அல்லது அரசு நடத்தும் பள்ளிகளுக்கும் அவர்தான் அமைச்சரா? தனியார் பள்ளிகள் உரிமம் பெறுவதை எளிதாக்கி அதனை ஊக்குவிப்பதற்குத்தான் அமைச்சர் ஆனாரா ராஜ்மோகன்? தமிழ்நாடு அரசுப் பள்ளிகள் நடத்துகிறது என்ற நினைவாவது அமைச்சர் ராஜ்மோகனுக்கு இருக்கிறதா? தனியார் பள்ளிகள் எந்த அளவிற்குப் பெற்றோர்களிடம் கட்டண கொள்ளையில் ஈடுபடுகின்றன என்பதாவது அமைச்சருக்கு தெரியுமா? உரிமம் பெறுவதில் நடைபெறும் ஊழல்களைத் தடுத்து தனியார் பள்ளி முதலாளிகளுக்கு உதவிய அமைச்சர் ராஜ்மோகன், தனியார் பள்ளிகளின் கட்டணக்கொள்ளையைத் தடுத்து ஏழை, நடுத்தர வர்க்க பெற்றோர்களுக்கு உதவ எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? தனியார் பள்ளிகள் நடத்துவது புண்ணியக் கணக்கு என்றால் அரசுப்பள்ளிகள் நடத்துவது பாவ கணக்கா? அரசுக்கு அந்தப் புண்ணியம் சேர அமைச்சர் ராஜ்மோகன் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? பாவ புண்ணியக் கணக்கு பேசும் அமைச்சர் எத்தனை தனியார் பள்ளிகள் தத்தம் பள்ளிகளில் எத்தனை ஏழை குழந்தைகளுக்கு இலவசமாய் கல்வி தருகின்றன என்று கூற முடியுமா? தனியார் பள்ளிகளின் உரிமம் பெறுவதில் நடைபெறும் ஊழல்களைக் களைய பல்வேறு நடவடிக்கைகளை வேக வேகமாக எடுத்துவரும் அமைச்சர் ராஜ்மோகன், அதே வேகத்தோடு அரசுப்பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே ஏன்?
தமிழ்நாடு முழுவதும் 25 ஆயிரம் பள்ளிகள் மேற்கூரை இடிந்து விழும் நிலையில் உள்ளன. மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து பயின்று வருகின்றனர். முறையான கழிப்பறை, தூய குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள்கூட நிறைவேற்றப்படாத பல்லாயிரக்கணக்கான பள்ளிகள் உள்ளன. பல்லாயிரம் பள்ளிகளுக்கு பாதுகாப்புச் சுவர்கள் இல்லை. போதிய ஆய்வகங்களோ, விளையாட்டு திடலோ, உபகரணங்களோ இல்லாத ஆயிரக்கணக்கான பள்ளிகள் உள்ளன. தனியார் பள்ளிகள் குறித்த தினம் தினம் கண்ணீர் விடும் அமைச்சர் ராஜ்மோகன் அந்த அக்கறையில் சிறிதளவாவது அரசுப்பள்ளிகளைச் சீர்படுத்தி அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த காட்டாதது ஏன்?
தமிழ்நாடு முழுவதும் உள்ள 37,554 அரசுப் பள்ளிகளில் 52 இலட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். ஆனால், வெறும் 11,890 தனியார் பள்ளிகளில் 53 இலட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தவெக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? ஒப்பந்த அடிப்படையில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பெருமக்கள் உரிய ஊதியம், பணி நிரந்தரம் வேண்டி பல ஆண்டுகளாகப் போராடி வரும் நிலையில் அவர்களின் துயர் துடைத்து அரசுப்பள்ளிகளின் கல்வித்தரம் உயர எந்த நடவடிக்கையும் எடுக்காத தவெக அரசு, தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 18 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப எந்த நடவடிக்கையும் எடுக்காத தவெக அரசு தனியார் பள்ளிகள் குறித்துக் கவலைப்பட்டுக் கண்ணீர் சிந்துவதற்கு வெட்கமாக இல்லையா? தனியார் பள்ளிகள் குறித்து தவெக அரசு உள்ளம் உருகுவதும், தனியார் பள்ளி நிர்வாகிகள் தவெக அரசை உச்சி முகர்வதும் இந்த அரசு யாருக்கானது, கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கானதா? அல்லது தனியார் பள்ளி முதலாளிகளுக்கானதா? என்ற ஐயத்தை எழுப்புகிறது.
ஆகவே, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இனியாவது, தான் தமிழ்நாடு அரசின் அமைச்சர் என்பதை நினைவில்கொண்டு, தனியார் பள்ளிகளை மீதான அக்கறையில் சிறிதளவேனும் அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதிலும் செலுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
தமிழ் இறையோன், எங்களின் முப்பாட்டன் முருகப்பெருமான் வரலாற்றைத் திரித்து, தமிழர்களை இழிவுபடுத்தினால் கடும் எதிர் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்!
தமிழ் இறையோன் முருகப்பெருமானை மையப்படுத்தி "என்.டி.ஆர்-திரிவிக்ரம் என்ற பெயரில் ஆந்திராவில் தயாரிக்கப்படும் திரைப்படத்தில், ‘தமிழர் இறையோன்’ முருகன் வடபுலத்தில் பிறந்தவர் என்ற கருத்துருவாக்கத்துடன் உருவாவதை உறுதிப்படுத்தும் விதமாகப் படக்குழு பதிவிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. கலைப்படைப்பு என்ற பெயரில் அடிப்படை புரிதலற்று, இதுபோன்ற வரலாற்றுத் திரிபுகளை உண்மையெனக் கட்டமைக்க முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது.
ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மூத்த தொன்ம வரலாறு கொண்ட தமிழப்பேரினம், தனக்கென்று தனித்த கலை, இலக்கியம், பண்பாடு, நாகரீகம், வாழ்வியல், மெய்யியல் கோட்பாடு, இறை வழிபாடு என யாவற்றையும் கொண்டதாகும். இயற்கையை தொழுது போற்றுவதும், புகழோடு மறைந்த மூத்தோரை நடுகல்லிட்டு வணங்குவதும் தமிழரின் ஆதிமரபாகும். அதனடிப்படையில், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த தமிழ் முன்னோர்களையும், மூத்தோர்களையும் காலங்காலமாக தெய்வமாகப் போற்றி வணங்கி வருதல் தமிழரின் மெய்யியல் கோட்பாடாக இருந்து வருகிறது. அதன் அடிப்படையிலேயே தமிழர்களின் ஐவகைத் திணை நிலங்களுள் முதன்மை நிலமாகத் திகழும் குறிஞ்சித்திணையின் தலைவன் மூத்தோன் முருகனை முப்பாட்டன் என அழைப்பதும், வணங்கிப் போற்றுவதும் தமிழரின் மரபு சார்ந்த தொடர்ச்சியான வழிபாட்டு முறையாகும்.வரலாற்றின் வீதிகளில் தொடர்ச்சியாக அடிமைப்படுத்தப்பட்டு, அழித்தொழிக்கப்பட்ட இனத்தின் மறைக்கப்பட்ட வீரவரலாற்றையும், பண்டைய அடையாளங்களையும் மீட்டெடுக்கும் பெரும்பணியைச் செய்து மீண்டெழத் துடிக்கும் நேரத்தில், கற்பனை படைப்புகள் மூலம் இதுபோன்று உண்மைக்குப் புறம்பான திரிபுகள் திணிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
தனக்கெனத் தனித்த அடையாளத்தையோ, பண்பாட்டுக்கூறுகளையோ, வழிபாட்டு முறைமைகளையோ, இறையியல் மரபுகளையோ கொண்டிராத மாற்றினங்கள் தமிழின முன்னோர்கள் சிவன், முருகன், கண்ணன், திருமால், கொற்றவை என யாவற்றையும் தங்கள் கடவுளரென திருடிச்சேர்த்துக் கொண்டனர். தமிழர்த் திணை நிலங்களின் வாழ்ந்த தெய்வங்கள் மீதும், தமிழரின் பண்பாட்டு விழுமியங்கள் மீதும் ஆதிக்கம் செலுத்தி மொத்தமாய் அபகரித்துவிட்டனர். அதன் விளைவாக, முருகனை சுப்ரமணியனாக்கினார்கள். கண்ணனை கிருஷ்ணனாக்கினார்கள். திருமாலை விஷ்ணுவாக்கினார்கள். கொற்றவையைப் பார்வதியாக்கினார்கள். சிவனை ருத்திரனாக்கினார்கள். தமிழர் முன்னோர்களை மொத்தமாய்ப் புராணப்பாத்திரங்களாக மாற்றி நிறுத்தினார்கள். கடவுளையே கடன் கொடுத்த இனத்தின் பிள்ளைகள் நாங்கள்.
இரவலாக எங்களின் கடவுளர்களை எடுத்துக்கொண்டு போன பிறகும், இன்றளவும் முழுதாய் அபகரிக்க முடியாமல் தமிழர்களுக்கென்ற தனிப்பெரும் இறையோனாக இருப்பவர் தமிழ்க்கடவுள் முப்பாட்டன் முருகப்பெருமான். தொன்றுதொட்ட தமிழ்ப்பண்பாட்டோடு, வாழ்வியலோடு ஒன்றர கலந்த தமிழர்களின் மிக மூத்த ஆதி இறைவன் முருகப்பெருமான். அவரையும் தமிழ்ப்பேரினம் இழக்கவிட மாட்டோம். தமிழ்தான் முருகன்; முருகன்தான் தமிழ்; இரண்டும் பிரிக்க முடியாதது. தமிழர் இறையோன் முருகன் என்பது எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்த ஒன்று. முருகன் தமிழர்களின் முப்பாட்டன் என்பது அரசியல் அல்ல; அது எங்கள் பண்பாடு, வாழ்வியல்; தமிழர் போற்றும் தெய்வங்களை வணங்குவதற்கு யாருக்கும் உரிமை உண்டு. ஆனால், வரலாற்றை தவறாக திரித்து கட்டமைத்து இழிவுப்படுத்த எவருக்கும் உரிமை இல்லை.
முதுபெரும் தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் தொடங்கி திருமுருகாற்றுபடை உள்ளிட்ட பத்துப்பாட்டு நூல்கள், எட்டுத்தொகை நூல்கள், சிலப்பதிகாரம் சங்கத்தமிழ் இலக்கியங்கள் பலவும், சேயோன், செவ்வேள், சேவலங்கொடியோன், சேய், முதிர்கடவுள், நெடுவேள், தெய்வம், முருகு, அணங்கு, மலைவான், விறல்வேள், மலை உறைக்கடவுள், முருகன், சூர்செல்வன், நெடியோன், மால்மருகன் என்று பற்பல செந்தமிழ் பெயர்களால் முருகனைப் போற்றிப் புகழ்கின்றன. மேலும், தேவாரம், திருவாசகம், திருப்புகழ் உள்ளிட்ட பற்பல பக்தி இலக்கியங்களும் தமிழ் இறையோன் முருகனை போற்றுகின்றன. சங்க இலக்கியங்களில் வேலன் வெறியாட்டு என்ற தொல்குடி மக்களின் சடங்கும் வியந்து குறிப்பிடப்பட்டுள்ளது.
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று தமிழ் கூறும் முதுமொழியை மெய்ப்பிக்கும் விதமாகவே முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் உட்பட தமிழ்நாட்டின் குன்றுகள் தோறும் குமரனின் கோட்டங்கள் நிறைந்துள்ளன. எனவே, முருகன் தமிழர்களுக்கு உரித்தான தனிப்பெருங்கடவுள் என்ற பேருண்மையை நிறுவும் வல்லமை தமிழுக்கும், தமிழர்களுக்கும் எப்போதும் உண்டு. மிகக் கடுமையான எதிர்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கின்றேன்.
(1/2)
TVK அரசின் முதலாவது மெகா ஊழல் -
அரசு வழக்கறிஞர்கள் நியமன ஊழல்... புஸ்ஸி ஆனந்த் உத்தரவின் பெயரில் இந்த ஊழலை கூட்டாக செய்துள்ளனர் TVK மாவட்ட செயலாளர்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திற்கு நேரடியாகவே வசூல் நடந்துள்ளது. இதன் மூலம் புஸ்ஸி ஆனந்த் தரப்பில் சுமார் 120 கோடி வசூல் வேட்டை நடத்தியுள்ளனர்..
இதில் மாவட்ட செயலாளர்கள் பங்கு பிரித்தது போக எவ்வளவு தலைமைக்கும் அமைச்சரக்கும் அனுப்பினார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் 100% ஊழல் நடந்துள்ளது.
இதன் மீது CBI விசாரனை தேவை..
வந்த 40 நாளில் கொள்ளை அடிக்க கிளம்பிட்டானுக அதுவும் கூட்டமா... இதுக்கு பெயர் மாற்றம்? இன்னும் 400 நாள் விட்டா இவனுக என்ன என்ன அடிப்பானுக?
இவனுக எளிய பிள்ளைகள் கிடையாது - திருட வாய்ப்பு கிடைக்காமல் சுற்றி கொண்டிருந்த பிள்ளைகள்... வாய்ப்பு கிடைத்துவிட்டது இனி ஒவ்வொரு நாளும் சம்பாரிப்பது தான் திட்டம் என சுற்றி கொண்டு இருக்கானுக.
CBI வசம் வழக்கு சென்றால்
புஸ்ஸி ஆனந்த் விரைவில் கைது.
எதிர்கட்சிகள் ஆரம்பித்து செய்தி நிறுவனங்கள் தொட்டு அனைத்தும் தரப்பிலும் எப்படி குதிரை பேரம் நடந்து அதிமுக MLAகளை விஜய் விலைக்கு வாங்குகிறார் என்பதை சொல்லியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் எதற்கு ஆளுநர்? இன்று ஜி.விகடன் வெளியாகியுள்ள கட்டுரையில் எங்கே யாரை எப்படி சந்தித்தார்கள் என்பது கூட தெளிவாக வெளியிட்டுள்ளனர்... பின் ஏன் நடவடிக்கை இல்லை? அதுவும் மொத்த அதிமுகவை அழிப்பதற்கு திட்டமிடப்பட்டு வேலைகளை ஆந்திராவில் இருந்து செய்யகிறது விஜய் தரப்பு!
இந்த MLAகளை விலைக்கு வாங்கும் வேலையை எதோ வழியில் செய்வது தமிழகத்திற்கு சம்மந்தமே இல்லாத விஷ்ணு ரெட்டி. இதற்காகவே விஜய் இவரை முக்கிய ஆலோசகராக நியமனமும் செய்துள்ளார்.
உரிய நடவடிக்கை அவசியம்... விஜய் செய்வது மாற்று அரசியல் அல்ல... மாறாக ஒரு கீழ்தரமான அரசியல்... அதுவும் தமிழக அரசியலை ஆந்திராவில் இருந்து தீர்மானிக்கும் விஷ்ணு ரெட்டி...