நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் புதுச்சேரியில் செய்தியாளர்களின் கேள்வியை எதிர்கொள்ள துணிவில்லாமல், கலைஞர் டிவி செய்தியாளர் ராஜூவை ஒருமையில் பேசி குண்டர்களை ஏவி கோழைத்தனமாக தாக்குதல் நடத்தியதை புதுச்சேரி அச்சு & தொலைக்காட்சி பத்திரிகையாளர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
அச்சமற்று, சுதந்திரமாக செயல்படவிடாமல் தடுக்கும் கருத்துரிமைக்கு எதிரானது. முன்னறிவிப்பின்றி ஒளிபரப்பை நிறுத்திய தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்துக்கு புதுச்சேரி அச்சு மற்றும் தொலைக்காட்சி பத்திரிகையாளர் சங்கம் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது. (2/2)
ஒரு சார்பு செய்தியை மட்டும்தான் வெளியிட வேண்டும் என்பது போல புதிய தலைமுறை தொலைக்காட்சி நிர்பந்திக்கப்படுவதும், இதன்காரணமாகவே அரசு கேபிள் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது அப்பட்டமான ஒடுக்குமுறையாகும், இது ஜனநாயகத்தின் குரல் வலையை நெறிப்பது போல இருக்கிறது.(1/2)
சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு வரலாற்று சிறப்பு மிக்க வகையில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர் சுரேஷ், பொதுச்செயலாளர் ஆசிப், பொருளாளர் மணிகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு புதுச்சேரி அச்சு மற்றும் தொலைக்காட்சி பத்திரிகையாளர் சங்கம் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறது.
மேலும் கிடப்பில் உள்ள பத்திரிகையாளர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தை அரசு மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும், ஜிப்மர் மருத்துவமனையில் பத்திரிகையாளர்களுக்கு சிகிச்சையில் முன்னுரிமை அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன. (2/2)
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த @PTTVOnlineNews தொலைக்காட்சியின் செய்தியாளர் அப்துல் ரகுமானின் குடும்பத்திற்கு அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தி துணைநிலை ஆளுநர் மற்றும் முதலமைச்சரிடம் நமது சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.(1/2)
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் குடியரசு துணைத்தலைவர் பங்கேற்ற விழாவை செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களை உள்ளே அனுமதிக்காமல் காவல்துறையினரை வைத்து மிரட்டி, தாக்க முயன்ற எஸ்எஸ்பி ஸ்வாதி சிங்கின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம்.
@VPIndia@rashtrapatibhvn@PMOIndia @DrTamilisaiGuv
மேலும் கொரோனாவால் பதிக்கப்பட்டு உயிரிழந்த பத்திரிகையாளர்களுக்கு 10 லட்சம் வழங்க நடவடிக்கை எடுத்ததற்கு இயக்குனருக்கு சங்கம் சார்பில் நன்றியும் தெரிவிக்கப்பட்டது. (3/3)
புதுச்சேரியில் நவம்பர் 16ம் தேதி பத்திரிகையாளர்கள் தின விழாவை அரசு சார்பில் நடத்தக்கோரி புதுச்சேரி அச்சு மற்றும் தொலைக்காட்சி பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குனரிடம் மனு அளிக்கப்பட்டது. (1/3)
முடங்கி கிடக்கும் பத்திரிகையாளர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தகோரியும் சங்கம் சார்பில் தலைவர் ஆர்.கே.ராஜா, செயலாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குனர் தமிழ்ச்செல்வனை நேரில் சந்தித்து மனு அளித்தனர். (2/3)
புதுச்சேரி அச்சு மற்றும் தொலைக்காட்சி பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் பத்திரிகையாளர் தின விழா இன்று மாலை காரைக்காலில் நடைபெறுகிறது.
அனைத்து பத்திரிகையாளர் நண்பர்களையும் வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம்.
#PPTJA#Puducherry#Karaikal#NationalPressDay
Addressed at #NationalPressDay2022 Celebrations, organised by #Puducherry Print Television & Journalists Association (PPTJA).
புதுச்சேரி பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற பத்திரிகையாளர் தின விழாவில் கலந்து கொண்டு பத்திரிகையாளர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தேன்.
Addressed at #nationalpressday2022 Celebrations, organised by #Puducherry Print Television & Journalists Association (PPTJA).
Alongside Honb'le Speaker, Honb'le Home Minister,MLAs & media friends.
Recalled the immense contribution of media for democracy and nation building.
புதுச்சேரி அச்சு மற்றும் தொலைக்காட்சி பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் பத்திரிகையாளர் தின விழா வரும் 19.11.2022 நடைபெற உள்ளது.
அனைத்து பத்திரிகையாளர் நண்பர்களையும் வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம்.
#PPTJA#Puducherry#NationalPressDay
மாண்புமிகு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்களின் திருமண நாளை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் அவரை சந்தித்து புதுச்சேரி அச்சு மற்றும் தொலைக்காட்சி பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வாழ்த்து தெரிவித்தோம்.
#PPTJA#PUDUCHERRY#WISHES
@DrTamilisaiGuv
மூத்த பத்திரிகையாளர் நடராஜன், துரைசாமி,உதயநாராயணன், சங்க தலைவர் @rajadkn,செயலாளர் ஸ்ரீதர், பத்திரிகையாளர்கள் @aarahman_aa1, மோகன்ராஜ்,சண்முகசுந்தரம், @ckandan,@rajakumara90, @natrajbai, அக்பர்,பிளிப்,சரத்குமார்,எமில்ராஜ் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் பங்கேற்றனர்.
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள செய்தியாளர்கள் அறையில் நமது சங்கம் சார்பில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது.
சட்டப்பேரவை தலைவர் செல்வம், அமைச்சர்கள் @ANamassivayam, @vakillakshmi, @AKSaiJSaravanan, சட்டமன்ற உறுப்பினர்கள் நேரு, @MrGollapalli, பாஸ்கர் பங்கேற்பு.
#PPTJA