விடியா திமுக ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், நாள்தோறும் ஒரு திட்டத்தை அறிவித்து மக்களை ஏமாற்றுவதை ஒரு வாடிக்கையாகவே கொண்டுள்ளார்கள்.
நேற்றைய தினம் 'உங்கள் கனவை சொல்லுங்கள்' என்று ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். நான்கரை ஆண்டுகள் மக்களின் அடிப்படை தேவையை கூட நிறைவேற்றாமல், ஆட்சி முடியும் நேரத்தில், 50,000 தன்னார்வலர்களைக் கொண்டு வீடு வீடாகச் சென்று உங்கள் கனவை சொல்லுங்கள் என்று கேட்கப் போகிறார்களாம்.
ஆட்சியில் இருக்கும்போது, மக்களை பற்றி கவலைப்படாமல் , ஆட்சி முடியும் நேரத்தில் மக்களின் கனவைக் கேட்டு அவர்களின் குறையை தீர்க்கப் போகிறேன் என்பது கடைந்தெடுத்த கபட வேலை!
இந்த திட்டம் முதலமைச்சரின் திமுக-வின் தேர்தல் வேலையை பார்க்கும் 'PEN' நிறுவனத்திடம் மறைமுகமாக ஒப்படைக்கப் போவதாக செய்திகள் வருகின்றன.
அரசின் பணத்தில், தன்னார்வலர்கள் என்ற முகமுடி அணிந்து கொண்டு திமுக-விற்கு வேலை பார்ப்போர், வீடு வீடாகச் சென்று திமுக-விற்கு வாக்கு சேகரிக்க நடத்தும் ஒரு மோசடி நாடகம்தான் இது.
இதற்கு மக்களின் பணத்தை விரயம் செய்கிறார்கள். இப்படி நிர்வாகம் செய்வதைவிட, அரசு நிர்வாகத்தையே நேரடியாக 'PEN' நிறுவனத்திடம் ஒப்படைத்துவிடலாம்.
மேலும், மக்களின் ஆதார் எண், தொலைபேசி எண் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை அரசின் வாயிலாக திமுக-வின் தேர்தல் ஆதாயத்திற்காக சேகரிக்க நினைப்பது டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டத்தை மீறுவது மட்டுமன்றி, தேர்தல் ஆணையத்தின் நெறிமுறைகளை தார்மீக அடிப்படையில் மீறும் செயலாகும்.
அரசின் நிதியை இதுபோன்ற தில்லு முல்லு திட்டங்களுக்காக செலவிட்டு, சுய விளம்பரம் தேடும் விடியா திமுக அரசை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
மக்களை ஏமாற்றும் இது போன்ற காதில் பூ சுற்றும் வேலையை இனியாவது விடியா திமுக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்.
@CMOTamilnadu@arivalayam@AIADMKOfficial
புரட்சித் தலைவரால் தோற்றுவிக்கப்பட்டு, மாண்புமிகு அம்மா அவர்களால் வளர்க்கப்பட்டு, இன்று மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் @EPSTamilnadu அவர்கள் தலைமையில் இந்தியாவின் மாபெரும் மக்கள் இயக்கமாக உயர்ந்து நிற்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உலகத்தின் 7வது மிகப்பெரிய கட்சியாக அறிவித்த @itswpceoக்கு நன்றி
இந்தி மொழி திணிப்பை எதிர்த்து, மாபெரும் புரட்சி போராட்டத்தில் ஈடுபட்டு "இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்" என்பதை உலகிற்கு எடுத்துரைத்து, அன்னைத் தமிழுக்காக தியாக வேள்வியில் இன்னுயிர் துறந்த மாவீரர்களான, #மொழிப்போர்_தியாகிகள் -க்கு எனது வீரவணக்கங்கள்.
கழக நிறுவனத் தலைவர், புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 106-ஆவது பிறந்தநாளையொட்டி, மாண்புமிகு கழக இடைக்காலப் பொதுச்செயலாளர் திரு. @EPSTamilNadu அவர்கள், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இதயதெய்வத்தின் திருஉருவப் படத்திற்கு, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
#HBDMGR
கழக நிறுவன தலைவர் 'பாரத ரத்னா' இதய தெய்வம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 106-ஆவது பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் !
மாண்புமிகு கழக இடைக்காலப் பொதுச் செயலாளர் திரு. @EPSTamilNadu அவர்கள் மாலை அணிவித்து, கழக கொடியினை ஏற்றி வைத்தார்.
#HBDMGR 1/3
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் செங்கரும்பும் சேர்த்து வழங்கப்படுமென விடியா திமுக அரசு அறிவித்துள்ளது, கழகத்தின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி !
- மாண்புமிகு கழக இடைக்காலப் பொதுச்செயலாளர் திரு. @EPSTamilNadu அவர்கள்
#எடப்பாடியார்_சொல்கிறார்_ஸ்டாலின்_செய்கிறார்#PongalGift
கல்விக் கண் திறந்த கர்ம வீரர், வேளாண் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்ற உயரிய குறிக்கோளை செயல்படுத்திய வேளாண்மை நாயகர், பெருந்தலைவர் #காமராஜர் அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் பெருமைகளை போற்றி அவரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன்.
கழகத்தின் காவல்தெய்வங்கள் புரட்சித்தலைவர் #MGR புரட்சித்தலைவி #அம்மா ஆகியோரின் நல்லாசியுடன்-கழக ஒருங்கிணைப்பாளர்கள் @EPSTamilNadu@OfficeOfOPS மற்றும் தலைமைகழக நிர்வாகிகள் முன்னிலையில் மாநிலங்களவை உறுப்பினருக்கான வேட்பு மனுவினை தாக்கல் செய்தேன்🙏 @AIADMKOfficial@AIADMKITWINGOFL
மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கழக இணை ஒருங்கிணைப்பாளர் முன்னாள் முதலமைச்சர் அண்ணன் எடப்பாடி கே. பழனிச்சாமி @EPSTamilNadu அவர்களை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டேன் 🙏
@AIADMKOfficial
Live: சொத்து வரி 150% வரை உயர்த்திய திமுக அராஜக ஆட்சி முறையையும் எதிர்த்து, சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் மாண்புமிகு @EPSTamilnadu அவர்கள் தலைமையில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்
#சொத்து_வரியா_சொத்தை_பறிக்கும்_வரியா https://t.co/vgcL8A8iHl
Live: சொத்து வரி 150% வரை உயர்த்திய திமுக அராஜக ஆட்சி முறையையும் எதிர்த்து, சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் மாண்புமிகு @EPSTamilnadu அவர்கள் தலைமையில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்
#சொத்து_வரியா_சொத்தை_பறிக்கும்_வரியா https://t.co/TKY9HyHFfN