பல முறை மருத்துவர் அய்யா மற்றும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோர் முதல்வரை சந்தித்து முறையிட்டும், வன்னியர் தனி இட பங்கீடு வழங்காத தமிழக அரசை கண்டித்து இன்று விழுப்புரத்தில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
#VanniyarReservation#வன்னியர்இடஒதுக்கீடு
வன்னியர் இடஒதுக்கீட்டு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தும் வகையில், திமுக அரசை கண்டித்தும், விழுப்புரத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையில் மாபெரும் மக்கள்திரள் போராட்டம் நடைபெறுகிறது.
#VanniyarReservation#வன்னியர்இடஒதுக்கீடு
தமிழ்நாட்டில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ள சமூகம் என்றால் அது வன்னியர்கள் தான். அவர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்குவது தான் உண்மையான சமூகநீதி ஆகும்.
#VanniyarReservation#ஸ்டாலின்துரோகம்
காட்டிலும் மேட்டிலும் உழைக்கும் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று இல்லாத காரணங்களைக் கூறி மறுக்கிறார் ஸ்டாலின், இதிலிருந்து அவர் அரசு வன்னிய மக்கள் மீது எந்த அளவுக்கு வன்மம் கொண்டிருப்பர் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
#VanniyarReservation#ஸ்டாலின்துரோகம்
இங்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பின்தங்கி மோசமான நிலையில் உள்ள சமூகம் என்றால் அது வன்னியர்கள் தான். அவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவது தான் சமூகநீதியின் அடிப்படை ஆகும்.
#VanniyarReservation#ஸ்டாலின்துரோகம்
அதானி குழுமத்தால் லஞ்சம் வழங்கப்பட்ட நிறுவனங்கள் பட்டியலில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றுள்ள நிலையில், மு.க.ஸ்டாலின் -அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்.
#AdaniStalinSecretMeet
அதானி குழுமத் தலைவர் கெளதம் அதானி மீது அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், லஞ்சம் கொடுத்ததாக பட்டியலிடப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடும் இருப்பதால் தமிழக அரசு மீது கேள்விகள் எழ தொடங்கியுள்ளன.
#AdaniStalinSecretMeet
தமிழ்நாட்டில் வளர்ச்சி அரசியல் மிகவும் முக்கியமானது. ஒரு சரியான அரசியல் தலைமையும், அந்த தலைமை கொண்டிருக்கும் வளர்ச்சிக்கான நோக்கமும் தான் அனைத்து மக்களுக்குமான வளர்ச்சியை கொண்டுவர முடியும்.
#HBDAnbumaniRamadoss#DevelopmentalPolitics
காவிரியின் கடலில் கலக்கும் உபரி நீரைத் தடுத்து நிறுத்த ராசிமணல் அணைக் கட்டுமானம் துவங்கிடவும், மேகதாட்டு அணை கட்டுமானத்தைத் தடுத்து நிறுத்திட ஆதரவு கோரியும் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் தலைவர் பி.ஆர்.பாண்டியன் அவர்கள் ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்த போது. #AkMoorthy#PMK#பாமக
தேமுதிக தலைவரும் தமிழ்நாடு முன்னாள் எதிர்கட்சி தலைவருமான திரு. விஜயகாந்த் அவர்கள் இன்று காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள், தேமுதிக தொண்டர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
#Vijayakant #DMDK #AkMoorthy
பங்காரு அடிகளார் மறைவுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி இரங்கல்
உலகம் முழுவதும் உள்ள பக்தர்களால் அம்மா என்றும் அழைக்கப்படும் பங்காரு அடிகளார் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.
ஆசிரியராக பணியை தொடங்கி ஆன்மிகத்தில் உலகம் முழுவதுமுள்ள பக்தர்களின் கவனத்தை ஈர்த்தவர் பங்காரு அடிகளார்
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசு அய்யாவின் நெருங்கிய அன்பையும்,பாசத்தையும் கொண்டவர் பங்காரு அடிகளார்.
நான் இரண்டு முறை செங்கல்பட்டு நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற போது பல முறை சந்தித்து ஆக்க பூர்வமான திட்டங்களை தொகுதியில் கொண்டு வர வலியுறுத்தினார்.
நான் மத்திய ரயில்வே துறை அமைச்சராக இருந்த போது பங்காரு அடிகளார் வைத்த கோரிக்கையில் இன்று வரை விரைவு ரயில்கள் தொடங்கி அனைத்தும் ரயில்களும் மேல் மருவத்தூர் நிலையத்தில் நின்று செல்கிறது.
ஆன்மீக பணி மட்டுமன்றி பொது வாழ்க்கை மற்றும் மக்கள் தொண்டு பணியிலும் பங்காரு அடிகளார் பணி மிகவும் அளப்பரியது.
பங்காரு அடிகளாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், பக்தர்களுக்கு எனது ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
#Melmaruvathur #BangaruAdigalar #AKMoorthy
வளர்ச்சி அரசியல் மிகவும் முக்கியமானது. ஒரு சரியான அரசியல் தலைமையும், அந்த தலைமை கொண்டிருக்கும் வளர்ச்சிக்கான நோக்கமும் தான் அனைத்து மக்களுக்குமான வளர்ச்சியை கொண்டுவர முடியும்.
#HBDDrAnbumani#DayofDevelopmentalPolitics
புதிய நிலக்கரி திட்டங்கள் எதையும் இனி தொடங்கக் கூடாது. முன்னேறிய நாடுகள் 2030ஆம் ஆண்டுக்குள்ளும், இதர நாடுகள் 2040ஆம் ஆண்டுக்குள்ளும் நிலக்கரி பயன்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
#G20India#ClimateSolidarityPact#GoBackNLC
நிலக்கரி திட்டங்களுக்கு பன்னாட்டளவிலான அரசு மற்றும் தனியார் நிதி உதவி மற்றும் கடன் வசதிகளை இந்தியா இனி அளிக்கக் கூடாது.
#G20India#PasumaiThaayagam#GoBackNLC
இந்தியாவிற்கு கிடைக்கும் வருவாயில் கணிசமான பகுதி பெட்ரோல், எரிவாயு, மின்சார விநியோகத்தின் மீது விதிக்கப்படும் வரியில் இருந்து கிடைக்கிறது. புதைபடிவ எரிபொருட்களை கைவிடும் போது அரசுகளின் வருவாய் குறையும் நிலை ஏற்படாமல் தடுக்க வேண்டும்.
#G20India#ClimateSolidarityPact#GoBackNLC
இந்தியா அனைத்து வகை புதைபடிம எரிபொருட்களையும் படிப்படியாக ஒழிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை இனி முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
#G20India#ClimateSolidarityPact#GoBackNLC
இன்று 85-ஆவது பிறந்தநாள் காணும் மருத்துவர் அய்யா @drramadoss அவர்களுக்கு வாழ்த்துகள்!
இந்த மண்ணில் வேரூன்றியுள்ள சமூகநீதி அரசியலும் தமிழ் உணர்வும் தழைக்கத் தங்களது உழைப்பு பயன்படட்டும்!
அழிவின் விளிம்பிலிருந்து அன்னைத் தமிழைக் காப்பதற்காக தமிழைத் தேடி தமிழினப்போராளி மருத்துவர் அய்யா அவர்கள் மாபெரும் விழிப்புணர்வு பரப்புரை பயணம் மேற்கொண்டார்.
#DrRamadossAyya85#மருத்துவர்அய்யா85#PasumaiThaayagam