தமிழ்நாட்டின் வளர்ச்சியை திராவிட இயக்கக் கொள்கை அடித்தளத்தில் கட்டி எழுப்பிய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, கழகத்தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் சென்னை ஓமந்தூரார் அரசினர் வளாகத்தில், கலைஞர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு அருகே அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதைச் செய்தோம்.
#KalaignarForever
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில்,
அண்ணா அறிவாலய வளாகத்திலும், முரசொலி அலுவலக வளாகத்திலும் கலைஞர் அவர்களின் சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த, அவர்களின் திருவுருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதைச் செலுத்தினோம். #KalaignarForerver
நம் உயிருக்கு நிகரான கலைஞர் அவர்கள் வாழ்ந்த கோபாலபுரம் மற்றும் சி.ஐ.டி. குடியிருப்பு இல்லங்களில், தலைவர் @mkstalin அவர்கள் மற்றும் கழக முன்னணியினருடன் சென்று கலைஞர் அவர்களின் பிறந்த நாளையொட்டி, அவர்களது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதைச் செலுத்தினோம்.
கலைஞர் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்!
#KalaignarForever
தலைவரின் பிறந்தநாள்!
தமிழினத் தலைவரின் பிறந்தநாள்!!
மூப்படைந்து சக்கர நாற்காலியில் உட்கார்ந்த பின்பும் ஓய்வின்றி, தனது இறுதி மூச்சுவரை, தமிழினத்திற்காக - தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காக உழைத்திட்ட உன்னதத் தலைவர்!
என்னை என்றும் இயக்கும் தலைவர் கலைஞர் அவர்களே…
வெற்றியைத் தலையிலும், தோல்வியை நெஞ்சிலும் ஏற்றாமல், சோதனைக் கடல்களைச் சோர்வின்றி நீந்திக் கடந்த உங்களது ஆற்றல் என்னிடமும் இருக்கிறது.
நீங்கள் நிறைந்தபோது, உங்களின் ஆற்றலை வேண்டினேன். அந்த ஆற்றலோடு தொடர் வெற்றிகளைப் பெற்று, தமிழ்நாட்டை வரலாறு போற்றும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றோம். இப்போது, வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். எனினும் உங்களது ஆற்றல், என்னோடு மட்டுமல்ல, நீங்கள் உணர்வூட்டி வளர்த்தெடுத்த ஒவ்வொரு உடன்பிறப்பிடமும் இருக்கிறது.
உறுதியாய்ச் சொல்கிறோம்…
மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம்! உதயசூரியனின் ஒளியால் தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம்!
#KalaignarForever
தமிழின தலைவரின் பிறந்தநாள்!
அவரின் பாதம் தொட்டு வணங்கி கழக பணிகளை தொய்வில்லாது இனிவரும் காலங்களில் உழைத்து மீண்டும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற உச்சரிப்பை கேட்கும் வரை உழைப்பு! உழைப்பு!! உழைப்பு!!! என அயராது பணி செய்ய உறுதி ஏற்று கொண்டேன்...
#KalaignarForever
திருவள்ளுவருக்கு ஆளுநர் காவிச் சாயம் பூசியிருக்கிறார். உங்கள் பாசிசம் என்ன ஆயிற்று, விஜய் ப்ரோ?
இதைப்பற்றி எப்போது பேசுவீர்கள்? இதைக் கண்டிக்கத் துப்பில்லாத நீங்க என்ன சக்தி நாரசக்தியா..??
-கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. ஆ.ராசா எம்.பி அவர்கள்
#TVKFails
“என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே“ என்ற அந்தக் காந்தக் குரல் இன்றும் நம் காதுகளில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது!
நம் நெஞ்சில் வாழும் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்தநாளில், அவர் தன் உதிரம் கொடுத்து வளர்த்தெடுத்த இந்தக் கழகத்தை உயிரைக் கொடுத்துக் காப்போம் எனச் சூளுரைப்போம்.
வாழ்க தலைவர் கலைஞர் புகழ்!
#KalaignarForever
75-ஆண்டுகளாக, தமிழ்நாட்டு அரசியலின் திசைவழியைத் தீர்மானிக்கும் பேரியக்கமாம் தி.மு.கழகத்தின், தலைமை நிலையமாக செயல்பட்ட ‘அன்பகம்’ இன்று @dmk_youthwing தலைமையகமாக விளங்கி வருகிறது.
இளைஞர் அணியை உருவாக்கியதுடன் தமிழ்நாடு முழுவதும் நிகழ்ச்சிகள் நடத்தி, நிதி திரட்டி, அன்பகத்தை இளைஞர் அணி வசமாக்கிய இன்றைய கழகத் தலைவர் @mkstalin அவர்கள், 1988-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாளன்று இனமானப் பேராசிரியர் தலைமையில், கலைஞர் அவர்களைக் கொண்டே அன்பகத்தைத் திறந்து வைத்தார்.
28 ஆண்டுகளைக் கடந்து, அன்பகத்தை நமக்கு பெற்றுத் தந்த கழகத் தலைவர் அவர்களே, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்தநாளான நாளை, காலை 10:00 மணி அளவில் , 75-அடி உயர கம்பத்தில் கழகக் கொடியேற்றி- தந்தை பெரியார்- பேரறிஞர் அண்ணா-முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் சிலைகளையும் புதுப்பிக்கப்பட்ட அன்பகம் அலுவலகத்தையும் திறந்து வைப்பதில் பெருமிதம் கொள்கிறது கழக இளைஞர் அணி.
இந்த நன்னாளை, இளைஞர் அணியினர் அவரவர் வசிக்கும் பகுதிகளில், இருவண்ணக் கொடியேற்றி, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
#KalaignarForever #Kalaignar103
நவீன தமிழ்நாட்டின் சிற்பி, சமூக நீதியின் காவலர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் இன்று!
ஐந்து முறை முதலமைச்சராகப் பொறுப்பேற்று, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், மாநில சுயாட்சிக்காகவும், தமிழ்மொழியின் உயர்வுக்காகவும் தன் வாழ்நாளையே அர்ப்பணித்தவர். தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் இன்று நாம் காணும் உள்கட்டமைப்பு மற்றும் சமூக நலத்திட்டங்கள் அனைத்தும் அந்தத் தொலைநோக்கு பார்வையின் விளைவே!
#KalaignarForever #Kalaignar103
💥 தளபதி ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சர் ஆகத்தான் எங்களுக்கு வாக்களித்தார்கள்.
🧨 அவர்களுக்கு எதிராக 2 கோடிக்கும் மேலான வாக்குகள் அளித்துள்ளார்கள் மக்கள்.
⚡️ஆம், அவர்கள் ஆர்.எஸ்.எஸ்.பிள்ளைகள்தான்!
🎇 நாங்கள் ஆதரவு கொடுத்துள்ளோமே தவிர, இப்போதும் திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்.
அடி ஒவ்வொண்ணும் வேற மாறி 🔥🔥🔥 அதான் அண்ணன் ❤️🖤💙
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றிக்காகக் களமாடிய ஒவ்வொரு உடன்பிறப்பின் வியர்வைத் துளிகளாலும், தோழமைக் கட்சித் தொண்டர்களின் அயராத உழைப்பாலும்தான் மலர்கிறது இந்தப் புதிய அரசு!
கோட்டையில் அமையும் இந்த ஆட்சி, உங்கள் உழைப்பால் விளைந்த நெற்கதிர்!
திராவிட முன்னேற்றக் கழகம் என்பது ஒரு தேர்தல் வெற்றியால் வளர்ந்த கட்சியும் அல்ல. ஒரு தேர்தல் தோல்வியால் முடிந்து போகப் போகும் கட்சியும் அல்ல!
#முரசொலி
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மக்களால் தேர்ந்தெடுத்த மக்களாட்சியை மட்டுமே விரும்பினார்
இனியும் திமுகவை குறை சொல்லி கொண்டு திரியாமல் ஆரோக்கியமான அரசியலை முன் எடுத்து மக்கள் பணியை தொடருங்கள்.
தற்குறிகள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் அதிமுக எடப்பாடி ஆட்சியில் OPS ஆதரவாளர்களை நீக்கி ஆட்சிக்கு இடையூறு செய்யும் போது கூட DMK தலைவர் MK ஸ்டாலின் ஆட்சியை கலைத்து குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்கவில்லை
இதோ தஞ்சை மக்கள் விரும்பிய மாற்றம் தொடங்கியது.!!!
அமையவிருக்கும் மைனாரிட்டி அரசின் தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினரின் போதை ஆட்டம்.
Here comes the change that the people of Thanjavur wanted.!!!
The drunken dance of the Thanjavur MLA of the upcoming minority government.
#TVKfails | #MinorityGovernment