கனடாவில் நடைபெற்று வரும் சர்வதேச செஸ் போட்டியில் (FIDE Candidates Chess Tournament 2024) சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருக்கும் இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (D Gukesh) அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற இளம் வீரர் என்ற பெருமையை நிகழ்த்தியிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த 17 வயதான குகேஷ் அவர்கள், அடுத்தடுத்து நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் வெற்றிவாகை சூட நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். #Gukesh
சென்னை கண்ணகி நகரில் கஞ்சா வியாபாரிகளை கைது செய்யச் சென்ற காவலர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தியிருக்கும் சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது - இனியும் தமிழக அரசு மவுனம் காப்பது நம் வருங்கால தலைமுறையினருக்கு பேரழிவை உண்டாக்கும்.
சென்னை கண்ணகி நகரில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோரை கைது செய்யச் சென்ற போது, கஞ்சா போதையில் இருந்த சிலர் கண்மூடித்தனமாக தாக்கியதில் இரு காவலர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மாநிலத்தின் தலைநகரான சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே தொடங்கி அனைத்து பகுதிகளிலும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வதாக எழும் பொதுமக்களின் புகார்களின் மீது தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொண்டதாக தெரியவில்லை.
ஆளுங்கட்சி பிரமுகர்களின் ஆதரவோடு நடைபெறும் கஞ்சா விற்பனை தொடர்பான பொதுமக்களின் புகார்களை அலட்சியாக எதிர்கொண்டதன் விளைவாக, தற்போது காவல்துறையினர் மீதே கஞ்சா வியாபாரிகள் தாக்குதல் நடத்தும் அளவிற்கு அசாதாரண சூழல் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.
எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களின் நடமாட்டத்தை அடியோடு ஒழிப்பதோடு, காவலர்களை தாக்கிய கஞ்சா வியாபாரிகளை கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu
பகவான் மகாவீரர் அவதரித்த தினத்தை மகாவீர் ஜெயந்தியாக கொண்டாடி மகிழும் சமண சமயப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். #MahavirJayanti2024
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகள் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆர்வத்துடன் வாக்களித்து தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றிய மக்கள் அனைவருக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களின் வெற்றியை மட்டுமே இலக்காக நிர்ணயித்து தேர்தல் களப்பணியாற்றிய அனைத்து கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் தொண்டர்கள் என அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தேனி மற்றும் திருச்சிராப்பள்ளி நாடாளுமன்றத் தொகுதி மட்டுமல்லாது தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்கள் மற்றும் அவரவர் சார்ந்த கட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு தோளோடு தோள் நின்று தீவிர களப்பணியாற்றி வெற்றியை உறுதி செய்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அனைத்து நிலையிலான நிர்வாகிகள் மற்றும் என் உயிரினும் மேலான கழக தொண்டர்கள் அனைவருக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.
வாக்குப்பதிவு நாளின் ஒவ்வொரு நொடியும் நமக்கானது என்பதை உணர்ந்து பணியாற்றுவோம்;
நமக்கு எதிரானவர்களுக்கு துளியளவும் இடமளிக்காமல் விழிப்புடன் செயல்படுவோம். #LokSabhaElections2024
I thank the Hon'ble prime minister Narendra Modi Ji (@narendramodi) for your heartfelt wishes and blessings. People of Tamil Nadu are aware of your strong leadership, affection on Tamil language, Tamil people and commitment to our nation.
Great victory is awaiting sir !
ஆங்கிலேய ஆதிக்கத்தை துணிச்சலோடு எதிர்த்து விடுதலை வேட்கையுடன் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களில் முதன்மையானவராக விளங்கிய தீரன் சின்னமலை அவர்களின் பிறந்தநாள் இன்று.
ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு அடங்க மறுத்து தன் வீரத்தாலும், அசாத்திய திறமையாலும் அவர்களை புறமுதுகிட்டு ஓடச் செய்த மாவீரன் தீரன் சின்னமலை அவர்களின் புகழ் வீரவரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
கற்பி, ஒன்று சேர், புரட்சி செய் என முழங்கி ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி வளர்ச்சியில் பெரும்பங்காற்றியவரும், இந்திய அரசியல் சாசனத்தை வகுத்துக் கொடுத்தவருமான சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் இன்று.
தீண்டாமையை ஒழிக்கவும், சாதி ஏற்றத் தாழ்வுகளை அகற்றி சமத்துவமிக்க சமுதாயத்தை நிலைநாட்டவும் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த தேசியத் தலைவர் அம்பேத்கர் அவரின் அரும்பணிகளை எந்நாளும் போற்றி மகிழ்வோம். #AmbedkarJayanti2024
மலையாளப் புத்தாண்டை விஷு திருநாளாக உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த விஷு திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பண்பாட்டையும், பாரம்பரிய மரபுகளையும் பேணிக்காப்பதில் முன்னுதாரணமாக திகழும் மலையாள மக்கள் அனைவருக்கும் அன்பு, அமைதி, இன்பம் மற்றும் வளத்தை கொடுக்கும் ஆண்டாக இப்புத்தாண்டு அமையட்டும்.
சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக உலகமெங்கும் கொண்டாடி மகிழும் அன்பிற்குரிய தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் எனது இனிய குரோதி தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தலைமைக் கழக அறிவிப்பு:
தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கான பிரத்யேக தேர்தல் வாக்குறுதிகளை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திரு.டிடிவி தினகரன்(@TTVDhinakaran) அவர்கள் வரும் 13.04.2024 அன்று மாலை 4 மணியளவில் வெளியிடுகிறார்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், இதய தெய்வம் அம்மா அவர்களின் நம்பிக்கைக்குரிய தலைவராக இருந்தவரும், எம்.ஜி.ஆர் கழகத் தலைவருமான மூத்த அரசியல்வாதி திரு.ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.
நாடகத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்து துணிவு, கடின உழைப்பு, விடாமுயற்சிக்கு எடுத்துக் காட்டாக திகழ்ந்து உச்சம் தொட்ட திரு.ஆர்.எம்.வீரப்பன் அவர்களை இழந்துவாடும் எம்.ஜி.ஆர் கழகத்தினருக்கும், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
யுகாதி திருநாளை புத்தாண்டாக உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த யுகாதி திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நவீன வேளாண்மைக்கு வசப்பட்டிருந்த தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் பயணம் செய்து, தன் வாழ்நாள் முழுவதும் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களின் பிறந்தநாள் இன்று...
இயற்கை வேளாண்மை என்பது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியம் என்பதை நிரூபித்துக் காட்டியதோடு, தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான இயற்கை விவசாயிகளை உருவாக்கிய, ஐயா நம்மாழ்வார் அவர்களின் வழியில் பயணிக்க நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.
அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் தலைவராகவும், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினராக தொடர்ச்சியாக ஆறுமுறை தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றியவருமான திரு.மூக்கையாத் தேவர் அவர்களின் பிறந்தநாள் இன்று.
சட்டமன்றத்திலும் மற்றும் நாடாளுமன்றத்திலும் ஒரு உறுப்பினர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்த திரு.மூக்கையாத் தேவர் அவர்கள் தமிழகம் வளம்பெறவும், எண்ணற்ற நல்ல திட்டங்கள் நிறைவேறவும் காரணமாக அமைந்தார்.
தென் தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் தொண்டராக, சமூக சேவகராக, அரசியல் தலைவராக, கல்வித் தந்தையாக திரு. மூக்கையாத் தேவர் அவர்கள் ஆற்றிய மக்கள் நல பணிகள் தமிழக மக்களின் மனதில் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியார் மதுபானக் கூட மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு - பாதுகாப்பு வசதிகளின்றி இயங்கும் மதுபானக்கூடத்திற்கு அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கு கடும் கண்டனம்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் இயங்கி வரும் ஷேக்மேட் மதுபானக் கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் அங்கு பணியாற்றி வந்த மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
உரிய பாதுகாப்பு வசதிகளின்றியும், நேரக்கட்டுப்பாடின்றியும் சென்னையில் பல மதுபானக்கூடங்கள் இயங்கி வருவதாக புகார் எழுந்திருக்கும் நிலையில், வணிக நோக்கத்தை மட்டுமே மையமாக கொண்டு இதுபோன்ற கேளிக்கை விடுதிகளுக்கு அனுமதி வழங்கியிருக்கும் தமிழக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.
முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் இயங்கி வரும் மதுபானக் கூடங்களுக்கு எந்தவித ஆய்வுகளுமின்றி தமிழக அரசு அனுமதி வழங்கியதன் விளைவே, மூன்று அப்பாவி தொழிலாளர்களின் உயிர்கள் பறிபோனதற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, பொதுமக்களின் உயிரை வணிக நோக்கத்துடன் அணுகாமல் பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் இயங்கிவரக்கூடிய மதுபானக்கூடங்களை கணக்கெடுத்து, உடனடியாக மூட நடவடிக்கை எடுப்பதோடு, மூன்று தொழிலாளர்கள் உயிரிழப்புக்கு காரணமான ஷேக்மேட் மதுபானக்கூட நிறுவனர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu