ஜூன் - 5 இன்று உலக சுற்றுச்சூழல் நாள்
நிலம், நீர், காற்று மாசுபடாமல் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு அப்படியே விட்டுச் செல்ல உறுதி ஏற்போம்- ஜி.கே.மணி
நிலம், நீர், காற்று மாசுபாடு நாளும் அதிகரித்து, உடல் நலத்திற்கும் கேடு உண்டாக்குகிறது. புவி வெப்பமடைதல் அதிகரித்து இயற்கைச் சீற்றங்களால் பேரிடரை எதிர்கொள்ளும் அபாய நிலையும் உருவாகி வருவது பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் கொடுக்கிறது. இயற்கை மாற்றங்கள் மனித குலத்திற்கு பெரும் சவாலாகவும் அச்சுறுத்தலாகவும் உள்ளது. இவற்றில் பசுமைத்தாயகம் பங்களிப்பு அளப்பரியது.
நிலம், நீர், காற்று மாசுபடாமல் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு பாதுகாப்பாக, அப்படியே விட்டுச் செல்ல உறுதி ஏற்போம் ...
மரம் நடுவோம் மழை பெறுவோம். இயற்கை அன்னையை போற்றுவோம்.அவற்றுடன் இணைந்து வாழ்வோம்
பேரன்புடையீர், வணக்கம்.
2026-2027 கல்விச் சிறந்த தமிழ்நாடாக திகழ வேண்டும்.... வாழ்த்துக்கள்... -ஜி.கே.மணி
கோடை விடுமுறை முடிந்து இன்று 04.06.2026 பள்ளிகள் திறப்பு 2026-2027 ஆம் கல்வியாண்டின் முதல் நாள் பள்ளிக்குச் செல்லும் மாணவச் செல்வங்களான மாணவ, மாணவிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். முதல் நாள் முதல் மாணவச் செல்வங்களுக்கு கற்றுக்கொடுக்கும் சிற்பிகளாக திகழும் ஆசிரியப் பெருமக்களுக்கும் வாழ்த்துக்கள். நடப்பாண்டில் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி மகிழும் பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள்.
தற்பொழுது வரலாறு காணாத அளவில் சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் பள்ளிகள் துவங்குகிறது. பற்றாக்குறையாக உள்ள பள்ளிகளின் குடிநீர் தேவைகள், கழிப்பறை வசதிகள், வகுப்பறைகள், சுற்றுச்சூழல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தாமதமின்றி கல்வித் துறை நிறைவேற்ற வேண்டும்.
மாணவ, மாணவிகளுக்கு தேவையான புத்தகங்கள், எழுது பொருட்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் மற்றும் பள்ளிக்குச் சென்று வர கட்டணம் இல்லா பேருந்து பயண அட்டை உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
தனிமனித வளர்ச்சிக்கும், ஒவ்வொரு குடும்பத்தின் உயர்வுக்கும், நாட்டின் மேம்பாட்டிற்கும் அடிப்படைக் கல்வியே என்பதால் மாணவ செல்வங்களுக்கு தரமான கல்வி கிடைத்திட போதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். மாணவ, மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்குவதோடு நுண்ணறிவு திறனில் மேம்பட்டு, விளையாட்டு, ஆடல், பாடல், நடனம், பேச்சு திறன், எழுத்துத்திறன் உள்ளிட்ட அனைத்து கலைகளிலும் சிறந்து விளங்க வேண்டும். தன்னிடம் உள்ள திறமைகளை வெளிப்படுத்த வேண்டும்.
மாணவ, மாணவிகள் வகுப்பறைக்குள் நுழைந்தவுடன் ஆசிரியர்கள் கற்பிக்கும் போது கண் உண்ணிப்பாக ஆசிரியரையே பார்க்க வேண்டும். ஆசிரியர் கற்பித்தலை காது சரியாக கேட்க செய்ய வேண்டும். இடையிடையே சந்தேகம் வரினும் வாய் பேச வேண்டும். ஆக மாணவர்களின் கண், காது, வாய், மனம் அனைத்தும் ஆசிரியரை நோக்கியே கவனச் சிதைவு இல்லாமல் கற்றலிலே முழு கவனம் இருக்க வேண்டும்.
''கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை".
மாணவ, மாணவிகளின் எதிர்கால வாழ்க்கைக்கு கல்வியே அடிப்படை என்பதை உணர்ந்து நன்கு படித்து அதிக மதிப்பெண்கள் பெற்று அனைவரும் தேர்ச்சி பெற வேண்டும். அதோடு மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதை உணர்ந்தும், எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்பதை மனதில் தாங்கி
போற்றி நடக்க வேண்டும். மேலும் தான் பெரும் கல்வியோடு
''ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்".
என்பதற்கிணங்க தரமான கல்வி பெறுவதோடு நற்பண்புடன் நல்லொழுக்க சீலர்களாக திகழ வேண்டும்.
2026 - 2027 ஆம் கல்வியாண்டில் அனைவரும் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, கல்விச் சிறந்த தமிழ்நாடாக அமைய அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஜூன் - 3 உலக மிதிவண்டி தினம் - ஜி.கே.மணி
கடந்த காலங்களில் குறைந்த தொலைவு போக்குவரத்துக்கு மிதிவண்டியே பயன்படுத்தப்பட்டு வந்தது. மிதிவண்டி பயன்படுத்துவது உடல் நலத்துக்கேற்றது, சுற்றுச்சூழல் மாசுபடுவதை கட்டுப்படுத்தக்கூடியது. செலவு சிக்கனம். இதன் விழிப்புணர்வுக்காக பா.ம.க சட்டமன்ற உறுப்பினர்கள் 1 1/2 மாத காலம் சட்டமன்ற உறுப்பினர் விடுதியிலிருந்து சட்டமன்றத்திற்கு மருத்துவர் அய்யா அவர்கள் ஆலோசனைப்படி எனது தலைமையில் மிதிவண்டியிலேயே சென்று வந்தோம். அதன் பிறகும் சில காலம் சென்றோம். மிதிவண்டியில் சென்ற எங்களை அப்போது அமைச்சர்கள் சிலர், சட்டமன்ற உறுப்பினர்கள் நிறைய பேர் கேலி கிண்டல் செய்தனர். அதை பொருட்படுத்தாமல் நாங்கள் விளக்கம் சொன்னோம். தொடர்ந்து சென்று வந்தோம். மிதிவண்டி உதிரி பாகங்கள் பெயர் தமிழில் சொல்லவும் முதலமைச்சருக்கும் எனக்கும் சட்டமன்றத்தில் கடும் விவாதம் நடைபெற்றது.
உடல் ஆரோக்கியத்திற்கு மிதிவண்டி பயன்பாடு கட்டாயம் தேவை.
எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த தமிழ்நாட்டு மாணவி நிஷா சசிகுமார் வெற்றிக்கு வாழ்த்துக்கள் மேலும் சாதனை படைக்க வாழ்வில் உயர தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்க வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்... - ஜி.கே.மணி
சென்னையை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி நிஷா சசிகுமார் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய உலகின் இளம் பெண் என்ற சாதனையை படைத்துள்ளார்.
எவரெஸ்ட் பயணத்திற்காக பெங்களூருவில் வாரத்திற்கு 2 நாள் வீதம், ஓராண்டு பயிற்சி எடுத்தார். இதற்கு முன் நேபாளத்தை சேர்ந்த பெண் 16 வயது 187 நாட்களில் சிகரத்தை அடைந்த நிலையில், நிஷா 16 வயது 80 நாட்களில் இந்த சாதனையை செய்துள்ளார்.
மாணவியின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் மேலும் சாதனை படைக்க வாழ்வில் உயர தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்க வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்...
கடலூர் அஞ்சலை அம்மாள் சுதந்திரப் போராட்ட வீராங்கனையின் 137 வது பிறந்த நாள் - அவரை போற்றுவோம்... - ஜி.கே.மணி
இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் ஜூன் - 1 அன்று பிறந்தார். தென்னாட்டு ஜான்சி ராணி' என்று மகாத்மா காந்தியடிகளால் அன்போடு அழைக்கப்பட்டார். கடலூரைச் சேர்ந்தவர், விடுதலைப் போராட்டத்திற்காகப் பலமுறை சிறை சென்றவர். தமிழகத்தின்
கடலூரைச் சேர்ந்த அஞ்சலை அம்மாள், சுதந்திரப் போராட்ட வீராங்கனை. அதிலும் குறிப்பாகப் பெண் சுதந்திரப் போராட்ட வீராங்கனை என்றால் பலருக்கும் ஜான்சி ராணி, வேலு நாச்சியார், சரோஜினி நாயுடு, லட்சுமி ஷெகல் உள்ளிட்டோர்தான் நினைவுக்கு வரும். ஆனால் வயிற்றில் குழந்தையைச் சுமந்தபோதும் சற்றும் அசராமல் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடிச் சிறையில் அடைக்கப்பட்ட வீர மங்கை அஞ்சலை அம்மாள்.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அஞ்சலை அம்மாள் வேலூர் மத்தியச் சிறையில் ஆறு மாதம் சிறைத் தண்டனை பெற்றார். சிறையில் கடும் வேதனையுற்ற அவர் ஒரு மாத விடுப்பில் வெளியே வந்து தனது இளைய மகனைப் பெற்றெடுத்தார். பின்னர் 15 நாள் கைக்குழந்தையுடன் மீண்டும் சிறைக்குச் சென்றார். பல போராட்டங்களில் பங்கேற்ற அஞ்சலை அம்மாள், பலமுறை கடுங்காவல் தண்டனையும் பெற்றுள்ளார். அஞ்சலை அம்மாளுடன் சேர்ந்து அவருடைய குடும்பமும் சுதந்திரத்திற்காகப் போராடியது. சிறைத் தண்டனையிலிருந்தபோது குழந்தையைப் பெற்றெடுத்ததனால் தன் மகனுக்கு ஜெயில்வீரன் என்று பொருள்படும் வகையில் ஜெய வீரன் எனப் பெயர் சூட்டினார். கடலூர் அஞ்சலை அம்மாள் சுதந்திரப் போராட்ட வீராங்கனையின் 137 வது பிறந்த நாள் - அவரை போற்றுவோம் வீரவணக்கம் செலுத்துவோம்...
ஜூன் 1 இன்று உலக பெற்றோர்கள் தின வாழ்த்துக்கள் - ஜி.கே.மணி
இவ்வுலகில் உயர்ந்த உள்ளங்களான பெற்றோர்களாகிய உங்களுக்கு இதயங் கனிந்த பெற்றோர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
"பெற்றோர்களே கண்கண்ட தெய்வங்கள்".
”தாயிற் சிறந்த கோவிலுமில்லை”.
” தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” –ஔவையார்.
” அம்மா என்னும் சொல் முதல் மொழி”.
” அப்பா என்னும் சொல் முதல் முகவரி”.
” அன்னையும் பிதாவும் முன்னேறி தெய்வம்”
உலகில் ஒவ்வொருவருக்கும் நட்பும் உறவும் எவ்வளவு இருந்தாலும் ஒப்புயர்வற்ற இரண்டு உயிர்கள் தாயும் தந்தையும்.
இன்றைய பெற்றோர்களின் பிள்ளைகள் நாளை பெற்றோர் ஆவார்கள்.
நாம் தேடிச் சென்றாலும் விலகிச் செல்லும் பிற மனிதர்கள் வாழும் இவ்வுலகில் நாம் விலகிச் சென்றாலும் நம்மைத் தேடி வரும் உறவு பெற்றோர்கள் மட்டுமே.
நம் பெற்றோர்கள் இல்லை என்றால் நாம் இல்லை ஒவ்வொருவரின் பெற்றோர்களின் பிள்ளைகள் தான். வாழையடி வாழையாக இவ்வுலகில் வாழும் மக்கள்.
தாம் பெற்ற குழந்தைகளை பேணிக் காத்து கஷ்ட, நஷ்டங்களை, துன்பங்களை அனுபவித்து தம்மையே அர்ப்பணித்து தியாகம் செய்து வளர்த்தவர்கள்தான். பெற்றோர்கள் தமக்கு உடலையும் உயிரையும் கொடுத்தவர்கள் பெற்றோர்கள். தனக்கென்று சமைத்து சாப்பிடாத ஒரே உயிர் அம்மா. தனக்கென்று அல்லாமல் பிள்ளைகளுக்காக சம்பாதித்த ஒரே உயிர் அப்பா.
பத்து மாதம் வயிற்றிலும், வாழ்நாள் முழுவதும் தன் மனதிலும் நம்மை சுமப்பவள் தாய். பத்து வயது வரை தன் தோளிலும், வாழ்நாள் முழுவதும் தன் நெஞ்சிலும் சுமப்பவர் தந்தை.
பெற்றோர்களை வணங்குவோம்... போற்றுவோம்... பாதுகாப்போம்...
வயதான பெற்றோர்களை பாதுகாக்காமல் அலைய விடுவதும் ஆதரிக்காமல், துரத்தி விடுவதும் அனாதை இல்லங்களில், முதியோர் இல்லங்களில் சேர்ப்பதும் கொடுமையிலும், கொடுமை மாபெரும் குற்றம்.
பெற்றோரான உங்களுக்கு பெருமை சேர்க்கும் நாள். மகிழ வைக்கும் நாள். இன்று பெற்றோர் தினம். குழந்தைகளை பெற்று நன்கு வளர்த்து ,கல்வி கொடுத்து, உயர்ந்த நிலைக்கு ஆளாக்கும் உங்களுக்கு இதயங்கனிந்த பெற்றோர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
பெற்றோரான நீங்களும் உங்கள் குடும்பமும் நலமுடன் வாழ நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
ஜூன் - 1 இன்று பிறந்தநாள் - மருத்துவர் அய்யா அவர்களின் மூத்த மகள், பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்தலைவர் திருமதி ஸ்ரீ காந்தி உடல் ஆரோக்கியத்துடன், மனநிறைவுடன், புகழுடன், குடும்ப நலமுடன் நூறாண்டு காலம் நீடூழி வாழ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன்...
அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பேசினேன்.
மே 31 - உலக புகையிலை ஒழிப்பு நாள் - புகை உயிருக்கு பகை - புகைபிடிப்பவர்க்கும் அருகில் இருப்பவர்க்கும் கேடு- சிகரெட் நுனியில் நீங்கள் பற்ற வைக்கும் தீ உயிருக்கு வைத்துக்கொள்ளும் தீ-"எங்களுக்கு உணவு தேவை, புகையிலை அல்ல உடல் நலம் காப்பீர் - ஜி.கே.மணி
இன்று உலகம் முழுவதும் புகையிலை ஒழிப்பு நாள் கடைபிடிக்கப்படுகிறது. புகைப்பிடிப்பதனால் புகைப்பிடிப்பவர்க்கும் அருகில் உள்ளவர்க்கும் கேடு. சிகரெட்டில் நிகோடின் என்னும் நஞ்சு உள்ளது. இது கொடியது. புகைப்பிடிப்பதால் வாய் - தொண்டை - நுரையீரல் புற்றுநோய், சுவாசப் பிரச்சினை, இரத்த அழுத்தம், இதயத் துடிப்பு அதிகரித்தல், சிறுநீரக நோய் போன்ற உயிரைப் பறிக்கும் பலி நோய்கள் உண்டாகும் என மருத்துவ ஆய்வறிக்கையும் உலக சுகாதார நிறுவன (WHO) மும் தொடர்ந்து எச்சரித்து வருகிறது.
இந்தியாவில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை 12 கோடி ஆகும். புகைப்பிடிப்பதால் ஒவ்வொரு ஆண்டும் உயிரிழப்போரின் எண்ணிக்கை மட்டும் 10 லட்சத்துக்கும் அதிகமாகும்.
புகையிலை ஒழிப்புக்கு மருத்துவர் அய்யா அவர்களும் பா.ம.கவும் பசுமைத்தாயகமும் தொடர்ந்து போராடியும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதையும் நன்கு அறிவீர்கள்
திரைப்பட முன்னணி நடிகர் அஜித்குமார் தாயார் மோகினி மணி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். திரைப்பட உலகின் எல்லோரின் கவனத்தை ஈர்க்கும் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார் அவரது தாயார் மோகினி மணி மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரை இழந்து மீளாத் துயரில் வாடும் முன்னணி நடிகர் அஜித்குமார் அவரது சகோதரர்கள், குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். - ஜி.கே.மணி
பக்ரீத் திருநாள் வாழ்த்துக்கள் - ஜி.கே.மணி
தியாகத்தைப் போற்றி மிகுந்த மகிழ்ச்சியோடும் எழுச்சியோடும் கொண்டாடப்படும் அனைத்து இஸ்லாமியப் பெருமக்களுக்கும் இதயங்கனிந்த பக்ரீத் திருநாள் வாழ்த்துக்கள்.
மனித வாழ்வியல் நெறிகளாக வகுத்துள்ள அர்ப்பணிப்புடன் வாழும் தியாக உணர்வு, எல்லோரிடத்தும் அன்பு செலுத்தும் உள்ளம், பிறர்க்கு உதவும் ஈகை நோக்கம், யாருக்கும் தீங்கிமைக்காத நல்லெண்ணம், அனைவரையும் நேசித்து பாசம் காட்டும் சகோதர நல்லிணக்கம், மனிதனை மனிதனாக மதித்து நடக்கும் மனிதநேயம் போன்ற நற்குணங்களை கடைப்பிடித்து அமைதி வாழ்வும் வளம்மிக்க வாழ்வும் அமைய அனைவரும் இந்நன்னாளில் உறுதி ஏற்போம்.
பக்ரீத் கொண்டாடி மகிழம் இஸ்லாமியச் சகோதர-சகோதரிகள் அனைவரும் மகழ்ச்சியுடன், மன நிறைவுடன் எல்லா வளமும், பெற்று குடும்ப நலமுடன் நீடூழி வாழு நெஞ்சம் நிறைந்த இனிய பக்ரீத் திருநாள் வாழ்த்துக்கள்.
எடப்பாடி துரைசாமி பா.ம.க மாநில கொள்கை விளக்க அணி துணைச் செயலாளர் தாயார் மணி அம்மாள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரைப் பிரிந்து துயரில் வாடும் துரைசாமி மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், பா.ம.கவினர் அனைவருக்கும் அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன் - ஜி.கே.மணி
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில கொள்கை விளக்க அணி துணைச் செயலாளர் எடப்பாடி துரைசாமி தாயார் மணி அம்மாள் மறைவுற்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். எடப்பாடி துரைசாமி மருத்துவர் அய்யா அவர்கள் மீது மிகுந்த பற்றும், மரியாதையும் கொண்டிருப்பவர். கொள்கையில் அதிக பற்றுடையவர். கொள்கை விளக்கத்துடன் ஆதாரங்களுடன் பேசக்கூடியவர். சமூக ஊடகங்களில் சிறப்பாக செயல்பட்டு வருபவர். எடப்பாடி துரைசாமி சிறப்பாக செயல்படுவதற்கு அவரது தாயார் மணியம்மாள் கொடுத்த ஆக்கமும், ஊக்கமும், வளர்ப்பும் தான் காரணம் என்றால் மிகையாகாது. மணியம்மாள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதுடன் அவரது மறைவால் துயரத்தில் வாடும் மகன் எடப்பாடி துரைசாமி மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், பா.ம.கவினர் அனைவருக்கும் அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
எடப்பாடி துரைசாமி இடம் துக்கம் விசாரித்து ஆறுதல் கூறினேன்...
பெங்களூர் தொழிலதிபர் சுரேஷ் பாபு (மதுராந்தகம், வேடவாக்கம்) மறைவுக்கு 26.5.2026 இன்று அவரது இல்லத்தில் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தியபோது...
25.5.2026 இன்று ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மருத்துவர் அய்யா அவர்கள் தலைமையில் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்றபோது...
மாவீரன் ஜெ.குரு நினைவுநாள் 25.5.2026 இன்று மருத்துவர் அய்யா அவர்களும், நானும் (ஜி.கே.மணி) மற்றும் நிர்வாகிகளும் தைலாபுரம் தோட்டத்தில் மாவீரன் ஜெ.குரு திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தியபோது...
மாவீரன் ஜெ குரு நினைவுநாள் 25.5.2026 இன்று திண்டிவனம் கோனேரிகுப்பம் கல்லூரிகள் (கல்விக்கோயில்) வளாகத்தில் மாவீரன் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தியபோது...
மாவீரன் ஜெ. குரு நினைவு நாள் புகழஞ்சலி - ஜி.கே.மணி
வன்னியர் சங்கத் தலைவரும் பா.ம.க சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நமது நெஞ்சமெல்லாம் நிறைந்து, நினைவில் வாழ்ந்துகொண்டிருக்கும் மாவீரன் ஜெ.குரு அவர்களின் 8ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று 25.5.2026 அவரது திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதையும் நினைவஞ்சலியும் செலுத்துவோம்.
மாவீரன் அவர்கள் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அவர் நம்மோடு வாழ்ந்த காலம் ஒவ்வொரு நிகழ்வும் என் நெஞ்சில் நிழல்லாடுகிறது. என் மனக்கண் முன் தெரிகிறது. அவர் என்னிடம் பேசியவைகள், செய்தவைகள், உணவு உண்டது, இருவரும் செய்த மாநாட்டு ஆலோசனைகள். மாநாட்டுப் பணிகள், சட்டமன்ற நிகழ்வுகள் போன்ற ஒவ்வொன்றையும் எண்ணிப் பார்க்கிறேன்.
மாவீரன் ஜெ.குரு என் மீது காட்டிய அன்பு, பாசம் - நான் மாவீரன் மீது காட்டிய அன்பு, பாசம் என்றும் மறக்க முடியாது. மருத்துவர் அய்யா அவர்களுக்கு நானும், மாவீரன் குருவும் இரட்டைக் குழல் துப்பாக்கி போல் செயல்பட்டு வந்தோம். மாவீரன் குருவின் இறுதி ஊர்வலம் உடல் நல்லடக்கம் செய்த போது கீழே விழுந்து என் மீது காவல்துறை வைக்கப்பட்டு இருந்த தடுப்பு (பேரிகாட்) விழுந்து அதன் மீது 100க்கும் மேற்பட்டவர்கள் என் மீது விழுந்து நான் அடியில் சிக்கி கொண்டு எழ முடியாமல் மூச்சுத் திணறல்,ஏற்பட்டு உயிர் போய்விடுமோ என்ற நிலையில் இருந்தேன்.
உடனே இந்த விபத்தை அறிந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சேலம் அருள் எம்.எல்.ஏ,பொன்.கங்காதரன் போன்ற பலர் அடியில் சிக்கி இருந்த என்னை இழுத்து மீட்டனர். இதில் விலா எலும்புகள் முறிந்து, கால் எலும்புகள் விரிசல் ஏற்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டேன். மீண்டும் மறுபிறவி எடுத்து வாழ்கிறேன் என்பது என்றும் மறக்க முடியாது. மருத்துவர் அய்யா உள்ளிட்ட அனைவரும் உடனே அழைத்து விருதாச்சலம் மருத்துவமனையில் முதல் பரிசோதனை செய்து அவசரமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மூன்று மாத காலம் சிகிச்சையும் பெற்று நடமாட முடியாமல் ஓய்வில் இருந்தேன். இன்று அதை நினைவில் கொள்கிறேன்.
மாவீரன் ஜெ.குருவுக்கு புகழஞ்சலி செலுத்துவோம் ... நினைவைப் போற்றுவோம்...
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் கணேசன் மறைவு செய்தி அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து, குடும்பத்தினருக்கு அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன் - ஜி.கே.மணி
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் கணேசன் பா.ம.க மாவட்ட செயலாளர், மாவட்டத் தலைவர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்தவர். வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சியில் முன்னோடியாக திகழ்ந்தவர். நீண்ட காலமாக மருத்துவர் அய்யா அவர்களோடு மிகுந்த மரியாதையோடு செயல்பட்டு வந்தவர். என்னிடம் அடிக்கடி பேசுவார். சந்திப்போம். கட்சிக்காக உழைத்தவர். அவர் மறைவுற்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
அவரை பிரிந்து மீளா துயரில் வாடும் அவரது மனைவி, மகன், மகள் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பா.ம.கவினருக்கும் அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அவரது மகன் அருண் பிரசாத் இடம் துக்கம் விசாரித்து ஆறுதல் கூறினேன்...
பெங்களூர் தொழிலதிபர் சுரேஷ் (மதுராந்தகம்) மறைவு செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து குடும்பத்தினருக்கு அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன் - ஜி.கே.மணி
மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் பெங்களூருக்கு சென்று தொழிலதிபராக உயர்ந்தவர். நல்ல பண்புள்ளவர். மருத்துவர் அய்யா அவர்களுக்கு மிகவும் பிடித்தமானவர். பா.ம.க வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர். அடிக்கடி என்னிடம் தொடர்பு கொண்டு பேசுவார், நேரிலும் சந்திப்போம். உடல்நல குறைவால் பெங்களூர் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றபோது மருத்துவர் அய்யா அவர்களும், நானும், மற்றவர்களும் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தோம்.
திடீரென இறப்பு செய்தியை அறிந்து மிகவும் அதிர்ச்சியுற்றேன். வேதனை அடைந்தேன். அவருடைய மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
அவரைப் பிரிந்து மீளாத் துயரில் வாடும் அவரது மனைவி, மகன்கள், மாமனார் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அவரது மகன்,மாமனார் ஆகியோரிடம் துக்கம் விசாரித்து ஆறுதல் கூறினேன்.