நம் காதல் கசந்ததற்குக் காரணம் நமக்குள் அன்பு இல்லாமல் போனதால் அல்ல! நீ காதல் என்று புரிந்தகொண்டதும், நான் காதல் என்று புரிந்துகொண்டதும் வெவ்வேறாக இருந்தன, அவ்வளவுதான்.
-மனுஷ்ய புத்திரன்
அழைத்து தொந்தரவு செய்துவிடுவேன்
என அஞ்சி
உன் தொடர்பு எண்ணினை அழித்துவிட்டேன்.
பின்வரும்
பெயரில்லா அழைப்புகள் எல்லாம்
நீயாக இருந்துவிடக் கூடாதா என்று
அலைக்கழியும் மனத்தை
ஆற்றுப்படுத்ததான் ஆகவில்லை.
பிடித்திருக்கிறது என்பது போல,
பிடிக்கவில்லை என்பதும் எவ்வளவு எளிய வாக்கியம்.
ஆனால்,
அதை சொல்வதற்கும்
ஏற்றுக்கொள்வதற்கும்
ஒரு யுகமே தேவைப்படுகிறது.
~ மகி ~
உடனிருப்பேன் என்கிற வாக்குகள்
பொய்யாகும்போது,
ஒருபோதும் உன்னிடம் திரும்ப வரமாட்டேன்
என்று சொல்லிச் சென்ற வாக்குகள் மட்டும்-
பலிக்கவா போகிறது!
வா. காத்திருக்கிறேன்.
சின்ன புறக்கணிப்புதான்
மனதை எவ்வளவு வருத்துகிறது
சின்ன நெளிவுதான்
எவ்வளவு மரியாதை தருகிறது
சின்ன புன்னகைதான்
எவ்வளவு பகையை உடைக்கிறது
சின்னச் சின்னதுதான்
எவ்வளவு பெரிதாக இருக்கிறது?
-உமா மகேஸ்வரி
Comfortable zone
நம்ம முன்னேற்றத்திற்கான பெரும் எதிரி இதுதான் எந்த செயலையுமே அது நமக்கு செளகரியமான வழி இல்லனு செய்யவிடாது…
கம்போர்ட்டுக்கு பழகிட்டா அதுல இருந்து வெளி வர ரொம்பவே கஷ்டப்படுவோம் வந்துட்டா அதுதான் நம்மோட மிகப்பெரிய வெற்றி!
நெருக்கடிகள்தான் நம்மை வலிமையாக்கும்!!!
அதே பழைய சிநேகிதி தான்.
அதே" ஹேய் லூசு",
அதே எரும
அதே "மொக்க போடாதடா " தான்.
துள்ளல் திமிர்
தெனாவட்டு
எதுவும்
மாறிவிடவில்லை.
பாப்பாவுக்கு என்ன பேர் வச்சிருக்க ?
என்று கேட்கையில் மட்டும்
குரல் உடைந்திருந்தது.
~ காசிராஜன் ~
கொஞ்சம் அன்பைத் தா என்று
கேட்டு நிற்க முடியவில்லை
"விட்டுப்போகாதே" எனச்
சொல்லமுடியவில்லை.
எப்போதும் உன்னிடம்
பலவீனமாக இருந்த நான்,
நீ விலகும்போது மட்டும்
ஸ்திரமாகக் காட்டிக் கொள்கிறேன்
தன்மானம் மிக்க ஓர் ஆன்மா
யாருக்கும் தெரியாமல் -
அழுதுகொள்வதே விதி.
வழி அனுப்ப யாருமே இல்லாமல்
தன் பயணங்களைத் துவங்குபவர்கள் இருக்கிறாராகள்.
போய்ச் சேர்ந்ததும் அழைப்பெடுத்துச் சொல்ல யாருமே இல்லாதவர்கள் இருக்கிறார்கள்.
யாருமே இல்லாமல்
யார் யாரோ
இன்னமும் இந்த உலகில்
இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள்.
~ அரூஸா ஜெவாஹிர் ~
நான் செத்தா கூட
உனக்கு அழுகை வராதுல்ல
என்றுதான்
புலம்பிக் கொண்டிருந்தான் அவன்.
இறுதியில்
அன்பென்று நாம் வேண்டுவதெல்லாம்
ஒரு சிறிய கரிசனத்தையும்
தனக்காகச் சிந்தும்
ஒரு பொட்டுக் கண்ணீரையும்தான்
இல்லையா!
இப்போதெல்லாம்
உனக்கான முக்கியத்துவத்தை
நான் குறைத்துக் கொண்டேன்.
நீ வந்து பேசவில்லை என்றால்
வருத்தப்படுவதில்லை,
உன்னைக் காணவில்லை என்றால்
தேடுவதில்லை,
உன்பொருட்டு எதுவும்
என்னைத் தாக்குவதுமில்லை.
இதைச் சொல்லத்தான்
இப்போது வந்தேன்.
இதைச் சொல்லத்தான்
நாளையும் வருவேன்.
இருக்கச் சொல்கிறார்களா
போகச் சொல்கிறார்களா
என்பதைப் பிரித்தறிய முடியாதபோது
விட்டுச்செல்லும் முடிவையே எடு
விரும்புகிறார்களா இல்லையா என்பதில்
தெளிவில்லாத போது
விருப்பமில்லை என்ற முடிவையே எடு
எளிய சூத்திரம்தான்.
எந்தப் பிரியமும் உன்னைப் -
பதைபதைக்க அனுமதிக்காது.
முந்தைய காலங்களின் நனிமிகு நினைவுகளால் பலனொன்றும் இல்லை,
ஒருவர் வாழ்வில் இன்றைக்கு நீங்கள் என்னவாக இருக்கின்றீர்களோ அதுமட்டுமே நிஜம். அதன்பொருட்டே எல்லாம் நடந்தேறும்.
இத்தனை நாள்
உன்னோடு இருந்ததற்கு
குறைந்தபட்சம்
சொல்லிவிட்டாவது செல்.
திடும்மென்று
காணாமல் போகும்போது
நீ அவமானப்படுத்துவது நம்மை.
நாமாக இருந்த பொழுதுகளை.
அவை
அத்தனை அவமானத்திற்கு
உரியவை அல்ல.
இன்று சொற்களிழந்து நிற்கிறோம்.
ஆச்சர்யமாக இருக்கின்றது,
அன்று அப்படி நாம் மணிக்கணக்காக
எதைத்தான் பேசினோம்?
இன்று எது நம்மை நிர்கதியாக விட்டது?
சிறுபிள்ளைத்தனம் போல
இதையெல்லாம் எதற்கு சொல்லிக்கொண்டு என
இன்றைக்குத் தவிர்ப்பவற்றைத்தான்
அன்றைக்கு அவதியவதியாகப்
பேசிக் கொண்டிருந்தோம்!
நானே அழைக்க எண்ணுவதற்கும்
நீயாக அழைத்தால் என்ன? எனும் வீம்பிற்கும்
இடையில் கனத்துக் கிடக்கிறது மாபெரும் கடல்
அதில் விழுந்து மூச்சுத்திணறும்
தொட்டி மீன்கள் நாம்.
உன் மனம்
சமநிலையில் இருக்கிறதா?
சலனப்பட்டு கிடக்கிறதா? என்பதெல்லாம்
எனக்குத் தெரியாதா என்ன!
தன்னந்தனியாக நீயாகவே சமாளித்துக்கொள்வாய்
ஆனாலும் மீண்டும் மீண்டும்
உன் கண்ணில்படும்படி உலவுவதெல்லாம்
"ஒன்றும்ஆகாது, தைரியமாயிரு.
நான் இங்குதான் இருக்கிறேன்"
என்பதைச் சொல்லத்தான்.